25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 15, 2026

தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை.

"தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பு. காலை 11 மாலை 3 மணி வரைகுழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கட்டாயதேவைக்காக வெளியே சென்றால் குடை, உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்திஆடைகள் பயன்படுத்த வேண்டும்".

Apr 14, 2026

'பம்பிள்பீ' எனும் 'பெரும் தேனீ வவ்வால்' சிறிய பாலுாட்டி உயிரினம் .

வவ்வால் வகைகளில் ஒன்று 'பம்பிள்பீ' எனும் 'பெரும் தேனீ வவ்வால்'. இவை மேற்கு தாய்லாந்து, தென்கிழக்கு மியான்மரில் ஆற்றங்கரை, குகைகளில் காணப்படுகின்றன. ஒரு குகையில் குறைந்தது 100 எண்ணிக்கையில் குழுவாக வாழ்கின்றன. மாலை, அதிகாலையில் குறைந்த துாரத்தில் இரை தேடி செல்லும். நீளம் (2.9-3.3 மி.மீ.) அடிப்படையில் இது உலகின் சிறிய பறக்கும் பாலுாட்டி உயிரினம். எடை 2 கிராம். இதன் மூக்கு, பன்றியின் மூக்கை போல இருக்கும். பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன.

Apr 14, 2026

தலையணையில் ஒளிந்திருக்கும் கிருமிகள்..

நாம் தினமும் பயன் படுத்தும் தலையணையில் என்ன இருக்கிறது தெரியுமா?ஒரு ஆய்வில், ஒரு தலையணை உறையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது!தூசி,இறந்த தோல் செல்கள்,வியர்வை,தலைமுடி கழிவுகள்,ஏன் இவ்வளவு கிருமிகள்?'டஸ்ட் மைட்' என்ற நுண் பூச்சிகளுக்கு விருந்து ஆகிறது.தோல் பிரச்சினைகள்,அலர்ஜி, சுவாச சிக்கல்கள்இந்தக் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள்போன்றவை ஏற்படுத்தலாம்.தலையணை உறைகளை அடிக்கடி துவைக்கவும். வெயிலில் நன்றாக உலர்த்தவும். தலையணையையே நேரடி வெயிலில் வைக்கவும் ”வெயில் = இயற்கை கிருமிநாசினி!சூரிய ஒளி உங்கள் தலையணையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும்  எளிய தீர்வு.

Apr 13, 2026

கோடையில் உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்க…

டியூப்லைட் குண்டு பல்புகளுக்கு பதிலாக LED பல்புகளை பயன்படுத்துங்கள்.முடிந்தவரை AC வெப்பநிலையை 24-26°C க்கு இடையே வைத்துக்கொள்ளுங்கள்.AC இயக்கத்தில் இருக்கும்போது, குறைந்த வேகத்தில் விசிறியை இயக்கினால், அறை விரைவாக குளிர்ச்சியடையும். 5 நாட்களுக்கு ஒரு முறை AC காற்று வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள். டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் போன்றவற்றை பயன்படுத்தாதபோது, முழுமையாக சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்.

Apr 13, 2026

யார் எப்படி, என்பதை 2 நிமிடத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

1. அதிகமாக பேசுபவர்கள் பலவீனமான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். 2 எப்போதும் ஜோக் பேசுபவர்கள் பல சமயங்களில் மிகவும் ஆபத்தானவர்களாக இருக்கலாம்.' 3. கண்களில் பார்த்து பேசுவதைக் தவிர்ப்பவர்கள் பொதுவாக ஏதோ ஒன்றை மறைத்து பேசிக் கொண்டு இருக்கலாம். 4. ஆடம்பரமாக உடை அணிவோர் பெரும்பாலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள். 5.மெதுவாக பேசுபவர்கள் பல விஷயங்களை யோசித்து செயல்படுபவர்களாக  இருக்கலாம். 6.உங்கள் செயல்களை பின்பற்றுபவர்கள் உங்களுடன் நட்பான உறவை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

Apr 13, 2026

மகாவிஷ்ணுவின் கையால் தகனம் பெற்ற பாக்கியவான் கர்ணன்.

தானம் என்பது கேட்ட பிறகு கொடுப்பது, தர்மம் என்பது கேட்கும் முன் கொடுப்பது. கர்ணனின் காதில் கவச குண்டலம் இருக்கும் வரை, தன் உயிர் பிரியாது என தெரிந்தும் இந்திரனுக்கு தானமாக கொடுத்தார். தன் வாழ்நாள் முழுவதும் தர்மம் செய்த கர்ணனுக்கு கடைசி நேரத்தில் உயிர் பிரியவிடாமல், அவர் செய்த தர்மம் காப்பாற்றியது .அந்த நேரத்தில் வந்த கிருஷ்ணன் நீ செய்த தர்மம் அனைத்தும் எனக்கு வேண்டும், என்று கேட்ட உடன் தானமாக கொடுத்தார். கர்ணன் இறப்பதற்கு முன்தன் விஸ்வரூபத்தை காட்டிய மகாவிஷ்ணு, கர்ணன் இறந்த பிறகு உடலை தகனம் செய்தார். மகாவிஷ்ணுவின் கையால் தகனம் பெற்ற பாக்கியவான் கர்ணன்.

Apr 13, 2026

திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்டுகள் இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம்.

திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை இனி 9552300009 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பக்தர்கள் எளிதாகப் பெறலாம். இந்த எண்ணிற்கு "hi" என அனுப்பி, 'TTD Temple Service' மூலம் விரும்பிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்தினால் டிக்கெட் உடனடியாக வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இந்த புதிய வசதியால் பக்தர்கள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Apr 11, 2026

வாழும் தெய்வங்களின் வலி .

14 ஆண்டுகள் காத்திருந்து பிறந்த குழந்தைகளை முத்தமிடும் முன்பே, விபத்தில் பிரிந்து சென்ற கணவரின் உயிர், மனைவியாக மனமுடைந்தாலும், ஒரு அதிகாரியாக சீருடையில் கணவருக்கு இறுதி வணக்கம் செலுத்திய தீபிகா சவுகான். திரையில் காண்பது அல்ல, இது தான் உண்மையான தேசப்பற்று மற்றும் தியாகம்,இவரின் மன உறுதிக்கு ஒரு வணக்கம்.

Apr 11, 2026

உயிர் காக்கும் அவசர கால முதலுதவி.

1. மயங்கி விழுந்தால் செய்ய வேண்டியவை (Do's):பாதிக்கப்பட்டவரை உடனடியாக மரநிழல் அல்லது காற்றோட்டமான இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.அக்குள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஐஸ் கட்டிகளை வைத்து உடல் சூட்டை விரைவாகத் தணிக்கவும்.உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். 2. தவறியும் இதைச் செய்யாதீர்கள் (Don'ts):மயக்கத்தில் இருப்பவருக்குக் கட்டாயப்படுத்தி தண்ணீர் குடிக்கத் தரக்கூடாது.மயக்க நிலையில் தண்ணீர் தருவது மூச்சுத்திணறலை (Choking) ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியலாம். 3. வெயிலில் இருந்து தப்பிக்க வழிகள்:நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.துணை: வெளியே செல்லும்போது மறக்காமல் குடை மற்றும் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லுங்கள்.ஆடை : பருத்தி ( cotton) ஆடைகளை அணிவது உடல் சூட்டைத் தவிர்க்க உதவும்.

Apr 11, 2026

கடுமையான வெயில் நேரம், இதை மட்டும் சாப்பிடாதீங்க...

புளிப்பு, காரம் அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு வகைகளைதவிர்ப்பது நல்லது. உடல்சூட்டையும். பித்தத்தையும் அதிகரிக்கும் என்பதால்வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.காரமான உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர்க்கடுப்பு, நீரில் இரத்தம் வெளியேறுதல் பிரச்சினைகள் ஏற்படலாம்.எண்ணெய் பலகாரங்கள், தேநீர் வெயில் நேரத்தில் பித்தத்தை ஏற்படுத்தும். அதனால் அவற்றை முடிந்தளவு அதிகமான வெயில் இருக்கும் சமயங்களில் தவிர்ப்பது நல்லது.அதிக காரமான பச்சை மிளகாய், மிளகு, மசாலா சேர்த்த உணவுகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் இது ஆசனவாயில் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்,கடைகளில் விற்கும் பரோட்டா போன்ற மைதா உணவுகள், ஃபாஸ்ட்புட வகைகளை தவிர்ப்பது நல்லது.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 130 131

AD's



More News