25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வெள்ளித்திரை

Mar 12, 2026

65 மில்லியன் பார்வைகள்'துரந்தர்-2' டிரைலர்.

 ஆதித்யா தர்,ரன்வீர் சிங் கூட்டணியில் துரந்தர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. மார்ச் 19ல் படம்வெளியாகஉள்ளநிலையில் இதன்டிரைலர்மார்ச் 7ம்தேதிவெளியானது.தமிழ், தெலுங்குஉள்ளிட்ட 5 மொழிகளையும் சேர்த்து 65 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.

Mar 12, 2026

50 கோடி 10 நாளில் வசூலித்த 'தாய் கிழவி'.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் இந்தாண்டில் இதுவரை வெளியான 50க்கும் அதிகமான படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி' ஆகிய படங்கள் தான் லாபம் தந்துள்ளது. 'தாய் கிழவி. படம் வெளியான 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது.

Mar 12, 2026

மகேஷ்பாபுவை ஸ்டார் ஆக்கிய 'போக்கிரி' .

'வாரணாசி' படத்தில்  ராஜமவுலி இயக்க, நடிக்கிறார் மகேஷ்பாபு. அவர் அளித்த பேட் டியில், “2006 ரிலீசான 'போக்கிரி' படம் வெற்றி பெற்று என்னை ஸ்டார் ஆக்கி,. எனக்கு வேறு வித மான பெரிய அனுபவத்தை கொடுக்கிறது" ,ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது.

Mar 12, 2026

எனக்கு 7 வருஷத்துக்கு ரூ7500, சூர்யா குடும்பம் ஒரு வேளை சாப்பிட இவ்வளவு செலவு. உண்மையை உடைத்த சிவக்குமார் .

அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட2 மடங்கு இப்போது சூர்யா ஜோதிகா ஒருவேளை  சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.நான் சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான்7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ.15000 வருகிறது. பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய7 ஆண்டுகள் ஆன செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.

Mar 12, 2026

41 வயது சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 39 வயது நடிகை ரம்யா நம்பீசன்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரம்யா நம்பீசன் தி கோட்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. கோட் படத்தைப் போலவே தந்தை மகன் என சிவகார்த்திகேயன் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார். பிரபல ஹாலிவுட் நிறுவனமான லோலா வி.எஃப்.எக்ஸ் இந்த படத்திற்கான வி .எஃப்.எக்ஸ். பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. 

Mar 07, 2026

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25.30 கோடி வசூல் செய்த “தாய் கிழவி' படம்.

சிவக்குமார் முருகேசன் இயக்குனராக “தாய் கிழவி' படம் மூலம் அறிமுகமாகி. முதல் படம் என்றாலும் திறமையாக கையாளப்பட்டதாக பாராட்டப்படுகிறது. 'பவுனுத்தாயி' கதாபாத்திரம், ராதிகா சரத்குமார் நடித்தது ' அதிக கவனம் பெற்றுள்ளது. பெண்களின் சமத்துவம், குடும்பத்தில் பெண்களின் இடம் போன்ற சமூக கருத்துகளை பேசும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புபெற்றுள்ளது. ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25.30 கோடி வசூல் செய்துள்ளது.

Mar 05, 2026

“ கெணத்த காணோம்" வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு .

 சுரேஷ் சங்கையா 'ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை, ஆகிய படங்களை இயக்கிகவனம்பெற்றவர்.  யோகிபாபு 2024ல் மறைந்த இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகிறது. படத்திற்கு "கெணத்த காணோம்" என பெயரிட்டுள்ளனர்

Mar 05, 2026

சமுத்திரக்கனி மீண்டும் இயக்கும் படம்.

இயக்குனராக வந்த சமுத்திரக்கனி தொடர்ந்து, நடித்து வந்த இவர் மீண்டும், ஒரு சிறிய பட்ஜெட் படமொன்றை இயக்குகிறார் . கடைசியாக தமிழில் 2021ல் 'வினோதய சித்தம்' படத்தை இயக்கி வரவேற்பை பெற்றது. அதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தலைப்பு, மற்ற நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

Mar 05, 2026

யுடியூப்பில் வெளியான 'லிட்டில் விங்ஸ்' தேசிய விருது பெற்றது.

தமிழ் குறும்படம் தேசிய விருது பெற்ற 'லிட்டில் விங்ஸ்'. நவீன் இயக்க, மணிமேகலை, காளிதாஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது யுடியூப் தளத்தில் இந்த குறும் படத்தை 27 பிப்ரவரி  மாலை 5:00 மணியளவில் வெளியிட்டது. நவீன் கூறுகையில்,  ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படும்"கதை யின் நாயகன் .அவரது ஆசை நிறைவேறியதா என்பது கதை" என்றார்.

Mar 05, 2026

'வாரணாசி' படப்பிடிப்பு ஜார்ஜியாவில்…

மகேஷ்பாபு, பிரியங்காசோப்ரா, பிருத்விராஜ்நடிப்பில்,ராஜமவுலி இயக்கத்தில்,உருவாகிவரும்தெலுங்குப்படம் 'வாரணாசி'. முதற்கட்ட படப் பிடிப்பு ஐதராபாத், ஒரிசாவிலும் அடுத் தக்கட்ட படப் பிடிப்பு கென்யா நாட்டிலும் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பனி படர்ந்த ஜார்ஜியா நாட்டில் நடக்கிறது.இதற்காக மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். 

1 2 ... 25 26 27 28 29 30 31 ... 97 98

AD's



More News