25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Jan 20, 2026

இந்தியாவின் துளசிமதி  முருகேசன் பாரா பாட்மின்டனில் மூன்று தங்கம் வென்றார்.

சர்வதேச பாரா பாட் மின்டன் தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு 5) பிரிவு பைனலில் இந்தியாவின்  தமிழகத்தை  சேர்ந்த, துளசிமதி முருகேசன் 23,போர்ச்சுகலின் பியாட்ரிசை எதிர் கொண்டார்.துளசிமதி, 21-8, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். * பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோடி, பைனலில் 21-8, 21-10 என இந்தியாவின் துலிகா, பியாட்ரிஸ் (போர்ச்சுகல்) ஜோடியை, வென்றுதங்கம் கைப்பற்றியது. இந்தியாவின் துளசிமதி, நிதிஷ் குமார் ஜோடி, கலப்பு இரட்டையர் பைனலில் 21-15, 21-8 என்ற நேர் செட்டில், இந்தியாவின் ருத்திக், மானசி ஜோடியை சந்தித்து, தங்கம் வென்றது. இந்தியாவின் பிரமோத் பஹத், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 19-21, 21-15-21-13 என்ற செட் கணக்கில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற சக வீரர் உமேஷ் விக்ரம் குமாரை வென்று, தங்கம் கைப்பற்றினார். இந்தியா இத்தொடரில் 8 தங்கம், 9 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.

Jan 20, 2026

 நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரங்கில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தார்.

.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்  மெல்போர்னில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ் மோதினர். ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் 100வது வெற்றி.இங்கு விளையாடிய 110 'போட்டியில், 100 வெற்றி, 10 தோல்வியை சந்தித்தார்.

Jan 20, 2026

தமிழக ஆண்கள், பெண்கள் அணிகள் ,தேசிய பள்ளி விளையாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றனர்.

69வது தேசிய பள்ளி விளை யாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில் ,14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடகம், மேற்குவங்கம் உட்பட 32 அணிகள் பங்கேற்றன. தமிழக அணியில் அகில் சேது, சஞ்சய் நாராயணன், தனிஷ் ராகவன், மால்வின் ஜோஷுவா, பவ்ஜன் இடம் பெற்றனர். முதல் போட்டியில் தமிழக அணி 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானை வென்றது. அடுத்து பஞ்சாப் (3.5-0.5), மகாராஷ்டிரா (3.0-1.0), குஜராத்(3.0-1.0) அணிகளுக்கு எதிரான போட்டி உட்பட, மொத்தம் பங்கேற்ற 6 போட்டிகளிலும் தமிழகம், 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்று, சாம்பியன் ஆனது. மேஹா, பவித்ரா, பூஜா ஸ்ரீ, சாருதர்ஷினி, பிரகன்யா ,பெண்கள்பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி,  பங்கேற்ற 6 போட்டியிலும் வெற்றி பெற்று,. 12 புள்ளியுடம்முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனது.

Jan 20, 2026

வங்கதேச அணிக்கு டி-20' உலக கோப்பை தொடரில் ஐ.சி.சி., கெடு .

 வங்கதேசத்திற்கு, 'உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும்," என, ஐ.சி.சி., கெடு விதித்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான மனநிலைவங்கதேசத்தில் நிலவுகிறது. இதனால், வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.'டி-20' உலக கோப்பை தொடரில் ,இதற்கு பதிலடியாக,  (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,)  மறுத்து. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பலமுறை வேண்டுகோள் விடுத்தது. 'போட்டி அட்டவணை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. வங்கதேச அணி, இந்தியாவில் பங்கேற்பது குறித்து எவ்வித மிரட்டல் அல்லது நேரடி எச்சரிக்கை எதுவும் வரவில்லை. ஐ.சி.சி., தரப்பில் இந்தியாவில் விளையாடுவது குறித்து நாளைக்குள் முடிவு எடுக்கவேண்டும்,'  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Jan 19, 2026

பெங்கால் அணி 3-2 என, ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் டில்லியை வென்றது.

ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் இந்தியா லீக் புவனேஸ்வர், ராஞ்சி, சென்னையில்,  நடக்கிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் . நேற்று, நடந்த லீக் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதின.இதுவரை விளையாடிய 7 போட்டியில், 3 வெற்றி, 4 தோல்வி என, 9 புள்ளிகளுடன் பெங்கால் அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. 8வது இடத்தில் நான்காவது தோல்வியை பெற்ற டில்லி அணி 4 புள்ளி) நீடிக்கிறது.

Jan 19, 2026

இந்தியாவின் அர்ஜுன், சகவீரர் பிரக்ஞானந்தாவை டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன்நெதர்லாந்தில்,  மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ்கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர்விளையாடுகின்றனர்.இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசிமுதல் சுற்றில் மோதினர்.  32வது நகர்த்தலில் ,வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்று போட்டியில்  'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் ,உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்ட ரோவ் மோதி 78வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.வின்சன்ட் கீமர் (ஜெர் மனி), அர்ஜுன் (இந்தியா), ஹான்ஸ்நீமன் (அமெரிக்கா)  முதல் சுற்றின் முடிவில் தலா 1 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Jan 19, 2026

கிரிக்கெட்  ஒருநாள் தொடரை  இந்திய மண்ணில் முதல் முறையாக வென்ற நியூசிலாந்து அணி.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா வந்த நியூசிலாந்து அணி பங்கேற்று,. முதல் இரு போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி நேற்று இந்துாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட்மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு பெற்றார்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 337/8 ரன் குவித்தது,  இந்திய அணி 46 ஓவரில் 296 ரன்னுக்கு அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடரை 2-1 என  வென்று, நியூசிலாந்து அணிகோப்பை கைப்பற்றியது.

Jan 19, 2026

தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங்,இந்திய ஓபன் பாட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றார்.

 டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில்  இந்திய ஓபன் சர்வதேச பேட் மிண்டன் போட்டியில்,நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சீன தைபே வீரர் லின் சுன்யி 21-10, 21-18 என்ற நேர் செட் டில் ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேசியா) வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 'நம்பர் ஒன்' வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தென்கொரியாவின் அன்சே யங் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் 43 நிமிடங்களில் சீனாவின் வாங்ஷியியை தோற்கடித்து மீண்டும் பட்டத்தை கைப்பற்றினார். கோப்பையை வென்ற இவருக்கும் தலா ரூ.60 லட்சம் பரிசுத் தொகையாக வழங் கப்பட்டது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில் இந்தியர்கள் யாரும் கால் இறுதியை தாண்டவில்லை..

Jan 19, 2026

பெலாரசின் சபலென்கா, பிரிட்டனின் ரடுகானு, ஸ்பெயினின் அல்காரஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்மெல்போர்னில்,  பெண்கள் ஒற் றையர் பிரிவு முதல் சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா, பிரான்சின் டியான்ட்சோவா மோதினர். உலகின் 'நம்பர்-1' சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-4, 6-1 என தாய் லாந்தின் மனஞ்சயா சவாங்காயேவை மற்றொரு முதல் சுற்றில்வெற்றி பெற்றார். உக்ரைனின் எலினா ஸ்வி டோலினா 6-4, 6-1 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை தோற்கடித்தார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் அல்காரஸ்  6-3, 7-6, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். 

Jan 17, 2026

ஒருநாள் தொடரில் ஆண்கள் கிரிக்கெட்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க  இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைய, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 'பைனல்' போன்ற மூன்றாவது போட்டி நாளை (ஜன.18) இந்தாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய பவுலிங் கூட்டணியில்மாற்றம் செய்யப்படலாம் வெற்றி பெற்ற அணி கோப்பை கைப்பற்றலாம்.

1 2 ... 78 79 80 81 82 83 84 ... 188 189

AD's



More News