1 நிமிடம் நடந்தால் ரத்த ஓட்டம் நல்லது. 5 நிமிடம் நடந்தால் மனம் அமைதியாகும். 10 நிமிடம் நடந்தால் டென்ஷன் குறையும். 15 நிமிடம் நடந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். 30 நிமிடம் நடந்தால் இதயம் வலுவாகும். 45 நிமிடம் நடந்தால் உடல் சோர்வு குறையும். 60 நிமிடம் நடந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாகும்போது ,மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து தலைசுற்றல் ஏற்படுகிறது. வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவதால், மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. போதிய அளவு தண்ணீர் குடிப்பது, மற்றும் நிழலில் ஓய்வெடுப்பது, இதைத் தவிர்க்க உதவும்.
அமெரிக்காவின் MIT நடத்திய ஆய்வில், AI-ஐப் பயன்படுத்திய 83% பேரால் சில நிமிடங்களுக்கு முன் எழுதிய ஒரு வாக்கியத்தைக் கூட நினைவில் வைக்க முடியவில்லை எனவும், ChatGPT பயன்படுத்துவோரின் மூளை செயல்பாடு 47% வரை குறைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் வேலைகளை 60% வேகமாக முடித்தாலும், கற்றலுக்கான (Cognitive Offloading) மனதளவு முயற்சி 32% குறைகிறதாம்!.
இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து தங்களது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ஒரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஒப்பந்தத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன. இதன்படி, மே 2026 முதல் இந்தோனேசியாவிற்கு வரும் சீனச் `சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டின் 'QRIS' குறியீட்டைப் பயன்படுத்தும் எந்தவொரு வணிகரிடமும் தங்களது 'Alipay'செயலி மூலம் நேரடியாகப் பணம் செலுத்தலாம். அதேபோல், சீனாவிற்குச் செல்லும் இந்தோனேசியர்கள் அங்குள்ள வணிகர்களுக்குத் தங்களது உள்ளூர் செயலிகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்த முடியும்.
"மத்தியஅரசு ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதாவது, ரூ.78,000 நேரடி மானியத்துடன் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டம் மூலம் நம் வீடுகளின் மொட்டை மாடியில் சோலார் அமைத்துக்கொண்டால்நம்முடைய மின் கட்டணத்தை 90% அளவுக்குக் குறைக்க முடியும்.சொந்த வீடும், வீட்டு மொட்டை மாடியில் 250 முதல் 300 சதுர அடி நிழல் படாத இடமும் இருந்தால் போதும். மொட்டை மாடியில் நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யலாம்."மொபைல் வாங்கும் பணத்தில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்.
சுவிட்சர்லாந்து நாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மற்றொரு மைல்கல்லாக ரயில்தண்டவாளங்களுக்கு இடையே உள்ள பயன்படுத்தப்படாத இடங்களைச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களாக (Solar Power Plants) மாற்றி வருகிறது. 'சன்-வேஸ்' (Sun-Ways) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், தண்டவாளங்களுக்கு இடையே கம்பளம் போல விரிக்கக்கூடிய கழற்றத்தக்க சோலார் Solar Panels) பேனல்களை (Removable அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய நிலங்களைக்கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன், பராமரிப்புப் பணிகளின் போது இந்தப் பேனல்களை எளிதாக அகற்றவும் முடியும்.
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மகளீர் உரிமைத்தொகை பெரும் பங்கு வகித்தது. திமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கபப்ட்டது. அதே போல் அதிமுகவும் மகளிர் உரிமைத் தொகை ரூ 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது.தவெக சார்பில் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் வாக்குறுதி அளித்திருந்தது. தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் மகளிர் உதவித்தொகை 2500 ஆக உயர்த்தப்படுமா..? அல்லது 1000 ரூபாயகவே தொடருமா என்கிற கேள்வி எழுந்தது.இந்த நிலையில் மே மாததிற்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் விரைவில் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் கூறப்பட்டுள்ளது.
.தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DVAC)044-22321090 / 22321085044- 22310989/ 22342142லஞ்சமில்லா தமிழகம்.நேர்மையான தமிழகம்.உங்கள் புகார் ரகசியமாக வைக்கப்படும்.லஞ்சம் கொடாதீர்.லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள்.உங்கள் அடையாளம் பாதுகாக்கப்படும்.நாம் ஒன்றுபட்டால் லஞ்சமில்லா தமிழகம் உருவாகும்.
விருதுநகர் மக்களே, மத்திய அரசின் Ayushman Bharat (PMJAY) திட்டத்தின் கீழ் ஆண்டு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.எப்படி விண்ணப்பிப்பது?*pmjay.gov.inஇணையதளத்தில் ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.*விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பு முடிந்து "கோல்டன் கார்டு" வழங்கப்படும்.*அருகிலுள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
ஈரான்-அமெரிக்கா பதற்றம் மற்றும் மத்திய கிழக்கு போர் சூழ்நிலையால் உலகளவில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியா பெரிய அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால்,பொருளாதார அழுத்தத்தை குறைக்க முன்னெச்சரிக்கை அவசியம்!மோடி சொன்ன 7 முக்கிய விஷயங்கள் ஒரு வருடத்திற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!தேவையில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்முடிந்தவரை வீட்டிவிருந்தே வேலை செய்யுங்கள் (Work From Home)பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் Public Transport பயன்படுத்துங்கள்.வெளிநாட்டுப் பயணம் தவிர்த்திடுங்கள்தேவையில்லாத இறக்குமதி பொருட்களை வாங்காமல் இருங்கள்அவசியமில்லாத செலவுகளை குறைந்து சேமிப்பை அதிகரியுங்கள்.இந்தியா என்ன பிரச்சனை சந்திக்கும்?கச்சா எண்ணெய் விநியோகம் எண்ணெய் கிடைப்பு குறையும் Dollar மதிப்பு உயரலாம் இறக்குமதி செலவு அதிகரிக்கும்இந்திய ரூபாய் மதிப்பு குறையலாம்பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும்பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம்மக்களின் செலவு அதிகரிக்கும்Inflation (விலைவாசி உயர்வு)பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும்வளர்ச்சி வீதம் பாதிக்கப்படும்வீட்டிலிருந்து வேலை செய்வது எப்படி?மக்கள் தினமும் office போனால்எரிபொருள் பயன்பாடுபோக்குவரத்துடீசல்/பெட்ரோல் நுகர்வுWFH இருந்தால் fuel save ஆகும். Online meetings, virtual work methods பயன்படுத்த சொல்லியிருக்கிறார்.தங்கம் வாங்க வேண்டாம் என்று சொன்னது ஏன்?இந்தியா அதிக அளவில் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து import செய்கிறது.பெரிய அளவில் மக்கள் தங்கம் வாங்கினால்,இந்தியாவின் Foreign Exchange Reserve குறையும்.அதிக Dollar வெளிநாட்டுக்கு போகும்.இந்திய பொருளாதாரத்தில் அழுத்தம் வரும்.அதனால்தான் ஒரு வருடத்திற்கு தேவையில்லாமல் தங்கம் வாங்காதீர்கள் என்று appeal மாதிரி கூறியிருக்கிறார்.அப்படின்னா போர் வரப்போகுதா?அப்படி official ah யாரும் சொல்லவில்லை.ஆனால் உலகஅரசியல் நிலைமை tension-இருக்கிறது. குறிப்பாக iran பகுதி மற்றும் Strait of Hormuz பகுதியில் பிரச்சினை வந்தால் எண்ணெய் supply பாதிக்கப்படும்.இந்திய அரசு இப்போதே மக்களை prepare பண்கிறது என்பதே experts கருத்து.முன்னெச்சரிக்கை இன்று... பாதுகாப்பான இந்தியா நாளை .