25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 25, 2026

'ஹெப்பீவு ஃபார்ம்ஸ்' ரூ.21 கோடி இயற்கை விவசாய சாம்ராஜ்யம்: 3,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு.

முன்னாள் வங்கி அதிகாரி அமித் கிஷன், கார்ப்பரேட் வேலையை விட்டு ஆந்திராவில் 650 ஏக்கரில் 'ஹெப்பீவு ஃபார்ம்ஸ்' என்ற இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியுள்ளார். ரசாயனங்கள், டிராக்டர்கள் இன்றி 700 நாட்டு மாடுகளின் உதவியுடன் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்து, ஆண்டுக்கு சுமார் ரூ.21 கோடி வருவாய் ஈட்டுகிறார். 40-க்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியுடன், 3,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறார்.

Jul 25, 2026

PhonePe காப்பீட்டு பிரிவில் மாற்றம்.

PhonePe-யின் காப்பீட்டு பிரிவு தலைவர் விஷால் குப்தா, புதிய தொழில்முயற்சியை தொடங்க பதவியை விட்டு விலகியுள்ளார். இதையடுத்து, காப்பீட்டு வணிகம்நுகர்வோர் பணப் பரிவர்த்தனை (Payments)பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதை சோனிகா சந்திராவழிநடத்த உள்ளார். 2021-ல் காப்பீட்டு உரிமம் பெற்ற PhonePe-யின் காப்பீட்டு பிரிவு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் நிறுவன வருவாயில் சுமார் 12% பங்களிப்பு அளித்துள்ளது.

Jul 25, 2026

AI வசதிகளுடன் 'Zoho Classes 2.0' அறிமுகம்.

கல்விக்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய Zoho Classes 2.0 தளத்தை ஜோஹோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் AI பாடத்திட்ட உருவாக்கம், 24/7 AI பயிற்றுவிப்பாளர், 22 இந்திய மொழிகளுக்கான ஆதரவு, மாணவர் முன்னேற்ற கண்காணிப்பு உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.இந்ததளம்தற்போதுஇந்தியாவில்பயன்பாட்டுக்குவந்துள்ளது.மத்தியமற்றும்மாநிலஅரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உரிமக் கட்டணம் இன்றி வழங்கப்படுவதுடன், 100 மாணவர்கள் வரை உள்ள தனிப்பட்ட ஆசிரியர்களும் இலவசமாக பயன்படுத்தலாம். விரைவில் உலக நாடுகளிலும் இந்த சேவை அறிமுகமாக உள்ளது.

Jul 25, 2026

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும் முன்...

0–5 வயது குழந்தைகளுக்கான ஆதார் பதிவு செய்யும்போது, பிறப்புச் சான்றிதழில் பெயர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பெற்றோரில் ஒருவரின் ஆதார் அவசியமாகும். அவர்களின் புகைப்படம், கைரேகை, கருவிழி விவரங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழில் QR குறியீடும் Green Verification Tick-மும் இருக்க வேண்டும். மேலும், அந்தச் சான்றிதழ் லேமினேட் செய்யப்பட்டிருக்கக் கூடாது.

Jul 25, 2026

வீட்டில் எத்தனை LPG சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்?

நடப்பிலுள்ள விதிகளின்படி, ஒரு வீட்டில் பொதுவாக இரண்டு 14.2 கிலோ எடையுள்ள வீட்டு LPG சிலிண்டர்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் அனுமதியின்றி சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தால், பறிமுதல், அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். விதிமீறலுக்கு உதவும் விநியோகஸ்தர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

Jul 25, 2026

Samsung ஸ்மார்ட் ப்ரொஜெக்டருக்கு அதிரடி தள்ளுபடி.

டிவிக்கு மாற்றாக ஹோம் தியேட்டர் அனுபவம் வழங்கும் Samsung Freestyle 2nd Gen Smart Projectorதற்போது அமேசானில் 58% தள்ளுபடியில் ரூ.44,990க்கு விற்பனையாகிறது. 100 இன்ச் FHD திரையிடல், HDR10+, Auto Focus, Auto Keystone, Netflix, Prime Video, Hotstar, Zee5 உள்ளிட்ட OTT செயலிகளுக்கான ஆதரவு மற்றும் 360° ஒலி வசதியுடன் இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.

Jul 25, 2026

நாசாவுடன் இணைந்த இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்.

கர்நாடகாவின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த அவைஸ் அகமது, இணைய வசதியே இல்லாத சூழலில் வளர்ந்து, Pixxel என்ற விண்வெளி ஸ்டார்ட்-அப்பை 2019-ல் தொடங்கினார். நூலகப் புத்தகங்களின் உதவியுடன் கற்ற இவர், பின்னர் கூகுள் மற்றும் நாசாவுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு வளர்ச்சி பெற்றார். விவசாய நிலங்களை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை உருவாக்கியதன் மூலம் சுமார் ரூ.900 கோடி முதலீட்டையும் ஈர்த்துள்ளார்.

Jul 25, 2026

ரயில் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு.

RAIL ONE செயலி மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை, பயணத்தின் போது அதே செயலியில் நேரடியாகக் காட்ட வேண்டும். டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF நகல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட பிரதிகள் செல்லுபடியாகாது. விதிமுறையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Jul 25, 2026

இன்ஸ்டாமார்டில் இனி காஸ் சிலிண்டரும் கிடைக்கும்.

ஸ்விக்கியின் Instamart சேவை, மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை 10 நிமிடங்களில் விநியோகம் செய்து வருகிறது. தற்போதுஇந்தசேவையின்மூலம் சமையல்எரிவாயுசிலிண்டர்களையும் ஆர்டர்செய்துபெறும்வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jul 25, 2026

டெல்லி போராட்டம்: அமெரிக்கா குறித்து எழுந்த சர்ச்சை.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.இதற்கிடையில், போராட்டத்திற்கு முன்பாக மத்திய டெல்லி மற்றும் நாடாளுமன்றம் சுற்றுவட்டாரத்தில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 129 130

AD's



More News