25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jan 29, 2026

படகுப் போட்டியில் ஈடுபடும் மீனவர்கள் வாழ்க்கை “மண்டாடி "படக்கதை .

 படகுப் போட்டியில் ஈடுபடும் மீனவர்கள் வாழ்க்கை, போராட்டம், இணையில்லா அன்பு என எல்லாவற்றையும் சொல்லும் படமாக இது இருக்கும்" என மண்டாடி படத்தில் நாயகனாக நடித்து வரும் சூரி கூற"ஜல்லிக் கட்டு போன்று தமிழக மீனவர்களின் பண்பாட்டு அடையாளமாக படகு போட்டி நடக்கிறது. ஒரு அணியில் 6 பேர் இருப்பார்கள், அவர்களின் கேப்டன் தான் மண்டாடி என அழைக்கப்படுவார். 

Jan 29, 2026

ஹிந்தியில் “ஏக் தீன்' அமீர்கான் படத்தில் சாய் பல்லவி

ஹிந்தியில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக நடிகை சாய் பல்லவி “ஏக் தீன்' படத்தில் நடித்துள்ளார் ."இது ஒரு தூய்மையான கிளாசிக் கலந்த மேஜிக்கான காதல் படம், சாய்பல்லவி நடித்தது மகிழ்ச்சி. சிறந்த நடிகையான அவரும், என் மகனும் சிறப்பாக நடித்துள்ளனர் .மே 1ல் படத்தை காண ஆவலுடன் உள்ளேன்" என்றார் அமீர் கான்.

Jan 29, 2026

பாடகி எஸ் ஜானகி, மகன் முரளி காலமானார்.

எஸ் ஜானகி, 87. பல மொழி களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். இந்திய சினிமாவின் மூத்த பின்னணி பாடகிகளில் ஒருவர். சினிமாவை விட்டு ஒதுங்கி ஐதர்ராபாதில் வசிக்கிறார். இவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா, 65, மாரடைப்பால்  காலமானார்.. தெலுங்கு, மலையாளத்தில் சில படங்களில் முரளி நடித் துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

Jan 29, 2026

ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகிய 'சிறை 'படம் , ரூ.31 கோடி வசூலை பெற்றது.

விக்ரம் பிரபு நடித்த 25வது படம் 'சிறை ', அறிமுக இயக்குனர் ப சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில். தயாரிப்பாளர் லலித் மகன் எல்.கே.அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.  நல்ல விமர்சனங்களை பெற்ற இப் படம் ,ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி, தமிழகத்தில் மட்டும் ரூ. 22. 27 கோடி வசூலை பெற்றது. 25 நாட்களில்ரூ.31.58 கோடி வசூலித் துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Jan 29, 2026

'ஹோம்பவுண்ட்' ஆஸ்கர் இறுதிப்பட்டியலிலிருந்து வெளியேறியது

இந்தியா சார்பில் 'ஹோம்பவுண்ட்' படம் 98வது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. வெளிநாட்டு பிரிவில் ஒவ்வொரு சுற்றாக முன்னேறி 15 படங்கள் தேர்வு பட்டியல் வரை இடம் பெற்றது.. பிரேசில், பிரான்ஸ், நார்வே, ஸ்பெயின், துனிசியா நாட்டு படங்கள் தேர்வாகின. நேற்று முன் தினம் இறுதிப் போட்டிக்கான 5 படங்கள் போட்டி யில்  'ஹோம்பவுண்ட்' தேர்வாகவில்லை.

Jan 29, 2026

ஹிந்தியில் 37 ஆண்டுகள் கிடப்பில் இருந்த  'ஹம் மே ஷஹென்ஷா கோன்'ரஜினி படம் ரிலீஸாகிறது

ரஜினி, சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா படமான  1989ல் தயாராகி 37 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 'ஹம் மே ஷஹென்ஷா கோன்'வை 4கே தரத்தில், 5.1 தரத்தில் ஆடியோ மாற்றி, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். இந்தப்பட இயக்குனர்ஹர்மேஷ் மல்கோத்ரா, இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் பியாரிலால் உள்ளிட்ட இதில் பணியாற்றிய பல கலைஞர்கள் இறந்துவிட்டனர்.

Jan 29, 2026

இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் கடந்த ஆண்டு  போலவே இந்த ஆண்டிலும், அதிகபடங்கள்  வெளியாகிறது. இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்.

 இந்த மாத படங்களின் எண்ணிக்கை 22 ஆக இந்தவாரம் உயர்ந்து, ஜன  30",க்ரானி,  காந்தி டாக்ஸ், கருப்பு பல்சர், லாக் டவுன், மெல் லிசை, ராட்ட, திரைவி ஆகிய தமிழ் படங்கள் ரீலீஸாவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. 

Jan 29, 2026

பத்மஸ்ரீ விருது பெற்ற @Actor Madhavan

, சினிமாவிலிருந்து இளம் மனங்களை உரையாற்றுவது ,மற்றும் சமூக விழிப்புணர்வை வளர்ப்பது வரை, இந்த விருது அனுபவம், ஆர்வம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை மிக்க கண்ணோட்டத்தின் உச்சக் கட்டமாகும்.

Jan 29, 2026

1971ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரை பின்னணியாக வைத்து உருவானது 'பார்டர் 2' ரூ. 129.89 கோடி வசூலித்தது.

.சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித், அஹான் நடிப்பில், அனுராக் சிங் இயக்கத்தில், ஹிந்தியில் வெளியாகி உள்ள படம் 'பார்டர் 2”.1971ல் நடந்த இந்தியா பாகிஸ் தான் போரை பின்னணி யாக வைத்து உருவானது. வெள்ளியன்று ரிலீஸான இப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ.129.89 கோடி வசூலித்துள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.

Jan 22, 2026

தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா.

தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா சார்..! ஒவ்வொரு நடிகருக்கும் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் இந்த இன்ஸுரன்ஸை முழுமையாக அவரே கட்டீட்டு வரதில்லாம, அவர்களது குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு உதவி செய்துவருகிறார் என ஸ்டண்ட்மாஸ்டர் சில்வா அறிவித்துள்ளார்.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 89 90

AD's



More News