25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 15, 2026

இந்தியாவின் முதல் மக்கும் பால் பாக்கெட் அறிமுகம்! ( MOTHER DAIRY )

மண்ணில் இயற்கையாகவே மக்கிப்போகும் இந்தியாவின் முதல் பால் பாக்கெட்டை ஒன்றிய அரசின் மதர் டெய்ரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய பால் பாக்கெட், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Jun 15, 2026

புகைப்பட கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்களுக்கு ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு; 

புகைப்பட கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்களுக்கு ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு; ஒளிப்படக் கலைஞர் பணியிடங்கள் ஆளும் கட்சியினரால் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், 56 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அறிவிப்பு வெளியானது.

Jun 15, 2026

ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 13 முதல் 19 வரை ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்குச் செல்லும் அவர், ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஜி7 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.

Jun 13, 2026

மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் '1930' என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவசர உதவி எண் : 1930தமிழ்நாடு காவல்துறை அறிவிப்புபெண்கள் தனியாக ஆட்டோவிலோ அல்லது கார்லேயோ பயணம் செய்வதற்கு முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். காவல்துறை அந்த வாகனத்தை GPRS மூலம் கண்காணிக்கும். இந்த தகவலை உங்கள் அனைத்து குடும்பங்களிலும் பகிரவும்.

Jun 13, 2026

DEAD ZONES .

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில்1985ம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு சராசரியாக2.1% குறைந்துள்ளதாக சீன அறிவியல் அகாடமி நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!காலநிலை மாற்றமே இதற்கு முதன்மை காரணம் என்றும், இதே நிலை\நீடித்தால்,2100ம் ஆண்டுக்குள் வெப்பமண்டல ஆறுகளில் மீன்கள்)சுவாசிக்க முடியாத அளவுக்கு Dead zones உருவாகும் எனவும் எச்சரிக்கை.

Jun 13, 2026

இயற்கையின் அதிசயம்.

சைபீரியாவின் அலாசியா நதிக்கரை அருகே, உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 24,000 ஆண்டுகளுக்கு முந்தைய Zombie Worm என்ற நுண்ணுயிர்ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை கண்டெடுத்த நிலையில், ஆய்வகத்தில் உயிர்பெற்று உணவு உண்ணவும், நகரவும் தொடங்கிய Zombie Worm, பாலில்லா இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியதால் விஞ்ஞானிகள் வியப்பு.

Jun 13, 2026

இந்தியாவின் முதல் எத்தனால் பைக் அறிமுகம்.

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவின் முதல் 'ஃபிளெக்ஸ் ஃபியூவல்' (Ethanol) பைக்குகளை அறிமுகம் செய்துள்ளார்.HF Deluxe Flex Fuel: ₹72,792 (Ex-showroom)Splendor+ Flex Fuel: ₹82,710 (Ex-showroom)

Jun 13, 2026

. ஐபோன் 18 ப்ரோ மற்றும் மடிக்கக்கூடிய ஐபோன் (iPhone Ultra)

ஆப்பிள் நிறுவனம் 2026 செப்டம்பரில் புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது:ஐபோன் 18 ப்ரோ: 6.9 இன்ச் டிஸ்ப்ளே, A20 ப்ரோ சிப், 5100-5200 mAh பேட்டரி மற்றும் மாறக்கூடிய துளை அமைப்புடன் கூடிய 48MP முதன்மை கேமரா இடம்பெறும்.iPhone Ultra (மடிக்கக்கூடிய ஐபோன்): மடிப்புக் கோடே தெரியாத வடிவமைப்பு, 7.8 இன்ச் உள் திரை, 5.5 இன்ச் வெளித்திரை, 2nm A20 Pro சிப் மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் 'Vapour Chamber' தொழில்நுட்பம் கொண்டது.

Jun 13, 2026

தமிழக அரசு - எல்&டி நிறுவனம் இடையே ₹18,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!

தமிழகத்தில் ₹18,600 கோடி முதலீட்டில் மூன்று முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி, 8,200 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசுக்கும், லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திரு. விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு தொழில்துறையில் கையெழுத்தாகும் முதல் ஒப்பந்தம் இதுவாகும்.திட்டங்களின் விவரம்:காஞ்சிபுரம்: ₹15,000 கோடி முதலீட்டில் 'ஹைப்பர்ஸ்கேல் மற்றும் எட்ஜ் ஏஐ தரவு மையம்' (500 பேருக்கு வேலைவாய்ப்பு).கோயம்புத்தூர்: ₹2,500 கோடி முதலீட்டில் 'மின்னணு உற்பத்தி மையம்' (2,000 பேருக்கு வேலைவாய்ப்பு).திருவள்ளூர் (காட்டுப்பள்ளி): ₹1,100 கோடி முதலீட்டில் 'கடல் காற்றாலை உள்கட்டமைப்பு' (5,700 பேருக்கு வேலைவாய்ப்பு).மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் இத்திட்டங்கள் உதவும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, எல்&டி நிறுவனத் தலைவர் எஸ். என். சுப்ரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Jun 13, 2026

தைவான் ‘COMPUTEX 2026’ கண்காட்சியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்பு!

தைபே நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப வர்த்தகக் கண்காட்சியான ‘COMPUTEX 2026’-ல், 33 நாடுகளைச் சேர்ந்த 1,500 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் இந்திய நிறுவனங்களான ஜோஹோ (Zoho) மற்றும் சஹஸ்ரா (Sahasra) ஆகியவை புதிய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாண்மைகளை ஈர்க்கும் நோக்கில் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின.சஹஸ்ரா குழுமம்: தனது மைக்ரோ எஸ்டி (microSD) கார்டுகளைக் காட்சிப்படுத்தி சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கூட்டு முயற்சிகள் மூலம் இத்தொழில்நுட்பங்களை இந்தியாவிலும் செயல்படுத்த முயல்கிறது.ஜோஹோ கார்ப்பரேஷன்: தைவானை ஒரு வளர்ந்து வரும் முக்கிய சந்தையாகக் கருதி, அங்குள்ள நிறுவனங்களுக்குத் தன் கிளவுட் மற்றும் சாஸ் (SaaS) செயலிகளை வழங்கி வருகிறது. மென்பொருள் துறையில் இந்தியாவின் நற்பெயர் தைவான் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அரைக்கடத்தி (Semiconductor) மற்றும் AI உள்கட்டமைப்பில் இந்தியா-தைவான் இடையிலான உறவு பலப்பட்டு வரும் சூழலில், இந்திய அரசின் புதிய உற்பத்தி முன்னெடுப்புகளால் வருங்காலங்களில் இத்தகைய உலகளாவிய நிகழ்வுகளில் இந்தியாவின் பங்கேற்பு மேலும் அதிகரிக்கும் எனத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 131 132

AD's



More News