25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 18, 2026

ஏப்ரல் 1 முதல் புதிய ATM விதிகள்!

மாற்றம் செய்த இரண்டு வங்கிகள்!*முக்கிய மாற்றங்கள்:UPI மூலம் ATM-ல் பணம் எடுத்தாலும், அது இப்போது "Free Limit” க் குள் சேரும்.இலவச வரம்பு முடிந்தால், ஒவ் வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 +வரி .தினசரி பணம் எடுக்கும் வரம்பு சில வங்கிகளில் குறைப்பு.Card இல்லாமலே QR Scan செய்து பணம் எடுக்கும் புதிய வசதி.முக்கிய வங்கிகள் எடுத்த முடிவுகள்:HDFC Bank - UPI பரிவர்த்தனையும் Free Limit-ல் சேர்க்கப்பட்டது.Punjab National Bank – தினசரி பணம் எடுக்கும்  வரம்பு மாற்றம்.Jio payments Bank - Cardless  QR withdrawal வசதி.

Apr 17, 2026

உங்களை ஏழையாக மாற்ற கூடிய பத்து பழக்கங்கள்.

1. பணம் வந்ததும் செலவழிக்காதீங்க.2. கடன் வாங்கி வாழ நினைத்தால் உங்கள் நிலை மோசமாகிவிடும்.3. பிறர் பார்வைக்காக செல்வழிக்காதீங்க.4. வருமானத்தை விட ,ஆசை அதிகமாக இருந்தால் பணம் பறந்து போகும்.5.உண்மையான தேவைக்கு மட்டும் செலவிடுங்க.6.பாசாங்கு செலவுகள் பாதுகாப்பை சிதைக்கும்.7. பணம் வரும் வழியை கவனியுங்கள். போகும் வழியே உங்கள் நிலையை தீர்மானிக்கும்.8. ஆடம்பர வாழ்க்கை ஆழ்ந்த வறுமைக்கு வழிவகுக்கும்.9.நாளைக்காக சேமிக்க தவறாதீங்க.10.தேவையற்ற செலவுகளை தவிர்த்திடுங்கள்.

Apr 17, 2026

கோடை காலத்தில் உங்க வீட்டை ஏசி போல மாத்த ஒரு எளிய வழி

வீட்டு ஜன்னல்களுக்கு ,கரும் பச்சை அல்லது கருநீல நிற திரைச் சீலைகளை பயன்படுத்தினால், வெயிலின் உஷ்ணம் உள்ளே வருவது குறையும்.

Apr 17, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை...

ரேஷன் அட்டைதாரர்களுக்குTN அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள். அவர்கள் உடனே தங்கள் கார்டை பொது ரேஷன் கார்டாக மாற்ற வேண்டும். இதை உறுதிப்படுத்த அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடந்த உள்ளனர். விதிகளை மீறினால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.

Apr 17, 2026

பறவைகள் பறக்கும் விதம்.

உணவு, இனப்பெருக்கம், காலநிலைக்காக பறவைகள் வலசை (இடம் பெயர்தல்) செல்கின்றன.இடைநில்லாமல் ஆயிரக்கணக்கான கி.மீ., துாரம், கண்டங்கள் தாண்டி இலக்கை அடைகின்றன. இதற்காக பறவைகள் ஒரு யுக்தியை கடைபிடிக்கிறது என விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி சஹாரா போன்ற பாலைவன பகுதியில் இரவு நேரத்தில் பறக்கின்றன. இதுவே பகலில் எனில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க மேலும் உயரே பறக்கிறது. ஆனால் கடல் பகுதியில் மிக தாழ்வாக பறக்கிறது. அதிலும் சில பகுதியில், சில மீட்டர் உயரம் தான் வித்தியாசம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

Apr 16, 2026

உளவியல் ரகசியம்.

ஒருவருடன் பேசும்போது அடிக்கடி அவர்களது பெயரைப் பயன்படுத்திப் பேசுங்கள். ஒரு மனிதருக்குப் பிரபஞ்சத்திலேயே மிகவும் பிடித்தமான சத்தம் அவர்களது பெயர்தான். இது உடனடியாக உங்கள் மீது ஒரு நன்மதிப்பை உருவாக்கும்.நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றால், அடுத்த முறை அவர்கள் உங்களைப் பார்க்கும்போதும் அதே உற்சாகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்யாராவது உங்களிடம் ஒரு கேள்வி கேட்டு,அதற்கு அவர்கள் முழுமையாகப் பதில் சொல்லவில்லை என்று நீங்கள் கருதினால், பேசாமல் அவர்களது கண்களைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அந்த அமைதி அவர்களை சங்கடப்படுத்தும், இதனால் அவர்கள் மீதமுள்ள தகவலையும் தானாகவே சொல்லிவிடுவார்கள்.'உங்களுக்கு ஒரு பெரிய உதவி தேவைப்பட்டால், முதலில் ஒரு மிகச்சிறிய உதவியைக் கேளுங்கள் (உதாரணமாக: "ஒரு பேனா கிடைக்குமா?"). ஒருமுறை சிறிய உதவி செய்தவர், அடுத்த முறை நீங்கள் கேட்கும் பெரிய உதவியைச் செய்வதற்கான வாய்ப்பு 80% அதிகம்.

Apr 16, 2026

கணினியைச் செயலிழக்கச் செய்யும் புதிய வைரஸ்'வைப்பர்' மால்வேர்.

அமீரக அரசு விடுத்துள்ள அவசர 'சைபர்' எச்சரிக்கை!அமீரகத்தில் சைபர் தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதால், கணினியில் உள்ள தரவுகளை அழிக்கும் 'வைப்பர்' மால்வேர் குறித்து அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களதுமுக்கியத்தகவல்களைப்பாதுகாப்பாகப்பேக்அப்எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Apr 16, 2026

 106 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்! 

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும் என்றும், வரும் மே மாதத்தில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் பருகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apr 15, 2026

50 வயதுக்கு மேல் நிம்மதியாக வாழ, FINANCIAL RULES!

1. ரிட்டயர் ஆகுற வயசுக்குள்ள உன்னோட எல்லா கடன்களையும் (EMI) முழுசா அடைச்சிடுங்க. 2. எந்த நோய் வந்தாலும் உன் சேமிப்பு அழியாம இருக்க ஒரு தரமான ஹெல்த் இன்சூரன்ஸ் வெச்சுக்கோங்க. 3. பிள்ளைகளை நம்பி உன் பைனான்ஸை விட்டுக்கொடுக்காத, உனக்குனு தனியா பணம் இருக்கணும். 4. ரிஸ்க் அதிகமா இருக்குற ஷேர் மார்க்கெட்டை விட, நிலையான வருமானம் தர்ற இடத்துல முதலீடு பண்ணு. 5.உனக்கு சொந்தமா, வாடகை கட்ட தேவையில்லாத ஒரு வீடு கட்டாயமா இருக்கணும். 6. Passive Income மாசா மாசம் உங்க அக்கவுண்ட்டுக்கு வர்ற மாதிரி ஒரு செட்டப் பண்ணுங்க. 7.உனக்கு அப்புறம் உங்க சொத்து யாருக்குனு எந்த குழப்பமும் இல்லாம உயில் (Will) எழுதி வைங்க. 8. ஆடம்பரத்தை குறைச்சுக்கிட்டு, நிம்மதியான சிம்பிள் லைஃப்ஸ்டைலுக்கு உன்னை மாத்திக்கோங்க, உங்க ரிட்டயர்மென்ட்க்கு நீங்க பிளான் பண்ணிட்டீங்களா?

Apr 15, 2026

நிலவின் மறுபக்கத்தை கண்ட நாசாவின் விண்வெளி வீரர்கள்.

நாசாவின் ஆர்டெமிஸ்  விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி 7 மணி நேரப் பயணத்தைத்தொடங்கி, இதுவரை யாரும் காணாத நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.பூமியிலிருந்து 2,52,752 மைல் தொலைவைக் கடந்து, அதிக தூரம் பயணம் செய்த மனிதர்கள்என்ற அப்பல்லோ 13-ன் சாதனையை முறியடித்தனர்.நிலவு பழுப்பு நிறமாகக் காட்சியளிப்பதாகவும், அங்குள்ள பள்ளங்கள் ஒளி ஊடுருவும்,துளைகளைப் போல இருப்பதாகவும் வீரர்கள் கூறுகின்றனர்.

1 2 ... 49 50 51 52 53 54 55 ... 130 131

AD's



More News