25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 25, 2025

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு அரசு சார்பில் 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' பாராட்டு விழா.

.இளையராஜா, “முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நுால் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என சொன்னது எனக்கு ஊக்கமளிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்” என்றார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு அரசு சார்பில் 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' பாராட்டு விழா சென்னையில் நடந்தது.

Sep 25, 2025

பழங்கள் பழுப்பு நிறமாக்குவதை தடுக்க….

பழங்களை துண்டுகளாக நறுக்கி சாப்பிடும்போது சிலர், சில துண்டுகளை அப்படியே வைத்து விட்டு தங்கள் வேலையை தொடர்வார்கள். சில மணி நேரம் கழித்து பார்க்கும்போது ,அவை பழுப்பு நிறமாக மாறியதற்கு. என்ன  காரணம் ? ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்களை வெட்டிய பின்பு அவற்றில் இருக்கும் ஒரு நொதி காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலக்கிறது. அந்த வினையின் காரணமாக பழம் பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த நிகழ்வு 'நொதி பழுப்பு நிறமாக்கல்' என்று அழைக்கப்படுகிறது. இச்செயலின் காரணமாக பழுப்பு நிறமாக மாறிய பழம் அதன் இயல்பு சுவையை இழந்து விடும். இந்த மாற்றம் ஒரு பழம் வெட்டப்படும்போதோ, மரத்தில் இருந்து பழுத்து கீழே விழும்போது சேதமடைந்தாலோ நிகழும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலத்தன்மை கொண்ட பழச்சாறை பழத்துண்டு கள் மீது பூசுவதன் மூலம் இந்த வினையை தடுக்கலாம்.ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பழத் துண்டுகளை சுமார் 2 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். பின்பு பழங்களை சாதாரண நீரில் கழுவி சாப்பிடலாம்.ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது தேன் சேர்த்து கலக்கவும். இதில்அனைத்துபழத்துண்டுகளையும்சுமார் 30 முதல் 40 விநாடிகள் ஊற வைக்கவும். அதன்பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இது பழங்களை சில மணி நேரங்களுக்குப் பிறகும் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.பழங்கள் பழுப்பு நிறமாக்குவதை தாமதமாக்க ,வெட்டப்பட்ட பழங்கள் கெட்டுப்போவதை தடுக்க, பிரிட் ஜில் வைக்கலாம்..

Sep 24, 2025

பெங்களூருவைச் சேர்ந்த நாராயணா இதய அறிவியல் நிறுவனத்தின் தேசிய சாதனை.

12 மணி நேரத்திற்குள் மூன்று இதய மாற்று அறுவை சிகிச்சைகளை முடித்துபெங்களூருவைச் சேர்ந்த நாராயணா இதய அறிவியல் நிறுவனம் தேசிய சாதனை படைத்துள்ளது.பெங்களூரு போக்குவரத்து காவல்துறை(BTP) உருவாக்கிய பசுமை வழித்தடங்களின் ஆதரவுடன், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் இருந்து நாராயண மருத்துவமனையில் உறுப்புகளை பெறுபவர்களுக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக போக்குவரத்து இல்லாத பாதைகள் உருவாக்கப்பட்டன. 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள். நுரையீரல் அழுத்தம் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திருந்தனர், மருத்துவமனை ஒரு அறிக்கையில் இது விரைவில் அவர்களை மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர்களாக மாற்றியிருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

Sep 24, 2025

செப்டம்பர் 23 அன்று முதல் ஆக்டிவ் ஈக்விட்டி ஃபண்டைத் ஜியோபிளாக்ராக் தொடங்கவுள்ளது, 

SAE ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், தொழில்துறை சராசரியை விடக் குறைவாக3-4 சதவீதத்திற்கு மேல் கட்டுப்படுத்தப்பட்ட செயலில் உள்ள ஆபத்தை பராமரிக்கும், மேலும் முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை ஆபத்து பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தில் கவனம் செலுத்தும்.ஜியோபிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் வியாழக்கிழமை தனது முதல் ஆக்டிவ் ஈக்விட்டி தயாரிப்பான ஜியோபிளாக்ராக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டை சிஸ்டமேடிக் ஆக்டிவ் ஈக்விட்டி தளத்தில் செப்டம்பர்23 அன்று தொடங்குவதாகக் கூறியது, ஆனால் ஆரம்ப சலுகை காலத்தில் புதிய நிதிக்கு எந்த வசூல் இலக்கையும் நிர்ணயிக்கவில்லை."இது எங்கள் முதல் ஆக்டிவ் ஈக்விட்டி ஃபண்ட். மூன்று அல்லது நான்கு ஆக்டிவ் ஈக்விட்டி ஃபண்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, இது இந்த நிதியாண்டில் வெளிச்சத்தைக் காணலாம். ETFகள் உட்பட பிற தயாரிப்புகளும் காலப்போக்கில் பின்பற்றப்படும்," என்று ஜியோபிளாக்ராக் தலைமை முதலீட்டு அதிகாரி ரிஷி கோஹ்லி கூறினார்.BlackRock இன் உலகளவில் நிரூபிக்கப்பட்ட SAE தளத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த நிதி, 400 சிக்னல்களைக் கண்காணிக்கும் விதிகள் அடிப்படையிலான மற்றும் முக்கியமாக இயந்திரத்தால் இயக்கப்படும் செயல்முறையைப் பின்பற்றுகிறது. முதலீட்டு செயல்முறையில் சுமார்95 சதவீதம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், முக்கிய நபர் ஆபத்தை நீக்குதல், அறிவாற்றல் சார்புகளைக் குறைத்தல் மற்றும் ஒழுக்கமான நிதி நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும்.SAE ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், தொழில்துறை சராசரியை விடக் குறைவாக3-4 சதவீதத்திற்கு மேல் கட்டுப்படுத்தப்பட்ட செயலில் உள்ள ஆபத்தை பராமரிக்கும், மேலும் முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை ஆபத்து பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தில் கவனம் செலுத்தும்.சீனா மற்றும் ஜப்பான் போன்ற பிற பிளாக்ராக் நாட்டு நிதிகளில் அடையப்பட்ட முடிவுகளைப் போலவே,10 ஆண்டு உருவகப்படுத்துதல், இந்த மாதிரி பெஞ்ச்மார்க் குறியீட்டை விட3-4 சதவீத செயல்திறனை வழங்க முடியும் என்பதைக் குறிக்கிறது என்று கோஹ்லி கூறினார்."நிச்சயமற்ற சந்தை சூழலில், பங்குச் சந்தைகள் கடினமாக இருந்த நிலையில், மற்ற செயலில் உள்ள நிதிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில் ஆபத்தை நிர்வகிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு கவர்ச்சிகரமான ஆல்பாவை நோக்கமாகக் கொண்ட ஒரு தயாரிப்பைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கோஹ்லி கூறினார்.ஜியோ பைனான்சியல்ஸ் மற்றும் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளர்களான பிளாக்ராக் இடையேயான கூட்டாண்மையான ஜியோபிளாக்ராக், மே மாதத்தில் அதன் உரிமத்தைப் பெற்றது, தற்போது எட்டு ரொக்கம் மற்றும் குறியீட்டு நிதிகளில் சுமார் ரூ.18,000 கோடி சொத்துக்களை நிர்வகிக்கிறது. நிதி நிறுவனம் குறுகிய காலத்தில் டிஜிட்டல் விநியோகத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

Sep 23, 2025

மராடஸ் ஸ்ப்ளெண்டென்ஸ் எனும் குதிக்கும் சிலந்தி.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தக் கண்டத்தில் வாழ்கின்ற மராடஸ் ஸ்ப்ளெண்டென்ஸ் எனும் குதிக்கும் சிலந்திகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர். அவை குறிப்பிட்ட விதத்தில்தங்கள் உடலைப் பயன்படுத்தி மிக நீண்ட தூரம் தாவுகின்றன. இதை ஆராய்ந்து ரோபோடிக் தொழில் நுட்பத்தில் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Sep 23, 2025

போன்சாய் மரம் ( குட்டை மரம் )

இயற்கையில் பெரிதாக வளரும் மரங்களை திறமையாக கத்தரித்து பொம்மை போல் காட்சிப்படுத்துவதே போன்சாய் எனப்படுகிறது. கிழக்காசிய நாடான ஜப்பானிய மொழியில் 'போன்' என்ற சொல் பானையை குறிக்கும். நடவு செய்வதை, 'சாய்' என்ற சொல் குறிப்பிடுகிறது.ஆசிய நாடான சீனாவில், பென்ஜிங்' என்ற பெயரில் துவங்கியது இந்த குட்டை மரம் வளர்க்கும் கலை.சீனாவில், டாங் வம்ச ஆட்சி காலத்தில் பென்ஜிங் கலை உருவானது. சிறிய பானைகளில்மரங்களை வளர்த்து காட்சிப் படுத்துவதே இதன் நோக்கம். இயற்கையின் அழகு அதில்பிரதிபலித்தது. அமைதி மற்றும் எளிமையைப் போற்றும் வகையில் அமைந்திருந்தது.ஜப்பானில், கி.பி., 12ம் நூற்றாண்டில் பரவியது இந்த கலை.அப்போது சமூகத்தில் கவுரவம் பெற்றிருந்த சாமுராய் மற்றும் பிரபுக்கள், இந்த கலையை உயர்வாக கருதி ஆர்வமுடன் ஈடுபட்டனர். இதை முறைப்படுத்தியதால் புதிய பாணிகள் உருவாயின. பல வடிவங்கள் எடுத்தன.இந்த கலை, 17ம் நூற்றாண்டில் மக்களிடையே பிரபலமடைந்தது. இதற்காக சிறப்பு கருவிகள் உருவாக்கப்பட்டன. நுட்பங்களுடன் மிளரத் துவங்கியது. பின் 19ம் நுாற்றாண்டில் உலகின் பிற நாடுகளுக்கு அறிமுகமானது. பல கலாசாரங்களிலும், தனித்துவமான பாணிகள் உருவாக்கப்பட்டன.இப்போது, போன்சாய் மரம் வளர்ப்பு உலகம் முழுதும் பரவியுள்ளது. மக்களின் முக்கியபொழுது போக்குகளில் ஒன்றாகி உள்ளது. ஒவ்வொரு போன்சாய் மரமும், அதை வளர்ப்பவரின் படைப்பாற்றலையும், அழகியலையும் வெளிப்படுத்துகிறது.

Sep 22, 2025

ஓட்டகச்சிவிங்கியில் . நான்கு வகைகள் உள்ளன .

ஆப்ரிக்காவில் மட்டுமே வாழும் விலங்கு ஓட்டகச் சிவிங்கி, இதன் எண்ணிக்கை 1.17 ம் அதிகபட்சம கென்யாவில் 4,240 ஓட்டகச்சிவிங்கிகள் உள்ளன. இந் நிலையில் இவை ஒன்றல்ல. நான்கு வகைகள் உள்ளன என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நார்தன், ரெடிகுலேட், மசாய், சதர்ன் என நான்கு வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, அமைவிடம், நிறம் என பல அம்சங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வித்தியாசம் உள்ளது. பொதுவாக ஒட்டகச்சிவிங்கியின் உயரம் 14-19 அடி. இதன் குட்டியின் உயரம் 6 அடி இருக்கும்.

Sep 20, 2025

நோய் வராமல் இருக்க  தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

1. நீரிழிவு நோய் - இரவில் தாமதமாக சாப்பிடுவது 2. உயர் இரத்த அழுத்தம் - அதிக உப்பு பயன்படுத்துதல் 3. ஒற்றைத் தலைவலி - உணவைத் தவிர்ப்பது. 4. இரத்த சோகை - உணவுடன் தேநீர் அருந்துதல். 5. அமில ரிஃப்ளக்ஸ் - உணவுக்குப் பிறகு படுத்துக் கொள்ளுதல். 6. இரைப்பை அழற்சி - மிக வேகமாக சாப்பிடுதல். 7. இதய நோய் - உடல் செயல்பாடு இல்லாமை. 8. ஆஸ்டியோபோரோசிஸ் - சூரிய ஒளியைத் தவிர்ப்பது. 9. பதட்டம் - தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல். 10. இரவு நேர டிவி - திரையைப் பயன்படுத்தி தூக்கமின்மை. 11. டிமென்ஷியா - மணிக்கணக்கில் டிவி பார்ப்பது. 12. சிறுநீரக கற்கள் - குறைவாக தண்ணீர் குடிப்பது. 13. வைட்டமின் டி குறைபாடு - வீட்டிற்குள் இருப்பது. 14. கல்லீரல் பிரச்சினை - பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல். 15. ஆஸ்துமா - தூசி நிறைந்த சூழலில் இருப்பது.

Sep 20, 2025

2025 செப். 21ல் வருகிறது சூரிய கிரகணம்.

 சூரிய கிரகணம் இந்த ஆண்டின் கடைசி 2025 செப். 21ல் நிகழ்கிறது. இந்தியாவில் இதை பார்க்க இயலாது. தெற்கு அரைக்கோள பகுதிகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக் உள்ளிட்ட இடங்களில் இதுதெரியும். சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, நடுவில் வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் நிலவின் நிழல் பூமியில் விழும். இதுதான் சூரிய கிரகணம். அமாவாசை தினத்தில் தான் சூரிய கிரகணம் நடைபெறும். அடுத்த சூரிய கிரகணம் 2026 பிப்.17ல் நிகழ உள்ளது.

Sep 19, 2025

இந்தியா உலகின் இரண்டாம் பெரிய சக்தி நாடாக மாறுவது உறுதி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்  என்று கூறினார்.

அமெரிக்காவை விட இன்று அனைத்து நாடுகளும் இந்தியாவை நோக்கி வருகின்றன. சிங்கப்பூர்,  மொரீசியஸ், நெதர்லாந்து யூஏஇ. ஜப்பான் , சைப்ரஸ், யுகே , ஜெர்மனி உள்ளிட்டவை கணினி  மென்  பொருள்  ஹார்ட்வேர், ஆட்டோமொபைல், தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்ய தயாராக உள்ளன கடந்த 25 ஆண்டுகளில் சிங்கப்பூர் மட்டும்$174பில் லியன் முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அனைத்து நாடுகளும் முதலீடு செய்தால் இந்தியா உலகின் இரண்டாம் பெரிய சக்தி நாடாக மாறுவது உறுதி என்று. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்  கூறினார்.

1 2 ... 84 85 86 87 88 89 90 ... 129 130

AD's



More News