தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும் என்றும், வரும் மே மாதத்தில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் பருகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. ரிட்டயர் ஆகுற வயசுக்குள்ள உன்னோட எல்லா கடன்களையும் (EMI) முழுசா அடைச்சிடுங்க. 2. எந்த நோய் வந்தாலும் உன் சேமிப்பு அழியாம இருக்க ஒரு தரமான ஹெல்த் இன்சூரன்ஸ் வெச்சுக்கோங்க. 3. பிள்ளைகளை நம்பி உன் பைனான்ஸை விட்டுக்கொடுக்காத, உனக்குனு தனியா பணம் இருக்கணும். 4. ரிஸ்க் அதிகமா இருக்குற ஷேர் மார்க்கெட்டை விட, நிலையான வருமானம் தர்ற இடத்துல முதலீடு பண்ணு. 5.உனக்கு சொந்தமா, வாடகை கட்ட தேவையில்லாத ஒரு வீடு கட்டாயமா இருக்கணும். 6. Passive Income மாசா மாசம் உங்க அக்கவுண்ட்டுக்கு வர்ற மாதிரி ஒரு செட்டப் பண்ணுங்க. 7.உனக்கு அப்புறம் உங்க சொத்து யாருக்குனு எந்த குழப்பமும் இல்லாம உயில் (Will) எழுதி வைங்க. 8. ஆடம்பரத்தை குறைச்சுக்கிட்டு, நிம்மதியான சிம்பிள் லைஃப்ஸ்டைலுக்கு உன்னை மாத்திக்கோங்க, உங்க ரிட்டயர்மென்ட்க்கு நீங்க பிளான் பண்ணிட்டீங்களா?
நாசாவின் ஆர்டெமிஸ் விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி 7 மணி நேரப் பயணத்தைத்தொடங்கி, இதுவரை யாரும் காணாத நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.பூமியிலிருந்து 2,52,752 மைல் தொலைவைக் கடந்து, அதிக தூரம் பயணம் செய்த மனிதர்கள்என்ற அப்பல்லோ 13-ன் சாதனையை முறியடித்தனர்.நிலவு பழுப்பு நிறமாகக் காட்சியளிப்பதாகவும், அங்குள்ள பள்ளங்கள் ஒளி ஊடுருவும்,துளைகளைப் போல இருப்பதாகவும் வீரர்கள் கூறுகின்றனர்.
"தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பு. காலை 11 மாலை 3 மணி வரைகுழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கட்டாயதேவைக்காக வெளியே சென்றால் குடை, உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்திஆடைகள் பயன்படுத்த வேண்டும்".
வவ்வால் வகைகளில் ஒன்று 'பம்பிள்பீ' எனும் 'பெரும் தேனீ வவ்வால்'. இவை மேற்கு தாய்லாந்து, தென்கிழக்கு மியான்மரில் ஆற்றங்கரை, குகைகளில் காணப்படுகின்றன. ஒரு குகையில் குறைந்தது 100 எண்ணிக்கையில் குழுவாக வாழ்கின்றன. மாலை, அதிகாலையில் குறைந்த துாரத்தில் இரை தேடி செல்லும். நீளம் (2.9-3.3 மி.மீ.) அடிப்படையில் இது உலகின் சிறிய பறக்கும் பாலுாட்டி உயிரினம். எடை 2 கிராம். இதன் மூக்கு, பன்றியின் மூக்கை போல இருக்கும். பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன.
நாம் தினமும் பயன் படுத்தும் தலையணையில் என்ன இருக்கிறது தெரியுமா?ஒரு ஆய்வில், ஒரு தலையணை உறையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது!தூசி,இறந்த தோல் செல்கள்,வியர்வை,தலைமுடி கழிவுகள்,ஏன் இவ்வளவு கிருமிகள்?'டஸ்ட் மைட்' என்ற நுண் பூச்சிகளுக்கு விருந்து ஆகிறது.தோல் பிரச்சினைகள்,அலர்ஜி, சுவாச சிக்கல்கள்இந்தக் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள்போன்றவை ஏற்படுத்தலாம்.தலையணை உறைகளை அடிக்கடி துவைக்கவும். வெயிலில் நன்றாக உலர்த்தவும். தலையணையையே நேரடி வெயிலில் வைக்கவும் ”வெயில் = இயற்கை கிருமிநாசினி!சூரிய ஒளி உங்கள் தலையணையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் எளிய தீர்வு.
டியூப்லைட் குண்டு பல்புகளுக்கு பதிலாக LED பல்புகளை பயன்படுத்துங்கள்.முடிந்தவரை AC வெப்பநிலையை 24-26°C க்கு இடையே வைத்துக்கொள்ளுங்கள்.AC இயக்கத்தில் இருக்கும்போது, குறைந்த வேகத்தில் விசிறியை இயக்கினால், அறை விரைவாக குளிர்ச்சியடையும். 5 நாட்களுக்கு ஒரு முறை AC காற்று வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள். டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் போன்றவற்றை பயன்படுத்தாதபோது, முழுமையாக சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்.
1. அதிகமாக பேசுபவர்கள் பலவீனமான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். 2 எப்போதும் ஜோக் பேசுபவர்கள் பல சமயங்களில் மிகவும் ஆபத்தானவர்களாக இருக்கலாம்.' 3. கண்களில் பார்த்து பேசுவதைக் தவிர்ப்பவர்கள் பொதுவாக ஏதோ ஒன்றை மறைத்து பேசிக் கொண்டு இருக்கலாம். 4. ஆடம்பரமாக உடை அணிவோர் பெரும்பாலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள். 5.மெதுவாக பேசுபவர்கள் பல விஷயங்களை யோசித்து செயல்படுபவர்களாக இருக்கலாம். 6.உங்கள் செயல்களை பின்பற்றுபவர்கள் உங்களுடன் நட்பான உறவை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
தானம் என்பது கேட்ட பிறகு கொடுப்பது, தர்மம் என்பது கேட்கும் முன் கொடுப்பது. கர்ணனின் காதில் கவச குண்டலம் இருக்கும் வரை, தன் உயிர் பிரியாது என தெரிந்தும் இந்திரனுக்கு தானமாக கொடுத்தார். தன் வாழ்நாள் முழுவதும் தர்மம் செய்த கர்ணனுக்கு கடைசி நேரத்தில் உயிர் பிரியவிடாமல், அவர் செய்த தர்மம் காப்பாற்றியது .அந்த நேரத்தில் வந்த கிருஷ்ணன் நீ செய்த தர்மம் அனைத்தும் எனக்கு வேண்டும், என்று கேட்ட உடன் தானமாக கொடுத்தார். கர்ணன் இறப்பதற்கு முன்தன் விஸ்வரூபத்தை காட்டிய மகாவிஷ்ணு, கர்ணன் இறந்த பிறகு உடலை தகனம் செய்தார். மகாவிஷ்ணுவின் கையால் தகனம் பெற்ற பாக்கியவான் கர்ணன்.
திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை இனி 9552300009 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பக்தர்கள் எளிதாகப் பெறலாம். இந்த எண்ணிற்கு "hi" என அனுப்பி, 'TTD Temple Service' மூலம் விரும்பிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்தினால் டிக்கெட் உடனடியாக வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இந்த புதிய வசதியால் பக்தர்கள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.