25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 22, 2025

2017 OF201 என்று பெயரிடப்பட்டுள்ள இது 700 கிலோ மீட்டர் விட்டம் உடையது. நம் சூரியனை ஒருமுறை சுற்றி வர இது 25,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

பூமியும் ,வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை 'இரட்டைக்கோள்கள்' என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும்  ,நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும், மேரிலாண்டு பல்கலை ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.செவ்வாய் கோள் ஒரு காலத்தில் பூமியைப் போல் தண்ணீர், பனி நிறைந்த ஒரு கோளாக இருந்துள்ளது என, அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான தடயங்கள் செவ்வாயின் புவியியல் அமைப்பில் இருப்பதாகக் கூறுகின்றனர்.WD 1856 +534b என்பது பூமியிலிருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கோள். வியாழன் கோள் அளவில் இருக்கும் இது,ஓர் இறந்து போன வெள்ளை குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நம் சூரியக் குடும் பத்தில் நெப்டியூன் கோளைத் தாண்டி நீண்ட தொலைவில் இருக்கும் ஒரு கோளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 2017 OF201 என்று பெயரிடப்பட்டுள்ள இது 700 கிலோ மீட்டர் விட்டம் உடையது. நம் சூரியனை ஒருமுறை சுற்றி வர இது 25,000 ஆண்டுகள் எடுத்துக்  கொள்ளும்.

Aug 20, 2025

சென்னை ஐஐடி 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி உருவாக்கி சாதனை படைத்துள்ளது .

தற்போது சந்தையில் உள்ள சக்கர நாற்காலிகள்17 கிலோ அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வெறும்9 கிலோ எடையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. இது சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.'ஒய்.டி. ஒன்'(YDOne) என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சக்கர நாற்காலியின் எடை வெறும் ஒன்பது கிலோதான். எனவே, இதை எளிதாக தூக்கி கொண்டும், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களிலும் கொண்டு செல்வது மிகவும் எளிது. இதில் இணைக்கப்பட்டுள்ள சிறிய சட்டகம், நாற்காலியை எளிதில் தூக்கிக் கொள்ள வசதியாக இருக்கும். இந்த சக்கர நாற்காலியின் விலை₹75,000 முதல்₹80,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் வயதானவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுவதால், மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Aug 19, 2025

டெக்னோபார்க்கில் HCLTech டெலிவரி மையத்தைத் திருவனந்தபுரத்தில் தனது இரண்டாவது பிரிவைத் திறந்தது .

.கொச்சியில் இன்ஃபோபார்க் அலகு திறக்கப்பட்ட ஏழு மாதங்களில் கேரளாவில் அமைக்கப்படும் இரண்டாவது அலகு இதுவாகும்.தொழில்நுட்ப நிறுவனமானHCLTech, கேரளாவில் கொச்சியில் தனது விநியோக மையத்தை அமைத்த ஏழு மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் திருவனந்தபுரத்தில் தனது இரண்டாவது பிரிவைத் திறந்தது. டெக்னோபார்க் வளாகத்தில் அமைந்துள்ள புதிதாக திறக்கப்பட்ட விநியோக மையம், செயற்கை நுண்ணறிவு(AI),GenAI, கிளவுட் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திட்டங்களில் கவனம் செலுத்தும்.அக்டோபர்2024 இல் கொச்சியில் உள்ள இன்போபார்க் வளாகத்தில் திறக்கப்பட்ட முதல் விநியோக மையம், மருத்துவம், ஆட்டோமொபைல் மற்றும் குறைக்கடத்திகள் போன்ற துறைகளில் தீர்வுகளை வழங்க மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு(VLSI) தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ், ஒரு சமூக ஊடகப் பதிவில், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் முக்கியமான துறைகளில் ஈடுபட்டுள்ள HCLTech உடனான மாநிலத்தின் ஒத்துழைப்பு இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “கடந்த ஆண்டு கொச்சியில்HCLTech இன் முதல் அலகைத் திறந்து வைத்தபோது, நிறுவனம் கேரளாவின் ஆற்றலை மேலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் கூறியிருந்தேன். இன்போபார்க்கில் இந்த அலகு தொடங்கப்பட்ட மறுநாளே, நிறுவனத்தின் கார்ப்பரேட் துணைத் தலைவரும் பொறியியல் துறைத் தலைவருமான(R&D) ஹரி சதாரஹள்ளியிடமிருந்து எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. நிறுவனம் விரைவில் கேரளாவில் மற்றொரு அலகைத் தொடங்க விரும்புவதாக அவர் கூறினார். இப்போது, ஏழு மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் மாநிலத்தில் அதன் இரண்டாவது அலகைத் திறந்துள்ளது. HCLTech ஒரு புதிய எடுத்துக்காட்டாக மாறி வருகிறது, இது கேரளாவில் தங்கள் வணிகத்தை அமைப்பவர்கள் விரைவில் புதிய அலகுகளை விரிவுபடுத்துவார்கள் அல்லது திறப்பார்கள் என்ற எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது,”என்று திரு. ராஜீவ் கூறினார்.கேரளாவின் சிறந்த மனித வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்ததாக திரு. சதாரஹள்ளி கூறியது, கேரளாவிற்கு அதிகமான நிறுவனங்களை கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் சிறப்புச் செயலாளரும் தகவல் கேரள மிஷனின் (IKM) நிர்வாக இயக்குநருமான சீரம் சாம்பசிவ ராவ், அலையன்ஸ் தொழில்நுட்பத்தின்EMT உறுப்பினரும் உள்கட்டமைப்பு சேவைகள் மற்றும் தகவல் பாதுகாப்புத் தலைவருமான ஃபேப்ரிசியோ சால்வடோர், அலையன்ஸ் தொழில்நுட்ப இந்தியாவின் கிளைத் தலைவர் ஜெயந்த் துல்சியானி மற்றும்HCLTech இன் ஐரோப்பா மற்றும்UKI நிதிச் சேவைகளின் நிர்வாக துணைத் தலைவரும், தலைவருமான சுதிப் லஹிரி ஆகியோர் திருவனந்தபுரம் மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Aug 18, 2025

தேனீக்களின் விஷம் புற்றுநோய் செல்களை அழிக்க சிறந்த ஒரு மருந்து .

ஆஸ்திரேலிய புற்றுநோய் மைய ஆய்வகத்தில் நடைபெற்ற ஆய்வில் புற்றுநோய் செல்களை அழிக்க தேனீக்களின் விஷம் சிறந்த ஒரு மருந்து என்று தெரியவந்து உள்ளது. தேனீ விஷத்தில் காணப்படும் மெலிட்டின் என்ற சேர்மம் மிகவும் சக்தி வாய்ந்தது. இது வலி உணர்வை உருவாக்கும் மூலக்கூறு ஆகும். இந்தமூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிக்க உதவுமா? என்று ஆய்வுகளில் இறங்கினர்.அதாவது, மெலிட்டின் மனித உடலுக்குள் செலுத்தப்பட்ட20 நிமிடங்களுக்குள் புற்றுநோய் செல்களுக்கு இடையில் உருவாகும் இணைப்பை அழித்து விடுவதையும், புற்றுநோய் செல்கள் வளர்ச்சி உடனே தடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிந்தனர். இது மிகப்பெரிய அதிசயம் என்று ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர். உலக அளவில் பெர்த் வகை தேனீக்கள் மிகவும் ஆரோக்கியமான தேனீக்கள் இனம் என்று கருதப்படுகிறது. தற்போது, இந்த வகை தேனீக்களின் விஷம்தான், புற்றுநோய்க்கு எதிரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.இந்த தேனீக்களை கார்பன்டை ஆக்சைடு ஊற்றி தூங்க வைத்து, உறைநிலையில், தேனீயின் அடிவயிற்றில் இருந்து விஷ முள் வெளியே எடுக்கப்பட்டு, கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் புற்று நோய் கட்டி வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோய் செல்கள் இறப்பை தூண்டுவதிலும் மெலிட்டின் திறன் வாய்ந்தது என்று கருதப்படுகிறது. மனிதனுக்கு வரும் மோசமான நோய்களுக்கும் இயற்கை எளிதான தீர்வுகளை வைத்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டோம் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறினர்.

Aug 18, 2025

கேரளா, கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ளஉலகின் மிகப் பெரிய பறவை சிற்பம்.

ராமாயண கதையில், சீதையைக் காக்க, ராவணனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த பறவை ஜடாயு, மிகப்பெரிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.உலகில் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளா, கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ளது.இது, 200 அடி நீளம், 150 அடி அகலம்,70 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சிதருகிறது. பிரபல சிற்பி ராஜீவ் அஞ்சல்,10 ஆண்டுகள் உழைப்பில் உருவாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதை தரும் வகையில் அமைந்துள்ளது.ஜடாயு எர்த் சென்டர் என்ற அமைப்பு இதை,65 ஏக்கர் பரப்பில் உருவாக்கியுள்ளது. நான்கு மலைகளில் பரந்து விரிந்துள்ளது. முதல் மலையில் ஜடாயு சிற்பமும், அருங்காட்சியகமும், காட்சியரங்கம் ஒன்றும் உள்ளன. இரண்டாம் மலை,சாகச விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு பெயிண்ட் பால், கயிறு பாலம், பாறை ஏறுதல், டிரெக்கிங் போன்ற சாகச விளையாட்டுகளை அனுபவிக்கலாம்.மூன்றாவது மலை, ஆயுர்வேத சிகிச்சை மையமாக உள்ளது. நான்காம் மலைஉணவு தயாரிப்பு மற்றும் முகாம் நடத்தும் விதமாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு, சூரிய ஆற்றல் மின் தயாரிப்பு போன்ற நவீன அமைப்புகள் இங்கு செயல்படுகின்றன.பிரமாண்டமான ஜடாயு சிற்பத்திற்கு செல்ல, கேபிள் கார் வசதி உள்ளது. இதில் பயணிப்பது, இயற்கை அழகை ரசிக்க அற்புத வாய்ப்பாகவும் அமையும். இங்கு,826 படிகள் வழியாக நடந்தும் செல்லலாம். திருவனந்தபுரம் நகரில் இருந்து,46 கி.மீ., தொலைவில் உள்ளது. புராணம், இயற்கை, சாகசம், ஆன்மிக அனுபவங்களின் கலவையாக திகழ்கிறது.

Aug 16, 2025

பிளாஸ்டிக்கை உண்ணும் அதிசய புழு

 எளிதில் மக்காத  நெகிழிகளால் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் என்றும் தொல்லை .. இந்தத் தொல்லையை எப்படி சீர்செய்வது என்று விஞ் ஞானிகள் துாக்கத்தைத் தொலைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.அப்படி ஆராய்ந்த போது தான் கிரேட்டர் வாக்ஸ் மோத் எனப் படும் ஓர் அந்துப்பூச் சியின் புழுவுக்கு ஓர் அதிசய ஆற்றல் இருப் பதைக் கண்டுபிடித்தனர்.அதாவது, இவற்றால் குறைந்த அடர்த்தி உடைய பாலிதீன்களை உண்ண முடியும். ஒரு பாலிதீன் பையை 2,000 புழுக்கள் 24 மணி நேரத்தில் சாப்பிட்டுவிடும்.கனடாவில் உள்ள பிராண்டன் பல்கலை விஞ்ஞானிகள் பிளாஸ் டிக்கை உண்ணும்போது புழுக்களின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்காணித்தனர். நாம் அதிகமான உணவு உண் ணும்போது அதிலிருந்து பெறப்படும் ஆற்றல் எப்படி கொழுப்பாக மாற்றப்பட்டுச் சேமிக்க படுகிறதோ அதுபோல் புழுக்களின் உடலில் பிளாஸ்டிக் உருமாற்றம் அடைந்து சேமிக்கப்படு கிறது. இதனால் இவை விரைவில் இறந்துவிடு கின்றன.எனவே அவற்றின் வாழ்நாளை நீட்டிப்பது குறித்தும் ஆய்வுகள் நடக்கின்றன. அப்படி நீட்டிக்க முடிந்தால், இந்தப் புழுக்களை வைத்து பெரிய அளவில் பிளாஸ்டிக்கை அழிக்க முடியும். இந்தப் புழுக்களை மீன்களுக்கு உணவாகவும் தரலாம். இதனால் பண்ணையில் வளர்க்கப்படும் மீன் களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Aug 16, 2025

ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குருப் கேப்டன் டி.கே.பருல்கார்  காலமானார் .

ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குருப் கேப்டன் டி.கே.பருல்கார் காலமானார். 1965 இந்திய பாகிஸ்தான் போரின் போது, இவர் ஒட்டிய விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. விமானத்தை விட்டு விட்டு அங்கிருந்து புறப்படுமாறு உயர் அதிகாரிகள் கூறினாலும், அந்த விமானத்துடன் நாட்டிற்கு திரும்பி வந்த தீரன் இவர். அதேபோல் 1971 பாகிஸ்தான் போரின் போது, போர் கைதியாக இவர் பிடிபட்டார். ஆனால் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்தடைந்தார். இந்த உன்னத வீரருக்கு வீர வணக்கம். 

Aug 16, 2025

தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் என தெரியுமா?

சுதந்திர தினத்தில் எங்கும் நிறைந்திருக்கும், தேசியக் கொடியை  1921 இல் பிங்காலி வெங்கையா இன்று நாம் பயன்படுத்தும் மூவர்ணக் கொடியை வடிவமைத்தார். இந்தியாவில் முதன் முதலாக, டிசம்பர் 30, 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் மூவர்ணக் கொடி அந்தமானின் போர்ட் பிளேயரில் ஏற்றப்பட்டது. இந்த இடத்தை ஆங்கிலேயரின் பிடியில் இருந்து விடுவிப்பதாக கூறி, நேதாஜி கொடி ஏற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aug 15, 2025

வில்வம் மூலிகைகளின் சிகரம் .

பழங்களில் புனிதமானது மற்றும் மூலிகைகளின் சிகரம் என்ற பெயர் பெற்றது வில்வம். பொதுவாக, வில்வ மரத்தை கோவில் நந்தவனம், பழத்தோட்டங்களில் காணலாம். சிலர் இதன் மருத்துவ குணங்களை அறிந்து வீடுகளில் வளர்க்கின்றனர். வில்வம் விதைகளை ஜூன், ஜூலை மாதங்களில் விதைக்கலாம். தொடர்ந்து வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் போன்ற இயற்கை உரங்களை இ இட்டு போதிய அளவு நீர் பாய்ச்சி வந்தால், 5 ஆண்டுகளில் வில்வ மரம் காய்க்க தொடங்கிவிடும். வில்வ மரம் ஆண்டிற்கு 400 பழங்கள் தரும். பெரிய பழமாக இருந்தால் சுமார் 250 பழங்கள் வரை கிடைக் கும். மாம்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிக சத்துக்கள் வில்வம் பழத்தில் நிரம்பியுள்ளன. வில்வம் காய் உருண்டையாக, ஓடு கடினமானதாக, பசுமை கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இனிப்பு கலந்த துவர்ப்பு சுவை கொண்டது. வில்வம் பழம் குடல் சார்ந்த பிரச்சினைகளை குணமாக்கும். நன்றாக நன்றாக பழுத்த பழம் சாப்பிட பழம் சாப்பிட சுவையாகவும், உடல் வெப் பத்தை தணித்து, மலச்சிக்கலை நீக்கி உடலுக்கு சுறுசுறுப்பை தரும். உடலுக்கு பலம் தருவதுடன், மூலம் நோயை தணிக்கிறது. வில்வம் இலையை அரைத்து பொடியாக்கி தினமும் காலை சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவாகும். சளி, இருமல், பல் சம்பந்தப்பட்ட பிரச் சினைகளுக்கு வில்வம் பொடியை பயன்படுத்தி வந்தால் பாதிப்புகள் நீங்கும். வில்வம் பழத்தில் வைட்டமின் பி1, பி2, தயாமின், புரதம், நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறன.வில்வம்பழத்தை உண்டால் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெறும்.

Aug 15, 2025

'வடக்கு பச்சை நிற அன கோண்டா'

அமேசான் காடுகளில் புதிய வகை பாம்பு 'ஒன்றை விஞ்ஞானி கள் கண்டறிந்துள்ளனர். 'வடக்கு பச்சை நிற அன கோண்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாம்பு, 20 அடிக்கு மேல் நீளமுள்ளது.

1 2 ... 90 91 92 93 94 95 96 ... 129 130

AD's



More News