25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Jan 03, 2025

வீட் பிரெட் வெஜ் உப்புமா

தேவையான பொருட்கள்12 ஸ்லைஸ்வீட் பிரெட்1சின்ன எலுமிச்சம் பழம்1பெரிய வெங்காயம்1மீடியம் சைஸ் தக்காளி1 சின்ன குடமிளகாய்2 பச்சை மிளகாய்சிறு துண்டுஇஞ்சி1ஸ்பூன்தனி மிளகாய் தூள்1டீ ஸ்பூன்மஞ்சள் தூள்உப்பு ருசிக்குதாளிக்க:-1 டீ ஸ்பூன்கடுகு, 1ஸ்பூன் க.பருப்பு,1ஸ்பூன்உ.பருப்பு,2 சி.மிளகாய்,2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்,1 கொத்து கறிவேப்பிலை,தேவைக்கு கொத்தமல்லி இலைஅலங்கரிக்க:-நறுக்கின வெங்காயம், குடமிளகாய் கொத்தமல்லி தழைசெய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, குடமிளகாயை பொடியாக நறுக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும்.பிரெட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி, சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். தாளித்ததும், வெங்காயம், ம.தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, வதக்கவும்.வதங்கியதும், தக்காளி, குடமிளகாய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.அடுத்து பிரெட் துண்டுகளை போடவும்.பின் பிரெட் உடையாமல் கிளறி, எலுமிச்சை சாறை ஊற்றி, அடுப்பை நிறுத்தி விடவும்.மேலே கொத்தமல்லி தழையை போட்டு ஒன்று சேர மெதுவாக கிளறி இறக்கவும்.இறக்கினதும், பிளேட்டிற்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*வீட் பிரெட் வெஜ் உப்புமா*தயார்.

Jan 03, 2025

ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி

தேவையான பொருட்கள் - பிரெட் - 4 ஸ்லைஸ், கடலைமாவு ஒரு கப்.அரிசிமாவு ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன். பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - 2. மல்லித்தழை - சிறிது. எண்ணெய் - தேவையான அளவு.பச்சை சட்னிக்கு : புதினா - அரை கப், மல்லி - அரை கப். பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.கார (சிவப்பு) சட்னிக்கு : காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 3 பல்,வெல்லம் ஒரு டீஸ்பூன், புளி சிறிய துண்டு, உப்பு - சுவைக்கேற்ப.செய்முறை:சட்னிகள் இரண்டையும் தனிதனியே நைஸாக அரையுங்கள். வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டுங்கள். குறுக்காக வெட்டி முக்கோண துண்டுகளாக்குங்கள். ஒரு துண்டின் மேல் பச்சை சட்னி, மற்றொன்றின் மேல் கார சட்னி தடவுங்கள். கடலை மாவு முதல் ஆப்ப சோடா வரை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். சட்னி (பச்சை) தடவிய பிரெட் ஸ்லைஸின் மேல் சிறிது வெங்காயம், மல்லித்தழை தூவி கார சட்னி ஸ்லைஸால் மூடுங்கள். எண்ணெயை காய வைத்து பிரெட் ஸ்லைஸ்களை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுங்கள். 

Dec 27, 2024

கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை: கண்டந்திப்பிலி - 100 கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் மற்றும் கடுகு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-இரண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில்நெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு மற்றும் ஒடித்த கண்டந்திப்பிலியைச் சேர்த்து வறுக்கவும். பின், மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.குறிப்பு: காய்ச்சல், உடல் வலி இருக்கும் சமயங்களில் இந்த ரசம் வைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வறுத்த மணத்தக்காளி வற்றல் அல்லது பருப்புத் துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.

Dec 27, 2024

மிக்ஸட் வெஜ் சூப்

தேவையானவை: காய்கறி கலவை மற்றும்பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், பூண்டு பல்- இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்), வெண்ணெய், கார்ன் ப்ளார் மற்றும் எலுமிச்சை சாறு - தலா ஒரு தேக்கரண்டி, சர்க்கரை - கால் தேக்கரண்டி, மிளகுத்தூள் மற்றும் உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து சேர்க்கவும். பின்னர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அடுப்பை அணைத்து இறக்கவும். மேலாக மிளகுத்துகளைத் துாவி, பிரெட் ஸ்டிக்ஸுடன் பரிமாறவும்.

Dec 27, 2024

சைனீஸ் வெஜ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு இரண்டு பல், எண்ணெய் மற்றும் கார்ன் ப்ளார் - தலா ஒரு தேக்கரண்டி, சில்லி சாஸ் அரை தேக்கரண்டி,சோயா சாஸ்- ஒரு தேக்கரண்டி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், மிளகுத்தூள், நூடுல்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.வேகவைத்த நுாடுல்ஸுடன், சிறிதளவு கார்ன் ப்ளார் சேர்த்து புரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி,பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த காய்கறிக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.அதன் பின், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டையும் ஊற்றி, கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்துச் சேர்க்கவும். சூப் சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து இறக்கவும். மிளகுத்தூளை தூவி, வறுத்த நுாடுல்ஸை சூப்பின் மீது போட்டு பரிமாறவும்.

Dec 27, 2024

பாலக் சூப்

தேவையான பொருட்கள் : 1 கப் - பாலக் கீரை ,1 - வெங்காயம் , 1/2 கப் - காரட் ( துருவியது), 1/2 டீஸ்பூன் -  இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன் - சோயா சாஸ் , சிறிதளவு - மல்லி தழை- 2 டீஸ்பூன் - வெண்ணெய்  தேவையான அளவ-மிளகுதூள்காய்கறி வேகவைத்த தண்ணீர், தேவையான அளவு - உப்பு செய்முறை: வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் துருவிய காரட் , இஞ்சி - பூண்டு விழுது  சேர்த்து இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய பாலக் சேர்த்து வேக வைக்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து  இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Dec 27, 2024

மாதுளை ஸ்வீட்கார்ன் சூப்

தேவையானபொருட்கள் :2 கப் - மாதுளை 1/2 கப் - ஸ்வீட் கார்ன்1/2 டீஸ்பூன் -  மிளகுத்தூள் 1 டீஸ்பூன் - இஞ்சிச்சாறு தேவையான அளவு- வெண்ணெய்தேவையான அளவு - உப்பு1 டீஸ்பூன் - சோள மாவு சிறிதளவு மல்லி தழைசெய்முறை : ஸ்வீட் கார்னை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.மாதுளை முத்துகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் , இஞ்சிச்சாறு, மாதுளைச் சாறு சேர்த்துக் 5 மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அதனுடன் ஸ்வீட்கார்ன் கரைசல் சேர்த்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி வெண்ணெய், மிளகு தூள் மல்லிதழை தூவி பரிமாறவும்.

Dec 27, 2024

நூடுல்ஸ் வெஜ் சூப்

தேவையான பொருட்கள்:1 கப் - நறுக்கிய காய்கறிகள் (வேக வைத்தது)1/2 கப் - நூடுல்ஸ் ( வேக வைத்தது)4 கப் - காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1 - வெங்காயம்  தேவையான அளவு-மிளகுத்தூள்சிறிதளவு - வெங்காயத்தாள் சிறிதளவு -மல்லி தழை 2 டீஸ்பூன் - வெண்ணெய்1 டேபிள்ஸ்பூன்  - கார்ன் மாவுதேவையான அளவு - உப்புசெய்முறை: வாணலியில் வெண்ணெயை சேர்த்து  உருகியதும் நறுக்கிய பூண்டு  வெங்காயம் சேர்த்து வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். இதில் சோள மாவை  சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சேர்க்கவும்.நன்கு கொதித்த பின்னர் இறக்கி, பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி,மல்லி தழை,வெங்காயத்தாள், மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Dec 20, 2024

முருங்கை இலை துவையல்

தேவையான பொருட்கள் -காம்பு நீக்கிய முருங்கை இலை 3 கையளவு, உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன், வத்தல் 6, புளி சின்ன எலுமிச்சை அளவு, பெருங்காயப் பொடி சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் 1 டீஸ்பூன். கடுகு கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 கையளவுசெய்முறை எண்ணெய் விட்டு, கடுகு பொரிந்ததும், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சிவப்பாக வறுக்கவும், வத்தல் பெருங்காயம், சேர்த்து வதங்கியதும், தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி முருங்கைக்கீரை சேர்க்கவும், 2 நிமிடம் வதக்கி, புளி, உப்பு சேர்க்கவும், நன்றாக ஆறிய உடன் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும், தண்ணீர் தேவை என்றால் சிறிது தெளித்துக் கொள்ளவும், சூடான சாதத்திற்கு சுவையான முருங்கைக்கீரை துவையல்.

Dec 20, 2024

முடக்கத்தான் கீரை துவையல்

தேவையான பொருட்கள்.-4 கப் முடக்கத்தான் கீரை,1/4கப் நல்லெண்ணை,1தேக்கரண்டி கடுகு,1தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி|,1தேக்கரண்டி வெந்தயம்,1 மேஜைக்கரண்டி உளுந்து,1 மேஜைக்கரண்டி தனியா,½கப் கடலை பருப்பு,4பல் பூண்டு, 1/2 கப்  புதினா இலைகள்,1 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை,4 காரமிளகாய்,சிட்டிகை பெருங்காயம்,2 அங்குலம் இஞ்சி தோலுரித்தது,2 மேஜைக்கரண்டி புளி பேஸ்ட், தேவையான உப்பு செய்முறை - மிதமான நெருப்பில் ஒரு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணையில் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளிக்க பருப்புகள், மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வறுக்க வாசனை வரும் வரை,2 நிமிடம் கீரை, புதினா, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க-5 நிமிடங்கள். மஞ்சள் பொடி சேர்க்க வதக்கலையும், புளியும் சேர்த்து பிளெண்டரில்1 கப் நீர் சேர்த்து அரைக்க. உப்பு சேர்த்து கலக்க. ருசியான முடக்கத்தான் கீரை துவையல் தயார். முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 72 73

AD's



More News