25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Oct 23, 2025

அட்லி உடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்" என்றார் ரன்வீர் சிங் .

அட்லி ,அல்லு அர்ஜூனை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார் இதில் நாயகியாக தீபிகா படு கோனே நடிக்கிறார். தீபிகாவின் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் மும்பையில் . நடந்த நிகழ்ச்சி ஒன்றில், "அட்லி தற்போது இயக்கி வரும் படம் இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கப் போகிறது. சிலிர்ப்பூட்டும் காட்சிகள் உள்ளன. அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்" என்றார்.

Oct 23, 2025

'மகுடம்' படத்தின் இயக்குனரான ரவி அரசு விலகி விட ,விஷால் இயக்குனராக மாறி படத்தை எடுத்து வருகிறார்.

 ரவி அரசு இயக்கி விஷால்,துஷாரா விஜயன் நடிக்கும் மகுடம்  ' படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துள்ள நிலையில் ரவி அரசு விலகிவிட அவருக்கு பதில் விஷாலே இயக்குனராக மாறி படத்தை எடுத்து வருகிறார். இதை அதிகாரப்பூர்வமாக விஷால் அறிவித்ததோடு இயக்குனராக எடுக்கும் முதல் முயற்சி., பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு" என தெரிவித்துள்ளார். விஷாலுக்கும், ரவி அரசு மற்றும் அவரது உதவியாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை தான் இதற்கு காரணம் என்கிறார்கள்

Oct 16, 2025

'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகாவுக்கு பதில் சாய் பல்லவி.

சாய் பல்லவி, நாக் அஸ்வின் இயக்கிய பிரபாஸின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோனே விலகியதை அடுத்து, சாய் பல்லவியிடம் இயக்குனர் பேச்சு நடத்தி வருகிறார்.அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், அதற்குள் அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

Oct 16, 2025

நாகார்ஜுனாவின் 'லாட்டரி கிங்' 100வது படத்தில் மகன்கள் நாகசைதன்யா, அகில்.

தமிழ் இயக்குனர் ரா.கார்த்திக் ,நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தை 'லாட்டரி கிங்' என தலைப்பு வைத்து இயக்குகிறார்.. இதில் நாகார்ஜூனாவின் மகன்களும் நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் இரு வரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக் கிறார்கள். ஏற்கனவே 'மனம்' படத்தில்  3 தலைமுறையினர் இணைந்து நாகார்ஜூனா, அவரது தந்தை நாகேஸ்வர ராவ், மகன் நாகசைதன்யா என நடித்திருந்தனர்

Oct 16, 2025

'ஹாய்'  படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா

 நடிகர் கவின் 'கிஸ்' படத்தை அடுத்து ஆண்ட்ரியா உடன்  நடித்துள்ள'மாஸ்க்' படம்  விரைவில் ரிலீசாகிறது. இதனையடுத்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு பர்ஸ்ட்லுக் போஸ்டருடன்  'ஹாய்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Oct 16, 2025

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ள படத்தின் பெயர் 'வாரணாசி'.

 காசியை மையமாக கொண்ட கதையாக உருவாகவுள்ள இப்ப டத்திற்கு 'வாரணாசி' என்ற பெயரை தேர்வு செய்து இயக்குனர் ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படத் தில் நடிகர் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். நவம்பரில் அறிவிப்பு வெளியாகிறது. இப் படத்திற்காக 50 கோடி செலவில் காசி நகர செட் ஒன்றையும் உருவாக்கி வருகின்றனர்.

Oct 16, 2025

தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில், 6 படங்கள் அக்., 17ல் ரிலீஸாகின்றன.

கடந்த சில வாரங்களாக தமிழில் வெளியான தலைவன் தலைவி படத்திற்கு பின் எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்த தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில் 'பைசன், டியூட், டீசல், கம்பி கட்ன கதை' உள் ளிட்ட 6 படங்கள் அக்., 17ல் ரிலீஸாகின்றன. இந்த படங்களாவது வெற்றியை தருமா ?

Oct 16, 2025

35 நாட்களில் நடத்தி முடித்துள்ள அபிஷன்  ஜீவிந்த் படம்.

ஒரு படத்தில் ஹீரோவாக டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அறிமுகமாகிறார்.நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரித்துள்ள ,இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக, 35 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் நவீன கால இளைஞர்களை கவரும் காதல் கதையாக உருவா கியுள்ளது. இணை இயக்குனராக . 'லவ்வர், டூரிஸ்ட் பேமிலி' படங்களில் இருந்த மதன் இயக்கியுள்ளார்.

Oct 09, 2025

தயாரிப்பாளர் 'மிராய்' நாயகன், இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

தேஜா சஜ்ஜா நடிப்பில்  கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்த தெலுங்குப் படமான 'மிராய்' ரூ.100 கோடி வசூலைகடந்துள்ளது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் விஜயவாடாவில் நடந்தது. தயாரிப்பாளர் தேஜா, கார்த்திக் ஆகியோருக்கு அவர்கள் விரும்பிய கார் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

Oct 09, 2025

'விருஷபா' மோகன்லால் நடிப்பில் தீபாவளிக்கு  இப்படம் ரிலீஸாகிறது.

 'விருஷபா' மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். தற்போது வெளியிட்டுள்ள டீசரில் ,'பாகு பலி' போன்று சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. பிரமாண்ட அரண்மனை செட்டுகள்  மன்னர் வேடத்தில் மோகன்லால் சண்டையிடும் காட்சிகள், போன்றவை டீசரில் இடம் பெற்றுள்ளன.  தீபாவளிக்கு தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் ரிலீஸாகிறது. 

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 89 90

AD's