25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Aug 22, 2026

TNPL: கோவை அணிக்கு 4வது வெற்றி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின.டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த கோவை அணி, 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.இலக்கை துரத்திய திண்டுக்கல் அணி, 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.

Aug 22, 2026

தங்கம் வென்ற தமிழ்ப்பெண் கனக லட்சுமி .

நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாட்டின் வாழப்பாடியைச் சேர்ந்த கனக லட்சுமி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.ஒட்டுமொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.

Aug 21, 2026

உலகக் கோப்பை ஹாக்கி.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், ‘டி’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. முதல் லீக் போட்டியில் சீனாவுடன் டிரா செய்த இந்தியா, அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொண்டது. இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 0-0 என டிராவில் முடிந்தது.இதன் மூலம் அரையிறுதிக்கான இரண்டாவது சுற்று வாய்ப்பை இங்கிலாந்து இழந்தது.

Aug 21, 2026

சின்க்யுபீல்டு கோப்பை செஸ்,இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.கிராண்ட் செஸ் டூரின் 11-வது சீசனின் கடைசி தொடரான சின்க்யுபீல்டு கோப்பை, அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் நடைபெற்றது. நேற்று 9-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37-வது நகர்த்தலில் டிரா செய்தார். 9 சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லி 5.5 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடனும் முன்னிலை வகித்தனர்.

Aug 21, 2026

டி.என்.பி.எல். லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் மதுரை மற்றும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் மதுரை மற்றும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிகள் மோதின.டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.பின்னர் 158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய திருப்பூர் அணி, 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Aug 21, 2026

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி முன்னேறியது.ரவுண்டு-16 ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கீ நாகாநிஷி - ரின் இவானகா ஜோடியை வீழ்த்தியது.ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி 21-23, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜுனைதி ஆரிப் - யாப் ராய் கிங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Aug 20, 2026

உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கான அடுத்த சுற்றில் இந்தியா.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து இங்கிலாந்திடம் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.இதையடுத்து, மூன்றாவது லீக் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 12-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொண்டது. அரையிறுதிக்கான அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியதுடன், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

Aug 20, 2026

உலக பாட்மின்டன்: மூன்றாவது சுற்றில் சிந்து.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சிந்து, கனடாவின் வென் யு ஜாங்-ஐ எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய சிந்து 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஹூடா, கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார். கடுமையாக போராடிய உன்னதி 21-11, 9-21, 21-23 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இலங்கையின் துமிந்து அபேவிக்ரமாவை சந்தித்தார். அபாரமாக விளையாடிய ஆயுஷ் 21-8, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ ஜோடி, மக்காவ் அணியின் லியோங் இயோக் சோங்-வெங் சி ஜோடியை 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.

Aug 20, 2026

சின்க்யூபீல்டு கோப்பை: வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் சின்க்யூபீல்டு கோப்பை செஸ் தொடரின் எட்டாவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.‘கிராண்ட் செஸ் டூர்’ தொடரின் 11-வது சீசன் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. அதன் 5-வது மற்றும் கடைசி தொடரான சின்க்யூபீல்டு கோப்பையில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடைபெற்ற எட்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்சிம் வாசியரை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 20-வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தில் முன்னிலை பெற்றார். தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வெற்றியைப் பதிவு செய்தார்.எட்டு சுற்றுகள் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லே 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தாவும் 5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Aug 19, 2026

உலகக் கோப்பை ஹாக்கி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் சீனாவுடன் ‘டிரா’ செய்தது. இதையடுத்து 2-வது லீக் ஆட்டத்தில் 18-ம் நிலை அணியான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 187 188

AD's



More News