25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 08, 2025

செயற்கைக் கோள்கள் பல உடைந்து குப்பைகளாக வானத்தில் சுற்றிக் கொண்டு உள்ளன.

மனிதர்களால் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் பல உடைந்து குப்பைகளாக வானத்தில் சுற்றிக் கொண்டு உள்ளன. இவற்றின் மொத்த எடை 6,600 டன் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவ னம் கணக்கிட்டுள்ளது. இந்தக் குப்பைகளை நீக்குவதற்குப் பல்வேறு நாடுகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

Sep 06, 2025

ஆவணி பவுர்ணமி நாளில்செப்டம்பர் 7,2025 ,சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும்.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7,2025 அன்று நிகழ உள்ளது. இதன் கால அளவு 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும். செப்டம்பர்07ம் தேதியன்று இரவு09.56 மணிக்குதுவங்கி,நள்ளிரவு01.26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழுசந்திரகிரகணம் இரவு 10.59 மணிக்குதுவங்குவதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே சந்திரகிரகணம் என்பது பவுர்ணமி நாளில்தான்நிகழும். இந்தமுறைஆவணிபவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?சந்திர கிரகணம் ஏற்படும்போது ஒரு சில விஷயங்களில் நாம் சிறப்பாக உடன் செலுத்த வேண்டும்.ஏற்படும் போது எல்லாம் அதன் சூதகாலம் அதற்கு 9 மணி நேரத்திற்கு முன் தொடங்கும். சூத காலத்தில் நாம் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது.மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.கிரகண காலத்தில் தெய்வ சிலை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.கிரகண நேரத்தின் போது கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.குறிப்பாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை:சந்திர கிரகணத்தின் போது நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.சந்திர கிரகண நேரத்தில், கடவுள் வழிபாடு செய்வதை தவிர்த்தாலும், நாம் தொடர்ச்சியாக மந்திரங்களையும், கடவுள் பெயரை முட்டி இருக்கலாம். புராணங்களைப் படிக்கலாம்.மந்திரங்கள் தெரியவிட்டாலும் எளிமையான, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா போன்ற எளிமையான மந்திரங்களை நாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.இந்த சந்திர கிரகணம் முடிந்தவுடன், வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

Sep 06, 2025

ஹோண்டாவின் புதிய நிதி நிறுவனம்.

ஜப்பானை சேர்ந்த 'ஹோண்டா மோட்டார்' நிறுவனம், 28 கோடி ரூபாய் முதலீட்டில், புதுடில்லியில் 'ஹோண்டா பைனான்ஸ்' என்ற புதிய நிதிநிறுவனத்தை துவக்கிஉள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய வணிகங்களி ல் ஒன்றான இது, உலகளவில், இந்தியா, ஜப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 9க்கும் அதிகமானநாடுகளில் அமைந்துள்ளது.'ஹோண்டா' நிறுவனத்தின் பைக்குகள், கார்களுக்கான கடன் வசதி மற்றும் இதர நிதி சேவைகளுக்காக, இந்த நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது. தற்போது, இந்நிறுவனத்திற்கான உரிமத்தை பெற, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.உரிமம் பெற்ற உடன் முழு வீச்சில் செயல்பாடுகள் துவங்கும் என இந்நிறுவனம்தெரிவித்துள்ளது. கேய் யமாடா இந்நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

Sep 06, 2025

ஒரு தீப்பெட்டிக்குள் பொருத்த முடிந்த உலகின் 5 மிகச்சிறிய மொபைல் போன்கள்: 

 பெரிய திரை ஸ்மார்ட்போன்களின் உலகில், மினி மொபைல்கள் இன்னும் செழித்து வளர்கின்றன. சிறிய, இலகுரக மற்றும் வியக்கத்தக்க வகையில் செயல்படும் இந்த சிறிய தொலைபேசிகள் தீப்பெட்டி அளவிலான வடிவமைப்புகளில் அம்சங்களைக் கொண்டுள்ளன.பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாக்கெட்டுகள் மற்றும் உள்ளங்கைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு காலத்தில், சிறிய அளவிலான ஃபீச்சர் போன்கள் இன்னும் தங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. ஆப்பிள் முதல் சாம்சங் வரை தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பெரிய திரைகள் மற்றும் அதிவேக பார்வை அனுபவங்களை வழங்க போட்டியிடும் அதே வேளையில், மொபைல் போன்கள் முடிந்தவரை சிறியதாகவும், இலகுவாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.இன்றும் கூட, ஒரு குறிப்பிட்ட பயனர் குழு இந்த மினி மொபைல்களை அவற்றின் பெயர்வுத்திறன், எளிமை மற்றும் வழக்கத்திற்கு மாறான வசீகரத்திற்காக தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறது. அவற்றின் சிறிய பிரேம்கள் இருந்தபோதிலும், இந்த சாதனங்களில் பல அழைப்பு, செய்தி அனுப்புதல், கேமராக்கள் மற்றும் இணைய அணுகல் போன்ற ஆச்சரியமான அம்சங்களைக் கொண்டுள்ளன. உலகின் மிகச் சிறிய ஆனால் மிகவும் கவர்ச்சிகரமான ஐந்து மொபைல் போன்களைப் பாருங்கள். உலகின் மிகச்சிறிய மொபைல் என்று அழைக்கப்படும் Zanco Tiny T1, 46.7 மிமீ நீளம் மட்டுமே கொண்டது மற்றும் வெறும் 13 கிராம் எடை கொண்டது. இது0.49இன்ச்OLED திரை,2G நெட்வொர்க் ஆதரவு மற்றும்300 தொடர்புகள் வரை சேமிப்பதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது. இதன்200mAh பேட்டரி காத்திருப்பு பயன்முறையில் மூன்று நாட்கள் வரை நீடிக்கும். அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், இது ஒரு பாக்கெட்டிலோ அல்லது ஒரு தீப்பெட்டியிலோ கூட எளிதாகப் பொருந்தும்.டைனி T2 என்பது T1 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். 3G ஆதரவுடன், இது ஒரு கேமரா,128MB ரேம் மற்றும்64MB உள் சேமிப்புடன் வருகிறது. வெறும் 31 கிராம் எடையுள்ள இது ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. பயனர்கள் இந்த மினியேச்சர் கைபேசியில் இசையைக் கேட்கலாம், வீடியோக்களைப் பார்க்கலாம் மற்றும் அடிப்படை விளையாட்டுகளை விளையாடலாம்.உலகின் மிகச்சிறிய4ஜி ஸ்மார்ட்போன் என்று கூறப்படும் யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி2,3 அங்குல திரையில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு11 இல் இயங்கும் இது6 ஜிபி ரேம்,128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் அன்லாக், ஜிபிஎஸ், கேமரா, வைஃபை மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் அணுகலுடன் வருகிறது.110 கிராம் மட்டுமே எடையுள்ள இது கையில் சிறியதாகத் தெரிகிறது, ஆனால் முழு அளவிலான ஸ்மார்ட்போன் போல வேலை செய்கிறது.டிஜிட்டல் கவனச்சிதறல்களிலிருந்து விடுபட விரும்பும் மினிமலிஸ்டுகளுக்காக லைட் போன் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இ,இங்க் டிஸ்ப்ளே மற்றும்4G இணைப்புடன் அழைப்புகள் மற்றும் செய்திகள் போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே ஆதரிக்கிறது. சமூக ஊடகங்கள், விளையாட்டுகள் அல்லது பயன்பாடுகள் இல்லாத இந்த போன் பிரீமியம் வடிவமைப்பு, சிறிய அளவு மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது.: உலகின் மிக மெல்லிய மொபைல் என்று அழைக்கப்படும் கியோசெரா KY-01L வெறும்5.3 மிமீ தடிமன் மற்றும்47 கிராம் எடை கொண்டது. இதன்2.8 அங்குல மோனோக்ரோம் திரை அழைப்பு, குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் எளிமையான உலாவலை அனுமதிக்கிறது. ஜப்பானில் பிரபலமான இந்த தொலைபேசியின் நேர்த்தியான வடிவமைப்பு கிரெடிட் கார்டை ஒத்திருக்கிறது, இது செயல்பாட்டுடன் மட்டுமல்லாமல் ஸ்டைலாகவும் இருக்கிறது.

Sep 06, 2025

ஒரு இந்திய விவசாயி அரிசி உமிகளிலிருந்து மக்குதட்டுகளை உருவாக்கத் தொடங்கினார்.

ஒரு இந்திய விவசாயி அரிசி வைக்கோலில் இருந்து மக்கும் தட்டுகளை உருவாக்கத் தொடங்கினார்.இன்று இந்த தட்டுகள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சுற்றுச்சூழலுக்கு ஒரு சிறந்த தேர்வாக மாறியுள்ளன 

Sep 06, 2025

பிரதமர் மோடிக்கு ஜி ஜின்பிங் செய்தி.டிராகனும் யானையும் ஒன்றாகுமா?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தியா சீனா நட்புறவு கொள்வது சரியான தேர்வு என்று கூறினார். மேலும் அவர் நினைவுபடுத்தினார்.இரண்டுமே பண்டைய நாகரிகங்கள் மற்றும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள்.இன்றைய குழப்பமான உலகில், உலகளாவிய தெற்கின் பொறுப்பான தலைவர்களாக இந்தியாவும் ,சீனாவும் ஒன்றுபட வேண்டும் என்று ஜின்பிங் வலியுறுத்தினார்.டிராகனும் யானையும் ஒன்றாகுமா?

Sep 06, 2025

AI அசுர வளர்ச்சியால் ,25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel

25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த செய்தி, அசுர வளர்ச்சி கண்டுவரும் AI தொழில்நுட்பம், இன்டெல் ஊழியர்களின் வாழ்க்கையிலும் நிறுவனம் விளையாட தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.செலவுகளை குறைக்கும் நிறுவனத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக ,இன்டெல் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதமே 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும்25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பது, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சிப் சந்தையில் முன்னணி இடத்திலிருந்த இன்டெல், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருவதாக கூறப்படுகிறது. 1990களில் மைக்ரோபிராசஸர் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், ஸ்மார்ட்போன்களின் எழுச்சியை இந்நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதுவே இன்டெல் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.தற்போது உலகின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) சிப் பிரிவில், என்விடியா (Nvidia) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இன்டெல் பின்தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.AI தொழில்நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், இன்டெல் நிறுவனத்தின் சிப் தயாரிப்புகள் இந்தச் சந்தையில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Sep 05, 2025

பழங்குடி மக்கள் வாழ்வதற்காக நடிகை, சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்

ஆப்பிரிக்காவின் புலாசா என்ற கிராமத்திற்கு நடிகை, சமந்தா  சென்றபோது, அந்தக் கிராமத்தில் இருந்த பழங்குடி மக்களுக்கு வாழ வீடு இல்லாமல் தவித்தது. பழங்குடி மக்கள் வாழ்வதற்காக சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்.பழங்குடியினருக்காக சமந்தா செய்த நல்ல பணிகளுக்கான  சேவையை பாராட்ட வேண்டும்.

Sep 05, 2025

SENIOR CITIZEN மன அழுத்தத்தை குறைக்க 10 வழிகள்.

ஒரே இடத்தில் வெகு நேரம் அமராமல் ,உடலை இயக்கி கொண்டே இருங்கள்.  சத்தான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மனதை ஒருமைப்படுத்துங்கள். அதிகமாக நகையாடுங்கள். புதுமையான செயல்களில் ஈடுபடுங்கள். இனிமையான பாடல்களை கேளுங்கள் அல்லது புத்தகங்கள் படிங்கள். வெளியே சென்று நடைபயிற்சி செய்யுங்கள். . தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். தோணும்பொழுது ஆனந்தமாக நடனமாடுங்கள். இயற்கையின் அமைதியை அனுபவியுங்கள்.

Sep 04, 2025

நடிகர் மாதவன் கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள  "லே" பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது  இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், 2008-ல் "3 இடியட்ஸ் "ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நலமுடன் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம்.மாதவன் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வானிலை சூழ்நிலைகள் மேம்பட்டவுடன் அவர் மும்பை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1 2 ... 87 88 89 90 91 92 93 ... 129 130

AD's



More News