25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வெள்ளித்திரை

May 14, 2026

மோகன்லால் பிறந்தநாளில் வெளியாகும் 'திரிஷ்யம் 3'

மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணி யில் திரிஷ்யம் 1, 2வை தொடர்ந்து உருவாகி வரும் படம் 'திரிஷ்யம்3, ஏப்.,2ல் திரைக்கு வருவதாக அறி விக்கப்பட்டது. இதன் ரிலீஸில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் போர் பிரச்னையால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதட்டமானசூழலால் மே 21ல் மோகன்லால் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

May 14, 2026

'3 இடியட்ஸ் '2 ம் பாகம்.

அமீர்கான். மாதவன், ஷர் மன் ஜோஷி, கரீனா கபூர் நடித்து வெளி யான 3 இடியட்ஸ் ஹிந்தி படம் 2009ல் ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில் ஹிட்டானது. இதன் 2ம் பாகம் குறித்து பேசிய அமீர்கான் "அதற்கான கதையை கேட்டேன். நல்லபடியாக வந்துள்ளது. கதையை இறுதி செய்ய பல வேலைகள் உள்ளன. அதே நகைச்சுவை பாணி இருந்தாலும் இதுவரை சொல்லப் படாத கதையாக இருக்கும்.

May 14, 2026

வாழ்க உமது சேவை பணி.

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த,"! சூர்யாவின் அகரம் அறக்கட்டளை," தமிழகம் முழுவதும்,"பாழடைந்த 50,,க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை தத்தெடுத்து, "நவீன வசதிகளுடன், " அவர்கள் சீரமைத்து வருகிறார்கள் இந்த செயலை  வாழ்த்தி, வணங்குகிறோம் .

May 14, 2026

'வாழை' பட சிறுவன் +2 தேர்வில்  600-க்கு 506 மார்க்குகளை பெற்றுள்ளார்.

'வாழை' படத்தில் நடித்த பொன் வேல்  +2 பொதுத்தேர்வு முடிவுகளில் 600-க்கு 506 மார்க்குகளை பெற்றுள்ளார்.   நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த, பொன் வேல்  தற்போது தனது படிப்பிலும் சிறப்பாக" செயல்பட்ட  பாராட்டுகளை பெற்று வருகிறார். 

May 14, 2026

மறுமணம்,விதவை திருமணத்தைஆதரித்து,படம் நுாறுசாமி  படம் .

'நுாறு சாமி விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள படம் ,பற்றி இயக்குனர் சசி கூறுகையில், "கள்ளக் குறிச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பற்றி ஒரு டாக் ஷோவில் பேசினார்கள். அப்போது இந்த கரு உருவானது. இந்த படம் பார்த்த பலர் தங்கள் உறவு பெண்ணுக்கு அதை செய்து இருக்கலாமே என நினைப்பார்கள்" என்றார். மறுமணம்,விதவை திருமணத்தைஆதரித்து இந்தப்படம் இருக்கும். முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதால் விரைவில் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

May 14, 2026

முதல்வராக தபு ,கேங்ஸ்டராக நாகார்ஜுனா...

 100வது படத்தில் ,தெலுங்கு நடிகர் நாகார் ஜூனா  இப்போது  நடிக்கிறார். இதை தமிழில் “நித்தம் ஒரு வானம்” படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்க, தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ் மிதா பட் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிரீயட் படமாக உருவாகும் இந்த கதையில் நாகார்ஜூனா கேங்ஸ்டராகவும், தபு முதல்வராகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

May 14, 2026

வில்லன் பஹத் சல்மான்கான் 'தி மெசஞ்சர்ஸ்' படத்தில் …

ஹிந்தியில் சல்மான் கான், நயன்தாரா நடிப்பில் , வாரிசு படத்தை இயக்கிய வம்சிபைடிபள்ளி ஒரு படத்தை இயக்குகிறார். ஜவான் படத்திற்கு பின் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. முக்கிய வேடத்தில் அக்ஷய் கண்ணா, பஹத் பாசில், அரவிந்த்சாமி ஆகியோரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு 'தி மெசஞ்சர்ஸ்' என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளனர்.

May 14, 2026

சாய்பல்லவி  'ஏக்தின்' படத்தில் நான் செட்டாகவில்லை.

'ஏக்தின்' படத்தில் நடிகை சாய் பல்லவி ஹிந்தியில், அமீர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக நடித்தார். ஓரளவே வரவேற்பை பெற்றது. பட விழாவில் பேசிய சாய் பல்லவி, "இந்தப் படத்தின் முழு காப்பியைப் பார்த்த போதுதான், இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் செட்டாகவில்லை என்று உணர்ந்தேன்.  அமீர்கானிடமே இன்னும் கொஞ்சம் ஆடம்பரமான அல்லது துடிப்பான தோற்றம் கொண்ட ஒரு புதிய நடிகை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினேன்" என்றார்.

May 07, 2026

எம்.எஸ்., சுப்புலட்சுமி படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு பதில் ருக்மணி வசந்த்.

கவுதம் தின்னனுாரி பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். இதில் சாய் பல்லவி நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு பதில் ருக்மணி வசந்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.கன்னடத்தில் இவர் நடித்த 'சப்த சாக ரலு தாட்டி எல்லா' படத்தை பார்த்த இயக்குனர், ருக்மணியை நடிக்க வைக்க முடிவுசெய்தாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.

May 07, 2026

நாகசைதன்யா புதையலை தேடும் வேட்டைக்காரனாக நடிக்கும் படம்' 'விருஷ கர்மா'.

இயக்குனர் கார்த்திக் தண்டு வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம்' 'விருஷ கர்மா'. நாக சைதன்யா, " புதையலை தேடிச் செல்லும் ஒரு வேட்டைக்காரனாக அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாலி வுட்டில் இதுபோல பல படங்கள் வந்தாலும், இந்தியாவில் சில படங்களில் மட்டுமே இதுபோல முயற்சி செய்கின்றனர். நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை கொடுக்கும்" .

1 2 ... 18 19 20 21 22 23 24 ... 97 98

AD's



More News