பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் எடுத்து, இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர...பரமபதம்: ஏற்றம்,இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த...கில்லி: கூட்டல்,பெருக்கல் கணக்கைக் களிப்புடன் மகிழ்ந்து கற்க...தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற...சதுரங்கம்: இதர வழி இல்லாதபோதும், இறுதிவரை போராடும் உறுதி மனம் பெற...நொண்டி: சமமாக இல்லாதபோதும், சாதிக்கத் தூண்டும் சக்தியைப் பெற...கண்ணாமூச்சி: ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற...
விலங்குகளின் மொழி மற்றும் சமிக்ஞைகளை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்து வருகிறார்கள். எலிகள், டால்பின்கள், குரங்குகள், பறவைகள், திமிங்கலங்கள் மற்றும் மீன்கள் போன்ற பல விலங்குகளின் தொடர்பு முறைகளை AI மூலம் டிகோட் (decode) செய்யலாம் என்று CNN செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகின் மிகவும் உழைப்பாளி உயிரினங்களில் ஒன்றாக எறும்புகள் கருதப்படுகின்றன. ஆய்வுகளின்படி, 12 மணி நேரத்தில் அவை மொத்தம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே ஓய்வெடுக்கின்றன. நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இயங்கி, தங்கள் கூட்டத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் எறும்புகள், விடாமுயற்சிக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
இன்று நாம் 10 அடிப்படையிலான (Decimal) எண் முறையை பயன்படுத்தினாலும், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுமேரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 60 அடிப்படையிலான (Sexagesimal) எண் முறையைப் பயன்படுத்தினர். அவர்கள் உருவாக்கிய காலக் கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் ஒரு மணி நேரம் 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடம் 60 விநாடிகளாகவும் இன்று உலகம் முழுவதும் கணக்கிடப்படுகிறது.
கிராம்பு – நறுக் என்று உடைய வேண்டும். பட்டை – எளிதாக முறிய வேண்டும். ஏலக்காய் – அழுத்தினால் நறுமணம் வர வேண்டும். மிளகு – கடித்தால் காரம் தெரிந்தாக வேண்டும். சீரகம் – கசக்கினால் மணம் வர வேண்டும். சோம்பு – இயல்பான இனிப்பு மணம் இருக்க வேண்டும். மல்லி – கையில் தேய்த்தால் நறுமணம் வர வேண்டும். மஞ்சள் – தேய்த்தால் கையில் மஞ்சள் நிறம் பட வேண்டும். மிளகாய்த்தூள் – அளவுக்கு அதிக சிவப்பு நிறமாக இருக்கக் கூடாது. கடுகு – கசக்கினால் மணம் வர வேண்டும். வெந்தயம் – இயல்பான கசப்பு மணம் இருக்க வேண்டும். பெருங்காயம் – சிறிதளவு இருந்தாலும் நறுமணம் வீச வேண்டும். வெல்லம் – மெதுவாக உடைய வேண்டும். அரிசி – அதிக தூள் கலந்திருக்கக் கூடாது. பருப்பு – அளவுக்கு மீறிய பளபளப்பு இருக்கக் கூடாது. புளி – மென்மையாக இருக்க வேண்டும். வேர்க்கடலை – கடித்தால் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். எள் – தேய்த்தால் எண்ணெய் தன்மை உணரப்பட வேண்டும். தேயிலை – இயல்பான நறுமணம் இருக்க வேண்டும். சர்க்கரை – கட்டியாக ஒட்டியிருக்கக் கூடாது.
தாழ்வு நிலையின் காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது. பூமியின் சுழற்சி காரணமாக, காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது. புயலின் கண் இந்நிலையிலேயே உருவாகும். காற்றழுத்தத் தாழ்வுநிலையின் போது, காற்றின் வேகம் 31 கிலோ மீட்டர் வரை அதிகரித்தால், அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகும்.
விண்கற்கள் அடிக்கடி பூமியை வந்தடைகின்றன. ஆனால் பெரும்பாலானவை சிறியதாக இருப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.செர்ரி பழத்தின் அளவிலான ஒரு சிறிய விண்கல், வீட்டின் கூரை, சீலிங் மற்றும் காற்றோட்டக் குழாயை துளைத்துக் கொண்டு, துப்பாக்கி குண்டின் வேகத்தில் வீட்டிற்குள் பாய்ந்து தரையில் விழுந்தது. இந்த விண்கல்லுக்கு அது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் பெயரான "மெக்டோனா" என்று பெயரிடப்பட்டுள்ளது.சுமார் 50 கிராம் எடையுள்ள இந்த விண்கல்லில் 23 கிராம் மாதிரியை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இது ஆக்சிஜன், மெக்னீசியம், இரும்பு மற்றும் சிலிக்கான் நிறைந்த காண்ட்ரைட் (Chondrite) வகையைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்தனர்.மேலும், இந்த விண்கல்லின் வயது சுமார் 456 கோடி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் என்பதால், இந்த விண்கல் பூமியை விட பழமையானது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் வளையத்தில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த விண்கல் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள், சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து புதிய தகவல்களை வெளிக்கொணரலாம்.
130 வருடங்கள் கொத்தடிமையாக வாழ்ந்து வந்த குடும்பம். பாகிஸ்தானின் கசூர் பகுதியில், தலைமுறை தலைமுறையாக 130 ஆண்டுகள் மேலாக செங்கல் சூளையில் அடிமைகளாகக் கிடந்த ஒரு குடும்பத்தை, அவர்களின் பூர்வீகக் கடனை முழுமையாக செலுத்தி மீட்டெடுத்த ஆரோன் ஹட்ச்சிங்ஸ் என்ற வெளிநாட்டவர். இவர்களது செயலுக்கு இவரைப் பாராட்டி வாழ்த்துங்கள்.
அல்சைமர் மறதி நோய்க்கு, பொதுவாக பலரிடம் காணப்படும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்-1 (HSV-1) காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் நீண்ட காலம் நரம்பு மண்டலத்தில் செயலற்ற நிலையில் இருந்து, பின்னர் மூளையில் புரதக் கட்டிகளை உருவாக்கி அல்சைமரைத் தூண்டக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் எதிர்காலத்தில் அல்சைமர் பாதிப்பைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை!தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதனை ஏற்று மொத்த வேலை நாட்கள் 220 நாட்கள் இனி 210,ஆக குறைக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் மனநலத்திற்கும், ஆசிரியர்களின் நலனுக்கும் ஒரு சிறந்த முடிவு!இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை..