25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Nov 01, 2025

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்களை நடும், ராஜஸ்தானின் கிராம மக்கள்.

ராஜஸ்தானின் பிபாலந்த்ரி கிராமத்தில், ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதெல்லாம், கிராம மக்கள். அவர்கள் 111 மரங்களை நடுகிறார்கள். அங்கு, மகள்கள் ஒரு சுமையாக அல்ல, இயற்கையின் வரமாகக் கருதப்படுகிறார்கள். இந்த பாரம்பரியம் சுற்றுச்சூழலையும் சமூகத்தையும் மேம்படுத்துகிறது. அத்தகைய சிந்தனைக்கு வணக்கம். 

Nov 01, 2025

முதல் இடத்தில் உலக நாடுகளில் 65 ஆயிரம் கோடி மரங்களை கொண்டதாக ரஷியா  உள்ளது.

உலக அளவில் மரங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பனை உறிஞ்சி நல்ல காற்றை தருகின்றன. இதனை கவனத் தில் கொண்டு பல்வேறு நாடுகளும் மரங்களை வளர்க்கவும், அதிகரிக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முதல் இடத்தில் உலக நாடுகளில் 65 ஆயிரம் கோடி மரங்களை கொண்டதாக ரஷியா  உள்ளது. அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 45 சதவீதம் காடுகள் ஆகும். 2-வது இடத்தில் கனடா உள்ளது. ஏறக்குறைய 32 ஆயிரம் கோடி மரங்களை கொண்டுள்ளது.பிரேசில் 30 ஆயிரம் கோடிக்கு அதிகமான மரங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. அமேசான் மழைக்காடுகளின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.4-வது இடத்தில் அமெரிக்கா 23 ஆயிரம் கோடி மரங்களுடன் உள்ளது. இந்தநாடு சுமார் 30 சதவீதம் மரங்களால் சூழப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் காடுகள் நிறைந்த மாநிலம். சீனா சுமார் 14 ஆயிரம் கோடி மரங்களை கொண்டுள்ளது. அதன் லப்பரப்பில் சுமார் 23 சதவீதம் மரங்களால் சூழ்ந்துள்ளது.ஆஸ்திரே யாவில் 8 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, பூர்வீக யூகலிப்டஸ்ங்கள்தான் இங்கு அதிகம். பொலிவியாவில் சுமார் 6 ஆயிரம் கோடி ங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை அந்த நாட்டின் நிலப்பரப்பில் சதவீதம் ஆகும். மெக்சிகோ நாட்டில் கிட்டத்தட்ட 5700 கோடி ங்கள் உள்ளன. இதன் மூலம் மாங்களின் முக்கியத்துவத்தை வொரு நாடும் உணர்ந்து, அதிகரித்து வருகின்றன.

Oct 31, 2025

வெண் தொண்டை மீன்கொத்தி  பறவை.

வெண் தொண்டை மீன்கொத்தி, தனித்துவ அழகுள்ள பறவையினங்களில் ஒன்று .வயல்வெளி, காட்டுப்பகுதி என எங்கும் வசிக்கும். இவை பளபளக்கும் நீல இறகுகள் உடையது. பழுப்பு நிற மார்பு, வெண் தொண்டை மற்றும் செந்நிற அலகு சிறப்பான தோற்றம் தரும். நீல இறகு, தெளிந்த வானத்தையும், மார்பில் பழுப்பு நிறம் மண்ணை பிரதிபலிக்கிறது. இவை இயற்கையுடன் இணைப்பை வெளிப்படுத்தும்.மீன்களோடு பூச்சி, பல்லி, தவளை, சிறு பாம்புகளை உண்ணும். மரக்கிளையில் அமர்ந்து, கூர்மை பார்வையுடன் கண்காணித்து, திடீரென நீரில் மூழ்கி மீனை பிடிக்கும். இதன் வேட்டைத் திறன் வியப்பு ஏற்படுத்தும். தனித்துவக் குரலில் பாடும். ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய்யும். மரம், மண் பொந்தில் கூடு கட்டி, ஏழு முட்டைகள் வரை இடும். இந்த பறவையினம் தெற்காசியா முதல் மத்திய கிழக்கு வரை பரவியுள்ளது. இந்தியாவில் பல்லுயிர் பெருக்க மகத்துவத்தை உணர வைக்கும் உயிரனங்களில் ஒன்றாக உள்ளது.

Oct 31, 2025

சீனாவில் கொசுவை கொல்ல உருவாக்கப்பட்ட’ பாட்டான் மேட்சிக்ஸ் ‘ என்ற கருவி .

சீனாவில் உருவாக்கப்பட்ட' பாட்டான் மேட்சிக்ஸ்' என்ற கருவி,கொசுவை குறிவைத்துக்  கொல்வதற்காகவே உரு வாக்கப்பட்டது. இந்தக் கருவி, லிடார் (MR) உணரிகள் மூலம். பறக்கும் கொசுவின் அளவு, துரம், மற்றும் திசை ஆகியவற்றை மூன்று மில்லி விநாடி களுக்குள் கண்டறியும். பிறகு ஒரு சிறப்பு லேசர் கற்றையை செலுத்தி, ஒரே நொடியில் 30 கொசுக்கள் வரை அழித்துவிடும்.இதில் இருக்கும் லேசர், மிகத் துல்லியமாக கொசுக்களை கட்டுப்படுத்துவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளது.மனிதர்களுக்கு ஆபத் தில்லாதது என்ற தரச் சான்று பெற்ற இந்தக் கருவி, நீர்ப்புகாதபடி, வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை வீட்டிற்குள் மட்டுமல்ல. வெளியேயும் நிறுவமுடியும். இதன் அடிப்படை மாடல், 3 மீட்டர் துாரம் வரையிலும், ப்ரோ மாடல் 6 மீட்டர் தூரம் வரையிலும் கொசுக்களை தாக்கும். இதன் விலை ரூ. 40,102 முதல் ரூ. 53,898 ரூபாய் வரை இருக்கும்.மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு அருகில் லேசர் பாய்வதைத் தடுக்க ஒரு ரேடார்  பாதுகாப்பு அமைப்பு இதில் பொருத்தப்பட்டுள்ளது.ஆனாலும், இந்த லேசரின் சக்தி மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்து சில விமர்சனங் கள் இருக்கவே செய்கின்றன. இந்தக் கருவி பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால்,  கொசுக்களுக்கு எதிராக ஒரு புதிய ஆயுதம் நமக்குக் கிடைக்கும்.

Oct 31, 2025

ஆஸ்ட்ரோலோபிதீகஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மனித இனத்தைச் சேர்ந்த தொல்லெச்சம்.

புதிய மனித இனத்தைச் சேர்ந்த தொல்லெச்சத்தை எத்தியோப்பியாவில் ஆய்வாளர்கள் கண் டறிந்துள்ளனர். 26.5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 10 பற்கள் இங்கு கிடைத்துள்ளன. இந்தப் புதிய இனத்திற்கு ஆஸ்ட்ரோலோபிதீகஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Oct 30, 2025

எல்லாவற்றிலும் ,எங்கும் ரசித்து வாழ கற்றுக்கொள் .

 காட்டு மூங்கில் துளைகளில் காற்று எழுப்பும் அழகு ஓசையைக் கேட்பதற்கு, ஓடும் ஆற்றின் சலசலப்புச் சத்தம் கேட்க ரசனை வேண்டும்.அன்றாட வாழ்வில், சாப்பிடுவது, காபி குடிப்பது, காதல் மிக்க தாம்பத்யம், குழந்தைகளுடன் விளையாட்டு என எல்லாவற்றிலும் வேகம் அல்லது அவசரம் இல்லாமல் ரசித்து வாழ்தலே இன்பம். குறிப்பிட்ட விஷயத்தின் மீது சுவை கொள்ளுதல் ரசனை எனப்படும். ரசனை கொண்ட ஒருவரே ரசிகன் அல்லது ரசிகை எனப்படுவார். ரசம் என்பதற்கு 'சாறு' சொல் சுவை, கலை உணர்வு எனப் பொருள்குற்றால அருவியில் ஆனந்தமாக குளிப்பது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை நிதானமாக ரசிப்பது.தஞ்சை கோபுர அழகை ரசிப்பது.நெல்லையப்பர் கோயிலின் துாண்களின் வரும் பலவித சப்தங்கள்.தென்காசி கோயில் வாசலில் நம்மை உள்ளே போக வைக்கும் வெளியே தள்ளும் தென்றல் காற்றை உணர்தல்.மதுரை மீனாட்சியம்மனின் மாணிக்க மூக்குத்தியின் அழகு.சிருங்கேரி சாரதாம்பாளின் ஆபரணங்களின் அழகு.காஞ்சி காமாட்சியின் மடித்து உட்கார்ந்த நிலை அழகு. காருகுறிச்சி நாதஸ்வரம், லால்குடி வயலின், பாலமுரளி கச்சேரி. கட்டபொம்மனாக நடித்த சிவாஜியின் வீர வசனம். என எங்கும் ரசனைக்கு இடமுண்டு. அதற்கான நேரம், இடம், ரசிக்கக் கூடிய மனம் வேண்டும். அதுதான் கடவுள் தரும் கொடை. பாரதியார் அதையே 'ரசத்தில் தேர்ச்சி கொள்' என்கிறார்.பாரதியாருக்கு சுற்றிலும் எத்தனை விதமான முட்டுக்கட்டைகள்?போதிய வருமானம் இன்மை, குடும்பப் பிரச்னை, அரசின் கண்காணிப்பு, ஊரெங்கும் பித்தன் என்ற ஏளனம் எந்தளவிற்கு ரசனை இருந்தால் அவர், 'ரசத்திலே தேர்ச்சி கொள்' என எழுதிஇருப்பார். 

Oct 29, 2025

'க்ஸ்வி லாஸ்' எனப்படும் கோணல் காடு.

ஐரோப்பிய நாடான போலந்து, நோவே ஜர்னோவா கிராமத்தில்,'க்ஸ்வி லாஸ்' எனப்படும்,கோணல் காடு அமைந்துள்ளது. இங்கு,400 பைன் மரங்கள். தரைப்பகுதியில் வடக்கு நோக்கி வளைந்து, பின் நிமிர்ந்து வளர்ந்திருக்கும், காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த மரங்கள்9அடி வரை வளைந்து பின் நெடிதாக நிற்கின்றன. வழக்கமான பைன் மரங்கள் அடர்ந்த காடும் உள்ளது.இந்த மரங்கள் பெரும் புயலால் வளைந்ததாக கூறப்பட்டது. புவி ஈர்ப்பு விசையால் வளைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.ஆனால் விஞ்ஞானிகள் இதை மறுக்கின்றனர். ஏனெனில் புவி ஈர்ப்பு விசை கீழ்நோக்கியே இழுக்கும்.இந்த பகுதி விவசாயிகள், படகு கட்டுவதற்காக,1930ல் மரங்களை செயற்கையாக வளைத்து இந்த பகுதியில் வளர்க்க முயன்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுபரவலாக ஏற்கப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரில், ஐரோப்பிய நாடான ஜெர்மனி,1939ல் போலந்தைக் கைப்பற்றிய போது, விவசாயிகளின் செயல்பாடு தடைபட்டு, திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.இதுபோன்று மரங்களை வளைத்து வளர்ப்பது சாத்தியமா என்பதற்கு அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள,"ஜில்ராய் கார்டன்' முன் உதாரணமாக உள்ளது. அங்கு, இது போல் வளைந்து, வளர்ந்துள்ள மரங்கள் உள்ளன.போலந்தில் உள்ள கோணல் காடு, அதன் தனித்துவத்தால் உலகப் புகழ் பெற்றுள்ளது. அதைபோலந்து அரசு பாதுகாக்கப்பட்ட இயற்கை சின்னமாக பராமரித்து வருகிறது.

Oct 29, 2025

தாவரங்களில் உள்ள புரதம் ,மாமிசப் புரதம், இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது.

தாவரங்களில் உள்ள புரதம் மாமிசப் புரதத்தை விட தரம் குறைந்தது என்று நம்பப் பட்டது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது என்று தெரியவந்துள்ளது.

Oct 28, 2025

சென்னை வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி சுலபம்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம் .மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். 

Oct 27, 2025

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள தர்மஜ் என்.ஆர்.ஐ., கிராமம்.

.நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், என்.ஆர்.ஐ., என அழைக்கப்படுகின்றனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தர்மஜ் கிராமம் உள்ளது. 2011 சென்செஸ் படி மக்கள்தொகை10,429. இக்கிராமத்தை சேர்ந்த1700 குடும்பத்தினர் பிரிட்டனிலும்,800 குடும்பத்தினர் அமெரிக்காவிலும், பலர் கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர். இதனால் இது என்.ஆர்.ஐ., கிராமம்' என அழைக்கப்படுகிறது. இவர்கள் இணைந்து தங்கள் கிராமத்தில், சாலை, குடிநீர் உள்ளிட்ட நகரத்துக்கு இணையாக வசதிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு 13 அரசு, தனியார் வங்கிகள் உள்ளன.

1 2 ... 78 79 80 81 82 83 84 ... 130 131

AD's