தேவையான பொருட்கள்: பலாக்காய் – 1,பூண்டு பல் - 3 உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் துாள், சீரகம் - சிறிதளவு தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு செய்முறை - பலாக்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன், துருவிய தேங்காய், பூண்டு பல், சீரகத்தை அரைத்து கலக்கவும். தேங்காய் எண்ணெயில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அதில் கொட்டவும். சுவைமிக்க, 'பலாக்காய் பொரியல்!' தயார். சாதத்துடன் பக்க உணவாக பயன்படுத்தலாம்..
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பழுத்த தக்காளி - 2,பச்சைப் பட்டாணி - 50 கிராம், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன், கறிமசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லி இலை -சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப் பட்டாணியையும் உரித்து வேகவைக்கவும். வெங்காயத்தை நீளநீளமாகவும், ஒருதக்காளியை எட்டு துண்டுகளாகவும் நறுக்கவும். வாணலியில் தாளித்து போட்டு வெங்காயம்,தக்காளிப்பழத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும். உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். வதங்கியதும் கறி மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும். பிறகு கரம்மசாலாத்தூள் சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்க்கவும். இதுவும் ஒரு ‘மல்ட்டி பர்பஸ்’ சைட்-டிஷ்தான். பிரியப்பட்டால் கறி மசாலாத்தூளுடன் ஒரு கை கடலைமாவும் சேர்த்துத் தூவலாம்.
தேவையான பொருட்கள் :- பாசிப்பருப்பு 50 கிராம், பச்சரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்,இட்லி மாவு ஒரு பெரிய கப், மிளகாய் பொடி ஒரு எஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, வெங்காயம் 50 கிராம், மிளகாய் 5 பொடியாக நறுக்கியது. தேங்காய் கால் மூடி,செய்முறை பாசிப்பருப்பை சிறிது ஊற வைக்கவும், பின்னர் இட்லி மாவுடன் மேல கூறிய அனைத்தையும் கலந்து எண்ணையில் பொரித்தெடுக்க சுவையான கரகர, மொறுமொறு பாசிப்பருப்பு வடை ரெடி.
தேவையான பொருட்கள் : பாசிப்பயறு 100 கிராம், தட்டாம் பயறு 100 கிராம்,வத்தல் 2, சீரகம் கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, கறிவேப்பிலை சிறிதளவு.செய்முறை பாசிப்பயறு, தட்டாம் பயறு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் கரகரப்பாக அரைத்து எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்: வாழைக்காய் சிறியது 2, ஏதாவது ஒரு கீரை சிறியகட்டு, மிளகாய் 6, இஞ்சி ஒரு துண்டு, கொத்தமல்லி கருவேப்பிலை வெட்டியது, வெங்காயம் 1 பெரியது, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவுசெய்முறை - வாழைக்காய் வேக வைத்துக் கொண்டு, பொடிமாசிற்குத் துருவுவது போல் துருவிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், கீரை முதலியவைகளைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பையும் போட்டு கெட்டியாகப் பிசைந்து வடை தட்டி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும். தயிரில் போட்டுத் தயிர் வடையாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் - வாழைப்பழம் நாட்டுப்பழம் 2, சீனி 400 கிராம், பால் 200 கிராம்,ரவை 400 கிராம், தேங்காய் ஒரு கப், ஏலக்காய் சிறிதளவு, ரீபைன்ட் ஆயில், பொரிப்பதற்குசெய்முறை - பாலில் சீனியையும் ரவையையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய் பூ, வாழைப்பழம், ஆகியவற்றை ரவையுடன் ஏலக்காயும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவை சிறிது சிறிதாகப் போடவும், சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். மிகவும் சுவையாக இருக்கும். வாழைப்பழம் போட்டு பிசைந்தவுடன் எண்ணையில் பொரித்து எடுத்து விட வேண்டும். இல்லையெனில் மாவு நீர்த்து விடும்.
தேவையான பொருட்கள் :- ஐவ்வரிசி 100 கிராம் அரிசி மாவு 75 கிராம், புளித்த மோர் அரை கப், காரப் பொடி 2 டீ ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்குசெய்முறை - ஐவ்வரிசியைப் புளித்த மோரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஐவ்வரிசி நன்கு ஊதிய பிறகு அதனுடன் அரிசி மாவு, காரப் பொடி, பெருங்காயப் பொடி மற்றும் உப்பு தூள் போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். மாவு உருட்டிப் போடும் பதத்தில் இருக்க வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் போட்டு எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். மாவை வடைபோல் தட்டிக் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த வடையைச் சுவைக்க மிகவும் ருசியாக இருக்கும்.
Costly யான பனீர் இட்லி . 3 முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும் அதனுடன் பனீர் 50 கிராம் மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் நன்றாக வதக்கி அந்த பனீர் கலவையில் சேர்த்து இட்லி சட்டியில், இட்லி போல ஊற்றி வேக வைக்கலாம் .
ஒரு கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு -1ஸ்பூன், கறிவேப்பிலை-1 கொத்து, நறுக்கிய வெங்காயம்-2, பூண்டு-5, நறுக்கிய தக்காளி-6, கீறிய ப.மிளகாய் -2, மஞ்சள் தூள்-1/4ஸ்பூன், மிளகாய் தூள்-1/2 ஸ்பூன், உப்பு பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு வதக்கி, சிறு துண்டு வெல்லம் சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடலாம். சப்பாத்தியின் நடுவில் வைத்து ரோல் போல உருட்டி சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
இரவு தூங்க செல்லும் முன் 1கப் பச்சை பயிறை ஊற வைத்து கொள்ளுங்கள், காலையில் ஒரு மிக்சி ஜாரில் அதை சேர்த்து 2பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, 1ஸ்பூன் சீரகம், தேவைக்கு உப்பு, 1கைப்பிடி கொத்தமல்லி, சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்து கொள்ளுங்கள். தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து தோசை வார்த்து எடுக்க சத்தான, ஆரோக்கியமான பச்சைப்பயறு தோசை ரெடி. கார சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும். வாரத்தில் ஒரு முறை.இந்த தோசை சாப்பிடுங்க