காலை11 மணி முதல் மாலை3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் வெளியே சென்றால் பருத்தி ஆடைகள் அணிய அறிவுறுத்தல்.வெயில் காலத்தில் வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணியலாம்.கட்டட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்ற வேண்டாம்.தொடர்ச்சியாக 2 நாள்கள் வெயிலில் இருந்தால் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.வெப்ப வாதத்தால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது.பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும். உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச ரூ வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும். உதாரணமாக,6 மணி நேரம் ஏசிபயன்படுத்தினால்12 யூனிட் செலவாகும்.ஆனால் ஏசியுடன் மின்விசிறியும்பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும். இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.
இரவில் ஒளி வீசியவாறு செல்லும் மின்மினி பூச்சிகள் நம்மை கவரும். இணையை தேடுதல், தற்காப்பு, இரை தேடுதலுக்காக இவ்வாறு ஒளியை வெளிப்படுத்துகிறது. இதன் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. சாதாரண விளக்குகளில் வெப்பம் இருக்கும். ஆனால் இதன் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது. இதன் உடலிலுள்ள 'லுலூசிபெரின்' என்ற பொருள் 'லூசிபெரேஸ்' என்ற என்சைமுடன் இணைந்து வேதிவினை புரிவதால் ஒளி உருவாகிறது. குளிர்காலத்தில் மண்ணுக்கு அடியில் பதுங்கும். இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.
தமிழ்நாட்டில் கேஸ் புக்கிங் தொலைபேசி எண் செயல்படாதது குறித்த பூகார்களை தொடர்ந்து, புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்தியது. Indane. வாட்ஸ் ஆப் மூலம் புக் செய்ய 75888 88824, இந்தியன் ஆயில் ஆப் செயலி மூலம் பதிவு செய்யலாம், 77189 55555 எண்ணுக்கு SMS மூலமாகவும், 84549 55555 எண்ணுக்கு MISSED CALL மூலமாகவும் தினமும் காலை 10 முதல் மாலை 6 மணிவரை புக் செய்யலாம்.
தேர்தலில் வாக்களிப்பவர் வாக்களித்ததை உறுதிசெய்வதற்காக இடது கை ஆள்காட்டி விரலில் மை ஒன்று வைப்பார்கள். அது சில வாரங்கள் அழியாமல் இருக்கும். அது என் உடனடியாக அழிவதில்லை? காரணங்கள் என்ன ?இந்தியாவில்தேர்தல்மை பயன்படுத்தும்முறை 1962ம்ஆண்டுமக்களவைத்தேர்தலின்போதுமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது விரலில் மை அழியாமல் இருக்க முக்கிய காரணம்.மையில் உள்ள சில்வர் நைட்ரேட் (AgNO 3) என்ற வேதிப்பொருள் தான், இந்த மையை விரலில்வைக்கும்போது, அது தோலில்உள்ளஉப்புச்சத்துமற்றும்ஈரப்பதத்துடன்வினைபுரிந்து,சூரியஒளி படும்போது, சில்வர் நைட்ரேட் சில்வர் குளோரைடாக மாறி தோலுடன் மிகக் கடுமையாக ஒட்டிக்கொள்கிறது. இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாது. சோப்பு, ஆல்கஹால் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு கழுவினாலும் இந்த மை எளிதில் அழியாது. இந்த மை தோலின் மேற்பகுதியில் மட்டும் இல்லாமல், நகம் மற்றும் தோலுக்கு இடையில் உள்ள பகுதியில் ஊடுருவிச் செல்கிறது. நகம் வளர்ந்து பழைய தோல் செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை சுமார் 2 முதல் 4 வாரங்கள் இந்த மை நீடிக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த அழியாத மை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது..
ரசாயனப் பொருள் (கால்சியம் கார்பைடு/எதிலீன்)பழுக்க வைக்கப்பட்டிருந்தா, மாம்பழம் பார்ப்பதற்கு அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஆனால் உள்ளே தசைப்பகுதி வெள்ளையாகவோ இருக்கும். (ஆபத்தானது)இயற்கையாக செடியில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழம் கவர்ச்சியான பளபளப்புடன், உள்ளே அடர் ஆரஞ்சு நிற தசைப்பகுதி மற்றும் இனிப்பான மணத்துடன் இருக்கும்.காம்பும் உலர்ந்து மஞ்சள்/பழுப்பு நிறத்தில் காணப்படும்.தண்ணீர் சோதனை மூலம் கண்டறியலாம்.மாம்பழத்தின் தாய்மையை தண்ணீர் சோதனை மூலம் சரிபார்க்கவும்.
[1] இரான்: ₹17 ரூபாய் [2] ரஷ்யா: ₹47.96 ரூபாய் [3] துபாய்: ₹75.05 ரூபாய் [4] சவுதி அரேபியா: ₹51.61 ரூபாய் [5] அமெரிக்கா: ₹91.90 ரூபாய் [6] சீனா: ₹99.45 ரூபாய் [7] இந்தியா: ₹104.19 ரூபாய் [8] பிரிட்டன்: ₹158.07 ரூபாய் [9] இத்தாலி: ₹177.99 ரூபாய் [10] ஹாங்காங்: ₹257.56 ரூபாய்
தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. நல்லதொரு தலைவன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்களாகிய நம்முடைய ஒவ்வொரு ஒட்டும், நம் நாட்டின் நலனுக்கு சென்றடைய வேண்டுமே தவிர, இலவசங்களை அறிவித்து கொள்ளை கூட்டங்களுக்கு செல்ல விடாமல் தவிர்க்க நல்லதொரு ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை.ஓட்டிற்கு லீவு கிடைத்து விட்டது என்று வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு ஓட்டுப் போடாமல் தவிர்ப்பது, நம் தலையில் நாமே மண் வாரி இறைப்பதற்குச் சமம் . அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை என்று டாஸ்மார்க் கடைகளைத் திறந்து அதிலிருந்து வரும் வருமானத்தில் பெண்களுக்கு இலவசமாக மாதம் இவ்வளவு ரூபாய் கொடுக்கிறோம், என்று கூறுவதில் நாட்டு மக்களின் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.பெண்களுக்கு 2000 ரூபாய் வருகிறது. நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று 5000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை குடித்து தீர்க்கும் குடிகாரர்களை யார் காப்பாற்றுவார்கள்? அவர்களுடைய குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் ? சின்ன மீனாக 2000 ரூபாய் கொடுத்து விட்டு, பெரிய மீனான மது விற்பனை செய்து 10,000 ரூபாய் சம்பாதிக்கும் தலைவர்களுக்கா நம் ஓட்டு? சிந்தித்க்க வேண்டும். மக்கள் ஆட்சியில் மக்களின் வாக்கிற்கே மதிப்பு. மக்கள் சபைக்கும், சட்ட சபைக்கும் செல்வோரில் யாருக்கு நம் வாக்கு அளிக்க வேண்டும். நாட்டுக்கு உழைக்கும் நல்ல மனிதரை, நாட்டு மக்கள் நலம் எண்ணிடுவோரை, நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உணவு தானியங்கள் விலைகளை குறைத்து உழவுத் தொழிலையும் உயர்ந்திடச் செய்து, ஊரெங்கும் ஜனங்கள் பசி பிணியைத் தீர்த்து, ஊக்கமாய் உழைக்கும் உத்தமரை தேர்ந்தெடுக்க வேண்டும். மேடையில் பேசினால் போதாது, மேன்மையாய் வாழ்ந்திட திட்டங்கள் வகுத்து ,மென்மையாய் செயல்களை செய்து முடிப்போரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏக்கமாய் மக்களை வாழவிடாமல் ,ஏக்கமாய் பொருள்களை சேர்க்க விடாமல், நோக்கமாய் சமதர்ம வாழ்வை அமைத்து ,தக்க மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டாள் என்ன ? என்று அலட்சியப் படுத்தாமல் யோசித்து நல்லதொரு தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். மாதா மாதம் நமக்கு ரூபாய் கொடுத்தால், இங்கு விலைவாசி எல்லா பொருட்களுக்கும் ஏறும் .அரசாங்கம் எல்லோருக்கும் பணம் கொடுக்க ,நம்மை ஏமாற்றி ,நம்மிடமே பணம் வாங்கி ,நமக்கே கொடுக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். விலைவாசி” கிர்” என்று உயருகிறது. வீட்டு வரி தண்ணீர் வரி, பத்திர செலவு, மின்சார வரி என்று. நாமெல்லாம் இலவசங்களை ஏற்க மறுக்கிறோமோ ,அன்றுதான் விலைவாசி உயர்வை தவிர்க்கலாம். நல்ல மனிதரைக் காணலாம். காலில் முள் குத்தக்கூடாது என்று இரும்பில் லாடம் அடித்தார்கள்.... 'என் எஜமான் என் மீது எவ்வளவு பாசம்!" என்று பூரித்துப் போனது அந்தக் குதிரை!அந்த இரும்புத் துண்டு பாதுகாப்பிற்கு அல்ல... இனி ஓய்வே இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் ஓட விடுவதற்குத்தான் என்பது அதற்குப் புரியவில்லை! சலுகைகள், இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன என்றால்... அங்கே சுதந்திரம் பறிக்கப்படப் போகிறது என்று அர்த்தம்! மக்கள் சபைக்கும், சட்ட சபைக்கும் வரும் தேர்தலில் தலைமைக்குத் தகுந்த மனிதரை தேர்ந்தெடுப்பது மக்களாகிய நமது. கடமை.
ஒரு சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதைப்பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 இலட்சம், காப்பீட்டுத் தொகையும்அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை!இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலிண்டர் விபத்து நேரும் போதுபாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து யாரும் அந்தக் காப்பீட்டுத் தொகையைக் கேட்டு உரிமை கோருவதில்லை!நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் அந்தக் காப்பீட்டுக்கான பாலிசிதொகையும் சேர்த்துத்தான்செலுத்திவருகிறோம்.இந்தக்காப்பீடுகுறித்துஅரசாங்கமோஎண்ணெய்நிறுவனங்களோ, கூடவாடிக்கையாளர்களுக்கு விழிப்புணரவு ஏற்படுத்துவதும் இல்லை!சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேரந்தால் சட்டப்படி அந்தகுடும்பம்ரூ 50 இலட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.படிக்கும் அனைவரும் இச் செய்தியை தங்கன குடும்பத்தினகுடனும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும்.
இயற்கை தந்த இளநீருடன் சப்ஜா விதைகளை சேர்த்து பருகுவது, கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஆரோக்கிய பானமாகும். இது உடல் சூட்டை உடனடியாக குறைப்பது மட்டுமின்றி, உடல் எடையை குறைக்கவும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள தாதுக்களும் நார்ச்சத்துக்களும் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலையும் குளிர்ச்சியையும் ஒருசேர வழங்குகின்றன.