25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Nov 05, 2025

சீன கப்பல்உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலாக 'எவர் கிரீன்' குறிப்பிடப்படுகிறது.

உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் சர்வதேசகடல்சார் அமைப்பின் தகவலின்படி, கடல் போக்குவரத்து மூலம் தான் நடைபெறுகிறது. பொம்மைகள் முதல் கனிமங்கள், நிலக்கரி, பெட்ரோல் வரை அனைத்து வகையான பொருட்களையும் கொண்டு செல்கின்றன. ஒரு கப்பல் எந்த வகையான பொருட்களை கொண்டு செல்வதற்காக இயக்கப்படுகிறதோ அதனை பொறுத்து கொள்கலன் கப்பல், ரோ ரோ கப்பல், மொத்த கேரி எண்ணெய் டேங்கர் என்றபெயர்களில் அழைக்கப்படுகின்றன.'எவர் கிரீன்' சீன கப்பல் கட்டும் குழுவின் தயாரிப்பான இது 400 மீட்டர் நீளமும், 61,50 மீட்டர் அகலமும் கொண்டது. ஏறக் கு றைய, நான்கு கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரியது. உலகின் 2-வது பெரிய கப்பலான அல்ஜெசிராஸ் சுமார் 400 மீட்டர் நீளமும், 61 மீட்டர் அகலமும் கொண்டது. 3-வதாக புதிய தரைக்கடல் கப்பல் கட்டும் நிறுவன தயாரிப்பான எம். .சி. குல்சுன், எம்.எஸ்.சி. மினா ஆகியவை பிரபலமான சரக்குக் கப்பல்கள் ஆகும். இதில் எந்த வகையான குளிர்சாதன  உணவு, மருந்துகளையும் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல தயாரிக்கப்பட்ட தனித்துவமான கப்பலாக உள்ளது. பயணி கள் கப்பலை பொறுத்தவரை உலக அளவில் 'குயின்மேரி  " ரக கப்பல்கள் பெயர் பெற்றவை. குயின் மேரி 2,345 மீட்டர் நீளம்  கொண்டது. பயணிகள் மற்றும் சரக்கு கப்பலாக இருந்து, பின் னர் உலகின் அதிநவீன பயணிகள் சொகுசு கப்பலாகவும் மாறியது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். உலகில்  பல்வேறு கப்பல்கள் இருந்தாலும், குயின் மேரி மட்டுமே செல்லப் பிராணிகளுடன் பயணிக்கும் ஒரே கப்பலாகும்.

Nov 05, 2025

உடலுக்கும் ,சுற்றுச்சூழலுக்கும் ,தீங்கான நான் ஸ்டிக்' பாத்திரங்கள்.

பொதுவாக 'நான் ஸ்டிக்' பாத்திரங்களின் மேற்பரப்பில் பூசப் படும் ரசாயனங் கள் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கானவை. எனவே இவை இரண்டுக்கும் பாதிப்பில்லாத பூச்சை கனடாவைச் சேர்ந்த டொரன்டோ பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

Nov 05, 2025

செல்போனை நீண்டநேரம் பார்ப்போருக்கு நாளடைவில் கண் நீர் அழுத்த நோய் வரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

செல்போனை நீண்டநேரம் பார்ப்போருக்கு நாளடைவில் கண் நீர் அழுத்த நோய் வரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாததுதான் இதில் கொடுமையான விஷயம். இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. நாளடைவில் கண் பார்வை மொத்தமாக பறிபோய்விடும். மின்விளக்கை பார்த்தால் சுற்றி வளையங்கள் தெரிவது, தலை வலி, ஒரு பொருளை பார்த்தால் நடுப்பகுதி மட்டும் தெரிவது ஆகியவையே இதன் ஆரம்ப அறிகுறிகள்.

Nov 05, 2025

இராஜபாளையம் டைம்ஸ் உங்கள் போனில் பார்க்க ........... தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்இராஜபாளையம் டைம்ஸ்.

'இராஜபாளையம் டைம்ஸ்' என்ற பத்திரிக்கை2001 மார்ச் முதல்2025 மார்ச் வரை(25 ஆண்டுகள்) விலையில்லா பத்திரிகையாக இராஜபாளையம் நகரச் செய்திகள், மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்றுவெளியிட்டு இருக்கிறேன்.பலமுறை நான் சில பத்திரிக்கைகள் படித்து முடிக்கும் பொழுது கனத்த இதயத்துடன் தான் பத்திரிக்கையை மடித்து வைப்பேன். 'மன நிறைவுடன் ஒரு பத்திரிக்கை விஷயங்களை நாம் ஏன் நடத்தக் கூடாது' என்ற ஒரு ஆதங்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் Rajapalayamtimes.Rajapalayamtines. படித்து முடித்தவுடன் யாராக இருந்தாலும், ஏதோ நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம், என்ற மன நிறைவுடன் தான் பத்திரிக்கையை வாசித்து வந்துள்ளனர்.காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல இச்செய்திகள் நிறைய மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2021 ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தமிழ் வருடப் பிறப்பன்று நவீன முறையில் EPaper ஆக rajapalayamtimes.com என்ற Website ஆரம்பிக்கப்பட்டது முதலில் சொற்பமான viewers உடன் வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கூடக்கூட E-Paper தற்பொழுது rajapalayamtimes App ஐ உருவாக்கி கிட்டத்தட்ட17 லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்து உள்ளது. என்பதை பெருமையுடன்தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கட்டணமில்லாEPaper ஐAndroidSmart போன் வைத்திருப்பவர்கள் Playstore க்குச் சென்று rajapalayamtimes ஐClick செய்து டவுன்லோட் செய்து, எங்கள் பத்திரிக்கைக்கு (E-paper) ஆதரவு அளிப்பீர்கள் என்ற பெரு நம்பிக்கையுடன் தொடர்கிறேன். குறைந்த GB யுடன் குட்டி குட்டி செய்திகளாக வலம் வரும் எங்களுடைய பத்திரிக்கைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு, சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை அவர்கள் மனம்கோணாமல், மனதைக் காயப்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதில்லை. நினைத்த நேரத்தில் எங்குசென்றாலும் உங்கள் மொபைலில் இருக்கும் குட்டிப் பத்திரிக்கைRajapalayamtimes. தற்கால தொழில்நுட்பமுறையில் நவீன மயமாக்கி செயல்படுத்துகிறேன். கூடியவிரைவில்ஐபோனிலும் வலம் வரும்படி செய்ய உள்ளோம். என்பதை பகிர்ந்து கொள்கிறேன். தற்பொழுது இப்பத்திரிக்கையை உலகம் முழுவதும் உள்ள அனைவரும் படிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையில் மாதம் ஒரு முறை வெளியிடும் முதல் பக்க கட்டுரையை இராஜபாளையம் நகர மக்கள் அனைவரும் விரும்பி படிக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். எங்கள் செய்திகளில் நல்ல விஷயங்களைத் தவிர எந்தவொரு கிரிமினல், விபத்து, மற்றவரைக் காயப்படுத்தும் சொற்கள் கிடையாது, மனதிற்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் மன நிறைவையும் கொடுக்கும், ஒரே பத்திரிக்கை இராஜபாளையம் டைம்ஸ் மாத்திரம் தான்.Rajapalayamtimes பத்திரிக்கை படித்தவுடன் மனமகிழ்ச்சியை தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உங்களுடைய பேராதரவு தொடர்ந்து எங்கள் பத்திரிக்கையை மகோன்னதமான நிலைக்கு உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எங்களுடைய பத்திரிகை சேவை தொட்டுத் தொடரும்.'அட' நம்நாட்டில் உலகத்தில் இப்படி எல்லாம் நடக்கிறதா? என்ற மனத்துடன் தினம், தினம் படிக்கத் தூண்டும் குட்டிப் பத்திரிக்கை. rajapalayamtimes தினமும்5 நமிடங்கள் வாசித்தாலே போதும், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள நல்லதொரு பத்திரிக்கை. நிறைய செய்திகளை வெளியிட்டு எதைப்படிப்பது என்று திணறாமல், நின்று நிதானமாகப் படிக்க rajapalayamtimes ஐ தேர்ந்தெடுங்கள் மன நிறைவுடன் வழங்கும் மனநிறைவான rajapalayamtimes. செய்திகள் பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.உங்கள் செய்திகள் சங்கங்கள், கோவில் திருவிழா,  கல்லூரி, பள்ளி, விழாக்களை எங்களுக்குWhatsApp இல் அனுப்பி வைத்தால் இந்த செய்திகளில் பகிர்ந்து கொள்ளும். உங்கள் வியாபாரம், சம்மந்தமான விளம்பரங்களை கட்டணமில்லாமல் வெளியிடும் ஒரே இதழ் EPaper  ஐ Android Smart போன் வைத்திருப்பவர்கள்  இராஜபாளையம் டைம்ஸ் உங்கள் போனில் பார்க்க  https://play.google.com/store/apps/details?id=in.anjanainfotech.rajapalayamtimes      CLICK  LINK.READ OUR NEWS.25 ஆம் வருடத்தை  நோக்கி இராஜபாளையம்  டைம்ஸ் 

Nov 04, 2025

.'ப்ரைனொசோமா” ( கொம்பு பல்லி )

 ஊர்வனவகைஅமெரிக்காவில்வாழும்தனித்துவமுள்ளவிலங்கினம்கொம்புபல்லி.ஆங்கிலத்தில்இதன்அறிவியல்பெயர்.'ப்ரைனொசோமாஎன்பதாகும்.வட அமெரிக்காவில் மெக்சிகோ, கனடா பாலைவன புல்வெளி பகுதிகளில்அதிகம் காணப்படுகிறது. இதன் தற்காப்பு நடைமுறைகள் மிகவும் உடல் அமைப்பு, நடத்தை  வித்தியாசமானது.இதன் தலை மற்றும் உடல் பகுதியில் கொம்பு போன்ற முட்கள் நிறைந்து உள்ளன. இதன் உதவியால் பாறை மற்றும் மண்ணுடன் ஒன்றி மறைந்து வாழ்கிறது. எதிரியின் பார்வையில் இருந்து தப்புகிறது.இதன் உடல், பரந்து, தட்டையாக இருக்கும்; சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றும் திறன் உடையது. முதன்மை உணவாக எறும்புகளையும், பூச்சிகளையும் உண்ணும்.இதன் கண்களுக்கு அருகில் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி எதிரி மீது ரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கும். அந்த ரத்தம் கசப்பு சுவையுடன் இருக்கும். இதை கண்டு பூனை, நாய் போன்ற இதன் எதிரி விலங்குகள் திகைத்து ஓடிவிடும். உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு நடைமுறையாக இதை பின்பற்றுகிறது கொம்பு பல்லி.முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினம் இது. பாலைவனத்தில் தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உடல் வெப்பத்தை அமைத்து கொள்ளும். குளிர்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடும். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கு ஏற்ப வாழ்வை அமைத்து கொள்ளும்.காடு அழிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பட்டால் கொம்பு பல்லி இனம் உலகில் குறைந்து வருகிறது. இந்த விலங்கினத்தை பாதுகாப்பது நம் கடமை.

Nov 04, 2025

 'டயட் சோடா'

சர்க்கரை சேர்க்காத 'டயட் சோடா' பருகும் பழக்கம் தற்போது அதி கரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு நீரிழிவு வகை 2 நோய் ஏற்படும் வாய்ப்பு 38 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Nov 03, 2025

காகித குளவி.

சமூக குளவிகளில் ஒரு வகை காகித குளவி. இது, மரப்பட்டையை மென்று, காகிதம் போலாக்கி கூட்டை உருவாக்கும். அதனால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. மஞ்சள், கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. கூடு, திறந்த அமைப்புடன் தொங்கும் வடிவில் இருக்கும். வீட்டுக் கூரை, மரங்களில் கூடு கட்டும். தேன், பழச்சாறு போன்றவற்றை உணவாக கொள்ளும். வட அமெரிக்காவில்  சுமார் 22 அறியப்பட்ட காகிதக் குளவி இனங்கள் உள்ளன, மேலும் உலகில் நூற்றுக்கணக்கானவை உள்ளன.  இந்த வகை பூச்சியின் சில கூடுதல் இனங்களில்  அன்யூலரிஸ்  பேப்பர் குளவி, அப்பாச்சி பேப்பர் குளவி,  டோமினுலஸ்  பேப்பர் குளவி, டோர்சலிஸ்  பேப்பர் குளவி மற்றும் கோல்டன் பேப்பர் குளவி ஆகியவை அடங்கும். காகிதக் குளவிகளுக்கு ஒத்த குழுக்களில் மஞ்சள் ஜாக்கெட்டுகள் மற்றும் ஹார்னெட்டுகள், பாட்டர் மற்றும் மேசன் குளவிகள், சிலந்தி குளவிகள் மற்றும் நீண்ட இடுப்பு காகித குளவிகள்  ஆகியவை அடங்கும்  . கூட்டில், ராணி,தொழிலாளி, ஆண் என்ற வகைமையில் சமூக அமைப்பாக வசிக்கும். காகித குளவி, மற்ற பூச்சிகளை வேட்டையாடும். பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கம்பளிப்பூச்சியை கட்டுப்படுத்த உதவும். இதனால் விவசாயத்துக்கு நன்மை பயக்கிறது.முக அடையாளத்தை அறியும்திறன் கொண்டது. பூச்சிகளில் இது அரிதான பண்பு. கூட்டைப் பாதுகாக்க ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபடும். இதனால் மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படும். இதன் கூடு இருக்குமிடத்தில் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.சுற்றுச்சூழலை பராமரிப்பதில் இதன் பங்கு அளவிடற்கரியது. இதன் கூடு கட்டும் திறன் மிகவும் அற்புதமான ஒன்றாக உள்ளது.

Nov 03, 2025

'காஸ்மிக் ஹார்ஸ் 'ஷூ' எனும்  கருந்துளை.

 'காஸ்மிக் ஹார்ஸ் 'ஷூ' எனும் பால்வீதி மண்ட லத்தில் மிக பிரமாண டமான கருந்துளை ஒன்றை விஞ்ஞானி கள் கண்டறிந்துள்ள னர். இது நம் பால்வீதி மண்டலத்தின் மத்தியில் உள்ள கருந்துளையை விட 10,000 மடங்கு பெரியது.

Nov 03, 2025

2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையத்தை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது.

நிலவில் தரை யிறங்கி ஆய்வு மேற்கொள்ள மின் சாரம் தேவை. இதை உற் பத்திசெய்யும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையத்தை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து 100 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

Nov 01, 2025

இந்தியாவின் இளைய பணக்காரர்களில் பத்து பேர்,22 வயது இளைஞர் ரூ.4,480 கோடி சொத்துக்களுடன் முன்னிலை வகிக்கிறார்.

இந்தியாவின் தொழில்முனைவோர் வரைபடத்தை மாற்றியமைக்கும் புதிய தலைமுறை செல்வத்தை உருவாக்குபவர்களை M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025 வெளிப்படுத்தியுள்ளது. விரைவான வர்த்தகம் முதல் AI தலைவர்கள் வரை, 31 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய பத்து நபர்கள் இந்தியாவின் பணக்காரர்களில் தங்கள் இருப்பை ஏற்படுத்தியுள்ளனர், இது இளைஞர்கள் முன்னணியில் இருக்கும் புதுமைகளை நோக்கிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. முதலிடத்தில் செப்டோவின் இணை நிறுவனர் கைவல்யா வோஹாரா(22) உள்ளார், இவர் ரூ.4,480 கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் இளைய பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவரது கூட்டாளியும் சக இணை நிறுவனருமான ஆதித் பாலிச்சா(23) ரூ.5,380 கோடியுடன் அவரைத் தொடர்ந்து வருகிறார். ஸ்டான்ஃபோர்டில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் இணைந்து, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப்களில் ஒன்றை உருவாக்கியுள்ளனர், இதன் மதிப்பு ரூ.5.9 பில்லியனுக்கும் அதிகமாகும்.31 வயதுக்குட்பட்ட இளைய மனம் கொண்டவர்கள் முன்னிலவகிக்கின்றனர். அடுத்ததாக எஸ்ஜி ஃபின்சர்வ் நிறுவனத்தின் ரோஹன் குப்தா(26) ரூ.1,149 கோடி நிகர மதிப்புடன், பாரத்பே நிறுவனத்தின் ஷஷ்வத் நக்ரானி(27) ரூ.1,349 கோடி நிகர மதிப்புடன் உள்ளனர். சைபர் பாதுகாப்புத் துறையில், டிஏசி செக்யூரிட்டியின் நிறுவனர் த்ரிஷ்னீத் அரோரா(30) ரூ.1,820 கோடி நிகர மதிப்புடன் விரும்பத்தக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளார், இது தொழில்நுட்பம் சார்ந்த செல்வத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.31 வயதானவர்களில்,PerplexityAI இன் இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ரூ.21,190 கோடி சொத்துக்களுடன், இந்தியாவின் மிகவும் உலகளவில் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்கிறார்.OYO(பிரிசம்) நிறுவனர் ரித்தேஷ் அகர்வால்(31), ரூ.14,400 கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளார், இந்தியாவின் விருந்தோம்பல் துறையில் தனது தொடர்ச்சியான ஆதிக்கத்தைப் பதிவு செய்கிறார்.இந்தப் பட்டியலில் ரேசன் சோலாரின் ஹர்திக் கோதியா(31) ரூ.3,970 கோடியுடன், க்யூபிட்டின் ஆதித்ய குமார் ஹல்வாசியா (31) ரூ.1,960 கோடியுடன், ராகவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இந்தியாவின் ஹர்ஷா ரெட்டி பொங்குலேட்டி (31) ரூ.1,300 கோடியுடன் உள்ளனர்.பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தப் பெயர்கள், விரைவான வர்த்தகம், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதி தொழில்நுட்பம் முதல் இந்தியாவின் விரிவடைந்து வரும் தொழில்முனைவோர் சமூகத்தைக் குறிக்கின்றன. ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, பட்டியலில் உள்ள பங்கேற்பாளர்களில்66% பேர் சுயமாகத் தொடங்குபவர்கள், புதிதாக நுழைபவர்களின் சராசரி வயது கடுமையாகக் குறைந்து வருவது, இந்தியாவின் வளர்ந்து வரும் தொடக்கநிலைப் பொருளாதாரத்தை எடுத்துக்காட்டுகிறது.2025 பதிப்பு ரூ.1,000 கோடி சொத்து மதிப்புள்ள 1,687 நபர்களை அங்கீகரிக்கிறது, இதில் 358 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர், இது இந்தியாவிற்காக இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமாகும்.

1 2 ... 77 78 79 80 81 82 83 ... 130 131

AD's