25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 22, 2026

தேர்தல் வருகிறது .நாட்டிற்கு உழைக்கும் நல்ல மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. நல்லதொரு தலைவன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்களாகிய நம்முடைய ஒவ்வொரு ஒட்டும், நம் நாட்டின் நலனுக்கு சென்றடைய வேண்டுமே தவிர, இலவசங்களை அறிவித்து கொள்ளை கூட்டங்களுக்கு செல்ல விடாமல் தவிர்க்க நல்லதொரு ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை.ஓட்டிற்கு லீவு  கிடைத்து விட்டது என்று வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு ஓட்டுப் போடாமல் தவிர்ப்பது, நம் தலையில் நாமே மண் வாரி இறைப்பதற்குச் சமம் .  அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை என்று டாஸ்மார்க் கடைகளைத் திறந்து அதிலிருந்து வரும் வருமானத்தில் பெண்களுக்கு இலவசமாக மாதம் இவ்வளவு ரூபாய் கொடுக்கிறோம், என்று கூறுவதில் நாட்டு மக்களின் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.பெண்களுக்கு  2000 ரூபாய் வருகிறது.  நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று 5000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை குடித்து தீர்க்கும் குடிகாரர்களை யார் காப்பாற்றுவார்கள்? அவர்களுடைய குழந்தைகளை யார் கவனித்துக்  கொள்வார்கள் ? சின்ன மீனாக 2000 ரூபாய் கொடுத்து விட்டு, பெரிய மீனான மது விற்பனை செய்து 10,000 ரூபாய் சம்பாதிக்கும் தலைவர்களுக்கா நம் ஓட்டு? சிந்தித்க்க வேண்டும்.  மக்கள்  ஆட்சியில் மக்களின் வாக்கிற்கே மதிப்பு. மக்கள் சபைக்கும், சட்ட சபைக்கும் செல்வோரில் யாருக்கு நம் வாக்கு அளிக்க வேண்டும். நாட்டுக்கு உழைக்கும் நல்ல மனிதரை, நாட்டு மக்கள் நலம் எண்ணிடுவோரை, நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உணவு தானியங்கள் விலைகளை குறைத்து உழவுத் தொழிலையும் உயர்ந்திடச் செய்து, ஊரெங்கும் ஜனங்கள் பசி பிணியைத் தீர்த்து, ஊக்கமாய் உழைக்கும் உத்தமரை தேர்ந்தெடுக்க வேண்டும். மேடையில் பேசினால் போதாது, மேன்மையாய் வாழ்ந்திட திட்டங்கள் வகுத்து ,மென்மையாய் செயல்களை செய்து முடிப்போரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏக்கமாய் மக்களை வாழவிடாமல் ,ஏக்கமாய் பொருள்களை சேர்க்க விடாமல், நோக்கமாய் சமதர்ம வாழ்வை அமைத்து ,தக்க மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டாள் என்ன ? என்று அலட்சியப் படுத்தாமல் யோசித்து நல்லதொரு தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.  மாதா மாதம் நமக்கு ரூபாய் கொடுத்தால், இங்கு விலைவாசி எல்லா பொருட்களுக்கும் ஏறும் .அரசாங்கம் எல்லோருக்கும் பணம் கொடுக்க ,நம்மை ஏமாற்றி ,நம்மிடமே பணம் வாங்கி ,நமக்கே கொடுக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். விலைவாசி” கிர்” என்று உயருகிறது. வீட்டு வரி தண்ணீர் வரி, பத்திர செலவு, மின்சார வரி என்று. நாமெல்லாம் இலவசங்களை ஏற்க மறுக்கிறோமோ ,அன்றுதான் விலைவாசி உயர்வை தவிர்க்கலாம். நல்ல மனிதரைக் காணலாம். காலில் முள் குத்தக்கூடாது என்று இரும்பில் லாடம் அடித்தார்கள்.... 'என் எஜமான் என் மீது எவ்வளவு பாசம்!" என்று பூரித்துப் போனது அந்தக் குதிரை!அந்த இரும்புத் துண்டு பாதுகாப்பிற்கு அல்ல... இனி ஓய்வே இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் ஓட விடுவதற்குத்தான் என்பது அதற்குப் புரியவில்லை! சலுகைகள், இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன என்றால்... அங்கே சுதந்திரம் பறிக்கப்படப் போகிறது என்று அர்த்தம்! மக்கள் சபைக்கும், சட்ட சபைக்கும் வரும் தேர்தலில் தலைமைக்குத் தகுந்த மனிதரை தேர்ந்தெடுப்பது மக்களாகிய நமது. கடமை. 

Apr 22, 2026

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேரந்தால் சட்டப்படி அந்தகுடும்பம்ரூ 50 இலட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு  சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதைப்பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 இலட்சம், காப்பீட்டுத் தொகையும்அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை!இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலிண்டர் விபத்து நேரும் போதுபாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து யாரும் அந்தக் காப்பீட்டுத் தொகையைக் கேட்டு உரிமை கோருவதில்லை!நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் அந்தக் காப்பீட்டுக்கான பாலிசிதொகையும் சேர்த்துத்தான்செலுத்திவருகிறோம்.இந்தக்காப்பீடுகுறித்துஅரசாங்கமோஎண்ணெய்நிறுவனங்களோ, கூடவாடிக்கையாளர்களுக்கு விழிப்புணரவு ஏற்படுத்துவதும் இல்லை!சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேரந்தால் சட்டப்படி அந்தகுடும்பம்ரூ 50 இலட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.படிக்கும் அனைவரும் இச் செய்தியை தங்கன குடும்பத்தினகுடனும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

Apr 21, 2026

கோடை வெயிலுக்கு இதமான 'இயற்கை அமிர்தம்!

இயற்கை தந்த இளநீருடன் சப்ஜா விதைகளை சேர்த்து பருகுவது, கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஆரோக்கிய பானமாகும். இது உடல் சூட்டை உடனடியாக குறைப்பது மட்டுமின்றி, உடல் எடையை குறைக்கவும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள தாதுக்களும் நார்ச்சத்துக்களும் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலையும் குளிர்ச்சியையும் ஒருசேர வழங்குகின்றன.

Apr 21, 2026

' 'வங்கிச் சேவை மாற்றங்கள் -ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள்.

வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வங்கி சேவை கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. ATM கட்டணம்:ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. UPI சுமை: யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு. இலவச வரம்பு (Metros):பெருநகரங்களில் சொந்த வங்கியில் 5 முறையும், இதர வங்கிகளில் 3 முறையும் மட்டுமே இலவசம். இலவச வரம்பு (Other Cities):மற்ற நகரங்களில் இதர வங்கி ஏடிஎம்-களில் ,5 முறை வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். கூடுதல் சேவைகள்:பேலன்ஸ் செக் செய்வது, பின் நம்பர் மாற்றுவது மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் எடுப்பதும் இந்த வரம்பிற்குள் அடங்கும். பாதிப்பு:சிறிய அளவில் அடிக்கடி பணம் எடுக்கும்,சிறு வியாபாரிகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்

Apr 21, 2026

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்! வந்துவிட்டது LPG ATM.

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, பாரத் கேஸ் நிறுவனம் குருகிராம் பகுதியில் முதல் LPG ATM சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி நாம் நம்முடைய காலி சிலிண்டரை கொண்டு சென்று கன்ஸ்யூமர் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து பணம் செலுத்தினால், 2 நிமிடங்களில் புதிய சிலிண்டரை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவை, முன்பதிவு செய்து காத்திருக்கும் அவசியத்தை நீக்குகிறது.

Apr 20, 2026

இந்திய ரிசர்வ் வங்கி. 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வருகின்றன.

500 ரூபாய் கள்ள நோட்டுகள் வருகின்றன. RESERVE என்கிற இடத்தில் நான்காவதாக உள்ள E க்கு பதிலாக U என உள்ளது எனவே புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகளை கண்டறியும் அம்சங்களுடன் இதையும் கவனித்து வாங்குங்கள்.உங்களிடம் உள்ள பணத்தை உடனே செக் பண்ணுங்க..

Apr 20, 2026

பூமிக்கு அடியில் கடல்!

பூமியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கடல்களை விட3 மடங்கு அதிக நீர் பூமிக்கடியில்700 கி.மீ. ஆழத்தில் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்'ரிங்வுடைட்' எனப்படும் ஒருவகை நீல நிறத் தாதுப் பாறைக்குள் ஒருSponge போல இந்த நீர் மூலக்கூறுகள் தேங்கியிருப்பதாகவும், இந்தப் பாறைகள் ஏதோ 'வியர்ப்பது' போல நீரைத் தங்களுக்குள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Apr 20, 2026

வெயில் காலத்துல அரிப்பு தாங்க முடியலையா?

தினசரி துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் நீண்ட நேரம் போட்டு வைத்திருந்து குளித்தால் கோடையில் வியர்வையால் நச நசத்து அரிப்பது அடங்கும். இதனால் சருமம் பாதுகாக்கப்படும்

Apr 20, 2026

“இந்தியாவில் முதல் மனிதன் தோன்றிய இடம் தமிழ்நாடு"

60,000 வருட பழமையானமனிதன்தமிழகத்தில்மதுரைக்குஅருகிலுள்ளகிராமத்தைச் சேர்ந்ததிரு.விருமாண்டி, அவரது 9 தலைமுறை சேர்ந்த 13 உறுப்பினர்களுடன், இந்தியாவில் முதன்முதலில் குடியேறியவர்களின் நேரடி சந்ததியினரில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். இவர்கள் சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கடற்கரையிலிருந்து குடிபெயர்ந்த 'M130' மரபணுவைக் கொண்டவர்கள்.

Apr 18, 2026

ஷாம்பூவை, தலைமுடியில் எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

ஷாம்பூவை, எடுத்த உடனே தலையில் தேய்த்துக் கொள்ள கூடாது. முதலில், தலைமுடியை தண்ணீர் ஊற்றி நன்கு நனைத்துக் கொள்ள வேண்டும். பின், ஷாம்பூவை ஒரு சிறிய பாத்திரம் (அ) கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். .அதன் பின், ஷாம்பூ பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்குக் கலக்கிக் கொள்ள வேண்டும். * கலக்கி வைத்த ஷாம்பூவை தலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். * பின்னர், தலையை விரல் முனைகளால் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக, தலையை நன்றாக கழுவிக் (அலசி) கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், தலையில் உள்ள அழுக்கு நீங்கு விடும். மேலும், தலைமுடிகளை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

1 2 ... 21 22 23 24 25 26 27 ... 103 104

AD's



More News