இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) இணைந்து, ஒடிசா கடற்கரையில் 'TARA' (Tactical Advanced Range Augmentation) அமைப்பின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.சாதாரண வெடிகுண்டுகளை ஸ்மார்ட் குண்டுகளாக மாற்றும் 'டாரா கிளைட் கிட்"ஒடிசா கடற்கரையில் ஜாக்குவார் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக செலுத்தி சோதனை.கிளைட் கிட் பொருத்தப்பட்ட குண்டு இலக்கை துல்லியமாக தாக்கியதாக தகவல்.டாரா பொருத்தப்பட்ட குண்டுகளை எதிரிகளின் வான்பாதுகாப்பு அமைப்புக்கு வெளியே இருந்து வீச முடியும்.கிளைட் ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த செலவில் தயாரிக்கலாம் எனத் தகவல்.இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) இணைந்து, ஒடிசா கடற்கரையில் 'TARA' (Tactical Advanced Range Augmentation) அமைப்பின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
நீலகிரி வகை திட்டத்தின் கீழ் உருவான 17A-வின் 6-வது போர்க்கப்பலான மகேந்திரகிரி மும்பையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு முதல் கப்பல் வழங்கப்பட்ட 17 மாதங்களுக்குள் 6-வது கப்பலும் வழங்கப்பட்டுள்ளதால் போர்க் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் தற்சார்பு உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் - ₹5,00,000,துணைக் குடியரசுத் தலைவர் - €4,00,000,பிரதமர் -₹2,80,000,உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி - ₹2,80,000,ஆளுநர் - ₹3,50,000,உச்ச நீதிமன்ற நீதிபதி - ₹2,50,000,உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி - ₹2,50,000,உயர் நீதிமன்ற நீதிபதி - ₹2,25,000,இந்திய இராணுவத் தளபதி - 2,50,000,இந்தியக் கடற்படைத் தளபதி - ₹2,50,000,இந்திய விமானப்படைத் தளபதி - ₹2,50,000,தலைமைத் தேர்தல் ஆணையர் - ₹2,50,000,முதலமைச்சர் - ₹2,05,000,தலைமைச் செயலாளர் - ₹2,25,000,IAS அதிகாரி (மூத்த நிலை) - ₹2,00,000+,IPS அதிகாரி - ₹2,00,000+,நாடாளுமன்ற உறுப்பினர் - ₹1,24,000,சட்டமன்ற உறுப்பினர் - ₹1,05,000.
சூரியன் மேற்பரப்பில் மிகப்பெரிய வெடிப்பினால் ஏற்பட்ட வலுவான காந்தபுயல் பூமியைநோக்கிவருகிறது; விநாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் ஜி3 எனப்படும் இப்புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்பூமியை நோக்கி வரும் சூரிய புயலால், வட இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அரோரா எனப்படும் துருவ ஒளிகள் தென்பட வாய்ப்பு.சக்திவாய்ந்த சூரிய வெடிப்பால் ஏற்பட்டுள்ள இந்நிகழ்வால், செயற்கைக்கோள்கள், GPS அமைப்புகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் எனவும் கணிப்பு.
ஜோஹோ (Zoho) ஆதரவு பெற்ற 'கருவி' நிறுவனம், சீன பவர் டூல்களின் இறக்குமதிக்கு மாற்றாக இந்தியாவிலேயே தரமான பவர் டூல்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ள முக்கியத் தகவல்கள்:முதல் தயாரிப்பு தயார்: பல மாத பொறியியல் சோதனைகளுக்குப் பிறகு, 'கருவி'யின் முதல் தயாரிப்பு நிறுவனத்தின் உள் தர அளவுகோல்களைப் பூர்த்தி செய்து, தற்போது வாடிக்கையாளர் சோதனை நிலையை எட்டியுள்ளது.தொழில்நுட்ப சவால்கள்: 11,000+ RPM வேகத்தில் இயங்கும் பவர் டூல்களில் ஏற்படும் அதிக வெப்பம், அதிர்வு மற்றும் இரைச்சல் போன்ற சவால்களை பொறியாளர்கள் வெற்றிகரமாக கையாண்டுள்ளனர்.உலகளாவிய தரம் & விலை: சந்தையில் கிடைக்கும் மலிவான சீன இறக்குமதி கருவிகளுக்கு மத்தியில், ஜப்பானிய மற்றும் ஜெர்மன் பிராண்டுகளுக்கு இணையான தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன், அதே சமயம் விலைப் போட்டித்தன்மையுடனும் இத்தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அடுத்தகட்ட திட்டம்: உற்பத்திக்கான அச்சு மற்றும் உள்கட்டமைப்புச் (Tooling) செலவுகளைக் குறைக்க தனி பிரத்யேக அறையை அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் முழு அளவிலான பல்வேறு பவர் டூல் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ₹2,177 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கிராமப்புறங்களுக்கு குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில், அமெரிக்காவின் 'ஜாபில்' (Jabil) நிறுவனம் ₹2,000 கோடி முதலீட்டில் புதிய மின்னணு உற்பத்தி ஆலையை அமைக்க 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
1. பணம் வந்ததும் கட்டுப்பாடில்லாமல் செலவு. 2. கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவது. 3. பிறர் பார்வைக்காக ஆடம்பர செலவு 4. வருமானத்தை விட ஆசை அதிகம். 5. தேவையில்லாத பொருட்களுக்கு செலவு. 6. பாசாங்கு lifestyle . 7. பணம் வருவது மட்டும் கவனம்... போவது கவனிக்காமை. 8. ஆடம்பர வாழ்க்கை மீது அடிமை. 9. சேமிப்பு பழக்கம் இல்லாமை. 10. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தாதது. உண்மை என்னனா...பணம் இல்லாதது பிரச்சனை இல்லை. பணத்தை கையாள தெரியாததே பிரச்சனை.மாற்றம் வேண்டுமா?earn பண்ணுறதுக்கு சமமாக save & invest பண்ணணும்.சிறிய பழக்கங்கள் தான். பெரிய வாழ்க்கையை உருவாக்கும்.
.இந்தியக் குடும்பங்கள் வசம் சுமார் 35,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் உள்ளது. இது உலகின் மொத்த தங்கத்தில் 11% ஆகும். அமெரிக்க அரசின் பாதுகாப்புக் கிடங்கில் உள்ள தங்க இருப்பை (8,133 டன்) விட இது 4 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் பாரம்பரியமாகவும், கலாச்சார ரீதியாகவும் தங்கம் ஒரு பாதுகாப்பான சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் பல தசாப்தங்களாக இந்தச் சேமிப்பு தொடர்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் அதிரடி: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் மூலம் உலகின் எந்த நகரத்திற்கும் 30 நிமிடங்களுக்குள் பயணிக்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பயண நேரம்: லண்டன் முதல் நியூயார்க் வரை வெறும் 29 நிமிடங்களிலும், நியூயார்க் முதல் பாரிஸ் வரை 30 நிமிடங்களிலும் செல்ல முடியும்.மெகா புரட்சி: எதிர்காலத்தின் இந்த அதிவேகப் போக்குவரத்து முறை, உலகளாவிய மனித மற்றும் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கப் போகிறது.