மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 20.08.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது.19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, 19.08.2026 மாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரை திருவில்லிபுத்தூர், நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள நகர் மன்ற கூட்டரங்கில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 04.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர். எனவே, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட வழிவகை செய்யும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய சுதந்திர தினம் – 15.08.2026 அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொருநாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.அதன்படி, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலாளர்களிடம், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றம் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பித்திட வேண்டும்.மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை அனுசரிக்காமலும் அவற்றிக்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 19 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 28 உணவு நிறுவனங்கள் மற்றும் 05 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 52 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் ( தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மூன்று நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பளப்பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.சுதந்திர தினத்தன்று கிராமங்கள் தோறும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை நிற புறாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்க விட்டார்.காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 55 காவலர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 11 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை, 20 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிந்தமைக்காக 5 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 3 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், வனத்துறை சார்பில் 3 அலுவலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 26 அலுவலர்களுக்கும், யுவ ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் 6 நபர்களுக்கும், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 19 அலுவலர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் 18 அலுவலர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 1 அலுவலருக்கும், வேளாண்மைத்துறை சார்பில் 9 அலுவலர்களுக்கும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை சார்பில் 7 அலுவலர்களுக்கும், சமூகநலத் துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், பதிவுத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், கரூவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பொதுப்பணித்துறை சார்பில் 6 அலுவலர்களுக்கும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 23 அலுவலர்களுக்கும், போக்குவரத்துத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துக்கழகம் (மதுரை) லிட், விருதுநகர் மண்டலம் சார்பில் 1 அலுவலருக்கும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தொழில் வணிகத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்பில் 1 அலுவலருக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், நீர்வளத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 1 அலுவலருக்கும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 அலுவலர்களுக்கும், தாட்கோ சார்பில் 1 அலுவலருக்கும், பொது நூலகத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட் சார்பில் 1 அலுவலருக்கும், கைத்தறித்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பேரூராட்சித்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், வணிகவரித்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில் 2 அலுவலர்களுக்கும், சுதந்திர தின விழா பணிகளை சிறப்பாக செய்தமைக்கான நற்சான்றிதழ் 7 நபர்களுக்கும் என மொத்தம் 256 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.ரவீ மீனா,இ.வ.ப., திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு, சிப்காட்) திருமதி சசிகலா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) திரு.எம்.ராஜசேகர், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய திருநாட்டின் 80-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் (15.08.2026) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தாது உப்புக்கலவைகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், விதைகளையும், 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் வெற்றி இல்லம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.5 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளது. வீடு இல்லாமல் இடம் வைத்துள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பொதுமக்கள் தங்களது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளையும், வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அங்கன்வாடி மையம், வாறுகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2025 முதல் 15.08.2026 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும், பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.அதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) (பொ) திரு.பாலசுப்பிரமணியன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.அதன்படி , படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 22.08.2026 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர்-சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் அமைந்துள்ள ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எம்ஆர்எஃப் டயர்ஸ், ஹுண்டாய் மோட்டார்ஸ், வி.வி.வி & சன்ஸ் எடிபில் ஆயில்(இதயம்), ராயல் என்பீல்டு, மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, அடையார் ஆனந்தபவன், சென்டர்சாஃட் டெக்னாலஜிஸ், சால்காம்ப் போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்கள தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 22.08.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் கலந்து கொள்ளவதற்கு முன்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME)> அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணிற்கு (9360171161) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பருப்பு வகைகளில் முழுமையான தன்னிறைவு அடைவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் மூலம் ஆத்மநிர்பர்தாவிற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு வேளாண்மையின் மூலம் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 2025 – 26 முதல் 2030 – 31 வரை பயறு உற்பத்தி அதிகரிப்பு பயறு வகை சாகுபடி பரப்பு விரிவாக்கம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு உளுந்து மற்றும் பாசிபயறு வகைகளில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய கூறான சான்று விதை விநியோகம் (8 ஆண்டுகளுக்கு உட்பட்டது) மூலம் குவிண்டாலுக்கு ரூ.6,000/- வீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு 400 குவிண்டால் உயர்ரக விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.10,000/- மதிப்புள்ள செயல்விளக்க திடல் அமைப்பதற்கு தேவையான இடுபொருட்கள் (விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், Pulse wonder, பயிர் பாதுகாப்பு மருந்துகள்) விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது தங்கள் பகுதி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற்று பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தலைமையில், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில் (14.08.2026) தொடங்கி வைத்தார்கள்.அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத்தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவைதொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது.ஆடிப்பூரத் தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., இணை ஆணையர் திரு.செ.மாரியப்பன், தக்கார்/உதவி ஆணையர் திரு.மு.நாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர் திருமதி சௌ.சக்கரையம்மாள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு (14.08.2026) பக்தர்களுக்கு உணவினை பரிமாறினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையினை உயர்த்தி அறிவித்தார்கள்.அதன்படி, விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளைப் பயிரிடவும், அறுவடை செய்திடவும், விற்பனை செய்திடவும், தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர். நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகை அதிகரிக்கப்பட்டது.அதனடிப்படையில், நெல் கொள்முதல் பருவம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.289/-ம் மற்றும் பொது ரக நெல் ஒன்றுக்கு ரூ.159/-ம் என உயர்த்தி, சன்னரக நெல் ரூ.2,750/-ம் பொது ரக நெல் ரூ.2,600/-ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், 2025-26 கரும்பு அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. அதற்கு மேல் தமிழ்நாடு அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கரும்பு விலையாகக் கிடைக்கப்பெறும்.மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையினை ஓர் ஆண்டில் ரூ.156 மேல் உயர்த்தி வழங்குவதும், கரும்பு சிறப்பு ஊக்கத் தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓர் ஆண்டில் ரூ.134-க்கு மேல் வழங்கப்படுவதும் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.மாநில அரசு வழங்கும் நெல் மற்றும் கரும்பிற்கான ஊக்கத்தொகையினை தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தி வழங்கி, விவசாயிகளை ஒருபோதும் விட்டுவிடாமல் அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து விவசாயம் சிறக்கவும், ஊரக வாழ்வாதாரம் சிறக்கவும் என்றும் உறுதுணையாக இருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களிடம் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் கொருக்காம்பட்டி – இராஜபாளையம் வழிதடத்திற்கும் மற்றும் அருப்புக்கோட்டை – திருச்சுழி வழித்தடத்திற்கும் புதிய பேருந்து சேவைகளை இன்று(13.08.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம், கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையம் வழிதடத்திற்கும், அருப்புக்கோட்டை – திருச்சுழி வழிதடத்திற்கும் புதிய பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து சேவை மூலம் அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவர்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்த பேருந்து சேவை உதவிகரமாக அமையும். மேலும், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு பயண நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து, எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும். புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இச்சேவை உறுதுணையாக அமையும். மேலும், இப்புதிய பேருந்து சேவை மூலம் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் எளிதில் சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படுவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கும் வழிவகை செய்யும். எனவே, இப்புதிய பேருந்து சேவையினை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், இப்பகுதி மக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து சேவை வழங்கிய தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.