25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 02, 2026

ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல்

 இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு முடித்து, 80%-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள, ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் திறமையான மாணவர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களை இன்ஃபோசிஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் 'பிரேரனா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு எழுத்துத் தேர்வை நடத்துகிறது. அந்தத்  தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தங்கள் மேல்படிப்புக்கான நிதி உதவிக்குத் தகுதி பெறுவார்கள்.விண்ணப்பப் படிவத்தைப் பெற, மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:தொடர்பு எண்கள்: 1. திருமதி. சரஸ்வதி - 99009063382. திரு. சிவக்குமார் - 99866 303013. திருமதி. பிந்து - 99645 34667, இது யாருக்காவது தேவைப்படலாம். www.infosys.com/infosys-foundationஇதனை மற்ற குழுக்களிலும் பகிரவும். இது ஒருவருக்காவது உதவினால் கூட போதும்.இது ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல் 

May 02, 2026

தேள் பண்ணை. ஒரு லிட்டர் தேள் விஷம் 85 கோடி ரூபாய்.

தேள்களைப் பண்ணை வைத்து வளர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 1. ஒவ்வொரு தேளும் தினமும் சுமார் 2 மில்லிகிராம் விஷத்தை மட்டுமே சுரக்கும்.*2.சாமணம்(Tweezers) மற்றும் இடுக்கி (Tongs) கொண்டு மிகக் கவனமாக இந்த விஷம் கறக்கப்படுகிறது*3. இதோட விலைதான் ஹைலைட்! ஒரு லிட்டர் தேள் விஷத்தின் மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹85 கோடி!).*4. இது முக்கியமாக காஸ்மெட்டிக்ஸ் (Cosmetics) மற்றும் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. நம்ம ஊர்ல 'தேள்'னு சொன்னா பயப்படுவோம்,  இது ஒரு மிகப்பெரிய பிசினஸ்! 

May 02, 2026

அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.

உடல் சூட்டை தவிர்க்க செய்ய வேண்டியது. (நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்) 5 மணி நேர இடைவெளியில் தண்ணீர் குடிக்கவும். தண்ணீரில் ORS பவுடர் சேர்த்து குடிக்கலாம். தண்ணீரில் சப்ஜா விதை, பாதாம் பிசின் சேர்த்து பருகலாம். பானைத் தண்ணீரில் நன்னாரி வேர் போட்டு வைத்து பருகலாம் குளிர்ச்சி தரும் இளநீர், நூங்கு, தர்பூசணி சாப்பிடவும். வெள்ளை பூசணி, கரைக்காய் ஜூஸ்  காலை மற்றும் மாலை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வேளை குளிக்கலாம். தொப்புளில் செக்கு நல்லெண்ணெய் தடவலாம். உடலை காக்கும் நல்ல பழக்கங்கள். ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டும்.

May 02, 2026

புதிய போக்குவரத்து விதிகள் (ஏப்ரல் 2026 முதல் அமலில்).

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 25,000 RC (பதிவு சான்று) இல்லாமல் ஓட்டுதல் 23,000 - 25,000 இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் ₹2,000 (முதல் முறை), ₹4,000 (மீண்டும்) ஹெல்மெட் இல்லாமல் -₹1,000 + உரிமம் இடைநீக்கம் சீட் பெல்ட் அணியாமல் - ₹1,000 மூவர் பயணம் (பைக்) -₹1,000 – DL இடைநீக்கம் அதிக வேகம் (கார்/LMV)-₹1,000 – 2,000 அதிக வேகம் (பெரிய வாகனங்கள்)-₹2,000-4,000.

May 02, 2026

MISSION VATSALYA குழந்தைகளுக்கு மாதம்  ₹4,000.

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், ஒரு  குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ₹4,000 மூன்று ஆண்டுகள் வழங்கப்படுகிறது. வருமானச் சான்றிதழுடன் இ-சேவை மையம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

May 02, 2026

ஒரு தேக்கரண்டி DNA-வில் சேமிக்கப்படும் இணையத் தரவுகள்.

ஹார்டுடிஸ்க்குகளையும்,பென்டிரைவ்களையும்மறந்துவிடுங்கள். எதிர்காலத்தில்,தரவுகள் DNAவில்சேமிக்கப்படும்.விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உலகின் ஒட்டுமொத்த இணையத் தரவுகளையும் வெறும் ஒரு தேக்கரண்டி DNA-வில் சேமிக்க முடியும். இயற்கை, மிகப்பெரிய மெமரி கார்டை நமது உடல்களில் பொருத்தியுள்ளது.

May 02, 2026

ஆதார் விவரங்களை  ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பிக்கலாம்.

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. 'Myaadhaar' இணையதளம் வழியாக பயனர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து இந்த வசதியை பெற முடியும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

May 02, 2026

வெறும் ரூ.6-க்கு 2GB நெட் வழங்கும் பிஎம் வாணி திட்டம்.

மத்திய அரசின் PM-WANI திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் அதிவேக இணைய வசதி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு கடைகள் கூடி வைஃபை மையங்களாக (Wi-Fi Hub) மாற்றப்பட்டு, வெறும் ரூ.6 கட்டணத்தில் 2 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1GB வீதம் 150 Mbps வேகத்தில்இணையம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ‘PM WANI‘ செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம் இந்த எளிய மற்றும் பயனுள்ள இணைய சேவையை எளிதாக பயன்படுத்திகொள்ளலாம்.

May 01, 2026

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில மாற்றங்கள்.

மத்திய அரசு வரும் மே1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக விதிகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி நகர்ப்புறங்களில் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், ஊர்ப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. விநியோகத்தின் போது வழங்கப்படும் OTP முறையை நிரந்தரமாக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மானியங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும். வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மிஸ்டு கால், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் அல்லது மொபைல் செயலிகள் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில், குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்பு வசதி உள்ள பகுதிகளில், மக்கள் அந்த முறைக்கு மாற அரசு ஊக்குவித்து வருகிறது. இத்தகைய மாற்றங்கள் எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்கவும் விநியோகத்தை சீரமைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

May 01, 2026

கௌரி, 19 வயது இளம்பெண்ணின் சாதனை.டிகிரி கூட இல்லை.BMW நிறுவனத்தில் வேலை.

கல்லூரி பட்டத்தை விட தனித்திறமையே சிறந்தது என்பதை நிரூபிக்கும் வகையில்,19 வயது இளம் பெண் கௌரி, உலகின் முன்னணி நிறுவனமான BMW நிறுவனத்தில்மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார். முறையான பட்டப்படிப்பு இல்லாத நிலையிலும், சமூக வலைதளங்களில் அவர் உருவாக்கிய தனித்துவமான நற்பெயரும் , அவரது படைப்பாற்றலுமே இந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளன. வழக்கமாக ஐந்து ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும் ஒரு பணிக்கு, லிங்க்ட்இன் மற்றும் இன்ஸ்டாகிராமில் கௌரிக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்கள் ஒரு முக்கிய அங்கீகாரமாக திகழ்ந்துள்ளனர். இது தொடர்பாக கௌரி வெளியிட்ட பதிவில், தான் எந்த நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும், தனது திறமையைக் கண்டு பிஎம்டபிள்யூ நிறுவனமே தன்னை தேடி வந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திறமைக்கும் பட்டப்படிப்பிற்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது. தனிநபர் பிராண்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய சொத்தாக கருதப்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.  இருப்பினும், சில வல்லுநர்கள் முறையான கல்வி இன்றும் அவசியம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, கௌரியின் வெற்றி பல இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 103 104

AD's



More News