உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-16' போட்டியில் அமெரிக்க அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம், காலிறுதிக்கு முன்னேறியது.சியாட்டிலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-வது நிமிடத்தில் சார்லஸ் டி கெடேலேரே கோல் அடித்து பெல்ஜியத்திற்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடியாக 31-வது நிமிடத்தில் மாலிக் டில்மன் கோல் அடித்து அமெரிக்காவை சமநிலைக்கு கொண்டு வந்தார். இருப்பினும் முதல் பாதி முடிவில் பெல்ஜியம் 2-1 என முன்னிலை வகித்தது.இரண்டாவது பாதியில் ஹான்ஸ் வனாகென் (57), ரொமேலு லுகாகு (90+3) ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, பெல்ஜியம் 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம், அடுத்ததாக ஸ்பெயினை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் விளையாடிய அமெரிக்க அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து தொடரிலிருந்து வெளியேறியது.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா மற்றும் கோகோ காஃப் மோதினர்.முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பெகுலா கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக மீண்ட கோகோ காஃப், அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-3 என வென்று, 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், ஜெர்மனியின் யான்-லெனார்ட் ஸ்ட்ரப்பை 7-5, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஏலாவை 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக், அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரை 6-4, 6-4 என தோற்கடித்து காலிறுதியை எட்டினார்.மேலும், அமெரிக்காவின் கோகோ காஃப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை 4-6, 6-3, 6-4 என போராடி வென்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா, உலகின் முன்னணி வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவை 6-2, 7-6 என்ற செட்களில் அதிரடியாக வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜப்பானின் ஷின்டாரோ மோசிசுகியை 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-16' போட்டியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசிலுக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தை 80,663 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.மற்றொரு 'ரவுண்டு-16' போட்டி மெக்சிகோவின் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி, மெக்சிகோவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் பாதி முடிவில் 2-1 என முன்னிலை வகித்த இங்கிலாந்து, கடைசி வரை அந்த முன்னிலையை தக்கவைத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த போட்டியை 80,824 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.காலிறுதியில் இங்கிலாந்து அணி, ஜூலை 11-ம் தேதி மயாமியில் நடைபெறும் ஆட்டத்தில் நார்வேயை எதிர்கொள்கிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் நாக்-அவுட் சுற்றில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் கேப் வேர்டே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. புளோரிடாவின் மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 20-வது உலகக்கோப்பை கோலை அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். எனினும், சிறிய தீவு நாடான கேப் வேர்டே உலக சாம்பியன்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டம் சமனில் நீடித்ததால் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (Extra Time), கிறிஸ்டியன் ரொமேரோ அடித்த அதிவேக ஹெடர் கோல் மூலம் அர்ஜென்டினா அணி ஒருவழியாக தப்பியது.உலக சாம்பியனுக்கு மிகக் கடுமையான சவால் அளித்த கேப் வேர்டேவின் ஆட்டமும், மெஸ்ஸியின் சாதனையும் இந்த மோதலை நடப்பு உலகக்கோப்பையின் மிகச்சிறந்த போட்டியாக மாற்றியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த 'ரவுண்டு-32' போட்டியில் பிரான்ஸ் அணி, பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறியது. இந்தப் போட்டியை 68,324 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.இந்த வெற்றியின் மூலம் 2014, 2018, 2022, 2026 என தொடர்ந்து நான்காவது முறையாக பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.மேலும், உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரான்சின் எம்பாப்பே 19 போட்டிகளில் 19 கோல்கள் அடித்து 2வது இடத்தில் நீடிக்கிறார். 30 போட்டிகளில் 20 கோல்கள் அடித்துள்ள அர்ஜென்டினாவின் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இவா ஜோவிச்சை எதிர்கொண்டார்.முதல் செட்டை 4-6 என இழந்த பெகுலா, அதன்பின் அபாரமாக மீண்டு 6-3, 6-1 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி, 4-6, 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் ரோமன் சபியுலினை 7-6, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற புதிய சாதனையையும் ஜோகோவிச் படைத்தார். இதற்கு முன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 105 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், ஜோகோவிச் தனது 106-வது வெற்றியை பதிவு செய்து அந்த சாதனையை முறியடித்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை 'ஏ' அணியை எதிர்கொண்டது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், காலேவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி ஆதிக்கம் செலுத்தியது.முதல் இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 366 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த இந்தியா 'ஏ' அணி 9 விக்கெட் இழப்புக்கு 543 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.2-வது இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 209 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் ஆஷேன் பண்டாரா 87 ரன்கள் எடுத்தார். இந்தியா 'ஏ' அணியின் குர்னூர் பிரார் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.வெற்றிக்கு 33 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் (25*), அமன் மொகதே (11*) ஆகியோர் சிறப்பாக விளையாட, இந்தியா 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரையும் இந்தியா 'ஏ' அணி கைப்பற்றியது.
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, ஆஸ்திரியாவை எதிர்கொண்டது.ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று ரவுண்ட்-16 (3-வது சுற்று) போட்டிக்குத் தகுதி பெற்றது.இதேபோல், வான்கூவர் நகரில் நடைபெற்ற மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.13-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள சுவிட்சர்லாந்து, 88 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1938 உலகக் கோப்பையில்தான் அந்த அணி நாக்-அவுட் சுற்றில் வெற்றி கண்டிருந்தது.
லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது ஆதிக்கத்தை தொடர்கிறார்.ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில், பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்னெச்சை 7-5, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்திய ஜோகோவிச், 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார். இது விம்பிள்டனில் அவர் பதிவு செய்த 105-வது வெற்றியாகும்.இதன் மூலம், விம்பிள்டனில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர் என்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.மற்றொரு ஆட்டத்தில், உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜென்சனை 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில், முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோவை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.