25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 20, 2026

திருச்சியில் சர்வதேச அதிரடி: 4 நாட்களுக்குத் திருச்சியே தாய்லாந்தாக மாறப்போகிறது! 

திருச்சி மக்களே தயாராகுங்கள்! இதுவரை நகரில் கண்டிராத வகையில், சர்வதேசத் தரத்திலான மாபெரும் "THAILAND EXPO" ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.🌍 என்னென்ன நாடுகள்? என்னென்ன பொருட்கள்?தாய்லாந்து மட்டுமின்றி துபாய், கொரியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஸ்பெஷல் தயாரிப்புகள் ஒரே கூரையின் கீழ் விற்பனைக்கு வருகின்றன:👗 ஆடைகள் & அஸஸரீஸ்: பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் மற்றும் ஃபேஷன் பொருட்கள்.💍 நகைகள் & வாசனை திரவியங்கள்: சர்வதேச பிராண்டுகளின் நகைகள் மற்றும் பிரீமியம் பெர்ஃப்யூம்கள் (Perfumes).🍫 சாக்லேட்டுகள்: வெளிநாட்டு சுவையான சாக்லேட் வகைகள்.🏡 வீட்டு உபயோகப் பொருட்கள்: இல்லத்தரசிகளைக் கவரும் வீட்டு உபயோக மற்றும் நவீன அலங்காரப் பொருட்கள்.📍 கண்காட்சி விவரங்கள்:📅 நாட்கள்:ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை (4 நாட்கள் மட்டும்)⏰ நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை🏢 இடம்:கலையரங்கம், நியூ மேரேஜ் ஹால், கேன்டோன்மென்ட், திருச்சி.📞 மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள: 7448767203(ஷாப்பிங் பிரியர்களான உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இப்போதே இந்தத் தகவலைப் பகிருங்கள்!)

Jun 20, 2026

பருவமழைக்கு சவால்: எல் நினோ தாக்கம் தீவிரமடையலாம்

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வெப்பநிலை அதிகரிப்பால் உருவாகும் 'எல் நினோ' காலநிலை நிகழ்வு, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் உருவாக 80% வாய்ப்பு உள்ளது என உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் காரணமாக இந்தியாவில் பருவமழை இயல்பை விட குறையக்கூடும் என்றும், கோடைக்கால வெப்ப அலைகள் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக காலநிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Jun 20, 2026

தாய் மண்ணுக்காகஉயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா.

தாய் மண்ணுக்காகஉயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா.கண்களைப் பிடுங்கி, காதுகளைக் துண்டித்தும் ஒரு வார்த்தை கூட எதிரியிடம் மண்டியிடாத இரும்பு மனிதன்! 22 நாட்கள் பாகிஸ்தானின் சித்திரவதையைத் தாங்கியும்,நம் இந்திய ரகசியத்தை காக்க உயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா!,இந்த மாவீரரின் தியாகத்திற்கு வணக்கங்கள்..

Jun 20, 2026

சுற்றுச்சூழல் புரட்சி: தமிழகத்தின் முதல் ‘நகர்ப்புறச் சுரங்கம்’ திறப்பு! பேட்டரி கழிவுகளிலிருந்து கனிமங்களை மீட்கும் புதிய ஆலை!

🔋 லித்தியம்-அயன் பேட்டரி மறுசுழற்சி ஆலைபயன்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்து, அவற்றில் உள்ள முக்கிய கனிமங்களை மீட்டெடுக்கும் தமிழகத்தின் முதல் பிரத்யேக ஆலையை ‘பிரிட்ஜ் கிரீன் அப்சைகிள்’ நிறுவனம் தொடங்கியுள்ளது. தூய்மையான தொழில்நுட்பத் துறையில் (Clean-tech) ஈடுபட்டு வரும் இந்த சர்வதேச நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்துறையில் ₹1,000 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.🔍 'நகர்ப்புறச் சுரங்கம்' (Urban Mining) என்றால் என்ன?பூமிக்கு அடியில் தோண்டி கனிமங்களை எடுப்பதற்குப் பதிலாக, பயன்பாடு முடிந்த மின்னணு கழிவுகளில் இருந்து கனிமங்களை மீட்டெடுப்பதே 'நகர்ப்புறச் சுரங்கம்' எனப்படுகிறது.ஆலையின் செயல்முறை: ஆயுட்காலம் முடிந்த பேட்டரிகள் மற்றும் உற்பத்தி கழிவுகளைப் பதப்படுத்தி,  பேட்டரி தயாரிப்புக்கு அவசியமான லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, தாமிரம் மற்றும் கிராஃபைட்ஆகிய முக்கிய கனிமங்களை இந்த ஆலை பிரித்தெடுக்கும்.உள்நாட்டுத் தேவை: இதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதி மற்றும் முதன்மைச் சுரங்கங்களைச் சார்ந்திருப்பது பெருமளவு குறையும்.📈 2030-க்குள் 8 லட்சம் டன் கழிவுகள்!இந்தியாவில் மின்சார வாகனங்கள் (EV), ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகள்8,00,000 டன்களைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள இத்தகைய ஆலைகள் மிக அவசியமானவை ஆகும்.💡 தொழில்நுட்பமும் பாதுகாப்பும்அமெரிக்கா மற்றும் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிட்ஜ் கிரீன் நிறுவனம், பேட்டரிகளின் ஆயுளை நீட்டிக்கவும், கனிமங்களைச் சூழலியல் பாதிப்பின்றி பிரித்தெடுக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பிரத்யேக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது."முக்கிய கனிமங்களை உள்நாட்டிலேயே கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன், மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுடன் இந்த ஆலையைத் தமிழகத்தில் அமைத்துள்ளோம்." — பால்கி ஐயர் (நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, பிரிட்ஜ் கிரீன்).

Jun 20, 2026

புளிய விதையால் நுண்பிளாஸ்டிக் பிரச்சினைக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்கள்.

16 வயதான இந்திய மாணவர்கள் அவ்யானா மேத்தா, அரியானா அகர்வால் மற்றும் விவான் சாவ்ச்சாரியா ஆகியோர், கழிவுப் புளிய விதைகளில் இருந்து தயாரித்த ‘பிளாஸ் ஸ்டிக்’ என்ற தூள் மூலம் குடிநீரில் உள்ள நுண்பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றும் புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளனர்.மின்சாரம் அல்லது விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாத இந்த கண்டுபிடிப்புக்காக, அவர்கள் 2026-ம் ஆண்டு உலகின் முக்கிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான ‘தி எர்த் பிரைஸ்’ விருதை வென்ற முதல் இந்தியக் குழுவாக சாதனை படைத்தனர். மேலும், நாடு முழுவதும் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு பயிலரங்குகளையும் நடத்தியுள்ளனர்.

Jun 20, 2026

சென்னை நீர்வழிகள் மேம்பாட்டுக்கு ரூ.7,500 கோடி நிதி ஒப்புதல்.

சென்னையின் முக்கிய நீர்வழிகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து மேம்படுத்துவதற்காக ரூ.7,500 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டத்தின் முதல் கட்ட ஆதரவாக அமைகிறது.'நகர்ப்புற சவால் நிதியம்' (Urban Challenge Fund) மூலம் மொத்தம் ரூ.30,000 கோடி வரை நிதி பெற தமிழ்நாடு தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) படிப்படியாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.நீண்டகாலமாக மாசுபாடு மற்றும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மூன்று நீர்வழிகளையும் முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கண்கூடாக நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Jun 19, 2026

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் அங்கீகாரமற்ற 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் முடக்கம்.

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. மட்டுமின்றி, அதனால் அங்கீகரிக்கப்பட்ட பிற இ-கேட்டரிங் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.இந்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் பெறாமல், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் சில அங்கீகாரமற்ற நிறுவனங்கள் இ-கேட்டரிங் சேவையின் பெயரில் உணவு விற்பனை செய்து வருவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் எழுந்தன.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கீகாரம் பெறாத 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்ய விரும்பும் பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரப்பூர்வ ‘புட் ஆன் ட்ராக்’ (Food on Track) மொபைல் செயலி அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. அங்கீகரித்த உணவு வழங்குநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jun 18, 2026

G7 மாநாட்டில் பிரதமர் மோடி.

52-வது G7 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். 'குளோபல் சவுத்' நாடுகளின் குரலாக இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, பொருளாதார வளர்ச்சி, சர்வதேச ஒற்றுமை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விவகாரங்களில் உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறார்.மேற்காசிய போர் காரணமாக எரிபொருள், உர விநியோக பாதிப்புகள் வளரும் நாடுகளை தொடர்ந்து பாதிக்கும் என மோடி கவலை தெரிவித்தார். இதன் தாக்கத்தை குறைக்க சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று G7 மாநாட்டில் வலியுறுத்தினார்.

Jun 18, 2026

‘சென்னை ஒன்' செயலி மூலம்,1 ரூபாய் கட்டணத்தில்..!

 ‘சென்னை ஒன்' செயலி மூலம் வெறும் 1 ரூபாய் கட்டணத்தில் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் ஒருமுறை பயணம் செய்யும் சிறப்பு சலுகை அறிவிப்பு!இந்தச் சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

Jun 18, 2026

வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது.

 வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது2024-ம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமியின் நாடகத் துறையில் சிறந்த நடிப்பிற்கான விருது,வாகை சந்திரசேகருக்கு விருது!

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 131 132

AD's



More News