25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 15, 2026

தேசிய கொடி கின்னஸ் சாதனை.

சுமார் 60 மீட்டர் நீளம் 40 மீட்டர் அகலம் கொண்ட தேசிய கொடியை அந்தமான் நிகோபாரின் ஸ்வராஜ் தீவில் கடலுக்கு அடியில் விரித்து சாதனைசுமார் 400 ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கொடியை விரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

May 15, 2026

புதிய தலைமுறை ரோபோவை அறிமுகம் செய்துது சீனா!

சகதி, பனி, மலைகள் போன்ற கரடுமுரடான பாதைகளில், அசால்ட்டாக இயங்கும் LYNX M205 என்ற புதிய தலைமுறை ரோபோவை, அறிமுகம் செய்து சீனாவின் DEEP Robotics அசத்தல்!35 கிலோ எடையைச்சுமந்து செல்லும் திறனுடைய இது, தீயணைப்பு, நிலநடுக்க மீட்புப் பணிகள், மின்சார வாரியச் சோதனைகள் போன்ற ஆபத்தான இடங்களில் வேலை செய்ய உதவியாக இருக்கும் என தெரிவிப்பு.

May 15, 2026

புதிய மைல்கல்.

மேகமூட்டம், இருளையும் ஊடுருவிப் பார்த்து, பூமியைத் துல்லியமாக படம் பிடிக்கும் உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியாவின் GalaxEye ஸ்டார்ட்-அப் நிறுவனம்!அமெரிக்காவில் SpaceX Falcon 9 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின்பாதுகாப்பு, விவசாயம், பேரிடர்களின்போது தெளிவான படங்களை வழங்க பெரிதும்உதவும் என எதிர்பார்ப்பு.

May 14, 2026

ஒரு சவரன் 8 கிராம்-னு எதுக்கு சொல்றாங்க ?

"சவரன்"என்ற வார்த்தை, 1817-ல் வெளியான பிரிட்டிஷ் Gold Sovereign நாணயத்திலிருந்து வந்தது. அதன் எடை 7.988 கிராம். அக்காலத்தில் 7.988 கிராம் என்பதை துள்ளியமாக கணக்கிட மெட்ரிக் அமைப்பு இல்லாததால் தசம எண்களுடன் கணக்கிட சிரமப்பட்டனர்; தென்னிந்தியாவுக்கு வர்த்தகத்திற்காக இது வந்தபோது வியாபாரிகள் அதை வசதிக்காக 8 கிராம் என்று கூறினர். அதுவே இன்றுவரை "ஒரு சவரன் = 8 கிராம்" என்ற நிலையான அளவாகிவிட்டது.

May 14, 2026

வானில் தகர்ந்த ஏவுகணை!

கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 'ஃபதே / ஷாஹீன்' ரக பாலிஸ்டிக் ஏவுகணை ஹரியானா வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சிர்சா விமானப்படைத் தளத்தில் இருந்து செயல்பட்ட ஏர் கமாண்டர் ரோஹித் கபில் தலைமையிலான அணி, 'பராக்-8' அமைப்பை பயன்படுத்தி ஏவுகணையை தடுத்தது. ரோஹித் கபிலின் துரித நடவடிக்கைக்காக 'YUDH SEVA' பதக்கம் வழங்கப்பட்டது.

May 14, 2026

அனைத்து மாவட்டங்களின் இலவச சட்ட உதவி தொடர்பு எண்கள் .

வ.எண்        மாவட்டம்     இலவச சட்ட உதவி எண்1.              சென்னை -      044-253846772.            திருவள்ளூர் -     044-276641063.             காஞ்சிபுரம் -      044-272371004.             வேலூர் -            0416-22005555.      ராணிப்பேட்டை -    04172-2720016.        திருப்பத்தூர்  -        04179-2220017.       கிருஷ்ணகிரி  -        04343-2440118.        தர்மபுரி  -                04342-2331009.        சேலம் -                   0427-241700110.    நாமக்கல்  -               04286-22620011.     ஈரோடு  -                 0424-226244412.     திருப்பூர்  -                0421-242220013.கோயம்புத்தூர்  -         0422-230050014.        நீலகிரி  -              0423-244236615.      திருச்சி  -                0431-241500116.     கரூர் -                     04324-22270017.  பெரம்பலூர்  -         04328-22570018.  அரியலூர் -            04329-22660019.கடலூர் -                    04142-22240020. விழுப்புரம்   -          04146-26000121. கள்ளக்குறிச்சி -   04151-22200122. செங்கல்பட்டு  -   044-27427242023. தஞ்சாவூர் -           04362-24200124. நாகப்பட்டினம் -  04365-25500125. மயிலாடுதுறை-  04364-22200126. திருவாரூர்  -       04366-22250027. புதுக்கோட்டை - 04322-22200128. சிவகங்கை -      04575-24200129. மதுரை-             0452-252500030. திண்டுக்கல்  -   0451-246100031. தேனி  -              04546-25050032. விருதுநகர்   -   04562-28000133. ராமறாதபுரம் - 04567-22030034. தூத்துக்குடி  -  0461-234100035. திருநெல்வேலி - 0462-250040036.கன்னியாகுமரி  - 04652-27990037.திருவண்ணாமலை - 04175-25200138.தென்காசி - 04633- 252001

May 13, 2026

தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்,  717 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற உத்தரவு.

 வழிபாட்டுதலங்கள், பஸ்ரெயில்நிலையம்,கல்விநிறுவனங்கள் ,பஸ்நிலையம், கல்விநிறுவனங்கள்அருகே 500 மீட்டர்தொலைவுக்குள் செயல்படும்டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு. தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து மூட முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே கோவில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இடமாற்றம் செய்து வந்தது. புதிதாக பஸ் நிலையம் அருகில் உள்ள, டாஸ்மாக் கடைகளையும் அகற்ற முடிவு செய்து இருப்பது ,பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.குறிப்பாக 500 மீட்டருக்குள் இந்த கடைகள் வந்தால், அவற்றை 2 வாரங்களுக்குள் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.  தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய், அவர்களின் இந்த  உத்தரவு, அவர் ஆட்சியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை  மக்களுக்கு வந்துள்ளது.

May 13, 2026

கோடையில் சருமம் புத்துணர்ச்சி பெற..

கோடை காலத்தில் வியர்வை அதிகம் வெளிப்படும் என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று முறையாவது முகத்தை கழுவ வேண்டும். அதை செய்யாவிட்டால் எண்ணெய் சுரப்பி சருமத்தில் தேங்கி முகப்பருவுக்கு வழிவகுக்கும். வெப்பத்தால் பயன்படுத்தும் நீர் சூடாக இருக்கும் பட்சத்தில் முகம் கழுவக்கூடாது. குளிர்ந்த நீர் மட்டுமே பாதுகாப்பானது. இது சோர்வடைந்த சருமத்திற்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முகப்பருவை தடுக்கவும் செய்யும்.

May 13, 2026

“இனி 1 நாள் 25 மணி நேரமாகும்”

இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணிப்பு. ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர்ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். பூமி தோன்றியகாலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும் அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் கண்டறிந்துள்ளனர்.

May 13, 2026

OTP பூர்னப் பதம்.

OTP என்பதன் பூர்னப் பதம் என்ன?---- One  time password. UPI என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Unified payments interface. ATM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Automated teller machine  KYC என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Know your customer. PIN என்பதன் பூர்னப் பதம் என்ன?----- personal identification number. SIM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Subscribe identify module. SMS என்பதன் பூர்னப் பதம் என்ன?--- Short message service. CPU என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Central processing unit RAM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Random access  memory ROM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Read only memory.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 103 104

AD's



More News