25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Jun 09, 2025

தலைக்கு கீழ்தலையணை இல்லாமல்  தூங்கினால் இதயம் மற்றும் மூளை வலுப்படுத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உறங்கும் போது தலைக்கு கீழ்தலையணை இல்லாமல்  தூங்கினால் இதயம் மற்றும் மூளை வலுப்படுத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தூங்க போவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன் ஒவ்வொரு இரவும் ஒரு மாதுளை உணவு சாப்பிட வேண்டும். இந்த ஆயுர்வேத முறை மூலம் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.தினமும் ஒரு வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும். இந்த எளிய முறை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Jun 08, 2025

உடலின் ஈரப்பதத்தைக் குறைக்கும்  ஏசி 

ஏசி உடலின் ஈரப்பதத்தைக் குறைத்து விடும்.'நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் அமரும்போது தலைவலி ஏற்படும். ஏசி சரியான பராமரிப்பில் இல்லையென்றால் அலர்ஜி. தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. அதிக நேரம் ஏசியில் இருந்தால், கண் எரிச்சல், நீர் வற்றிப்போதல் ஏற்படும். அலுவலகத்தில் பலருக்கு உடல் அசதி, களைப்பு வருவதற்கு ஏசி தான் காரணம்.

Jun 06, 2025

 அதிக நீர்சத்து உடைய  காய்கறிகள்

 வெள்ளரிக்காய் அதிக நீர்சத்து உடையது.சுரைக்காய் 90% தண்ணீரால் ஆனது. மேலும், எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்.பூசணிக்காயில் அதிகளவு நீர்ச்சத்தும், வைட்டமின் A உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.பாகற்காய் வெயில் காலங்களில் நம் உடலின் வெப்பநிலையை சமன்படுத்தும்.குடை மிளகாயில் 90% தண்ணீர் உள்ள இது மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.வெயில் காலத்தில் அதிக நீர்சத்து உடைய காய்கறிகள்சாப்பிட வேண்டும்.

Jun 05, 2025

தலைவலி இருந்தால்...

தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருத்துவம்.தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதே அதற்கு மருத்துவம்.தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம்.ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுங்கள்.

Jun 04, 2025

நார்ச்சத்து அதிகம் உள்ள பொட்டுக்கடலை.

பொட்டுகடலையில் நம் உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.பொட்டுகடலையில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச் சத்து அதிகம். மேலும் இதில் அதிகம் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு சிறந்தது. பொட்டுகடலையில் நார்ச்சத்து அதிகம் மற்றும்கொழுப்பு குறைவாக உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. மேலும் இது நமது பெருங்குடலை ஹைடரேட்  செய்வதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

Jun 03, 2025

ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் சப்போட்டா பழம்

நல்ல சுவை மிகுந்த பழங்களில் ஒன்று சப்போட்டாப் பழம். இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரம் இரும்பு போன்ற கனிமச் சத்து அதிக அளவு உண்டு. வைட்டமின் சி யும் உள்ளது.தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும், இருமலைத் தடுக்கும், குடல் புண்ணை ஆற்றும், பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும்,நீரிழிவு வியாதிக்காரர்கள் உண்ணலாம். சிறு நீரக கோளாறை நீக்க வல்லது. மூல நோயைத் தணிக்கும் தண்மையுடையது சப்போட்டாப் பழம். நோயைத் தரும் எண்ணெய் நொறுக்குத் தீனிகளை விட பழங்கள் மென்மையானது. உடலுக்கு திடம் தருபவை. தினம் ஒரு பழம்.உங்கள்ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Jun 02, 2025

மூட்டுவலி, கால் வலி குணமாக....

நொச்சி இலை, வேம்பு, முடக்கத்தான் மற்றும்வாதநாராயணன் இலை ஆசியவற்றை ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு குடம் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இந்த தண்ணீரை, இளம் சூட்டில் காலில் மேலிருந்து கீழாக மெதுவாக ஊற்ற. மூட்டுவலி, கால் வலி குணமாகும்.

Jun 01, 2025

குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து அதலைக்காய்..

சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் அதலைக்காய் பாதுகாக்கிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. உடல் எரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் அதலைக்காயை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம். குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து வயிற்று பிரச்சினையை தீர்ப்பதில்முக்கிய பங்கு வகிக்கிறது.

May 30, 2025

குடற்புண் உள்ளவர்கள் திராட்சைப் பழச்சாற்றை பருகினால் குணம் பெறலாம்.

திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். மேலும், குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம். அதேபோன்று20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்

May 29, 2025

பாலில் பூண்டு கலந்து குடித்தால் ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கும்.

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனை காணலாம். மேலும், பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 51 52

AD's