இரவு – கீரை -தயிர் -- வெந்நீர்இரவு -- கேரட், உருளைக்கிழங்குஇரவு -- ஆப்பிள், கொய்யாநெய் - தேன் (சம அளவு) மருந்து - குளிர்ந்த நீர்பப்பாளி - எலுமிச்சைகொள்ளு -பால்பால் - பலாப்பழம்கேரட் ஆரஞ்சுஅன்னாசி-பால் தயிர்கொய்யா-வாழைப்பழம், ஆரஞ்சு- பப்பாளி , ஆரஞ்சு - பால், ஓட்ஸ்
பிரண்டை செடிகளில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, என பல வகைகள் உள்ளனவேலிகளில் படர்ந்து வளரும் தாவரம் தான் பிரண்டை, நீர் அதிகம் தேவையில்லை. அதன் தண்டை நட்டு வைத்தால் போதும், தானாகவே வளர்ந்து விடும்.தண்டு,வேர்,பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. எலும்பு முறிவை குணப்படுத்து உதவுகிறது. மேலும், எலும்புகளையும், மூட்டுகளையும் வலிமையாக்குகிறது.ஒரு சிறந்த வலி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. வாயுவால் எலும்பு மற்றம் நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கி விடும். பின் அவை முதுகுத் தண்டு மற்றம் கழுத்து பகதிக்கு இறங்கி, பசை போல்) அங்கேயே இருந்து, தாங்க முடியாத கழுத்து மற்றும் முதுகு வலியை தரும். இதனால், கழுத்தை திருப்பவோ, குனியவோ முடியாமல் அவதிப்படுவர். பிஞ்சு பிரண்டையை உலர்த்தி, பொடி செய்து அதனடன் சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகி, முதுகு வலி மற்றும் கழுத்து வலி குணமாகும்.ரத்த தேங்கு நிலை மற்றம் ரத்தப் போக்கை சரி செய்ய உதவுகிறது. மேலும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கல்லீரல் சேதத்தை தடுக்கிறது. நரம்புகள் மற்றும் தசைகளை அமைதிப்படுத்தும் மருந்தாக பிரண்டை சாறு செயல்படுகிறது.மூலம், கீழ் வாதம் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கிறது. பசி, எடுக்காதவர்கள் அல்லது அஜீரணத்தால் அவதிப்படுவோர் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லை மட்டுப்படும், சுவையின்மை மறைந்து, பசி அதிகரிக்கும். உடலின் அதிக எடையை குறைப்பதற்க பிரண்டையை உட்கொள்ளலாம். பிரண்டை துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். இதயமும் பலப்படும்.பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றிற்கு, பிரண்டை சிறந்த மருந்தாகும். இது, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது, புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். பிரண்டை சாற்றைக் கொண்டு வாய் கொப்பளித்தால், பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு மற்றம் பல் ஈறுகளில் உண்டான அழற்சி போன்றவை குறையும், மேலும், பற்களில் படிந்திருக்கம் சீமை சண்ணாம்பை சுத்தமாக்கம். பிரண்டையில் உள்ள நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படும்.
ஒரு சில பூண்டுகளை நசுக்கி, தயிருடன் உப்பு, சீரகப் பொடி கலந்து சாப்பிட்டு வர நோய்த்தொற்று தடுக்கப்படும்.பாலுடன் அரைத்த பூண்டு விழுது சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் பாலியல் ஆரோக்கியம் ஏற்படும்.:சில பூண்டு பற்களை எடுத்து நெய் சேர்த்து நன்றாக கிரிஸ்ப்பாக வரும் வரை வறுத்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டு வரநன்றாக பசி எடுக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.சில பூண்டு பற்களை எடுத்து, தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர எடை குறையும்.ஒரு சில நறுக்கிய பூண்டு பற்களை தேனுடன் சேர்த்து காலை வேளையில் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.சில பூண்டு பற்களை நசுக்கி, எண்ணெயில் பிரவுனாக வரும் வரை வறுக்க வேண்டும் அந்த எண்ணெயை வடிகட்டி, பூஞ்சை தொற்று மற்றும் சொரியாசிஸ், அலற்சி உள்ள இடங்களில் தட நோய் குணமாகும்சில பூண்டு பற்களை இரவு முழுவதும் ஒயினில் ஊற வைத்து அதன் பிறகு அரைத்து வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சூடான பாலில் அரைத்த பூண்டு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்து வர இருமல்.'' ஆஸ்துமா, பிற சுவாச பிரச்சனைகள் சரியாகும்.பூண்டை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பாஸ்மதி அரிசியில் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து அதிகம் உட்கொள்வது வகை2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும். பாசுமதி அரிசியில் ஆரோக்கியமான சருமம் மற்றும் முடியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் பளபளப்பான சருமத்திற்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கும் உதவுகிறதுஅரிசியில் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. பாசுமதி அரிசியில் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. பாஸ்மதி அரிசி என்பது50 முதல்58 வரை கிளைசெமிக் அளவுகளைக் கொண்ட குறைந்த முதல் நடுத்தர கிளைசெமிக் குறியீட்டு உணவு.பாஸ்மதி அரிசியில் இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்டரால் குறைவாக உள்ளது. ஆரோக்கியமான இருதய செயல்பாட்டிற்கு பங்களிக்கும் கார்டியோபிராக்டிவ் கலவைகள் இதில் உள்ளன. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.பாஸ்மதி அரிசியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களைப் பாதுகாப்பதிலும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோவக்காயில்பொட்டாசிய சத்து அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, இதய நோயை தடுக்கிறது.இரும்புச்சத்து உடல் இயங்குவதற்கு தேவையான ஒரு சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது. சோர்வை நீக்குகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால்அனீமியா ஏற்படுகிறது. கோவக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடும்போது கிடைக்கும் இரும்புச்சத்து உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும் வைத்திருக்க உதவுகிறது. கோவக்காய் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. கடினமான மலத்தை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கல், அல்சர் போன்ற வயிறு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் கேவக்காய் சரிசெய்கிறது.
தேவையான பொருட்கள்-நெல்லிக்காய் – 1,கறிவேப்பிலை – ஒரு கொத்து,சீரகம் – அரை ஸ்பூன்உப்பு – தேவையான அளவு,தயிர் – ஒரு கப்செய்முறை-நெல்லிக்காய், கறிவேப்பிலை, சீரகம், தயிர்,உப்பு அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.நெல்லிக்காயில் வைட்டமின் சிசத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.
செம்பருத்தியை பயன்படுத்தி சிறுநீர் பை, கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று பிரச்னைகளை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, தொற்று குணமாகும்.கணையத்தில் உண்டாகும் கட்டிகள் கரையும். சிறுநீர் பையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.செம்பருத்தி இதயத்தை பலப்படுத்துகிறது. காயவைத்த செம்பருத்தி பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை பயன்படுத்தியும் தேனீர் தயாரிக்கலாம். செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டுவர பல்வேறு நன்மைகள் உண்டாகும்.செம்பருத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புற்றுநோயை உருவாக்கும் நச்சுக்களை செம்பருத்தி வெளியேற்றும்.
உடல் உழைப்பின்றி நாற்காலியில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும். 1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.8. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.13. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.14. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.16. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது
சர்க்கரை நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு இரவில் குறைவாக இருக்கும். அதிகாலை3 முதல்4 மணி வரை குறைந்த அளவில் இருக்கும். இதனால் தூங்காவிட்டாலும் கூட, எதையும் சாப்பிடாவிட்டாலும் அவர்கள் ரத்த சர்க்கரை அளவு காலையில் அதிகரிக்கும். இதை நாம் டான் பினாமினா என்று அழைக்கிறோம். கார்டிசோல், அட்ரினலின், நார் அட்ரினலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் இந்த உயர்வுக்கு காரணமாக உள்ளது.இரவு நேரத்தில் எல்லா செயல்பாடுகளும் குறைவாக இருப்பதாலும், ஹார்மோன்கள் அதிகம் வேலை செய்யாமல் இருப்பதால் ரத்த சர்க்கரை குறைவாக உள்ளது.இருக்கும் எல்லா ஹார்மோன்களிலும், இன்சுலின்தான் ரத்த சர்க்கரையை குறைக்கிறது. இதனால்தான் காலை உணவிற்கு பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால்தான் நாம் சாப்பிடும் காலை உணவு நமது ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் பார்த்துகொள்வது முக்கியம்.அதிக நார்சத்து உள்ள உணவுகள், மற்றும் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட உணவுகள். முழுதானிய வகைகளில் எடுத்துகொள்ளும் பிரட் மற்றும் சீரியல்களை நாம் சாப்பிடலாம். தாவரம் அல்லது விலங்குகளின் புரத சத்தை நாம் எடுத்துகொண்டால் அடிக்கடி பசிக்காது.ஒரு முழு முட்டையை நாம் காலை உணவாக எடுத்துகொள்ள முடியும். ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கரு300 மில்லி கிராம் கொலஸ்டாலை கொண்டது. இந்நிலையில் நாம் முட்டையின் வெள்ளை கருவை வைத்து ஆம்லேட் செய்தால்,3 முதல்4 வரை முட்டைகளை பயன்படுத்தலாம். சுத்தமாக கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து இல்லாத புரத சத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும்.குறிப்பாக பீன்ஸ், நட்ஸ், மீன்கள். ஒரு கப் பாலில், அதில் பூசணி விதைகள், சியா விதைகள், பிளக்ஸ் விதைகளை சேர்த்து குடிக்கலாம். பழங்களில் குறைந்த கிளைசிமிக் கொண்ட பழங்களான ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றை பழங்களாக எடுத்துகொள்ளவும். ஜூஸ் வடிவில் எடுத்துகொள்ள வேண்டாம்.காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, போகா எடுத்துகொள்ளலாம். ஆனால் அதன் அளவு குறைவாக இருக்க வேண்டும். முளைகட்டிய பயிர்களுடன் இதை நாம் சாப்பிட வேண்டும். காலையில் எடுத்துகொள்ளும் காப்பியில் நாம் அதிகம் பால் சேர்க்காமல் இருக்க வேண்டும்.இந்தியர்கள் உணவு முறையில் அதிகபடியாக கார்போஹைட்ரேட்தான் உள்ளது. இந்த கார்போஹைட்ரேட்ஸ் உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
மலைகளில் விளையும் பிளம்ஸ் பழம், “கொத்துப்பேரி” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் சாப்பிட புளிப்பாக இருப்பதால் பலர் விரும்புவதில்லை. ஆனால் அதிக சத்து மிக்கது, இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் 'சி' தான், இதன் புளிப்பு சுவைக்கு காரணம். இனிப்பு, புளிப்பு மற்றும் லேசான கசப்பு சுவை கொண்ட இப்பழத்தில், பல்வேறு வகையான பாலிபினால்கள் மற்றம் ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால், கோடை மற்றும் மழை காலத்திலும் உண்ண உகந்தது.புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம், பிளம்சில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயால் இறக்கும் பெண்களில், 18 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் கண்டறிந்துள்ளது. பிளம்ஸ் பழத்தில் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதால், அமெரிக்காவின், 'அக்ரிலைப்' ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.புற்றுநோய் சிகிச்சையின் போது, புற்றுநோய் செல்களுடன் உடலில் உள்ள மற்ற செல்களும், அழிக்கப்பட்டு விடுவதால், நோயாளிகளின் உடல் சோர்ந்து போகிறது. ஆனால், பிளம்ஸ் பழத்தில் உள்ள பிளோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருளான, குளோரோ ஜெனிக் மற்றும் நியோகுளோரோஜெனிக் அமிலங்கள், உடலில் எந்த விதமான பாதிப்பு இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிப்பதாக கூறுகின்றனர்.இந்த ரசாயனங்கள் மற்ற சில பழங்களில் இருந்தாலும், பிளம்ஸ் பழத்தில் மிகுதியாக இருப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளம்ஸ் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட், நம் உடலில் செல் திசுக்கள் வேகமாக அழிவதை தடுக்கம். இதனால் முதுமையை தள்ளிப் போட உதவுகிறது. இந்த காரணத்தால், இதை பெண்களின் பழம் என்கின்றனர்.ரத்தத்தை சுத்திகரித்து, நம் உடலை ஆராக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த சோகையை தடுக்கிறது. எனவே, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் பெண்கள், பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.டைப் 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. பிளம்சில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. பொட்டாசியத்தின் வளமான மூலமாக திகழ்கிறது. பிளம்ஸ், பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இது, ரத்த அழுத்தத்தின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க உதவுகிறது.பிளம்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள், சரும தோற்றத்தை காத்து, புத்துணர்ச்சி பெற வைக்கிறது. இளமையான சரும் அழகை பெற பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.