25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 27, 2026

கேஸ் சிலிண்டர் காலாவதி தேதி...

கேஸ் சிலிண்டர்களிலும் காலாவதி தேதி இருப்பதை கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. A, B, C, D என குறியீடுகள் மூலம் மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன (A-Jan/Feb/Mar, B-Apr/May/Jun, C-Jul/Aug/Sep, D-Oct/Nov/Dec). சிலிண்டர் வாங்கும் முன் அவற்றை சரிபார்க்கவும், காலாவதி சிலிண்டர் இருந்தால் 1800-2333-555 எண்ணில் புகார் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Jun 26, 2026

மேகங்களின் எடை எவ்வளவு தெரியுமா?.

விண்ணில் பஞ்சு போல மிதக்கும் ஒரு சாதாரண மேகம் சுமார்10 லட்சம் டன் எடை கொண்டது. அதாவது100 எருமைகளின் ஒட்டுமொத்த எடைக்கு இது சமம். காற்றில் அடர்த்தி குறைவாக இருப்பதால் இந்த பிரம்மாண்ட எடையையும் தாங்கி மேகங்கள் வானில் மிதக்கின்றன.

Jun 26, 2026

சென்னையில் அமெரிக்க  250-வது சுதந்திர தின கொண்டாட்டம்.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை அமெரிக்க கொடியின் வண்ண விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், துணைத்தூதர் மரியானா மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Jun 26, 2026

வாட்ஸ்அப் புதிய CEO.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்வதேச முதன்மை செயல் அதிகாரியாக (CEO), கிரெட் (CRED) நிறுவனத்தின் தலைவர் குணால் ஷா நியமிக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Jun 26, 2026

தேனீ கொட்டினால் இரும்பு தேய்க்கலாமா?.

செய்யக்கூடாதது: கொட்டிய இடத்தில் இரும்பைத் தேய்க்கக் கூடாது. குறிப்பாக,  துருப்பிடித்த இரும்பைத் தேய்ப்பதால் 'டெட்டனஸ்' (Tetanus) போன்ற தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.சரியான முதலுதவி:முதலில் தேனீயின் முள்ளை உடனே அகற்றுங்கள்.அந்த இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவுங்கள்.வீக்கம் குறையவில்லை எனில் மருத்துவரை அணுகுங்கள்.

Jun 25, 2026

கைகளில் எழுதுங்கள்... மூளையைக் காப்பாற்றுங்கள்!

 டிஜிட்டல் வேகத்தில் நாம் பேனா, பென்சிலை மறந்து கீபோர்டுகளுக்கு மாறிவிட்டோம். ஆனால், இதனால் நம் மூளை சோம்பேறியாக மாறுகிறது என்று எச்சரிக்கிறார் நரம்பியல் விஞ்ஞானி ஆட்ரி வான் டெர் மீர் (Audrey van der Meer).மூளை சுறுசுறுப்பாகும்: நாம் கையால் எழுதும்போது மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்றல் மையங்கள் (Memory and Learning centers) ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.ஆழமான புரிதல்: லேப்டாப்பில் டைப் செய்யும் மாணவர்களை விட, பேனாவால் குறிப்பெடுக்கும் மாணவர்களே, பாடங்களை மிக ஆழமாகப் புரிந்துகொள்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.ஆட்டோபைலட் ஆபத்து: கீபோர்டில் டைப் செய்வது மூளையை 'ஆட்டோபைலட்' பயன்முறைக்கு மாற்றி, அதைச் சிந்திப்பதில் இருந்து சோம்பேறியாக்குகிறது.உங்கள் மனதைக் கூர்மையாக்க, தற்காலிக டிஜிட்டல் வேகத்தைக் குறைத்துவிட்டு, தினமும் சிறிது நேரமாவது பேனாவை எடுப்பதே சிறந்த தீர்வு!

Jun 25, 2026

1,00,000 புதிய கிரகங்கள்! நாசாவின் பிரம்மாண்ட விண்வெளி வேட்டை.

நமது பால்வெளி மண்டலத்தில் (Milky Way) இதுவரை மனிதன் கால்பதிக்காத, ஆராயாத மர்மப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் புதிய கிரகங்களைக் கண்டறியும் மாபெரும் இலக்குடன் நாசா களம் இறங்கியுள்ளது.இந்த பிரம்மாண்ட தேடலுக்காக நாசாவின் அதிநவீன 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலைநோக்கி தயாராகியுள்ளது.தற்போதைய நிலை: உலகளவில் இன்றுவரை மனிதர்களால் வெறும் 6,300 கிரகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.புதிய மைல்கல்: இந்த நிலையில், ஒரே திட்டத்தில் 1,00,000 கிரகங்களைத் தேடும் நாசாவின் இந்த முயற்சி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.இந்த அதிநவீன தொலைநோக்கி, வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடைக்கப்போகும் அந்த வரலாற்றுத் தருணத்திற்காகக் காத்திருப்போம்!

Jun 25, 2026

ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவரா? சிலிண்டர் மானியம் ரத்தாக வாய்ப்பு!

சமையல் எரிவாயு (LPG) மானியம் பெற்று வரும் நுகர்வோருக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நபர்களின் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் முதற்கட்டமாக, ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் யார் யார் என்ற விவரங்களை வழங்குமாறு வருமான வரித்துறையிடம் (Income Tax Department) பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், அதிக வருவாய் பிரிவில் உள்ளவர்களுக்கான மானியம் நிறுத்தப்பட்டு, அது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குச் சென்றடைய வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jun 25, 2026

இந்தியாவின் தேசிய மொழி எது?

இந்தியாவில் மொழிகள் குறித்துப் பலருக்கும் ஒரு பொதுவான விவாதம் எப்போதும் எழுவதுண்டு. "இந்தி இந்தியாவின் தேசிய மொழியா?" என்ற கேள்விக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறும் தெளிவான பதில் இதோ:இந்தியாவுக்கு இன்று வரை எந்த ஒரு மொழியும் "தேசிய மொழி" (National Language) என அறிவிக்கப்படவில்லை. இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால், எந்த ஒரு தனி மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.அரசாங்கத்தின் நிர்வாகக் காரணங்களுக்காகவும், தொடர்புகளுக்காகவும் இரண்டு மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன:இந்தி (தேவநாகரி வரிவடிவம்)ஆங்கிலம்இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையின்படி (8th Schedule), தமிழ் உட்பட மொத்தம் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.இந்தியா ஒரு பன்மொழி நாடு. இங்கு எந்த ஒரு மொழியும் உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அல்ல. "ஒற்றுமையில் பல்வகைமை" (Unity in Diversity) என்பதே இந்தியாவின் உண்மையான அடையாளம். எனவே, அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.

Jun 25, 2026

தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்..

தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு+ அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.+ "வெற்றித் தமிழகம்" தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய திட்டமான இந்தட்ம் திட்டம் தமிழகளின் பாரம்பரியமான "தாய்மாமன் சீர்" மரபை போற்றுகிறது.தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு தேவையான தங்க மோதிரங்களை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கொள் முதல் செய்து வழங்கும்மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு சுகாதார அமைப்புகள் மூலம் பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 131 132

AD's



More News