25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Nov 15, 2024

சேமியா தயிர் சாதம்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு: முந்திரி ஆகியவற்றைப் போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு சேமியாவை வேக வேண்டும் சேமியா நன்றாக குழைய வேக வைத்து ஆறிய பின் தயிர் பால் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சேமியா  தயிர் சாதம் தயார்.

Nov 15, 2024

ஒயிட் குஸ்கா

குஸ்கா தென்னிந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். இதை குருமாவுடன் சேர்த்து சாப்பிடவே மக்கள் விரும்புவார்கள். உருது மொழியில்‘குசுக்’ என்றால்‘உலர்ந்த’ என்று பொருள். இந்த உணவும் உலர்ந்து இருப்பதால் குஸ்கா என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன வீட்டிலேயே செஞ்சு அசத்திட வேண்டியதுதானே! சரி வாங்க. ஒயிட் குஸ்கா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.தேவையானபொருட்கள்:பாஸ்மதி அரிசி-1 ½ கிலோ.நெய்- 1 குழிக்கரண்டிஎண்ணெய்-1 குழிக்கரண்டி.கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை- தேவையான அளவு.முந்திரி -10பாதாம்-20நறுக்கிய வெங்காயம்-2பச்சை மிளகாய்-6இஞ்சி பூண்டு விழுது- 1 ½ தேக்கரண்டி.கொத்தமல்லி, புதினா- தேவையான அளவு.தயிர் -200கிராம்.தக்காளி-1 ½.உப்பு- தேவையான அளவு.செய்முறைவிளக்கம்:முதலில் ½ கிலோ பாஸ்மதி அரிசியை கழுவி ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு நன்றாக அகண்ட பாத்திரத்தில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய், ஒரு குழிக்கரண்டி நெய் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் மசாலா பொருட்களான பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 6 சேர்த்து அத்துடன் 10 முந்திரி பருப்பை சேர்க்கவும். நன்றாக கோல்டன் பிரவுன் ஆன பிறகு அதோடு 1 ½ தேக்கரண்டி  இஞ்சி பூண்டு  விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அத்துடன் கொத்தமல்லி, புதினா ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவும். ஒயிட் குஸ்காவிற்கு தயிர் மிகவும் முக்கியமானது அதுவே புளிப்பு சுவையை தரும். அதனால் 200 கிராம் தயிரை சேர்த்து நன்றாக வதக்கவும்.இப்போது 20 பாதாமை ஊற வைத்து தோலூரித்து அரைத்து செய்த கலவையை அத்துடன் சேர்க்கவும். மேலும், 1½ தக்காளியை கடைசியாக சேர்த்துவிட்டு குஸ்காவிற்கு தேவையான உப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.தண்ணீர் கொதித்ததும் வடிகட்டி வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து வேகவிடவும். 10 நிமிடத்திற்கு பிறகு   திறந்து புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து மூடிப்போட்டு குஸ்காவை தம்மில் வைத்துடுங்க. அரைமணி நேரம் குஸ்காவை நன்றாக வேகவைத்த பிறகு இறக்கிவிடவும். சூப்பரான ஒயிட் குஸ்கா தயார். 

Nov 15, 2024

உருளைக்கிழங்கு சாப்ஸ் !

தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு -2பச்சை மிளகாய் -4மக்காச்சோள மாவு - 2 தேக்கரண்டிவெள்ளை ரவை 2 தேக்கரண்டிஇஞ்சி,உப்பு,எண்ணெய்,கொத்தமல்லி தழை,தண்ணீர்தேவையான அளவு.செய்முறை:உருளைக்கிழங்கை, நீரில் வேக வைத்து தோலுரிக்கவும். அதனுடன், துண்டாக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி தழை, வெள்ளை ரவை, அரைத்த இஞ்சி, மக்காச்சோள மாவு, உப்பு சேர்த்து பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவைமிக்க, 'உருளைக்கிழங்கு சாப்ஸ்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Nov 08, 2024

முருங்கையிலை அடை

முக்கால் கப் துவரம்பருப்பு, அரை கப் பாசிப்பருப்பு, கால் கப் புழுங்கல் அரிசியைக் கழுவி, 2-3 மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.பிறகு ஊறவைத்தவற்றுடன் 2 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.மாவைப் பெரிய பாத்திரத்தில்சேர்த்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், ஒரு கப் முருங்கையிலை, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும் தவாவை சூடாக்கி, மாவைத் தோசை போல வார்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

Nov 08, 2024

கோதுமை சிலோன் புரோட்டா

3கப் கோதுமை மாவு இதனுடன்  1 ஸ்பூன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து  தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து, புரோட்டா மாவு ரெடி செய்து, 30 நிமிடம் ஊறவைக்கவும் .பிறகு  இந்த மாவை உருண்டை பிடித்து அதை பெரிய ரவுண்டாக தேய்க்கவும் பின் அதை கட்டமாக மடிக்கவும் இருபுறமும் எண்ணெய் தடவி  தோசைக்கல்லில் வேக வைக்கவும் எளிமையான கோதுமை சிலோன் புரோட்டா ரெடியாகும் மேலும் கோதுமை பதில் மைதா மாவு பயன்படுத்தியும் இதுமாதிரி புரோட்டா செய்யலாம்.

Nov 08, 2024

ஆட்டி சுட்ட ராகி தோசை...

தேவையான பொருட்கள் - ராகி -2 கப்,புழுங்கல்அரிசி -1 கப்,உளுந்தம்பருப்பு அரைகப்,உப்பு - தேவைக்கு ,எண்ணெய் - தேவைக்கு ராகி தோசை செய்முறை  - முதலில்ராகி,அரிசி, உளுந்தம்பருப்பு மூன்றையும் 2 மணி நேரம்தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.பின் மிக்ஸிஅல்லது கிரைண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்ஆட்டும்போதே தேவையானஉப்புச் சேர்த்துக்கொள்ளலாம். 4 மணி நேரம் இருக்கட்டும்.பின் தோசைவாணலியில் தோசை சுட்டு சாப்பிடவும். வெங்காயம் சிறிதாககட் பண்ணி தோசையில்போட்டுசாப்பிடலாம் தக்காளி, வெங்காயம், தேங்காய்சட்னிகள் ராகி தோசைக்கு நன்றாக சுவையாக இருக்கும்.

Nov 08, 2024

கருப்பு சுண்டல்,பச்சை பயிறு தோசை

 கருப்பு சுண்டல் - 1 கப்,பச்சை பயிறு - 1கப் எடுத்து ஊற வைத்து  விடுங்கள். இரவு தண்ணீரை வடித்து, ஒரு கட்டன் துணியில் போட்டு முடிந்து. ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.காலையில் திறந்துபார்த்தால் முளைத்திருக்கும். அதை எடுத்து மிக்சியில் சேர்ந்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு பவுலில் மாவை போட்டு, நறுக்கிய வெங்காயம்- துருவிய கேரட்-1, சீரகம் 1 ஸ்பூன், மிளகாய்-1, கறிவேப்பிலை - 1கொத்து, மிளகு தூள் 1/2 ஸ்பூன்,உப்பு இஞ்சி-1 துண்டு நறுக்கியது. கொத்தமல்லி - 1  கைப்பிடி சேர்த்து தேவையான  தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.தோசைக்கல்லில் எண்ணெய் தடவி குட்டி குட்டியாக சுட்டு எடுக்கலாம் தேங்காய் சடனி, பூண்டு சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாரம் ஒரு முறை இதை சாப்பிடுங்க. 

Nov 08, 2024

பருப்பு சாதம்...

தேவையானபொருட்கள்-200 கிராம்அரிசி,100 கிராம்துவரம்பருப்பு,சிறிதளவு புளிகரைசல்,1வெங்காயம்,1 தக்காளி,1உருளைக்கிழங்கு,3கேரட் (சிறியது),1 கத்தரிக்காய்,அரை தேக்கரண்டிபெருங்காயம்,1 தேக்கரண்டிசாம்பார் பொடி, சிறிதளவுமஞ்சள் தூள், பீன்ஸ் (தேவையான அளவு)4 பூண்டு பல் ,கடுகு, உளுந்து. சீரகம் சிறிதளவு தாளிக்க ,சிறிதளவு கொத்தமல்லி செய்முறை  - குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து அதன் பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் காய்கறிகள் அனைத்தும் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் மேலே கூறிய அளவில் பெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரிசி, புளி கரைசல் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.அதில் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து குக்கரைமூடவும்.விசில்  வந்தவுடன் குக்கரை இறக்கவும்.இப்போது பருப்பு கலவை சாதம் பரிமாற ரெடி.

Nov 01, 2024

கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்: கோதுமைமாவு - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப் ,தண்ணீர் - 1/2 கப் + ¼, கப், நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, பாதாம் - 4 (நறுக்கியது)செய்முறை:முதலில் ஒருவாணலியை அடுப்பில்வைத்து, அதில் 1/4 கப் நெய்ஊற்றி சூடானதும், அதில் கோதுமைமாவு சேர்த்துகட்டி சேராதவாறுதொடர்ந்து 20 நிமிடம்நன்கு கிளறிவிட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர்ஊற்றி நன்குவேகமாக கிளறிவிட வேண்டும். மாவானது வாணலியில்ஒட்டாமல் தனியாகவர ஆரம்பிக்கும்போது, சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.சர்க்கரை நன்குஉருகி அல்வாநன்கு திரண்டுவர ஆரம்பிக்கும்போது, அதில்மீதமுள்ள நெய்ஊற்றி, ஏலக்காய்பொடி தூவிகிளறி, இறுதியில்பாதாமை தூவிஇறக்கினால், கோதுமைஅல்வா ரெடி!!

Nov 01, 2024

எக்லெஸ் கேரட் கேக்

தேவையான பொருட்கள்: மைதா - 3/4 கப், கோதுமைமாவு - 1/4 கப், துருவியகேரட் - 1/2 கப் ,தயிர் - 3/4 கப், ஆலிவ்ஆயில் - 1/4 கப், பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1/2 கப் ,வென்னிலாஎசன்ஸ் - 1/2 டீஸ்பூன், ஏலக்காய்பொடி - 1/4 டீஸ்பூன் ,பேப்பிங்பவுடர் - 1/2 டீஸ்பூன்,பேக்கிங்சோடா - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், வால்நட்ஸ் - ஒரு கையளவுசெய்முறை:முதலில் மைதா, கோதுமை,பேக்கிங் பவுடர்மற்றும் பேக்கிங்சோடாவை ஒன்றாககலந்து, சல்லடைக்கொண்டு சலித்துக்கொள்ள வேண்டும். பின் ஒருபௌலில் தயிர், பால், சர்க்கரைமற்றும் ஆலிவ்ஆயில் சேர்த்துநன்கு சர்க்கரைகரையும் வரைகிளறி விடவேண்டும்பின்பு அதில்ஏலக்காய் பொடி,வெண்ணிலா எசன்ஸ்சேர்த்து நன்குகிளறி, பின்அதில் துருவியகேரட், சலித்துவைத்துள்ள மாவைசேர்த்து, வால்நட்ஸைபொடியாக வெட்டிப்போட்டு, கட்டிசேராதவாறு நன்குகிளறி விடவேண்டும். பின்னர்மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம்சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிதுதூவி, பின்அதில் கேக்கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில்வைத்து 20-25 நிமிடம் பேக்செய்ய வேண்டும்.அடுத்து கேக்நன்கு வெந்துவிட்டதாஎன்று டூத்பிக்கொண்டு குத்திப்பார்க்கும் போது,டூத்பிக்கில் மாவுஒட்டினால், மீண்டும்ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக்செய்து இறக்கவேண்டும். இறுதியில்ஓவனில் இருந்துஎடுத்த உடனேயேஒரு ஈரமானதுணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனைஒரு தட்டில்குப்புற தட்டி, அதன் மேல்உள்ள பட்டர்பேப்பரை எடுத்து, 1 மணிநேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், எக்லெஸ்கேரட் கேக்ரெடி.

1 2 ... 54 55 56 57 58 59 60 ... 72 73

AD's



More News