25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆரோக்கியம்

May 05, 2024

வெங்காயத் தண்ணீரை நாம் குடிக்கும்போதுகிடைக்கும்ஆரோக்கியநன்மைகள்!

அன்றாட உணவில் உபயோகித்து வரும் வெங்காயத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்C, வைட்டமின்B6, பொட்டாசியம், ஃபொலேட் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை நாம் குடிக்கும்போது, மேலே கூறிய அனைத்து ஊட்டச் சத்துக்களாலும் செறிவூட்டப்பட்ட ஒரு நல்ல ஆரோக்கிய பானம் . இந்த பானத்தை அருந்துவதால்  பல நன்மைகள்உடலுக்குக் கிடைக்கும் .ஆனியனில் குர்செடின்(Quercetin) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடம்பிலுள்ள ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன. இதிலுள்ள வைட்டமின்C சத்தானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட முடிகிறது. உடலிலுள்ள நோய்களையும் விரைவில் குணமடையச் செய்ய முடிகிறது..ஆனியன் வாட்டர் சளி, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்தவும் செய்யும். இதை உணவுக்கு மணமூட்டவும், சூப், சாலட், ஸ்டூ மற்றும் மரினேட் செய்வதற்கும் உபயோகிக்கலாம்.ஆனியனை சமைக்காமல் உட்கொண்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் வலுப்பெறும்.ஆனியனில் பிரிபயோட்டிக் ஃபைபர் சத்து உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளில் வாழும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி புரிந்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.ஆனியன் வாட்டர் அருந்துவது தினசரி குடிக்க வேண்டிய நீரின் அளவு சமநிலைப்படவும், உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் உதவும். ஆனியன் குறைந்த அளவு கலோரி கொண்டது. இதை உணவில் சேர்ப்பதால் கலோரி அளவு அதிகரிக்காமல் உணவுக்கு சுவை கூட்ட முடியும். சர்க்கரை சேர்த்த பானங்களுக்குப் பதிலாக ஆனியன் வாட்டர் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.ஆனியன் வாட்டர் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதான தோற்றம் தருவதைத் தடுக்கவும்,  அப்பழுக்கற்ற சுத்தமான மேனி வண்ணம் பெறவும் உதவி செய்கின்றன.

May 03, 2024

தாமரை விதை “மக்கானா “

மக்கானா, தமிழில் தாமரை விதை என்று அழைக்கப்படுகிறது. இதன் ஊட்டச்சத்து காரணமாக பலரும் இதை சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எப்படி சாப்பிடுவது, இன்னும் சுவையான உணவாக இதை எப்படி உட்கொள்வது .மக்கானாவை வறுத்து பவுடர் போல் பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின் பாலில் கொதிக்க வையுங்கள். க்ரீமியாக கிடைக்கும். பின் அதில் உங்களுக்கு பிடித்த பழங்களை கட் செய்து அதன் மேல் பாதாம் நட்ஸுகளை தூவுங்கள். பின் அதன் மேல் அப்படியே தேனை ஊற்றுங்கள். இப்போது அது கூடுதல் ஆரோக்கியம் நிறைந்த வாய்க்கு ருசியான உணவாகிவிட்டது.வறுத்த மக்கானாவை பவுலில் சேர்த்து அதோடு கோஸ் இலைகள், காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் டிரெஸ்ஸிங் க்ரீம்கள்( தயிர் அல்லது பனீர் அரைத்து சேர்க்கலாம்) சேர்த்து கலந்துவிட சுவையான மக்கானா சாலட் தயார். பனீர், சிக்கன், சோயா, வேக வைத்த பயிர் வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.வறுத்த மக்கானாவில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் ஸ்பைசி சாட் பொடிகள் சேர்த்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாப்பிடலாம். கூடுதல் க்ரஞ்சி சுவைக்கு மாதுளை பழம் சேர்த்து மக்கானா சாட்  சாப்பிடலாம்.வறுத்த மக்கானாவில் நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதன் மீது உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா சேர்த்து கலந்து சாப்பிடலாம்.மிக்ஸ் வித் மக்கானா : வறுத்த மக்கானாவுட்ன் நட்ஸ் , விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.பால் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் வறுத்த மக்கானா சேர்த்து கலந்துவிடுங்கள். அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பாயாசம் போல் வந்ததும் இறக்கிவிடுங்கள். இப்போது நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அதில் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம். அசத்தல் சுவையாக மக்கானா கீர்  இருக்கும்.

May 02, 2024

Rosemary ரோஸ்மேரி இலைகள்..

ரோஸ்மேரி இலைகள், அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்காக சமையல், மருத்துவம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும்.ரோஸ்மேரி இலைகளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்றவை, அழற்ச்சி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ரோஸ்மேரி இலைகள் மூளையின் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு பெரிதும் உதவுகிறது. ரோஸ்மேரியின் நறுமணம், மூளையைத் தூண்டி, சிறந்த தெளிவு, கவனம் மற்றும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ச்சியாக நம் உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் இழப்பு பிரச்சனைகள் தவிர்க்கப்படுமாம். ரோஸ்மேரி இலைகள் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான அசௌகர்யம், வீக்கம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது. ரோஸ்மேரி டீ குடிப்பது அல்லது ரோஸ்மேரி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமான மண்டலம் வலுப்பெற்று, குடல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்பு உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க குறைக்க உதவுகிறது. நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க செயல்படுகின்றன. எனவே உங்கள் உணவில் ரோஸ்மேரியை சேர்ப்பது மூலமாக, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். பாரம்பரிய வைத்திய முறையில் ரோஸ்மேரி இலைகள் சருமம் மற்றும் முடிக்கு ஆரோக்கியம் தர பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆக்சிஜனேற்ற பண்பு, சருமத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ரோஸ்மேரி இலைகளை தலைக்குப் பயன்படுத்தினால், உச்சந்தலைக்கு ஊட்டம் கிடைத்து மயிர்க் கால்கள் வலுப்பெற உதவும்.  இதை நாம் உணவுப் பொருளாக எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்றாலும், அதை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பேரிலேயே இதை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

May 01, 2024

ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மோர்

கோடை வெயிலில் மோர் குடித்தால் புத்துணர்ச்சி பெறலாம். இதுஉங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சிலர்இதை இரவு உணவோடு குடிக்க விரும்புகிறார்கள்,மற்றவர்கள் மாலையில் குடிக்கிறார்கள். இந்த பானத்தை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம். ஆனால் யாராவது வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், புரோபயாடிக்குகள், பாஸ்பரஸ், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.மோர் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது, இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது..உடல் ஆரோக்கியமான தசைகள், தோல் மற்றும் எலும்புகளை உருவாக்க மோர் உதவுகிறது. இதில் பாலை விட குறைவான கலோரிகள் மற்றும் அதிக கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது. நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம்.தயிரை ஒருபிளெண்டரில் போட்டுமூன்று முதல்ஐந்து நிமிடங்கள்வரை கலக்கவும்.அதில் குளிர்ந்தநீரை சேர்த்துமீண்டும் குறைந்தவேகத்தில் மூன்றுமுதல் ஐந்துநிமிடங்கள் வரைகலக்கவும். இப்போதுஅதனுடன் கருப்புஉப்பு, புதினாதூள், சீரகத்தூள்சேர்த்து கலந்துகுடிக்கவும்.

Apr 30, 2024

கோடைக்கு இளநீர்  OR எலுமிச்சை ஜூஸ் எது பெஸ்ட்?

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே உடல்நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுத்தலாம்.உடலின் வெப்பநிலையை குறைத்து எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.இளநீர், எலுமிச்சை ஜுஸ் உங்களுக்கு சிறந்த தீர்வு ஆகும். ஏனெனில் இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன.ஆனால் இவை இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும்.இளநீரில் எலக்ட்டோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவதுடன், இதில் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவையும் அதிகமாக இருக்கின்றது.கோடையில் இதனை குடித்து வந்தால், உடலில் திரவங்களை சமநிலையில் பராமரிப்பதோடு, தசைகள் மற்றும் நரம்பு சமிக்ஞைகளை பராமரிக்கவும் செய்கின்றது.இளநீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சர்க்கரைகளும் இருப்பதால், இவை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன. வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ள நிலையில், இதில் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுத்து, உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.கோடை காலத்தில் எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால், உடல் நீரேற்றத்துடன் இருப்பதுடன் பல நன்மைகளும் அளிக்கின்றது.இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள் உள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் செய்கின்றது.எலுமிச்சையில் அமிலத்தன்மை இருந்தாலும், காரப் பண்புகளையும் கொண்டுள்ளதால், இந்த ஜூஸை குடிக்கும் போது, உடலின்pH அளவை சமநிலையில் பராமரிக்கப்படுகிறது.இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்ய அதிகமாக உதவி செய்வதுடன், கோடையில் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரியும். இதில் இளநீர் வியர்வை மூலம் இழந்தஎலக்ட்ரோலைட்டுகளை நிரப்புவதில் சிறந்து விளங்குகிறது. எனவே கடுமையான உடற்பயிற்சிக்கு பின் அல்லது வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும், குடிக்க ஏற்ற சிறந்த பானமாக இளநீர் விளங்கும்..எலுமிச்சை ஜூஸில் இளநீரைப் போல் எலக்ட்ரோலைட்டுகள் இல்லாவிட்டாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தேவையான சத்துக்கள் உள்ளன. அதுவும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் எலுமிச்சை ஜூஸானது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, அதிக திரவ உட்கொள்ளலை ஊக்குவித்து, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.எனவே கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரிவதால், எவற்றை தேர்வு செய்வதென்பது ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது. உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட பின் அல்லது வெளியே சுற்றிய பின் குடிக்க இளநீர் சிறந்ததாக இருக்கும். அதே வேளையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள நினைத்தால், எலுமிச்சை ஜூஸை குடிப்பது சிறந்ததாக இருக்கும்.

Apr 29, 2024

ஆழ்ந்த தூக்கம் தரும் மருதாணியின் மலர்கள்

நரம்புகளின் செயல்பாட்டை தூண்டக்கூடியது மருதாணி இலைகள். நம்முடைய உடலிலுள்ள அனைத்து நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்திருக்கின்றன. அதனால்தான், உள்ளங்கையில் மருதாணி வைக்கப்படுகிறது. இதனால், உடம்பின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராகின்றன.. உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் வலுவாகின்றன..சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும் என்பதால், காலில் சரியான ரத்த ஓட்டமும் இருக்காது. அத்துடன், பாதங்களில் ஒருவித எரிச்சலும், குடைச்சலும் ஏற்படும்.. இதற்கும் தீர்வு தருகிறது மருதாணி. கை மற்றும் கால் விரல்களிலும், பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் இந்த இலையை அரைத்து தடவும்போது, ரத்த ஓட்டம் சீராகின்றன.. உடலுள்ள பித்தத்தை மொத்தமாக நீக்கிவிடும் இந்த இலைகள். பித்தம் அதிகமானால் மனநிலை சிதறல், மனநோய் போன்றவை ஏற்படாமல் இந்த இலைகள் தடுத்துவிடும்.. ரத்தமும் சுத்திகரிப்பாகும். மருதாணி இலைகளை, வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிப்பாகும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும்.. மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து கால் வெடிப்புகளில் தேய்த்து வரலாம். நரை முடியை மறைப்பதற்கு மருதாணிபேக் போட்டு குளிக்கலாம்.கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கிருமிகள், நச்சுக்கள் நம்முடைய உடலில் இருக்கலாம். அத்தனையையும் இந்த மருதாணி இலைகள் விரட்டிவிடும். அதனால்தான், நகசுத்தி வந்தால், இந்த மருதாணியை அரைத்து விரலுக்கு வைப்பார்கள்.. சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணி இதுபோன்ற பிரச்சனைகளுக்கும், மருதாணியுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டி வைப்பார்கள். மருதாணி இலைகளை போலவே, மருதாணியின் மலர்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை..உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. நிம்மதியானதூக்கம்   வராமல் போனால், இந்த பூக்களை, ஒரு வெள்ளை துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்து படுத்து கொண்டால், ஆழ்ந்த தூக்கம் வருமாம்.மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு ஏற்படுத்தக்கூடியது இந்த இலைகள்.. மருதாணியின் வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குணமாகும். மருதாணி விதையில் உள்ள எண்ணெய்யை உடம்பின் மீது தடவி வந்தால், உடலில் எரிச்சல் தணிந்து விடும்.. மருதாணி இலை குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், இதனுடன் நான்கைந்து நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.

Apr 28, 2024

கோடை காலத்தில் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம்பூ சர்பத் 

 வேப்பம் பூக்கள்.சித்திரை மாதத்தில் எங்கெங்கு பார்த்தாலும் பூத்துக்குலுங்குகிறது. இதில் பல வகை உணவுகள் செய்ய முடியும். சட்னி, ரசம், கிரேவி என வெயிலுக்கு இதமான பல்வேறு உணவுகளும் செய்யலாம். உங்களுக்கு இந்த வெயிலை சமாளிப்பதற்கு வேப்பம்பூ ரசம் மிகவும் உதவியாக இருக்கும்.குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக வேப்பம்பூ சர்பத் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வேப்பம்பூக்கள், இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டவை. அது உங்கள் உடலை ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்யும். இந்தப்பூக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூத்துக்குலுங்கும். இதை உட்கொள்வதும் பாதுகாப்பானது.இது கிடைக்காத காலங்களில் இதை பொடியாக மற்றும் உலர்த்தி பயன்படுத்தப்படுகிறது. இதை பறித்தவுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வேப்பம் பூக்கள் ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் கிடைக்கும் ஒன்று. உங்கள் உணவில் இதை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.வேப்பம்பூ சர்பத் செய்ய தேவையான பொருட்கள்வேப்பம் பூக்கள் – 2 ஸ்பூன், வெல்லம் – 2 ஸ்பூன் (பொடித்தது) தண்ணீர் – 2 கப்மிளகுத்தூள் – 2 சிட்டிகை, இஞ்சி – ஒரு ஸ்பூன் இடித்தது, உப்பு – தேவையான அளவு, மாங்காய் – கொஞ்சம் துருவியதுசெய்முறைதண்ணீரில் வெல்லத்தை கரைத்து, அதில் வேப்பம்பூக்களை சேர்க்க வேண்டும். உப்பு, மிளகுத்தூள், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து பருகினால் அது உங்களுக்கு சிறந்த கோடை பானமாக இருக்கும். வேம்பின் நற்குணங்கள் அனைத்தும் நமக்கு நன்றாக தெரிந்தவைதான். வேப்பம்பூக்களும் அதே அளவு நன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை கொடுக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், செரிமான கோளாறு, வயிற்று வலி போன வயிறு உபாதைகளை போக்குகிறது. இது பித்தம் உருவாவதை குறைக்கிறது. சளியை கட்டுப்படுத்துகிறது மற்றும் குடலில் உருவாகும் புழுக்களை அழிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேப்பம்பூக்கள் உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் செய்கிறது.வேப்பம்பூக்களின் நன்மைகள் உடலுக்கு உறுதியளிப்பதுடன் நிற்கவில்லை. முகப்பருக்களை நீக்குகிறது. கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கிறது. 

Apr 26, 2024

இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றஉறுப்புகளுக்கு கொடுக்கும்அதே முக்கியத்துவத்தைகல்லீரலுக்கும் கொடுக்கவேண்டும்

நமது உடலின்இரண்டாவது பெரியஉறுப்பு கல்லீரல்.இது கழிவுகளைவெளியேற்றவும், உணவைஜீரணிக்கவும், ரத்தம்உறைவதற்கு உதவும்புரதங்களின் உற்பத்தியையும்செய்வதுடன் ஹார்மோன்களைசீர் செய்வதுபோன்ற பலவகையான வேலைகளைசெய்கிறது. எனவேஇதயம், நுரையீரல்,சிறுநீரகம் போன்றஉறுப்புகளுக்கு கொடுக்கும்அதே முக்கியத்துவத்தைகல்லீரலுக்கும் கொடுக்கவேண்டும் என்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.ஏனெனில் உடலில்ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில்ஏற்படும் பிரச்சனைகள்தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல், உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.கல்லீரல் பாதிப்பை சில அறிகுறிகள்.கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும்.பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.கவனமின்மை, நினைவாற்றல் இழப்புபசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ்‌ பி மற்றும் சி ஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இரு முறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.ஆரம்பக் கட்டத்தில்இருக்கும் கல்லீரல்நோய்களுக்கு மருத்துவரின்ஆலோசனைப்படி மருந்துமற்றும் வாழ்க்கைமுறையை மாற்றுவதன்மூலம் குணப்படுத்தமுடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கானஅறிகுறிகள் தெரிந்தால்தகுந்த மருத்துவரைகலந்தாலோசிப்பது நல்லது

Apr 25, 2024

கரும்பு ஜூஸிலிருக்கும் நன்மைகள்!

கோடையின் வெப்ப அலையை சமாளிக்கவும் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் வித விதமான பழச் சாறுகளை அருந்தியும் வருகிறோம். அவற்றுள் நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் பல வகையான ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது கரும்பு ஜூஸ். கரும்பு ஜூஸில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, வைட்டமின்A,C,B1,B2,B3,B5,B6 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.கோடைக் காலங்களில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிக்குப் பின் கரும்பு ஜூஸ் அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். வியர்வை மூலம் வெளியேறும் எலக்ட்ரோலைட்களையும் நீர்ச் சத்தையும் மீண்டும் இட்டு நிரப்பக் கூடியது கரும்பு ஜூஸ்கரும்பு ஜூஸிலிருக்கும் இயற்கையான இனிப்புச் சத்தானது உடனடி சக்தியைத் தரும். காஃபின் மற்றும் செயற்கை இனிப்பூட்டி இல்லாமலே உடல் சோர்வை நீக்க உதவும். கரும்பு ஜூஸில் உள்ள இயற்கையான என்சைம்கள் சிறப்பான செரிமானத்துக்கு உதவி புரிகின்றன.கரும்பு ஜூஸில் ஹெபடோப்ரொடெக்டிவ்(Hepatoprotective) குணம் உள்ளது. இது கல்லீரலில் சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும்; கல்லீரலின் இயக்கம் சிறப்பாக நடைபெறவும் உதவும்.கரும்பு ஜூஸில் உள்ள மல்டிபிள் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி வலுவடைய உதவுகின்றன. இதனால் உடலைத் தாக்கும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி ஜெயிக்க உடலுக்கு போதுமான அளவு சக்தி கிடைக்கிறது.கோடைக் காலத்தில் அனைத்துத் தரப்பினரும் சுலபமாக வாங்கி அருந்தும் விதத்தில் இதன் விலையும் குறைவு. எனவே, அனைவரும் கரும்பு ஜூஸ் அருந்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Apr 24, 2024

கோடைக்கால சரும அரிப்பு

முகம் எங்கும் அரிப்பும், எரிச்சலும் வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு தோன்றக்கூடும். இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும்.தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல் அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும் முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்.ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும்.15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும். ஆப்பிள் சீடர்வினிகரில்உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரை முகம், கழுத்து, கை, கால்களில் தடவி விடவும்.15 நிமிடம் கழித்து முகம் மற்றும் கை, கால்களை சோப்பு போட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.

1 2 ... 32 33 34 35 36 37 38 39 40 41

AD's



More News