25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

May 16, 2025

உணவிற்கு முன்பு எலுமிச்சை, இஞ்சி சாறு

பகல் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது 1மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்ந்து குடித்தால் ஜீரணமண்டலம் நன்றாக வேலைசெய்யும். உணவுநன்றாகசெரிக்கும். மேலும், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல், பாதுகாப்பதனால் உடல் பருமன் பிரச்சனை நீங்கும். வயிறு, செரிமான பிரச்சனைகள் வராமல் காக்கும்.

May 13, 2025

ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்...

முருங்கைக்கீரை, சுண்டைக்காய் பாசிப்பயறு, எள்ளுருண்டை மணத்தக்காளி வத்தல் அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை விதையுள்ள கருப்பு திராட்சை நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை கறிவேப்பிலைத் துவையல் ,பீர்க்கங்காய் பிரண்டை, முள்ளங்கி பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி உளுந்து, கேழ்வரகு தோசை பொன்னாங்கன்னி கீரை தண்டுக்கீரை ,வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப் நெல்லிக்காய்ச் சாறு, பழரசம் ∙பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை.

May 11, 2025

இளநீர் மருந்தை குடித்து சிறுநீரகக் கற்கள் வெளியேற…

மாலை நேரத்தில் ஒரு இளநீரை எடுத்து ஒரு கண்ணை மட்டும் திறந்து, அதற்குள் சீரகம் -ஒரு தேக்கரண்டி, சுத்தமான கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - ஒரு தேக்கரண்டி, பாசிப்பயறு ஒரு தேக்கரண்டி, ஆகிய மூன்று பொருட்களையும் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இளநீரை எடுத்து ஊறிய இளநீரை மட்டும் வடிகட்டி குடித்தால் போதுமானது, சாப்பிட்டாலும் தவறில்லை.இந்த மருந்தை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வர  ஐந்தில் இருந்து ஏழு நாட்களுக்குள் சிறுநீரகக் கற்கள் முழுமையாக வெளியேறும்

May 08, 2025

இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிடுபவரா?

இரவில் கோதுமை சப்பாத்தியை சாப்பிடலாமா, கூடாதா என சந்தேகம் இருக்கும். அதற்கு உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கும் விளக்கத்தை காணலாம். கோதுமை சப்பாத்தியில் கலோரிகள், கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும் என்றும், அதை இரவில் சாப்பிட்டால் செரிமானம் ஆக அதிக நேரமாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஜீரண பிரச்னை ஏற்படும் என்பதால், இரவு உணவாக சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

May 06, 2025

சாதாரண தண்ணீரே சிறந்தது.

தற்போது அக்னி வெயில் தொடங்கி விட்டதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வெயில் காலத்தில் உடலில் நீர்சத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு உணவும் உடலுக்குள் சென்றால், உடலின் வெப்பநிலையை அடைய வேண்டும். வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே குளிர்ந்த நீர், மென்பானம் அருந்துவது தவறு. அது உடலின் வெப்பநிலையை அடைய, கலோரிகளை உடலில் இருந்து தான் எடுக்கிறது. மென்பானங்களில் பழத்தின் சுவை, மணம், நிறம் இருக்கும். சத்துக்கள் குறைவு. எனவே சாதாரண தண்ணீரே நல்லது.

May 05, 2025

அல்சர் குணமாக…

அல்சர் என்பது வயிற்றில் வலி, ரத்தத்துடன் கூடிய வாந்தி, வயிற்றில் வீக்கம், அஜீரணம் , திடீரென எடை குறைதல் போன்றவை  இருந்தால் அது அல்சர் ஆகும்.மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு மூன்று முறையாவது சூப்பாகவோ அல்லது பொரியலாகவோ உட்கொண்டு வந்தால் வயிற்றுப்புண் வாய் புண் அல்சர் போன்றவற்றை குணமாக்கும்.தேங்காய்பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் தேங்காய்பாலை அருந்தி வர குடல் புண் அல்சர் போன்றவற்றை சரிசெய்ய மிகவும் உதவுகிறது. தேங்காய்பால் பிடிக்காதவர் தினமும் சிறிதளவு கொப்பரை  தேங்காயை மட்டும் உட்கொண்டு  வந்தால் போதும்.குடைமிளகாய்,கேரட்,தயிர்,ப்ரக்கோலி,ஆலிவ்ஆயில்,க்ரீன்டீ,அதிமதுரம்,பூண்டு,தேன்,ஆப்பிள்,ஸ்ட்ராபெர்ரி,ராஸ்ப்பெர்ரி,ப்ளூபெர்ரி,முலாம்பழம்,சீத்தாப்பழம்,பலாப்பழம்,முட்டைக்கோஸ்,காலிபிளவர்,முள்ளங்கி, ஆகியவற்றை அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

May 02, 2025

அகத்திக் கீரை உணவில் சேர்த்துக் கொள்ள....

அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை  உபயோகித்தால் தேகத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்.கண்கள் குளிர்ச்சியாகும்.மலம் இலகுவாகப்  போகும். சிறுநீர் தடையில்லாது தாராளமாகப் போகும்.நீரடைப்பு, பித்த மயக்கம் இவை நீங்கும் .அடிபட்டு ரத்தம் கசியும் ரணங்களுக்கு அகத்தியை அரைத்து வைத்து ரணத்தில் கட்டினால்  விரைவில் ஆறும், சீழ் பிடிக்காது.அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், ரத்த சோகையை குணமாக்கும். ரத்த அழுத்ததை சம நிலையில் வைத்திருக்கும்.நெஞ்சு சளி, தோல் நோய் போன்றவைகளுக்கு அகத்திக் கீரை நல்ல பலனை தரும்.வாய்ப் புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக் கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் விரைவில் குணமாகும். அகத்திக் கீரை வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர் நோயைக் குணப்படுத்துகிறது.  அகத்தி கீரை, தேங்காய் பால் சேர்த்து முன்பெல்லாம் தண்ணீர் சாறு ஒன்று ஒன்று ரசம் போல வைப்பார்கள். அது வயற்று புண், வாய் புண் இவைகளை ஆற்றும். இப்போது அப்படி வைத்து தருபவர்கள் அதிகம் இல்லை.அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Apr 30, 2025

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வல்லாரை கீரை சிறந்த ஊட்டசத்து.

வல்லாரை கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே வருகிறது.இது சிறந்த மருத்துவ சத்து, தாயின் ஆரோக்கியத்தை வளர்ப்பதுடன் குழந்தைக்குத் தேவையான வளர்ச்சிக்கு மிக சிறந்த ஊட்டசத்தை கொடுக்கிறதுஇதை துவையல், அல்லது வெங்காயம் கடலைகாய், எள்ளு, பொரி, காரம், உப்பு, மிளகாய் சேர்த்து கடலை மசால் போல் செய்து சாப்பிடலாம்.வல்லாரை சாறுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சிறப்பாக இருக்கும். 

Apr 28, 2025

செரிமானத்திற்கு உதவும் அன்னாசிப் பழம்

பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உட்கொண்டது.பீட்டா கரோட்டின் கண்பார்வை அதிகரிக்கிறது.அமிலத்தன்மையை சமன்செய்யும்.தசைகளின் சீரழிவு தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது.வைரஸ்களை எதிரிடுகிறது.வீக்கத்தை குறைக்கிறது.மூட்டு வலி குறைக்கிறது.வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலூவாகவும் வைக்கிறது.

Apr 27, 2025

நுரையீரலை பாதுகாக்க வைட்டமின் சி" சத்துள்ள  பழங்கள்.

வைட்டமின் C சத்தானது, சளி, காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நுரையீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் வைட்டமின் C அவசியம். இதற்கு ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்ளுங்கள். வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடியுங்கள்.

1 2 ... 25 26 27 28 29 30 31 ... 51 52

AD's



More News