25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 03, 2026

330 கோடி ரூபாய்.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வில் (CIA) பணியாற்றிய மூத்த அதிகாரி டேவிட் ரஷ், 40 மில்லியன் டாலர் (சுமார் 330 கோடி ரூபாய்) மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பணி தொடர்பான செலவுகள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தைப் பெற்று, அதைத் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 303 தங்கக் கட்டிகள், 2 மில்லியன் டாலர் ரொக்கம் மற்றும் 35 ஆடம்பரக் கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Jun 03, 2026

பட்ஜெட் விலையில் பவர்ஹவுஸ்: 7000mAh பேட்டரியுடன் களமிறங்கிய OPPO A6c!.

OPPO நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான OPPO A6c மாடலை அமைதியான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ₹13,999 ஆரம்ப விலையில், பிரம்மாண்ட பேட்டரி பேக்-அப் மற்றும் சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகியுள்ளது.முக்கிய சிறப்பம்சங்கள் (Specifications):பேட்டரி: மிக நீண்ட நேரம் உழைக்கும் 7000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.டிஸ்பிளே: மென்மையான பயன்பாட்டிற்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் திரை.பாதுகாப்பு: தூசி மற்றும் தண்ணீர் துளிகளிடம் இருந்து பாதுகாக்க IP64 ரேட்டிங்.கேமரா: அழகிய புகைப்படங்களுக்கு மேம்படுத்தப்பட்ட AI கேமரா அம்சம்.விலை மற்றும் நிறங்கள் (Price & Colors):இந்த ஸ்மார்ட்போன் ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் ஸ்டோன் பிரவுன் (Stone Brown) ஆகிய இரு அசத்தலான நிறங்களில் கிடைக்கிறது.மாடல் (Variant)விலை (Price)4GB ரேம் + 64GB சேமிப்பு₹13,9994GB ரேம் + 128GB சேமிப்பு₹16,999சுருக்கமாக: குறைவான பட்ஜெட்டில், அடிக்கடி சார்ஜ் போடும் தொல்லை இல்லாத ஒரு ஸ்மார்ட்போனை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த OPPO A6c ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!

Jun 02, 2026

TVK  அரசுக்கு நன்றி.அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம்.

தனியார் பள்ளிகள் இனி அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பள்ளி விளம்பர பலகையில் கட்டாயம் வைக்க வேண்டும் .

Jun 02, 2026

அஞ்சல் துறை, வருமான வரி துறைகளில் 12256 வேலைவாய்ப்பு.!

மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகளில் ASSISTANT /ASSISTANT SECTION OFFICER/TAX ASSISTANT/INSPECTOR போன்ற 12256 பணிகள், கடைசி நாள்: 22.06.2026 டிகிரி தகுதி, ஊதியம் ரூ.25500 முதல் 151100 வரை விவரம் அறிய CGL என்று கமெண்ட் செய்யுங்கள்

Jun 02, 2026

தமிழகத்திலேயே முதல்முறை: தாம்பரம் மாநகராட்சியின் 'ஹைடெக்' குப்பை மேலாண்மை!

தாம்பரம் மாநகராட்சியில், தமிழகத்திலேயே முதன்முறையாகப் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குப்பை அகற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்:கம்பரஸர் மூலம் அழுத்தம்: சேகரிக்கப்படும் குப்பைகள் நவீன கம்பரஸர் இயந்திரம் மூலம் நன்றாக அழுத்தப்படும்.மூடப்பட்ட கண்டெய்னர்கள்: அழுத்தப்பட்ட குப்பைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்லப்படும்.முக்கிய நன்மை: இந்த அட்வான்ஸ் டெக்னாலஜி மூலம், குப்பைகளை லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது துர்நாற்றம் வீசாது மற்றும் அவை சாலையில் சிதறி கொட்டாது என்று தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Jun 01, 2026

குழந்தைகள் பாதுகாப்பே நம் முதல் பொறுப்பு!

 முடிந்தால் நீங்களே பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வரவும்.பெண் பிள்ளைகளைநண்பர்களோடு சேர்ந்து வர சொல்லுங்க தனித்து வர விடவேண்டாம்pepper spray வாங்கி தாருங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு..தற்காப்பு கலைகளை பிள்ளைகளுக்கு கற்று தரவும்..யார் தொல்லை கொடுத்தாலும் பெற்றோரிடமோ, ஆசிரியர் இடமோ சொல்ல சொல்லுங்க ..புத்தகங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு..!பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி பாடப்புத்தகங்களில் விழிப்புணர்வு தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலவச உதவி எண்களை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு.குழந்தைகள் பாதுகாப்பே நம் முதல் பொறுப்பு!

Jun 01, 2026

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: சிறப்பம்சங்களும், நன்மைகளும்.

பயன்பாட்டின் காரணமாக காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் அழுக்கடைந்து, கிழிந்து விடுகின்றன. இதற்கு மாற்றாக, தற்போது பல்வேறு நாடுகளில் நீண்ட ஆயுள் கொண்ட பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவை 'பைஆக்சலி ஒரியண்டட் பாலிபுரோபலீன்' (BOPP) என்ற சிறப்பு வகை பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுபவை ஆகும்.தயாரிப்பு முறைபாலிமர் மூலப்பொருள் சரியான வெப்பத்தில் உருக்கப்பட்டு, மெல்லிய தாளாக மாற்றப்படுகிறது.அதன் மேல் அச்சிடுவதற்கு ஏற்றவாறு சிறப்பு பூச்சு பூசப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.பல நிறங்களில் உயர் பாதுகாப்புடன் அச்சிடப்பட்டு, தரச் சோதனைக்குப் பின் நோட்டுகள் வெட்டப்பட்டு வெளியிடப்படுகின்றன.முக்கிய நன்மைகள்.நீண்ட ஆயுள்: காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை.பாதிப்பற்றவை: நீரில் நனைந்தாலும் எளிதில் சேதமடையாது; அழுக்கடைவதும் குறைவு.உயர் பாதுகாப்பு: காகித நோட்டுகளை விடப் பல மடங்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை.கள்ள நோட்டுகளைத் தடுக்கும் தொழில்நுட்பங்கள்வெளிப்படையான பகுதி: நோட்டின் ஒரு பகுதியில் வெளிப்படையான (Transparent) ஜன்னல் போன்ற அமைப்பு இருக்கும். இதை போலி நோட்டுகளில் உருவாக்குவது மிகவும் கடினம்.வண்ணம் மாறும் படங்கள்: ஹோலோகிராம் மற்றும் ஒளி மாறும் படங்கள் இருப்பதால், நோட்டைச் சாய்த்துப் பார்க்கும்போது நிறம் மாறும்.நுண்ணிய அச்சிடுதல் (Micro-printing): சாதாரண அச்சுப்பொறியால் நகலெடுக்க முடியாதபடி, மிகச் சிறிய எழுத்துக்கள் மற்றும் வடிவங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.புற ஊதா கதிர் குறியீடுகள் (UV Features): சாதாரணக் கண்களுக்குத் தெரியாத, அல்ட்ரா வயலட் ஒளியில் மட்டுமே தெரியக்கூடிய பாதுகாப்பு குறியீடுகள் இதில் இடம்பெற்றிருக்கும்.இத்தகைய நீடித்த உழைப்பு மற்றும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களால், பாலிமர் நோட்டுகள் உலகின் மிக மேம்பட்ட பணத்தாள்களாகக் கருதப்படுகின்றன.

Jun 01, 2026

தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! இதுவரை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 நாள் விசா-இல்லா (Visa-Free) அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் முறையான குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்து அமைச்சரவை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி இந்தியப் பயணிகள் தாய்லாந்து செல்ல விரும்பினால், 'விசா ஆன் அரைவல்' (Visa On Arrival - VOA) முறை அல்லது முன்கூட்டியே இ-விசா (e-Visa) பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த புதிய நடைமுறையின் கீழ், விசா ஆன் அரைவல் மூலம் செல்லும் பயணிகள் அதிகபட்சம் 15 நாட்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும். தாய்லாந்து செல்லும் முன் உங்கள் பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!

Jun 01, 2026

நாசா மாநாட்டில் பங்கு பெற 13 வயது தமிழ் மாணவர் ஹரி துவரகதன் தேர்வு!

இளம் வயதிலேயே அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி, சர்வதேச மேடையில் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் மாணவர் ஹரி துவரகனுக்கு RAJAPALAYAM TIMES சார்பில்  பாராட்டுக்கள்.

Jun 01, 2026

ஜூன் 1: ஆம்தேதி முதல் பயோமெட்ரிக் கட்டாயம்.

தலைமைச் செயலகத்தில்உள்ள மனிதவள மேலாண்மைத் துறை அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ஆம்தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

1 2 ... 31 32 33 34 35 36 37 ... 131 132

AD's



More News