25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Jan 23, 2024

ஏழைகளின் பாதாம் பருப்பு நிலக்கடலை

நிலக்கடலைஏழைகளின் பாதாம் பருப்பு என்றழைக்கப்படுகிறது.வாரத்தில்5 நாட்கள் வேர்க்கடலை உண்டால் இதயம் நன்றாக இருக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை வராது.குடல் புற்றுநோய் ஏற்படாது.இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகிறது.கார்போஹைட்ரேட், கால்சியம் உள்ளது.வைட்டமின் சி, பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது.ரத்த நாளங்களை நிலக்கடலை பாதுகாக்கிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது.முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த நிலக்கடலை. இதற்கு காரணம், வைட்டமின் C, E இரண்டுமே கடலையில் உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல பாதுகாக்கிறது.சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு நிலக்கடலை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது. ஞாபக சக்தியையும் பெருக்குகிறது.புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த நிலக்கடலைக்கு இருக்கிறது.

Jan 22, 2024

தர்பைப் புல்

தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. தர்பை, குளிர்தன்மையைக் கொண்ட தாவரம். உடல், சூடு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க இது உதவுகிறது. அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை உள்ள இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டுக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் தரப்பைப் புல்லைக் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் பிரச்னைகள் சரியாகும் சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த நீர் நல்ல பலன் தரும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்ற உணவு பொருட்களில் சில துண்டு தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும்.

Jan 18, 2024

சிறு வெங்காயம்,பீர்க்கங்காய்

நோய் எதிர்ப்புச் சக்தியைஅதிகரிக்கும்..இரத்த அழுத்தம் மற்றும்கொலெஸ்டெராலைகுறைக்கும்.பீர்க்கங்காய்மெக்னீசியம் ரிபோபிளவின்மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது.உடல் எடை குறைக்க உதவும். பீட்டா கரோடின் அடங்கியது. . கண்களுக்கு நல்லது.

Jan 15, 2024

செரிமானத்தைத் தூண்டும் இஞ்சி

கீழாநெல்லி,வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து,,காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண,உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால்(Gingerol) ஜின்ஜிபெரின்*Zingiberine) மற்றும் தன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.    செரிமானத்தைத் தூண்டும் இஞ்சி

Jan 09, 2024

சவ்சவ் காய் சாப்பிட்டுவந்தால் எலும்பு மற்றும்பற்களை உறுதிப்படுத்தும்.

வாழைக்காயைஅடிக்கடி சாப்பிட்டு வந்தால்இரத்தச்சோகைஏற்படாமல் தடுக்கும்.குடை மிளகாயை உணவில்சேர்த்துக்கொண்டால் அஜீரணத்தை போக்கும்.சவ்சவ் காய் சாப்பிட்டுவந்தால் எலும்பு மற்றும்பற்களை உறுதிப்படுத்தும்.வெண்டைக்காயிலுள்ள சத்துக்கள்மூளைவளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது.எனவேவெண்டைக்காயை அடிக்கடிஉணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.தலைமுடிக்குத் தேவையான சத்தை தரும் இன்னொரு காய்கறி வெங்காயம்.வெங்காயத்தில் ஜிங்க், இரும்பு, பயோட்டின் உள்ளது. இதை உள்ளுக்கு எடுக்கும் போது மட்டுமல்ல வெளிப்பூச்சாக கூந்தலில் தடவி வந்தால் தலைமுடி இளவயதில் நரைப்பதைதடுக்க உதவுகிறது.

Jan 05, 2024

அதிமதுரம்

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க. சிறிதுஅதிமதுரத்துண்டைமெல்லலாம்.வறட்டுஇருமல்இடைவிடாமல்ஒலிஎழுப்பிக்கொண்டிருக்கும்போது.அதிமதுரம்.மிளகு.கடுக்காய்த்தோல்ஆகியவற்றைப் பொடி செய்து. சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.சர்க்கரை நோயாளர்கள் செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக. இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை. ஒற்றைத் தலைவலி. தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம்.முந்தைய காலத்தில்"நொறுங்கத்தின்றால் நூறு வயது" என்று சொல்லுவார்கள். அதாவது, மெதுவாக. ரசித்து. உணவுப்பொருட்களை நன்றாக கடித்து. நாக்கினால் நன்றாக சுவைத்து மெல்ல வேண்டும் என்பதன்' அர்த்தம் தான் இது.இதன் காரணமாக உமிழ் நீர் மேலும் மேலும் சுரக்க ஆரம்பிக்கிறது. ஜீரணம் தடைபடாமல்உலர்ந்து கிடக்கும் வாய்க்கு உமிழ் நீரை தூண்டி தரும் தன்மை அதிமதுரத்திற்கு உண்டு.இதில் இனிப்பு சுவை உண்டு: ஆனால் குளுக்கோஸ் கிடையாது. குடற்புண்ணை ஆற்றும் தன்மையுடையது.

Jan 02, 2024

கற்பூர வள்ளி வெற்றிலை கஷாயம்:

கற்பூரவள்ளி இலை4.,வெற்றிலை4.,தூதுவளை இலை2. சுக்கு, மிளகு- சிறிதளவுகற்பூரவள்ளி. வெற்றிலை. தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு. மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கஷாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.:தலைபாரம். தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலனளிக்கும்.

Jan 01, 2024

புளிச்ச கீரை (கோங்குரா)

 புளிப்பு சுவையுள்ள இந்த கீரை. உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.இந்த கீரையில் தாதுபொருட்களும். இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன.எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கிரைக்கு உண்டு. சொறி. சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும்.

Dec 31, 2023

கடலைமிட்டாய்

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. துரித உணவுகளை போல அல்லாமல் முழுவதும் ஆரோக்கியமானது.கடலை மிட்டாயில் நார்ச்சத்து. ப்ரோட்டீன், இரும்புச்சத்து, உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது.கடலை மிட்டாயில் உள்ள தாமிரம் உடலின் கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன் இதில் உள்ள ஜிங்க் சத்து தோல்களில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குகிறது.கடலை மிட்டாயில் உள்ள செறிவான வைட்டமின் சத்துகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.கடலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் கால்சியம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் எலும்புகள், பற்களை உறுதிப்படுத்துகிறது.

Dec 28, 2023

வேப்பம்பூ பொடி

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் வெளியேற்றிவிடும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக மழை வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி. இருமல் போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.வேப்பம்பூ சித்திரை. வைகாசி என்ற குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே அதிகளவில் கிடைக்கக்கூடியது.வேப்பம்பூ வாதம். பிந்தம், கபம் ஆகிய மூன்றையும் உடலில் சரியான அளவில் பராமரிக்கக்கூடியது.இந்தப்பொடியை கறிவேப்பிலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்தம் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் சரியாகும்.

1 2 ... 41 42 43 44 45 46 47 ... 51 52

AD's



More News