25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 21, 2026

' 'வங்கிச் சேவை மாற்றங்கள் -ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள்.

வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வங்கி சேவை கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. ATM கட்டணம்:ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. UPI சுமை: யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு. இலவச வரம்பு (Metros):பெருநகரங்களில் சொந்த வங்கியில் 5 முறையும், இதர வங்கிகளில் 3 முறையும் மட்டுமே இலவசம். இலவச வரம்பு (Other Cities):மற்ற நகரங்களில் இதர வங்கி ஏடிஎம்-களில் ,5 முறை வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். கூடுதல் சேவைகள்:பேலன்ஸ் செக் செய்வது, பின் நம்பர் மாற்றுவது மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் எடுப்பதும் இந்த வரம்பிற்குள் அடங்கும். பாதிப்பு:சிறிய அளவில் அடிக்கடி பணம் எடுக்கும்,சிறு வியாபாரிகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்

Apr 21, 2026

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்! வந்துவிட்டது LPG ATM.

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, பாரத் கேஸ் நிறுவனம் குருகிராம் பகுதியில் முதல் LPG ATM சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி நாம் நம்முடைய காலி சிலிண்டரை கொண்டு சென்று கன்ஸ்யூமர் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து பணம் செலுத்தினால், 2 நிமிடங்களில் புதிய சிலிண்டரை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவை, முன்பதிவு செய்து காத்திருக்கும் அவசியத்தை நீக்குகிறது.

Apr 20, 2026

இந்திய ரிசர்வ் வங்கி. 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வருகின்றன.

500 ரூபாய் கள்ள நோட்டுகள் வருகின்றன. RESERVE என்கிற இடத்தில் நான்காவதாக உள்ள E க்கு பதிலாக U என உள்ளது எனவே புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகளை கண்டறியும் அம்சங்களுடன் இதையும் கவனித்து வாங்குங்கள்.உங்களிடம் உள்ள பணத்தை உடனே செக் பண்ணுங்க..

Apr 20, 2026

பூமிக்கு அடியில் கடல்!

பூமியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கடல்களை விட3 மடங்கு அதிக நீர் பூமிக்கடியில்700 கி.மீ. ஆழத்தில் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்'ரிங்வுடைட்' எனப்படும் ஒருவகை நீல நிறத் தாதுப் பாறைக்குள் ஒருSponge போல இந்த நீர் மூலக்கூறுகள் தேங்கியிருப்பதாகவும், இந்தப் பாறைகள் ஏதோ 'வியர்ப்பது' போல நீரைத் தங்களுக்குள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Apr 20, 2026

வெயில் காலத்துல அரிப்பு தாங்க முடியலையா?

தினசரி துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் நீண்ட நேரம் போட்டு வைத்திருந்து குளித்தால் கோடையில் வியர்வையால் நச நசத்து அரிப்பது அடங்கும். இதனால் சருமம் பாதுகாக்கப்படும்

Apr 20, 2026

“இந்தியாவில் முதல் மனிதன் தோன்றிய இடம் தமிழ்நாடு"

60,000 வருட பழமையானமனிதன்தமிழகத்தில்மதுரைக்குஅருகிலுள்ளகிராமத்தைச் சேர்ந்ததிரு.விருமாண்டி, அவரது 9 தலைமுறை சேர்ந்த 13 உறுப்பினர்களுடன், இந்தியாவில் முதன்முதலில் குடியேறியவர்களின் நேரடி சந்ததியினரில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். இவர்கள் சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கடற்கரையிலிருந்து குடிபெயர்ந்த 'M130' மரபணுவைக் கொண்டவர்கள்.

Apr 18, 2026

ஷாம்பூவை, தலைமுடியில் எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

ஷாம்பூவை, எடுத்த உடனே தலையில் தேய்த்துக் கொள்ள கூடாது. முதலில், தலைமுடியை தண்ணீர் ஊற்றி நன்கு நனைத்துக் கொள்ள வேண்டும். பின், ஷாம்பூவை ஒரு சிறிய பாத்திரம் (அ) கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். .அதன் பின், ஷாம்பூ பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்குக் கலக்கிக் கொள்ள வேண்டும். * கலக்கி வைத்த ஷாம்பூவை தலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். * பின்னர், தலையை விரல் முனைகளால் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக, தலையை நன்றாக கழுவிக் (அலசி) கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், தலையில் உள்ள அழுக்கு நீங்கு விடும். மேலும், தலைமுடிகளை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Apr 18, 2026

சிலிண்டர் முன்பதிவு செய்வோருக்கு ஜாக்பாட்.

பாரத், ஹெச்பி, இன்டேன் ஆகிய கேஸ் நிறுவனங்களின் சிலிண்டரை பேடிஎம் செயலி மூலம் முன்பதிவு செய்தால் ரூ.200 கேஷ்பேக்ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பேடிஎம் செயலியில் 'கேஸ் சிலிண்டர் முன்பதிவு' விருப்பத்தை தேர்வு செய்து தகவல்களை நிரப்பி ப்ரோமோ குறியீட்டை பெற்று பயன்படுத்த வேண்டும்.

Apr 18, 2026

உயிர் வாழ உதவிய வாழை இலை .

குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை இக்காலத்தில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து பிழைக்க வைக்கிறார்கள். அக்காலத்தில் குறைப்பிரசவ சிசுவை வாழை இலையில் வைத்து மற்றோர் வாழை இலையால் போர்த்தி பாதுகாத்தார்கள்.அப்படி உயிர் வாழ இலை உதவியதால் ,அவ்விலையை வாழ இலை வாழை இலை என வழங்கலாயிற்று!

Apr 18, 2026

பேசுவது எப்படி?.

தாயிடம் அன்பாகப் பேசுங்கள், தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள், துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள், சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்,சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள், குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள், உறவினரிடம் பரிவாக பேசுங்கள், நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள், வியாபாரியிடம் கராராகப் பேசுங்கள், வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள், கடவுளிடம் மவுனமாக பேசுங்கள், அறிவாளியிடம் பணிவாகப் பேசுங்கள், எதிரியிடம் தைரியமாகப் பேசுங்கள்.பிறர் மனம் புண்படாதவாறு பேசுங்கள்.

1 2 ... 48 49 50 51 52 53 54 ... 130 131

AD's



More News