25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 05, 2026

பூமி மற்றும் செவ்வாய் கோள்கள்.

பூமி மற்றும் செவ்வாய் கோள்கள் ஒரே மாதிரியான விண்வெளிப் பொருட்களால் உருவானவை என புதிய ஆய்வில் தகவல். சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பொருட்களால் பூமி உருவானது என்ற பழைய கருத்தை இந்த ஆய்வு மாற்றியுள்ளது. பூமியைப் போலவே செவ்வாயும் ஆரம்பத்தில் தண்ணீருடன் இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Jun 05, 2026

99% மக்களுக்கு தெரியாத ரகசியங்கள்..

1.தினமும் Apple சாப்பிட்டால் Doctor தேவையில்லை. 2. தினமும் 4 Badam (பாதாம்) சாப்பிட்டால் Cancer அருகே கூட வராது. 3.தினமும் Lemon (எலுமிச்சை) எடுத்துக்கொண்டால் Fat (கொழுப்பு) இருக்காது. 4. தினமும் 2-3 litters Water (தண்ணீர்) குடித்தால் Dry Skin வராது. 5. தினமும் 4 Khajoor (பேரீச்சம்பழம்) சாப்பிட்டால் Weakness (சோர்வு) இருக்காது. 6. தினமும் 8 மணி நேர Sleep (உறக்கம்) இருந்தால் Stress (மன அழுத்தம்) இருக்காது !. 7. தினமும் 40 நிமிடம் Exercise (உடற்பயிற்சி) செய்தால் Fit ஆகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள்.

Jun 05, 2026

ராணுவ வலிமையை அதிகரிக்கும் இந்தியா.

இந்திய ராணுவத்தின் தரைப்படை வலிமையை மேம்படுத்தும் வகையில், ரூ.975 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து.. இதன்படி, போர்க்களத்தில் எதிரிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளைத் தகர்த்துமுன்னேறிச் செல்ல உதவும் TRAWL கருவிகள் கொள்முதல் செய்ய திட்டம்.. இவை இந்திய ராணுவத்தின் பிரதான பீரங்கிகளான T-72 மற்றும் T-90 ரக டாங்கிகளில் பொருத்தப்படும்..

Jun 04, 2026

குவாலிட்டி வால்ஸ் (Kwality Wall's) ஐஸ்கிரீம் நிறுவனம்.

குவாலிட்டி வால்ஸ் (Kwality Wall's) நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது அனைத்து தயாரிப்புகளையும் 100% பால் சார்ந்த ( Milk-based) உண்மையான ஐஸ்கிரீம்களாக மாற்றப்போவதாக அதன்  (Peter ter Kulve) அதிரடியாகஅறிவித்துள்ளார். இதுவரை பாமாயில் போன்ற தாவரக் கொழுப்புகளைப் (Vegetable Fats) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வந்த மேக்னம், கார்னெட்டோ மற்றும்குவாலிட்டி வால்ஸ் தயாரிப்புகள், இனி முற்றிலும் தரமான பால் மற்றும் பால்பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்படும். இந்திய மக்கள் ஆரோக்கியமான மற்றும்பால் சார்ந்த ஐஸ்கிரீம்களையே அதிகம் விரும்புவதால் இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவைஎடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Jun 04, 2026

கொசுக்களுக்கு 'O' குரூப் ஏன் பிடிக்கும்? — அறிவியல் காரணங்கள்.

1. இரசாயன சமிக்ஞைகள் (Chemical Signals)நம் உடலில் சுரக்கும் வியர்வை மற்றும் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் சில வகையான அமிலங்கள் (உதாரணமாக லாக்டிக் அமிலம் மற்றும் யூரிக் அமிலம்) வெளிப்படும். மற்ற இரத்த பிரிவினரை விட 'O' பிரிவு இரத்த வகை உள்ளவர்களின் உடலில் இருந்து இந்த அமிலங்கள் சற்று அதிகமாக சுரக்கின்றன. இந்த வாசனை கொசுக்களைக் காந்தம் போல் ஈர்க்கிறது.2. 'சீக்ரெட்டர்கள்' (Secretors)உலகில் உள்ள மனிதர்களில் சுமார் 80% பேர் 'சீக்ரெட்டர்கள்' (Secretors) என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது, இவர்கள் தங்களின் இரத்த வகை என்ன என்பதைத் தங்களின் உமிழ்நீர் (Saliva) மற்றும் வியர்வை மூலமாகவே வேதியியல் சமிக்ஞைகளாக வெளிப்படுத்தி விடுவார்கள். கொசுக்கள் இந்தச் சமிக்ஞைகளை எளிதில் கண்டறிந்து, 'O' பிரிவு சீக்ரெட்டர்களை நோக்கி உடனே படையெடுக்கின்றன.கொசுக்களை ஈர்க்கும் பிற முக்கிய காரணங்கள்:இரத்த வகை மட்டுமின்றி, கொசுக்கள் உங்களைக் கடிக்க இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன:கார்பன் டை ஆக்சைடு ($CO_2$):நாம் சுவாசித்து வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை கொசுக்கள் சுமார் 50  மீட்டர் தூரத்தில் இருந்தே மோப்பம் பிடித்துவிடும். அதிகமாக மூச்சு வாங்குபவர்கள்,  பருமனானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொசுக்கள் எளிதில் குறிவைக்க இதுவே காரணம்.உடல் வெப்பம்: உடற்பயிற்சி செய்து முடித்த உடனோ அல்லது உடல் வெப்பம் அதிகமாக இருக்கும்போதோ கொசுக்கள் அதிகமாகக் கடிக்கும்.ஆடையின் நிறம்: கொசுக்களுக்குக் கண்பார்வையும் உண்டு. கறுப்பு, அடர் நீலம் (Dark Blue) போன்ற கரும் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களைக் கொசுக்கள் எளிதாக அடையாளம் கண்டு தேடி வரும்.சுருக்கமாக: 'O' பிரிவு இரத்தம் உள்ளவர்களின் உடல் வாசனை மற்றும் வியர்வை, கொசுக்களுக்கு ஒரு 'பிரியாணி' வாசனை போலத் தெரிவதால் தான் அவர்கள் அதிகமாகக் கொசுக்கடியால் அவதிப்படுகிறார்கள்.

Jun 04, 2026

விண்வெளியில் மற்றுமொரு பூமி.

வானியற்பியல் உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, பூமியிலிருந்து சுமார் 10.7 ஒளி ஆண்டுகள் (Light-years) தொலைவில் உள்ள GJ 887 d என்ற புதிய கோளை வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இது தனது நட்சத்திரத்தின் "வாழக்கூடிய பகுதியில்" (Habitable Zone) அமைந்துள்ளதால், அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்பப்படுகிறது.

Jun 03, 2026

ரேஷன் கடையில் இனி 'அளந்து' போட மாட்டாங்க .

முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.தமிழகம் முழுவதும்  உத்தரவு..! இனி பாக்கெட் வடிவில் சீல் வைத்து வழங்கப்படும். எடை குறைவு. கலப்படம், கடத்தல் முழுமையாக தடுக்கப்படும். ஏழை, எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பே எங்கள் முதன்மை. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் உறுதி. முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி. மக்களின் நம்பிக்கை எங்கள் பொறுப்பு. தரமான பொருள்- சரியான எடை - உங்கள் உரிமை பாக்கெட் ரேஷன் -பாதுகாப்பான நாளை.விஜய் வாக்குறுதி செயல்.

Jun 03, 2026

ஊழியர்களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ்.

சாம்சங் நிறுவனத்தின் செமி கண்டக்டர் பிரிவானது, தனது சிப் விற்பனை மூலம் 49 மடங்கு கூடுதல் வருவாயை கடந்த காலாண்டில் ஈட்டியுள்ளது.இதன் மூலம் நிறுவன ஊழியர்களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ் வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Jun 03, 2026

தாகம் எப்படி ஏற்படுகிறது? உடலுக்குள் நடக்கும் அறிவியல் அதிசயம்.

தாகம் என்பது சாதாரணமாக நமக்குத் தோன்றும் ஒரு உணர்வு அல்ல; உடலில் நீர்ச்சத்து குறையும் போது நம்மைப் பாதுகாப்பதற்காக மூளை எழுப்பும் ஒரு உயிரியல் எச்சரிக்கை மணி (Biological Alarm)!மனித உடலில் சுமார் 70% வரை நீர் உள்ளது. இதுதான் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் செல்களின் செயல்பாடுகளைச் சீராக வைக்க உதவுகிறது.🔍 உடலுக்குள் தாகம் பிறப்பது எப்படி?மூளையின் ‘அலாரம்’ (Hypothalamus):உடலில் நீரின் அளவு குறையும் போது, ரத்தத்தில் உப்பின் செறிவு (Salt concentration) அதிகரிக்கும். இதனை மூளையில் உள்ள 'ஹைப்போதாலமஸ்' என்ற பகுதி உடனடியாகக் கண்டறிந்து, தாக உணர்வைத் தூண்டுகிறது.தொண்டையின் சமிக்ஞை: நீர்ச்சத்து குறையும் போது வாயில் உமிழ்நீர் (Saliva) சுரப்பது குறைகிறது. வாய் மற்றும் தொண்டையில் உள்ள உணரி நரம்புகள் (Sensors)  வறட்சியை உணர்ந்து மூளைக்குச் சமிக்ஞை அனுப்புகின்றன. உடனே மூளை சில ஹார்மோன்களைச் சுரந்து, மேலும் நீர் இழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.⚠️ நீரிழப்பின் நிலைகளும் ஆபத்துகளும்:லேசான நீரிழப்பு: தொண்டை உலர்ந்து போதல் மற்றும் லேசான சோர்வு ஏற்படும்.கடுமையான நீரிழப்பு: தலைச்சுற்றல், மனக்குழப்பம் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் தீவிர நீரிழப்பு ஏற்பட்டால், அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். வெப்பமான கோடை காலத்திலும், கடுமையான உடற்பயிற்சியின் போதும் வியர்வை வழியாக அதிக நீர் வெளியேறும் என்பதால் கவனம் தேவை.💡 ஆரோக்கியத்திற்கான எளிய டிப்ஸ்:👍 3 லிட்டர் இலக்கு: உடலை எப்போதுமே புத்துணர்ச்சியோடு வைத்திருக்க ஒரு நாளைக்குச் சராசரியாக3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.🍹 எலக்ட்ரோலைட் பானங்கள்: அதிக சோர்வாக இருக்கும் போது வெறும் தண்ணீருக்குப் பதிலாக எலக்ட்ரோலைட் (Electrolyte) கலந்த பானங்களை குடிக்கலாம்.👶👵 முதியவர்கள் மற்றும் குழந்தைகள்: இவர்களுக்கு இயல்பாகவே தாகம் எடுக்கும் உணர்வு குறைவாக இருக்கும். எனவே,  அவர்கள் கேட்காவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் கொடுப்பது அவசியம்.

Jun 03, 2026

ஜியோவின் புதிய ரூ.200 'Jio OTT Pass' திட்டம் அறிமுகம்!

28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில்யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ (மொபைல் பதிப்பு), ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன் NXT உள்ளிட்ட 15 OTT செயலிகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது.மேலும், JioTV மூலம் 1000+ லைவ் டிவி சேனல்கள், 30GB அதிவேக டேட்டா மற்றும் அடிப்படை திட்ட வேலிடிட்டி வரை அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கும்.இந்த திட்டத்தை MyJio செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் Activate செய்யலாம்.

1 2 ... 30 31 32 33 34 35 36 ... 131 132

AD's



More News