25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


நலம் வாழ

Aug 18, 2025

தினமும் தயிர் சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும் .

தினமும் தயிரை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. இதயம் வலுப்பெறும்.நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது. தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையின் வைக்க உதவுகிறது.இதனால் உடல் எடை குறைக்கிறது.தினமும் தயிர் சாப்பிடுவது உடலில்கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக்  கொண்டுள்ளது. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

Aug 15, 2025

துவைக்காத தலையணை உறை  நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

ஒரு வாரமாக உங்கள் தலையணை உறையை துவைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு கழிப்பறை இருக்கையை விட 17,000 மடங்கு அசுத்தமான ஒன்றின் மீது தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என National Sleep Foundation வெளியிட்ட ஆய்வு தகவல், இதில் முகப்பரு, ஒவ்வாமை மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளும் அடங்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Aug 11, 2025

கருப்பு மிளகுடன்தேன்சேர்த்துசாப்பிட...

கருப்பு மிளகுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதால் அழற்சி எதிர்ப்பு, மூட்டு விறைப்பு, கீல்வாதம் போன்ற பிற வலிகளுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. தேன் மற்றும் கருப்பு மிளகு கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது எடை இழப்புக்கு வழி வகுக்கும். தேன் இல்லாவிட்டாலும் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

Aug 06, 2025

உடல் வெப்பத்தை தணிக்கும் வெந்தயம். 

வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெரும் வயிற்றில் குடித்து வத்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது.வெந்தயம் ஊறவைத்த நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் இதில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சந்துக்கள் அதிகம் இருப்பதால் இது இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது

Aug 04, 2025

ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ள கடல்பாசி .

கடல்பாசி என்பது கடலில் வாழும் ஒரு வகை தாவரம். இது சிவப்பு, பழுப்பு, பச்சை நிறங்களில் இருக்கும். கடல் பாசியை சமையலில் பயன்படுத்தலாம். கடல் பாசியில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன.கடல் பாசிஎலும்புகளை உறுதியாக்கும்.தைராய்டை சரிசெய்யும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எடை குறைக்க உதவும்.வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.

Jul 29, 2025

பசி உணர்வை தூண்டும் சோம்பு தண்ணீர்.

 டீ. காபிக்கு பதில் நாள்தோறும் சோம்பு தண்ணீர் அருந்துவதால் ,பசி உணர்வை தூண்டும்.செரிமானப் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு.சிறுநீரகப் பிரச்னைகளை தடுக்கும்.கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும்.ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும்.தொப்பை குறைந்து கட்டுடல் உருவாகும்.வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும்.சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்.மூளை சுறுசுறுப்பு, புத்துணர்ச்சிக்கு உதவும்.

Jul 29, 2025

மயிர் முளைச்சான்  ''ரம்புட்டான்'

மலேசியா மற்றும் இந்தோனேசியாலை தாயிடமாகக் கொண்டுள்ள இப்பழத்தை ''ரம்புட்டான்' என்பார்கள். இது நீர்ச்சத்து வழங்கி, தோல் பொலிவாகவும், ஜீரணத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த உதவுகிறது.

Jul 28, 2025

உணவில் அதிக உப்பை உட்கொள்வது, உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம், இதயம் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் கண் பார்வையை குறைக்கும். உணவில் குறைந்த அளவு உப்பை உட்கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, உணவின் சுவையை முழுமையாக வைத்திருக்கிறது.அத்துடன் பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

Jul 24, 2025

அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல புதினா இலை.

வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்றுஉப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும்.புதினா டீ ஒரு டம்ளர் தண்ணீரில் புதினாஇலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம். எலுமிச்சைசாறு சேர்த்து குடிக்கலாம். சுவை அற்புதமாக இருக்கும்.

Jul 23, 2025

ப்ளு டீ (சங்குப்பூ டீ)

ப்ளு டீ என்பது சங்குப்பூவில் செய்யப்படும் டீ ஆகும். இது சீனாவில் பிரபலம். ப்ளு டீ கொழுப்பை குறைப்பதால் உடலின் எடை குறைந்துவிடும். இதில்ஆன்டிஆக்ஸிடன்ட்கள்நிறைந்துள்ளன .இது சர்க்கரை நோயாளிகளுக்கு குளுகோஸின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, ப்ளு டீ இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய நோய் பாதிப்பை குறைக்கிறது.ப்ளூ டீயில் பயோஃப்ளேவனாய்டு என்ற கலவை உள்ளது, இது உடலுக்கு பாதுகாப்பு ஆக்ஸிஜனேற்றிகளை வழங்க செயல்படுகிறது. இவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.நீல சங்கு பூ டீ, நரைத்தல் மற்றும் முடி உதிர்வதைத் தடுப்பதன் மூலம் இழந்த பிரகாசத்தைத் திரும்பக் கொண்டுவருகிறது.உடலில் வலி மற்றும் காய்ச்சலைக் குறைக்கிறது. ப்ளூ டீ சுவாசக் கோளாறுகளுக்கு  பயன்படுத்தப்படுகிறது . சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை அகற்றவும் உதவுகிறது.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 53 54

AD's



More News