25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Apr 25, 2026

கிராஸ்ஹோப்பர் கோப்பை சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் அபய் சிங் கால்இறுதிக்கு முன்னேறினார்.

சுவிட் சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் கிராஸ்ஹோப்பர் கோப்பை சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்ட த்தில்  உலகதரவரிசையில் 13-ம் நிலை வீரரான அலி அபு எலெய்னனை ,24-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அபய் சிங் 12-10, 11-9 என்ற நேர்செட்டில் வென்று கால்இறுதிக்கு முன்னேறினார். 

Apr 25, 2026

BANGALORE - GUJARAT ,24 APRIL 2026 IPL CRICKET.

பெங்களூரு  அணி, குஜராத்  அணி ,பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில், நேற்று நடந்த 34-வது லீக் ஆட்டத்தில்  மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதரர்  பீல்ட்ங் தேர்வு செய்தார். குஜராத் அணி 20 ஓவரில் 205 ரன் எடுத்தது. பெங்களூரு அணி   18.5 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு இது 5 வது வெற்றியாகும்.  

Apr 25, 2026

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ரசிகர்களுடன் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடினார்,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ,சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிகரன்கள் குவித்த வீரர், அதிக சர்வதேச போட்டிகளில் ஆடியவீரர் உள்ளிட்ட அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் நேற்று தனது 53-வது பிறந்த நாளைகொண்டாடினார்.மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் முன் மனைவியுடன் இணைந்து கேக்வெட்டி கொண்டாடி, ரசிகர்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக் கொண்டார். 

Apr 24, 2026

MUMBAI - CHENNAI 23 APRIL 2026  IPL CRICKET.

மும்பை, சென்னை அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பீல் டிங்' தேர்வு செய்தார்.  சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்தது.சாம்சன் சாம்சன் 101 ரன்னுக்கு  அவுட் ஆகாமல் இருந்தார். மும்பை அணி  18 ஓவரில் 104 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 

Apr 24, 2026

இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்,  தங்கம் வென்றார் .

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட் கன்) எகிப்தின் கெய்ரோவில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில்தகுதிச்சுற்றில் ,இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட், மான்யா. அனுஷ்கா. ஸ்ரீவள்ளி உட்பட 22 பேர்  பங்கேற்றனர். 'டாப்-8 வீராங்கனைகள், இதில் 578 புள்ளியுடன் 6வது இடம் பெற்ற பிராச்சி உட்பட, ' பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் தகுதிச்சுற்றுடன் திரும்பினர். அடுத்து நடந்த பைனலில் (10.0) பிராச்சி, மொத்தம் 354.6 புள்ளி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். இந்தியாமொத்தம் 9 பதக்கம் வென்று (2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), பட்டியலில்  முதலிடத்துக்கு  முன்னேறியது.

Apr 22, 2026

DELHI -  HYDERABAD -21 APRIL 2026 IPL CRICKET .

31-வது லீக் ஆட்டத்தில்  ஐதராபாத்  அணி, டெல்லி அணி  நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது.  'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் அக்ஷர் பட்டேல் பீல்ட்ங் தேர்வு செய்தார்.  20 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக் கெட்டுக்கு 242 ரன்கள் குவித்தது.  ஓபன் பேட்டிங் செய்த  அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார்.டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 

Apr 22, 2026

மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இன்று தொடக்கம்.

 ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ,மாட்ரிட் ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிரெஞ்சு ஓபனுக்கு முன் னோட்டமாக களிமண் தரையில் நடக்கும், இந்தபோட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண் டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அலியாசிம் (கனடா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டேனில் மெட்விடேவ் (ரஷியா). முசெட்டி (இத்தாலி), கேமரூன் நோரி (இங்கிலாந்து), அலெக்ஸ்டி மினார் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். 'பை' சலுகை பெற்றுள்ள இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் கால் பதிக்கிறார்கள். காயம் காரணமாக முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோ விச் ஆகியோர் விலகியுள்ளனர். நேற்று இதன் பெண்கள் பிரிவு போட்டி தொடங்கி விட்டது.நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினாரைபகினா, அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக், கனடாவின் விக்டோரியா எம்போகோ, ஒலிம்பிக் சாம்பிய னான சீனாவின் கின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, உக்ரைனின் ஸ்விடோலினா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆட உள்ளனர்.மொத்த பரிசுத்தொகை இப் போட்டிக்கு ரூ.90கோடி யாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 

Apr 22, 2026

'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் அல்காரஸ், சபலென்காவுக்கு …

 'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் ,ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.  ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று முன் தினம்  இரவு இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ,வெகுவிமரிசையாக நடந்தது. கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், அமெ ரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டங்களை வென்றவரும், உலக தரவரிசையில்,  2-வது இடத்தில்  இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சிறந்த வீரர் விருதையும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றிய ‘நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றனர்.சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற பாரீஸ் செயின்ட் ஜெர் மைன் (பிரான்ஸ்) சிறந்த அணி விருதை வென்றது. 

Apr 21, 2026

MUMBAI -  GUJARAT- 20 APRIL 2026 IPL CRICKET

  30 - வது லீக் போட்டியில் குஜராத், மும்பை அணிகள் நேற்று ஆமதாபாத்தில் மோதின.  டாஸ் ஜெயித்த  குஜராத் அணி  கேப்டன் சுப்கில்  பீல்ட்ங் தேர்வு செய்தார். மும்பை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 199 ரன் எடுத்தது. திலக் வர்மா 101 ரன் எடுத்தார். குஜராத் அணி 15.5 ஓவரில் 100 ரன்னுக்கு  ஆல் அவுட் ஆனது. 

Apr 20, 2026

PUNJAB – LUCKNOW-19 APRIL 2026 IPL CRICKET.

29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி  லக்னோ அணிகள் நியூசண்டிகாரில் நேற்றிரவு மோதின . 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்  பீல்ட்ங் தேர்வுசெய்தார். லக்னோ  அணி 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 

1 2 ... 48 49 50 51 52 53 54 ... 188 189

AD's



More News