நீண்ட நேரம் மொபைல் போன் பயன் படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சினைகள் ஏற்படலாம். செல்போன் பழக்கம் நீடித்துக் கொண்டே சென்றால் நம்மை மன நோய்க்கு ஆளாக்கி விடும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன் படுத்துவது இது போன்ற கடுமையான பாதிப்புகளை களைய உதவும்.இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும். இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். முடிந்த அளவு, இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி,வலி,கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும். எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கண்கள் பாதுகாக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும் போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும், இந்த பாதிப்பை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதனை தவிர்க்க கழுத்து பகுதியை வலுவாக்கும் உடற்பயிற்சிகளோடு சரியான அளவு ஓய்வும் வேண்டும்.சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன் படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும். எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது ஒலி அளவை 50 சதவீதம் குறைத்து பயன்படுத்துங்கள். பாதிப்புகள் ஏற்படாது. செல்போனுக்கும், கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்..
பெண்கள் ஆண்களை விட அதிகமாக சிரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு ஆராய்ச்சியின்படி, சராசரியாக ஒரு பெண் ஒரு நாளைக்கு 62 முறையும், அதே நேரத்தில் ஆண் ஒரு நாளைக்கு 8 முறை மட்டுமே சிரிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இரு பாலினத்தவரின் புன்னகை விகிதத்திலும் ,உள்ள வேறுபாடு இளமையாக இருக்கும்போது அதிகமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம், தொழில் அல்லது சமூக பொறுப்புகளில் ஆண் - பெண் ஒரே மாதிரியான பதவிகளை வகிக்கும்போது, இரு பாலினருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. புன்னகையைப் பொறுத்தவரை வயது, கலாசாரம் மற்றும் இனம் போன்ற பல காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
'ரிங் மவுஸ்' என்ற அணி கருவி (Wearable Gadget) புதிதாக வந்திருக்கிறது. இதை விரலில் மாட்டிக்கொண்டு, அசைத்தால், தொடு திரையைத் தொடாமலேயே, மொபைல் திரையில் ஸ்க்ரோல், கிளிக், நேவிகேட் செய்யலாம்.
உலகில் பல நாடுகள், வேப்பமரம் தங்கள் மண்ணில் வளராதா என்று ஏங்குகின்றன. இதன் தாவரவியல் பெயர் 'அசாதி ராச்தா இண்டிகா' ஆகும்.சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வீக்கம், தொற்று நோய், காய்ச்சல், தோல் நோய்கள், பல் சார்ந்த பிரச்சினை உள்பட பல நோய்களுக்கு வேம்பு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கடும் வெயிலால் ஏற்படும் பித்த பாதிப்புகளை தணித்து உடலை குளிர்விக்கும் இயல்பை கொண்டது. வெயில் காலத்தில் வேனல் கொப்புளங்கள், அம்மை கட்டிகள் வராமல் இருக்க வேப்பிலை குளியல் அருமருந்து. தோலை மென்மையாக்கும் தன்மை வேம்புக்கு உண்டு என்பதால் இது ஆயுர்வேத மருத்துவத்தில் 'தோலின் ராணி' என்று அழைக்கப்படுகிறது.வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி, வாயில் உள்ள கிருமிகளை நீக்கலாம். வேம்பில் உள்ள தாவர வேதிக்கூறுகளான நிம்பிடின், நிம்பின். நிம்போலைடு, அசாடிராக்டின், காலிக் அமிலம், எபிகா டெசின், கேட்டசின் மற்றும் மார்கோலோன் ஆகியவை மனித வாயில் உள்ள கிருமிகளை முற்றிலும் ஒழிக்கும் திறன் வாய்ந்தவை.அவ்வப்போது, டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில் வேப் பிலைச்சாறு குடித்து வந்தால் உடலின் செல்கள் புதுப்பிக்கப்பட்டு இளமையான பொலிவு ஏற்படும்.சில வாரங்களுக்கு காலையில் வேப்பங்கொழுந்தை மென்று சாப்பிடுவது ரத்த சர்க்கரை உயர்வை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாண்டா என்பது பாலூட்டி வகை விலங்கினம். ஆசிய நாடான சீனாவின் மத்திய பகுதி மலைகளில் அடர்ந்த மூங்கில் காடுகளில் மட்டும் காணப்படுகிறது. சிறிய விலங்கு மற்றும் மீன்களை உணவாக்கும். அதே வேளை பெருமளவில் மூங்கிலையும் தின்னும், ஒரு நாளில் 12 மணி நேரம் உண்டு வயிற்றை நிரப்பும். நாள் ஒன்றுக்கு, 12 கிலோ மூங்கிலை உண்பதாக புள்ளி விபரம் உள்ளது.பாண்டாவின் அறிவியல் பெயர், ஐலுரோபோடா மெலனோகா இதை கருப்பு, வெள்ளை காயும் பூனை என்றும் கூறுவர். இது ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். எடை,135 கிலோ வரை இருக்கும்.38 ஆண்டுகள் வரை வாழும் பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பிறந்து எட்டு வாரங்களுக்குப் பின் தான் கண்களைத் திறக்கும். அதுவரை பார்க்கும் திறன் இருக்காது.பெண் பாண்டா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு குட்டிகள் வரை ஈனும் குட்டி தாயின் அரவணைப்பில்13 மாதங்கள் வரை இருக்கும். சீன அரசின் பாதுகாப்பு முயற்சியால் பாண்டா எண்ணிக்கை காடுகளில் அதிகரித்து வருகிறது.
நீரில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் ஏற்படும் முக்கியப் பிரச்னை நோய்க் கிருமிகளின் பரவல் தான். இவற்றை நீரிலிருந்து நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆபத்தான நுண்ணுயிர்கள் நெகிழிகள் மீது தங்கி, பெருகிப் பரவும். இது சுகாதாரத்திற்கு ஆபத்து. ஆனால், நுண்ணெகிழிகளின் இந்தத் தன்மை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுகள் நீக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீர் பாதுகாப்பாக உள்ளதா என்று கண்காணிப்பது அவசியம். இந்த நீரின் மாதிரிஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதில் ஆபத்தான கிருமிகள் உள்ளனவா என்று ஆராயப்படும். இதில் உள்ள சிக்கல் என்னவென் றால், இந்த ஆய்வு24 மணி நேரத் திற்கு ஒருமுறை மட்டுமே செய்யப் படும். ஒவ்வொருமணிநேரமும்கண்காணிக்கும்நடைமுறைஇல்லை.ஏனென்றால், கழிவுநீரில் கிருமிகள் இருந்தாலும் அவை பெருகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.கிருமிகள் குறிப்பிட்ட எண்ணிக் கையில் இருந்தால் தான் சோதனை யில் தெரியவரும். எனவே அவை சீக் கிரம் பெருகுவதற்கு வழி செய்தால் அவற்றைக் கண்டறிவது எளிதாகிவிடும். இதை உணர்ந்த ஸ்காட்லாந்து பல்கலை ஆய்வாளர்கள், நுண்ணெகிழிகளை இவற்றுக்குப் பயன்படுத்தினர். அதாவது, நுண்ணெகிழிகளாலான2 மி.மீ., அகலம் கொண்ட சிறிய உருண்டைகளை வடிகட்டியில் வைத்து நீரில் இட்டனர்.கிருமிகள் உருண்டைகள் மீது படிந்து வேகமாக வளரத் துவங்கின. அவற்றை ஆராய்ந்து அவை எந்த வகையைச் சேர்ந் தவை என்று கண்டறிந்தனர்.எனவே மிகக் குறுகிய காலத்தில் கிருமிகளைக் கண்டறிய இப்படியான நுண்ணெகிழிகளைப் பயன் படுத்த முடியும் என்று ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் 'பயர்ப்ளை' என அழைப்பர். இது 'கோலியாப்டிரன்' குடும்பத்தைச் சேர்ந்தது. மின்மினிப் பூச்சிகளில் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. இவை வெளிப்படுத்தும் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது.இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும் இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.
உலகம் முழுவதும் நாய் கடி பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது. ஆண்டும்தோறும் சுமார் 8 லட்சம் பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர். அதில் பாதிபேர் குழந்தைகள் ஆவர்.இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நாய் ஒருவரை ஏன் கடிக்கின்றது? அவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, பயம், வலி ஏற்படும் நிலையில் கடிக்கின்றன என்பது தெரிய வந்தது.வளர்த்தவர்கள் கூட பழக்கப்பட்ட நாய் தானே என்று கருதி நாய்களின் வாலை பிடித்து இழுக்கும் போது, அவை அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. வலியை உணரும் நாய்கள் தங்களை தற்காத்து கொள்ள கடித்து விடுகின்றன.நாய்கள் தங்கள் உணவை தீவிரமாக பாதுகாக்கும் குணம் கொண்டவை. அவை உணவு உண்ணும் போது ஒரு நபர் அல்லது நாய் அருகில் வந்தால் உணவை பாதுகாக்க தாக்குதலை தொடங்கும்.குழந்தைகளின் விளையாட்டுத்தனமான நடத்தைகள் நாய்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது ,குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் கடிக்க காரணம், குழந்தைகள் பெரும்பாலும் நாயின் உயர அளவின் கண்மட்டத்தில்இருப்பதுதான்.'இதேபோல, நாய்கள்தங்கள்குட்டிகள்அச்சுறுத்தலுக்குஆளாவதாகஉணர்ந்தால், குட்டிகளின் அருகில் செல்பவர்களை தாக்கி கடிக்கக்கூடும்.ஆய்வுகள், நாய்கள் செல்லப்பிராணி, நன்றியுள்ள விலங்கு என்று சொல்லப்பட்டாலும் அவை இயற்கையில் காட்டு விலங்குகள் .எந்த நேரத்திலும் அவற்றின் காட்டு விலங்கு குணம் வெளிப்படலாம் என கூறுகின்றன.
கோலி குண்டு விளையாட்டு உடலுக்குஉழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த பல ஆலமரத்தடி விளையாட்டுகள் காலப்போக்கில்காணாமல் போய்விட்டன. 2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் விளையாடும்,கோலி என்பது 1 செ.மீ விட்டம் கொண்ட பளிங்கு அல்லது சிறிய வண்ண கண்ணாடி பந்து வடிவங்கள் ஆகும்.நிலத்தில் ஒரு ஆழ மற்ற குழி தோண்டப்பட்டு, அந்த குழியை நோக்கி கை விரல்களின் உந்து விசை அடி மூலம் கோலியை அடித்து குழியில் விழ வைக்க வேண்டும்.இந்த செயல்முறையில் இடது கையின் ஆள்காட்டி விரலில் பளிங்கு கோலி பிடிக்கப்பட்டு, பின்னர் வலது கையின் ஆள்காட்டி விரலின் அழுத்தத்தால் வில் நாண் போல பின்னால் விரல் வளைக்கப்பட்டு பின்னர் கோலி விடுவிக்கப்படும். இடது கட்டைவிரல் தரையில் உறுதியாக தொட்ட நிலையில் இருக்கும்.இந்த விளையாட்டில், சிறு வயதில் உடல் முழுவதும் பல வடிவங்களில் செயல்படுவதால் கால் முதல் கை விரல்கள் வரை ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது. கண்கள் கோலி குண்டு நகரும் திசையை பல்வேறு கோணங்களில் பார்க்கும். குறி வைக்க வேண்டும் என்பதால் கண் தசைகள் மற்றும் மூளை நன்கு இயங்கும். குறிப்பாக, கை விரல்கள் தூண்டப்படும்போது உடலின் பல உறுப்புகள் நன்கு இயங்கும் என்று உடல் நல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றைக்கு, இது போன்ற விளையாட்டுகள் காணாமல்போய் சிறுவர்கள் செல்போன்களில் மூழ்குவது வேதனையானது.
பூமியிலிருந்து 2.7 கோடி ஒளியாண்டு கள் தொலைவில் உள்ளது. மெஸஸியஸ் 63 எனும் நட்சத்திர மண்டலம். இதற்கு சூரியகாந்தி நட்சத்திர மண்டலம் என்றும் பெயர் உண்டு. சமீபத்தில், கனடா நாட்டைச் சேர்ந்த ரோனால்ட் ப்ரீசெர் எனும் விண்ணியல் ஆர்வலர் இந்த நட்சத்திர மண்டலத்தை மிக அழகாகப் படம் பிடித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.