'டிமான்டி காலனி 3'படம் தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகிறது. கணேஷ் விநாயகன் இயக்குகிற 'அருள்வான்' என்ற படத்தில் நடிக்க ,அவருடன் ஆரவ், ரம்யா பாண்டியனும் நடிக்கின்றனர். மலைவாழ் மக்களின் வாழ்க்கை தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி, இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு உள்ளது.
முதல் முறையாக நடிகர் கருணாஸின் மகன் கென் ஒரு படத்தை இயக்கி, அதில் நடிக்கவும் செய்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில். பள்ளி பருவத்தை மையப் படுத்தி உருவாகியுள்ள ஜாலியான படம். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2002ல் விஜய் நடிப்பில் உருவான 'யூத்'. என தலைப்பு வைத்துள்ளனர்.
ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில், ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் 2017ல் வெளியாகி வர வேற்பை பெற்ற படம் மரகத நாணயம்.தற்போது இதன் இரண்டாம் பாக பணிகள் துவங்கி உள்ளதை படக்குழு ஒருவீடியோ உடன் அறிவித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் காமெடி கலந்த பேண்டஸி படமாக, கூடுதலாக இன்னொரு நாயகியாக பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார்.
ஹிந்தியில் கால்பதித்துள்ள நடிகை சாய் பல்லவி, ரன்பீர் உடன் 'ராமாயணம்', அமீர்கான் மகன் ஜூனைத் கான் உடன் 'ஏக் தீன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். காதல் கதையில் உருவாகும் ,ஏக் தீன் படத்தை சுனில் பாண்டே இயக்க. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது படத்தின் டீசரை வெளியிட்டு, மே 1ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் கென் ராய்சன் இயக்கும் ,நடிகர் கவின் தனது 9வது படமாக படத்தில்,. பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். காதல், காமெடி கலந்த கதையில் உருவாகியுள்ள இப் படத்தில் கவினின் நண்பரும், நடன இயக்குனருமான சாண்டி இணைந்துள்ளார். வில்லனாக மலையாளத்தில் வெளியான 'லோகா' படத்தில் நடித்திருந்தார்.
இந்தாண்டும் கடந்தாண்டை போல்இடைவெளியின்றிவாராவாரம்புதியபடங்கள்வெளியாகின்றன. இந்தவாரம்., ஜன. 23ல் 'திரௌபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச், மாய பிம்பம்' ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் அஜித்தின் 'மங்காத்தா' படமும் ரீ ரிலீஸாகிறது. விஜயின் தெறி படம் இதனுடன் வருவதாக இருந்து மீண்டும் தள்ளிப்போய் உள்ளது.
இந்த பொங்கலுக்கு 'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. 9 நாளில் பராசக்தி படம் 80 கோடியும், மற்ற இரு படங்கள் முறையே 10 கோடியும்,20 கோடியும் வசூலை எட்டி உள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழுஅறிவித்துள்ளது. இது இந்த ஆண்டின்முதல்ரூ.100 கோடிவசூல்படமாகும். 'டான், டாக்டர், அமரன், மதராஸி' படங்களைதொடர்ந்துசிவகார்த்திகேயனுக்கு 5வது 100 கோடி படமானது.
'வழித்துணை' 'சுழற்சி', 'மத்தி' உள்ளிட்ட 34 படங்களை ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 பேர் இயக்குகின்றனர். இந்த படங்களின் துவக்கம், இயக்குனர்களின் அறிமுக விழா ஜன., 24ல் சென்னையில் நடக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 34 படங்கள் ஒரே நேரத்தில் தயாராகின்றது.
கல்யாணி பிரிய தர்ஷன் நடித்த 'லோகா சாப்டர் 1'மலையாளத்தில் அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் .இவரை தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட்டில். ரன்வீர் சிங் நடிப்பு, தயாரிப்பில் ஜோம்பி பின்னணியில் ஜெய் மேத்தா இயக்க, நாயகியாக கல்யாணி, ஒரு திரில்லர் படம் உருவாகிறது.
சாப்பாடு பொறுத்தவரை, முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவேன், வீட்டில் செய்யும் உணவுகளே என் சாய்ஸ். ஹோட்டல் சென்றால் கூட, ஃபேன்சி உணவுகள் சாப்பிடவே மாட்டேன், 90 வயதாகும் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்டை கூறியுள்ளார்.