25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

May 01, 2026

ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் …

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ,ஆண்கள்பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில், பெல்ஜியத் தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியனான கேஸ்பர் ரூட்டுக்கு (நார்வே) அதிர்ச்சி அளித்தார். மற் றொரு ஆட்டத்தில் ஆர்தர் பில்ஸ் (பிரான்ஸ்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஜிரி லெஹக்காவை (செக்குடியரசு) வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.8-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா ,பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதியில் ,6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் பாப்டிஸ்டை (அமெரிக்கா) தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதியில் உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக் 7-6 (7-1), 6-0 என்ற செட் கணக்கில் லின்டா நோஸ்கோவை (செக்குடியரசு) வென் றார். கோஸ்ட்யுக் அரை இறுதியில் அனஸ்டசியா போட்டா போவாவை (ஆஸ்திரியா) எதிர்கொள்கிறார்

May 01, 2026

GUJARAT - BANGALORE - 30 April 2026 IPL CRICKET.

42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, குஜராத் அணிகள் நேற்றிரவு ஆமதாபாத்தில் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். பெங்களூருஅணி 19.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்-அவுட் ஆனது,குஜராத்அணி  15.5 ஓவரில் 6 விக்கெட்டிற்கு  158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .

Apr 30, 2026

இந்தியாவுக்கு காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில்,மேலும் 4 பதக்கங்கள்.

 சமோவா நாட்டின் அபியா நகரில், காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. 2-வது நாளில் 4 தங்கம் வென்ற,இந்தியா 3-வது நாளிலும் பதக்க வேட்டையை தொடர்ந்தது. இந்திய வீராங்கனை பெல்லானா ஹரிகா ,பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் ஸ்னாட்ச் முறையில் 86 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 111 கிலோவும் என மொத்தம் 197 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். கரங்கி தரங்கினி, பூமிகா மோஹிதே  இந்தியர்கள் (63 கிலோ எடைப்பிரிவு) வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.இந்திய வீரர் அபிஷேக் நிப்பானே சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 88கிலோ எடைப்பிரிவில் ,மொத்தம் 324கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார்

Apr 30, 2026

MUMBAI - HYDERABAD - 29 th APRIL 2026 IPL CRICKET.

41-வது லீக் ஆட்டத்தில், மும்பை, ஹைதெராபாத் அணிகள்  ,மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின.  டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ,முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்தது.  ஹைதெராபாத் அணி  18.4 ஓவரில்  4 விக்கெட்டிற்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஹைதெராபாத் அணிக்கு இது 6 வது வெற்றியாகும். 

Apr 29, 2026

சினெர், ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ்  .

 ஸ்பெயினில் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர்,ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின்கேமரூன் நோரியை வென்றுகால் இறுதியை எட்டினார்.ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும், மாஸ்டர்ஸ் டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி. மற்றொரு ஆட்டத்தில் 14-ம் நிலை வீரரான ஜிரி லெஹக்கா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) வெளியேற்றினார்.கால் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் நடந்த 8-ம் நிலை வீராங்கனையான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் லேலா பெர்னாண்டசை (கனடா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.  

Apr 29, 2026

காமன்வெல்த் பளுதூக்குதல்போட்டியில்,4 தங்கப்பதக்கங்கள்பெற்ற இந்தியா.

சமோவா நாட்டின் அபியா நகரில்  காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி  நடந்து வருகிறது. இந்திய வீரர் சுனில் சிங்  2-வது நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' முறையில் 126 கிலோ, 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 145 கிலோ என மொத்தம் 271கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.  இந்திய வீரர் அபினோப் கோகோய் 71கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 284 கிலோ (ஸ்னாட்ச்-129, கிளீன் அண்ட் ஜெர்க்-155) எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.  இந்திய வீராங்கனை அய் சங்பா கோகோய் பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் ,மொத்தம் 185 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-79, கிளீன் அண்ட் ஜெர்க்-106) தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இந்திய வீரர் சாரு  பேசி சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 65கிலோ எடைப்பிரிவில் 289 கிலோ எடைதூக்கி (ஸ்னாட்ச்-127, கிளீன் அண்ட் ஜெர்க்-162) தங்கப் பதக்கம்வென்றார்.

Apr 29, 2026

PUNJAB - RAJASTHAN -28 APRIL IPL CRICKET .

40-வது லீக் ஆட்டத்தில், நேற்றிரவு நியூசண்டிகாரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்'ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.  20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி  19.2 ஓவரில்  228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு 6-வது வெற்றியாகும். 

Apr 28, 2026

பெங்களூரு, டில்லி அணிகள்- 27 APRIL 2026 IPL CRICKET.

 டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டெல்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார், பீல்டிங் தேர்வு செய்தார். டில்லி அணி 16.3 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.  பெங்களூரு அணி 6.3 ஓவரில் 77/1 ரன்கள் எடுத்து,  வெற்றி பெற்றது. 

Apr 27, 2026

CHENNAI - GUJARATH - 26 APRIL 2026 IPL CRICKET .

சென்னை சேப்பாக்கம்  மைதானத்தில்நேற்று மதியம் நடந்த போட்டியில் குஜராத், சென்னை அணி மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவரில்  158/7 ரன்கள்  எடுத்தது, குஜராத் அணி 16.4 ஓவரில் 162/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

Apr 27, 2026

கொல்கத்தா - லக்னோ அணி - 26 APRIL  2026 IPL CRICKET.

லக்னோவில் நேற்று மாலை நடந்த போட்டியில்,  கொல்கத்தா,  லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்ட்ங் தேர்வு செய்தது .கொல்கத்தா அணி 20 ஓவரில் 155/7 ரன் எடுத்தது, லக்னோ  அணியும்  20 ஓவரில் 155/8 என சமன் செய்தது. சூப்பர் 1 ஓவரில்  கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 188 189

AD's



More News