புலியின் காதின் பின்புறம் ஒருவித வெள்ளை நிற புள்ளிகள் காணப்படுகின்றன. இதை, பொட்டுக்கண் என்பர். ஆங்கிலத்தில், 'ஓசெல்லி' எனப்படுகிறது. இதன் பயன்பாடு பற்றி சரியான விளக்கம் அறியப்படவில்லை. ஆனால், பல ஊகங்களை முன்வைத்துள்ளனர், காட்டுயிரின ஆய்வாளர்கள்.புலியின் எதிரி, அதன் பின்புறமாக வந்தால் பொட்டுக்கண்களை கண்டதும் பயந்து ஓட வாய்ப்பிருக்கிறது புலியின் தலை திரும்பியிருக்கும் நிலையிலும் கூட, தன்னைப் பார்ப்பதாக எதிரி விலங்கு எண்ணி பயந்து ஓட வாய்ப்புண்டு.பின்புறத்தில் வந்து எதிரி தாக்கினால் சமாளித்து ஏய்க்க வசதியாக பொட்டுக்கண்பயன்படலாம் என்ற கருத்தும் உள்ளது.இது தவிர.அடர்ந்த காட்டுப்பகுதியில் தாய் செல்லும் போது, குட்டிப்புலிகள் பின்தொடர வேண்டியிருக்கும். அப்போது, புலியின் காதுகளின் பின்புறம் அமைந்துள்ள பொட்டுக்கண் வழிகாட்டியாக உதவலாம் என்ற கருத்தும் உள்ளது. காட்டில் புலிகள் இடையே தொடர்புக்கு இது பயன்படலாம். உருமறைப்பு, பாதுகாப்பு போன்றவற்றுக்கும் பொட்டுக்கண் உதவலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் உள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்-அஸ்ஸாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள NHPCயின் 2,000 மெகாவாட் சுபன்சிரி கீழ் நீர்மின் திட்டத்தின் பணிகள் 2011 மற்றும் 2019 க்கு இடையில் எதிர்ப்புகள் காரணமாக நிறுத்தப்பட்டன.அருணாச்சலப் பிரதேசம்,அசாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தின் எட்டு அலகுகளில் ஒன்று, சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது, இது விரைவில் செயல்பாட்டுக்கு வருவதற்கான அறிகுறியாகும்.2,000 மெகாவாட் சுபன்சிரி லோயர் நீர்மின் திட்டத்தின் முதல் 250 மெகாவாட் அலகின் ஈரமான இயக்குதல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24, 2025) தொடங்கப்பட்டதாகNHPC லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர்."ஈரமான மின் உற்பத்தி என்பது அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்யாமல் பல அளவுருக்களை சரிபார்க்க டர்பைனின் சோதனை ஓட்டமாகும். நீர் ஓட்டத்துடன் சோதனை ஓட்டம் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகலாம்," என்று NHPC செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை(அக்டோபர்25) தெரிவித்தார்.சுபன்சிரி லோயர் திட்டத்தில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட எட்டு அலகுகள் உள்ளன."இந்த அலகுகளில் நான்கு சோதனை ஓட்டங்களுக்கு தயாராக உள்ளன. அடுத்த கட்டமாக மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்க குறைந்தபட்சம் இரண்டு அலகுகளை ஒத்திசைப்பது அடங்கும்," என்று அவர் கூறினார்.மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள கெருகாமுக்கில் அமைந்துள்ள சுபன்சிரி லோயர் திட்டம், ஜனவரி2005 இல் தொடங்கப்பட்டது. அசாமில் அணை எதிர்ப்பு ஆர்வலர்களின் போராட்டங்கள் மற்றும் கீழ்நிலை சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து,2011 இல் இந்த திட்டத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.பிரதமர் அலுவலகம் இதை முடிக்க அழுத்தம் கொடுத்தபிறகு,2019 அக்டோபரில் பணிகள் மீண்டும் தொடங்கின, மேலும்NHPC மேம்பட்ட தணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டது.வெட் கமிஷனிங் நிகழ்வில் கலந்து கொண்டNHPC தலைவரும் நிர்வாக இயக்குநருமான பூபேந்தர் குப்தா, இந்த சாதனை நிறுவனத்தின் பொறியியல் சிறப்பிற்கு ஒரு "பிரகாசமான சான்றாகும்" என்று கூறினார். "இது ஒரு திட்ட மைல்கல்லை விட அதிகம்; இது தூய்மையான, பசுமையான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் நிலையான பயணத்தை பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார்.
11 தோட்டாக்கள் தாக்கிய குண்டில் சிக்கியபோதும்,ஒரே அடியாக கூட பின்னடையவில்லை.பார்லிமென்ட் மீது தாக்குதலை தைரியமாக தடுத்த காவல்துறை வீராங்கனை - கமலேஷ் குமாரி.நாட்டிற்கு முதல் அசோக சக்கர விருது பெற்ற முதல் பெண் போலீஸ் அதிகாரி.இந்த மாவீரருக்கு மரியாதை செலுத்துங்கள்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் ராஜ்ஹி, தன் சொத்துகளில் இருந்து$16 பில்லியன் (சுமார் ₹1.33 லட்சம் கோடியை நன்கொடையாக அளித்து தனது பில்லியனர் அந்தஸ்தை தானாகவே இழந்தார்.
பாம்புகளை ஒரு பொருட்டாகவே பூனைகள் மதிப்பது இல்லை, என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக, பூனையின் இரவு வேட்டை வாழ்க்கை பயங்கரமானது. தன்னிச்சையாக வளரும் பூனைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் வீட்டில் உள்ள பல்லிகள், பறவைகள். கோழிகள் மற்றும் சில நேரங்களில் பாம்புகளை கூட வேட்டையாடும்.எந்த விலங்குகளும் பாம்புகளை கண்டால் மிரண்டு விலகி விடும். ஆனால், பூனை பாம்பை கண்டால் பயப்படாமல் அமைதியாக இருக்கும். கவனமாக பார்க்கும், ஒரு வேளை அச்சுறுத்தினால் பாம்பை விடாமல் தாக்கும்.பூனைகள் பாம்புகளை விட ஏழு மடங்கு வேகமாக எதிர் தாக்குதல் நடத்துகின்றன. இந்த வேகம் தான் பாம்பு கடியில் இருந்து பூனைகள் தப்பிக்கவும், விரைவாக திருப்பி தாக்கவும் அவைகளுக்கு உதவுகிறது.பாம்புகள் எதிரியை ஒரு நேர்கோட்டில் வேகமாக தாக்குகின்றன. நஞ்சை பாய்ச்சும் ஒரு விரைவான நச்சுகடியை மட்டுமே நம்பி இயங்குகின்றன. மறுபுறம், பூனைகள் நெகிழ்வான உடலமைப்பு, கூர்மையான பார்வை, ஒலியை துல்லியமாக கேட்கும் காதுகள், எந்த திசையிலும் தாவி குதிக்கும் திறன், கூர்மையான நகங்கள் மற்றும் பற்கள், வேகமான பாய்ச்சல் என்று பல திறன்களை கொண்டது.பூனைகள் தங்கள் நகங்களையும், பற்களையும் பயன்படுத்தி வேகமாகவும், பெரும்பாலும் பாம்பின் தலை அல்லது கழுத்தை குறி வைத்தும் தாக்கும். பாம்பின் கழுத்து பலமாக தாக்கப்பட்டால் கழுத்து எலும்பு உடைந்து போகும். இதனால், பாம்புகள் பூனைகளிடம் இருந்து தப்பிக்க வழி தேடி ஓடும் என்கிறது ஆய்வுகள்.
மெதுவாக செல்லும் உயிரினங்களில் ஒன்று ஆமை. இதன் முதுகுப்பகுதியில் கடினமான ஓடு பிணைந்திருப்பதால் வேகமாக செல்ல முடியாது. மேலும் இதன் கால்கள் வேகமாக ஓடும் வகையில் அமைக்கப்படவில்லை. இருப்பினும் தரையை விட நீரில் வேகமாக செல்லும் திறன் பெற்றது. பெரும்பாலான நிலவாழ் ஆமைகளின் உணவாக புல்,இலை, பூ, பழம் உள்ளன. எதிரிகளைக் கண்டவுடன் தலை, கால்களை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதால் தப்பி ஓட வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பல வகைகள் உள்ளன. இதற்கேற்ப அதன் எடை, ஆயுட்காலம், அளவு மாறுபடுகிறது.
உலகில் துலிப் பூக்களின் ஏற்றுமதியில் இந்நாடு முதலிடத்தில் இருப்பதால், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து 'துலிப் பூக்களின் நிலம் ' என அழைக்கப்படுகிறது. மார்ச் - மே மாதத்தில் துலிப் மலர்கள் பூத்து குலுங்கும். உலகில் துலிப் ஏற்றுமதியில் 2, 3வது இடத்தில் சீனா, பெல்ஜியம்உள்ளன. துலிப் மலர் என்பது சிவப்பு, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் பூக்கின்றன. இதில் பல வகைகள் உள்ளன. ஆசியாவின் பெரிய துலிப் மலர் தோட்டம் 74 ஏக்கர் பரப்பளவு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ளது.
விதவிதமான வடிவங்களில் உடலில் டாட்டு அணிவதற்கு இன்றைய தேதியில் பலரும் விரும்புகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டார் அப் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டாட்டு வரையும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளது
தண்ணீர் சேமிப்பு அமைப்புகளில்கூட கண்ணுக்கு தெரியாத வகையில் பிளாஸ்டிக் நுண் துகள்கள்கலந்திருப்பது பல இடங்களில் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக்கழிவுகள் பூமியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன..சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள இயற்கை பொருட்கள், தண்ணீரில்கலந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை ஈர்த்துநீக்குவதில் திறம்பட செயல்படுவதை விஞ்ஞானிகள் அறிந்தனர் .இதனை அடிப்படையாக கொண்டு புளி போன்ற பிசின் நிறைந்த திரவத்தை கொண்ட வெண்டைக்காய், வெந்தய சாறுகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவையும் நீர்நி லைகளில் கலந்து இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை தண்ணீரில் இருந்து பிரித்து இழுத்துக்கொண்டன.ஒரு லிட்டர் தண்ணீரில் இது போன்ற காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒருவித பொடியை ஒரு கிராம் அளவு கலந்தாலே பல மடங்கு மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பிரிக்கப்படுவது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு ஒரு மணி நேரத்தில் முறையே 67 சதவீதம் மற்றும் 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது இந்த ஆய்வுகளில் தெரியவந்தது. கழிவுநீர் சுத்திகரிப்பு செயல் பாட்டில் மாசுகளை அகற்ற தற்போது பாலி அக்ரிலாமைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில், மேற்கண்ட தாவர சாறுகளை நீர் சுத்திகரிப்பு செயல்பாட்டில்பயன்படுத்துவதால், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் எளிதாக அகற்றப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமையலுக்கு பயன்படுத்தும் புளி ,வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு, 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது என்று நிபுணர்கள் ஆய்வுகளில் தெரியவந்தது.
‘ஐஸ்ரிஸன் வெல்ட்’ என்னும் இந்த பனிக் குகை தான், உலகிலேயே மிகப்பெரிய பனிக் குகையாகும். ஐஸ் அசுரர்களின் உலகம் என்று அழைக்கப்படும் இந்த பனிக் குகை ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பழமையான சுற்றுலாத் தலமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இதனைப் பார்வையிட வருகிறார்கள். 42 கி.மீ. தூரம் கொண்ட இந்த குகையில் ஒருகி.மீ தூரம் வரை மட்டுமே பார்வையிட அனுமதிக்கின்றனர். 30 ஆயிரம்சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த குகையில் இயற்கையாய் உருவான உறைபனியின்வடிவங்கள், பனிச்சிலைகள் போன்றவற்றை காணும்போது பனியால் உருவாக்கிய அரண்மனை போல் காட்சியளிக்கிறது.