கோபிசந்த் மல்லேனி தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை இயக்க உள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் காரணமாக படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டது, அதிக சம்பளம் காரணமாக நயன்தாராவும் வெளியேற, அவருக்கு பதில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
உலக சினிமாவில் உயரிய விருதாக உலக சினிமாவில் , ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்கு புது விதிகள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக் கியமாக ஏஐயில் உருவாக் கப்படும் படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு எடுத் துக் கொள்ளப்பட மாட்டாது. படத்தில் ஒரு அங்கமாக ஏஐ பயன்படுத்தலாமே தவிர முழுவதும் ஏஐஆக இருக்க கூடாது. கதை, திரைக்கதை, நடிப்பு உள்ளிட்டவைகளில் மனிதர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். மற்றவை தகுதியற்றதாகக் கருதப்படும் என ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.
2026 ம்ஆண்டின் நான்கு மாதங்களில் இதுவரை 86 படங்கள் வெளியாகி,. அவற்றில் நான்கைந்து படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தமிழக சட்ட சபை தேர்தல் பரபரப்பால் இருவாரங்களாக படங்களின் ரிலீஸ் மந்தமாக உள்ளது. இந்தவாரம் (மே 8 ல்) ரத்ன குமார் இயக்கத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள '29' என்ற ஒரு தமிழ் படமே வெளியாகிறது.
'பாலன் தி பாய்'. இயக்குனர் ஜித்து மாதவன் கதையில் சிம்பரம் இயக்கத்தில் உருவாகி உள்ள மலையாள படம். உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 'மார்ச் டு பிலிம் பிரிவில் திரையிட இப் படம் தேர்வாகி உள்ளது. தாயை தேடி அலையும் ஒரு சிறுவனின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. கேன்ஸ் பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சி என்றார் இயக்குனர்.
மராத்தியில் 'ராஜா சிவாஜி' என்ற படத்தை பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தற்போது இயக்கி, நடித்துள்ளார். இவரது மனைவி ஜெனிலியா, அபிஷேக்பச்சன், சஞ்சய் தத், வித்யாபாலனும் நடித்துள்ளனர். இளம் வயது சிவாஜி கதாபாத்திரத்தில் ரித்தேஷ் ஜெனிலியாவின் இளைய மகன் ராஹில் நடித்துள்ளார். இதன்மூலம் நட்சத்திர வாரிசு, அப்பாவின் முதல் இயக்கத்தில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார்.
மலையாள நடிகை மமிதா பைஜூ, தமிழில் முழு கவனம் செலுத்தி வரு கிறார். இந்தாண்டு அவரது முதல் தமிழ் படமாக விஜயுடன் நடித்த 'ஜனநாயகன்' சென்சார் பிரச்னையால் தாமதமாகிறது. விரைவில் வெளியாகும் என்கின்றனர். இதற்கிடையே அவர் நடித்த 'கர' ஏப்.30ல் ரிலீசாகிறது. அவர் நாயகியாக நடித்துள்ள சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', விஷ்ணு விஷாலின் 'இரண்டு வானம்' படங்களும் ரிலீசாக உள்ளன.
தனுஷ் நடித்த 'கர' படம் ஏப்.30ல் ரிலீசாகிறது. இப்பட விழாவில் பேசிய தனுஷ், "அடுத்து ராஜ்குமார் பெரிய சாமி, மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து என 3 இயக்குனர்கள் எனக்காக காத்திருக்கின்றனர். இதில் 'வட சென்னை 2' படமும் இருக்கிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு தான், புதிய படம் இயக்குவது பற்றி மீண்டும் யோசிக்க வேண்டும்" என்றார்.
இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் இயக்கத்தில்'பார்க்கிங்', சிம்புவின் 49வது படம், ரஜினியின் படம் ஆகியவை பேச்சுவார்த்தையில் இருந்து பின்னர் கைவிடப் பட்டது. தற்போது சிம்புவுக்கு கூறிய அதே கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க, மலையாள நடிகர் திலீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மே 1ல் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'பேட்ரி யாட்'. ரிலீசாகிறது. இதில் மோகன்லால் வேடத்தில் நடிக்க முதலில் சுரேஷ் கோபியை வைத்து தான் கதை எழுதினாராம் இயக்குனர் மகேஷ் நாராயணன். மம்முட்டியிடம் கதை சொன்னபோது அவர்தான் மோகன்லாலை பரிந்துரைத்த பிறகு, மோகன்லால் இப்படத்தில் நடித்துள்ளார்.
1993 ரிலீசான 'கல்நாயக்' படம் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து ஹிட்டானது. சுபாஷ் கை இயக்கியிருந்தார். 33ஆண்டுக களுக்கு பிறகு தற்போது 'கல் நாயக் ரிட்டன்ஸ்' என்ற பெயரில் இதன் 2ம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. ' இப்படத்தையும் அதே இயக்குனர் இயக்க, விரைவில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.