25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Nov 01, 2024

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள் : துருவிய பீட்ரூட் - 2 கப் கொதிக்கவைத்த பால் - 1 கப் சர்க்கரை - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன். பாதாம், முந்திரி - சிறிதுசெய்முறை:முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன்நெய் ஊற்றிகாய்ந்ததும், துருவிவைத்துள்ள பீட்ரூட்டைசேர்த்து 3,5 நிமிடம்  குறைவான தீயில்பச்சை வாசனைபோக வதக்கிவிட வேண்டும்.பின்னர் அதில்பால் சேர்த்து10 நிமிடம் குறைவானதீயில் மென்மையாகும்வரை வேகவைக்கவும். பின்பால் வற்றும்வரை அடுப்பில்வைத்து, பின்அதில் சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.அப்படி கிளறிவிடும் போது,கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போதுகொஞ்சம் கொஞ்சமாகநெய் சேர்த்துகிளறி அல்வாபதத்திற்கு வரும்வரை கிளறிவிட வேண்டும். பின் ஏலக்காய்பொடி சேர்த்துகிளறவும்.அதே சமயம்மற்றொரு அடுப்பில், சிறு வாணலியைவைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும்பாதாம் சேர்த்துபொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்துபிரட்டினால், சுவையானபீட்ரூட் அல்வாரெடி.

Nov 01, 2024

சோள மாவு அல்வா

தேவையான பொருட்கள்: சோள மாவு - 1/2 கப், சர்க்கரை - 1 1/2 கப் ,தண்ணீர் - 1 கப் + 1 1/2 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 1/4 கப் (நறுக்கியது), ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, கேசரி பவுடர் - 1 சிட்டிகை செய்முறை:முதலில் சோள மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன்1,1/2 கப் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் சிறு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில்1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, அல்வா போன்று வர ஆரம்பிக்கும். அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா போன்று வரும் வரை கிளறி, பின் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, அதனை துண்டுகளாக்கினால் சோளமாவு அல்வா ரெடி.

Nov 01, 2024

மலாய் குலாப் ஜாமூன்

தேவையான பொருட்கள்: பால் பவுடர்-1 கப், ரவை-4 டேபிள் ஸ்பூன், மைதா-4 டேபிள் ஸ்பூன், பால்-1 கப், பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன், நெய்- தேவையான அளவுஉள்ளே நிரப்புவதற்கு..மலாய் - 1 கப், தேங்காய் - 1/2 கப் (துருவியது) சர்க்கரை பாகுவிற்கு-  சர்க்கரை - 2 கப், தண்ணீர் - 2 கப்செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, பால் பவுடர், பால், பேக்கிங் பவுடர் மற்றும் நெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், அதில் மீண்டும் சிறிது பால் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் சிறு உருண்டைகளாக்கி, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதே நேரத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை போட்டு, தீயை குறைவில் வைத்து சர்க்கரை கரையும் வரை கிளறி, அதனை இறக்கி வடிகட்டி, குளிர வைக்க வேண்டும். இப்போது நெய்யானது காய்ந்திருக்கும். இந்நிலையில் தீயை குறைவில் வைத்து, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, சர்க்கரை பாகுவில் போட்டு,3,4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.3,4 மணிநேரம் ஆனப் பின்பு, ஜாமூன்களை வெளியே எடுத்து, அதில் உள்ள பாகுவை லேசாக பிழிந்துவிட்டு, அதன் நடுவே லேசாக வெட்டி, அதன் நடுவே மலாயை வைத்து, அதன் மேல் துருவிய தேங்காயை தூவி விட வேண்டும். இதேப் போல் அனைத்து குலாப் ஜாமூன்களையும் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான மலாய் குலாப் ஜாமூன் ரெடி.

Oct 25, 2024

பிரட் ட்ரை குலாப்ஜாமூன்

தீபாவளி பண்டிகைநெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மிகவும் குதூகலமாகஇருக்கும். ஏனெனில்தீபாவளி அன்றுவீட்டில் நமக்குபிடித்த பலகாரங்களைசெய்து குடும்பத்துடன்சாப்பிடலாம். அந்தவகையில் உங்களுக்குகுலாப் ஜாமூன்பிடித்தால், அதைஇந்த வருடம்சற்று வித்தியாசமாகசெய்து பாருங்கள்.தேவையான பொருட்கள்: பால் பிரட் - 4 துண்டுகள் மைதா - 1 டேபிள் ஸ்பூன்பால் - 1/4 கப் ரோஸ்எசன்ஸ்-2 துளிகள்பொடித்த சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானஅளவு சர்க்கரைபாகுவிற்கு...சர்க்கரை - 1/4 கப் தண்ணீர் - 1/4 கப் குங்குமப்பூ - 1 சிட்டிகை ஏலக்காய் - 1/4 டீஸ்பூன் செய்முறை:முதலில் ஒருபாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர், குங்குமப்பூமற்றும் ஏலக்காய்பொடி சேர்த்துஅடுப்பில் வைத்து,சர்க்கரை கரையும்வரை சூடேற்றவேண்டும். நீரில்உள்ள சர்க்கரைமுழுவதும் கரைந்து,சர்க்கரைப் பாகுஓரளவு கெட்டியாகஆரம்பிக்கும் போது,அடுப்பை அணைத்துவிடவேண்டும்.சர்க்கரை பாகு குளிர்ந்துவெதுவெதுப்பானதும், அதில்ரோஸ் எசன்ஸ்சேர்த்து கலந்துதனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு பிரட்துண்டுகளை எடுத்துஅதன் பக்கவாட்டில்உள்ள ப்ரௌன்நிற பகுதியைநீக்கிவிட வேண்டும்.பின் ஒவ்வொருபிரட் துண்டுகளையும்எடுத்து பாலில்நனைத்து பிழிந்து,மிக்ஸியில் போட்டுமென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அரைத்தபிரட்டை ஒருபாத்திரத்தில் போட்டு,அத்துடன் சோடாஉப்பு, மைதாசேர்த்து கைகளில்ஒட்டாத அளவில்நன்கு மென்மையாகபிசைந்து, பின்அதனை சிறுஉருண்டைகளாக மென்மையாகஉருட்டி தனியாகஒரு தட்டில்வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்துஒரு வாணலியைஅடுப்பில் வைத்து,அதில் எண்ணெய்ஊற்றி காய்ந்ததும்,உருட்டி வைத்துள்ளஉருண்டைகளைப் போட்டுபொன்னிறமாக பொரித்துத்தனியாக வைத்துக்கொள்ளவும். அனைத்துஉருண்டைகளையும் பொரித்ததும்,அவற்றை சர்க்கரைபாகுவில் சேர்த்து,1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இறுதியில் அந்தஉருண்டைகளை எடுத்து, பொடித்த சர்க்கரையில்உருட்டினால், பிரட்ட்ரை குலாப்ஜாமூன் ரெடி!!!

Oct 25, 2024

தேங்காய் பர்பி

தேவையானவை - தேங்காய் துருவல்-4 கப்(கலர் மாறாமல் சின்ன தீயால் வறுத்துக் கொள்ளவும்) இல்லாவிட்டால் டெசிகேட்டட் கோகனட்-  4 கப் வறுக்க தேவையில்லை பிஸ்தா பருப்பு-2 டேபிள்ஸ்பூன் (பொடியாக சின்ன துண்டுகளாக வெட்டியது  )கண்டன்ஸ்ட் மில்க் - இனிப்பு சேர்த்தது (1 1/4 அவுன்ஸ்)ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்செய்முறை -வறுத்த தேங்காய் துருவல், கண்டன்ஸ்ட் மில்க், ரோஸ் வாட்டர் கலந்து அடும்பில்5 நிமிடங்கள் வைத்துக் கிளறி சேர்ந்து வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி நன்றாகப் பரத்தி அதன் மேல் பிஸ்தா துகள்களை பரப்பி,  துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

Oct 25, 2024

உருளைக்கிழங்கு அல்வா

தேவையான பொருட்கள்: வேக வைத்த உருளைக்கிழங்கு - 8-9, சர்க்கரை - 1/4 கப், பாதாம் - 1 கையளவு ,பிஸ்தா - 2-3, நெய் - 3 டேபிள் ஸ்பூன்செய்முறை: முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அப்படி வதக்கும் போது, நெய் குறைவாக இருந்தால், சற்று நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!! இதன் மேல் பாதாம், பிஸ்தா போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

Oct 25, 2024

அடுப்பு இல்லாமல் பொரி பர்பி

தேவையான பொருட்கள் -  அரிசிப்பொரி 3 கப், ஜீனி அரை கப், ஏலக்காய் 4, நெய் கால் கப், பால் கால் கப், பால்பவுடர் கால் கப், முந்திரி 4 எண்ணம், பாதாம் 4 எண்ணம்செய்முறை-அரிசிப்பொரி 3 கப், (CRISP ஆக இருக்க வேண்டும்) மிக்ஸியில் பொடிசெய்து வைத்துக் கொள்ளவும், ஜீனி, ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் நைஸாச அரைக்கவும், அலங்கரிக்க முந்திரி பாதாம்  வறுத்து வைத்துக் கொள்ளவும். பொடித்த பொரி, ஜீனி, பால், நெய், பால்பவுடர் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாக சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து (தண்ணீர் சேர்க்கக் கூடாது ) ஒரு தட்டில் தட்டி அரை மணி நேரம் கழித்து சிலைஸ் செய்யவும், பொரி பர்பி ரெடி.

Oct 25, 2024

ரசகுல்லா

முதலில் பாலை காயவைத்து, காய்ந்த பால் மீது எலுமிச்சை சாறு சேர்த்து தயிர் போல் வரும் வரை கிளறவும். நீரை வடித்து, சணல் துணியில் கட்டிவைக்கவும், பன்னீரை உதிரி அளவாக செய்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பன்னீரை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.  சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காயவைத்து, பன்னீர் உருண்டைகளை அதில் சேர்க்கவும். 15-20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக குளிரவிடவும். இப்போது ருசியான ரசகுல்லா ரெடி !

Oct 25, 2024

ரவை தேங்காய் உருண்டை

தேவையான பொருட்கள்ரவை -ஒரு கப்வறுத்த தேங்காய் துருவல் - அரை கப்சர்க்கரை - ஒருகப் வறுத்த முந்திரி, திராட்சை- தேவைக்குநெய்- 50 கிராம்ஏலக்காய்த்தூள்-சிறிதளவுசெய்முறை-கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் ரவையை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும் வறுத்த ரவையை ஒரு அகலமான தட்டில் கொட்டி அவற்றுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் தேங்காய் துருல்ல சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்வாணலியை அருப்பில் வைத்து சரக்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்காய்ச்சிய சர்க்கரை பாகை ரவை கலவையில் சேர்த்து சற்று சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும்சூடான ரவை தேங்காய்  உருண்டை ரெடி 

Oct 25, 2024

இஞ்சி மரப்பா

50 கிராம் இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வைக்கவும் .பிறகு கடாயில் சிறிதளவு சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாவு ரெடி செய்யவும். அதில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிண்டவும். பிறகு அரிசி மாவு 1 ஸ்பூன் சேர்க்கவும். சிறிது நேரத்தில் நல்ல பதத்திற்கு வரும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 30 நிமிடம் கழித்து பார்த்தால் இஞ்சி மரப்பா ரெடியாகும்.கட் செய்து பரிமாறவும், தீபாவளி பலகாரம் சாப்பிட்டு  வயிற்று வலி வந்தால், இஞ்சி மரப்பா செய்து சாப்பிடுங்கள். 

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 72 73

AD's



More News