25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Nov 25, 2025

ஏன் தண்ணீருக்குள் கைகளை வைத்திருக்கும் போது தோல் சுருங்குகிறது.?

கடினமான வேலைகளை செய்வதற்காக கைகளும் கால்களும் பயன்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பு டன் வைப்பதற்காக தோலில் சீபம் என்கிற எண்ணெய் சுரக்கிறது. தண்ணீரில் கைகளை வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது சீபம் சுரந்து தோலுக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாத்து விடுகிறது. அதிக நேரம் தண்ணீரில் கைகள் இருக்கும் போது சீபம் அதிக மாக சுரக்காது. அதனால் தண்ணீர் தோலுக்குள் நுழைந்து விடுகிறது. கை கால்களில் மேடு, பள்ளம் தோன்றி விடு கிறது. இதனால் தோல் சுருங்கி விடு கின்றன. தண்ணீரை விட்டு விரல்களை எடுத்த சிறிது நேரத்தில் தண்ணீர் வெளியேறி மீண்டும் சீபம் சுரக்கிறது.அதனால் விரல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். 

Nov 24, 2025

கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடம் .

கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடமாக செயல்படும்.  நீர் மற்றும் காற்று புகா தன்மையுடன் 2 நபர்கள் வரை இதில் தங்க ,மரம் மற்றும் இரும்பு கலவையால் ஆன இது, உறைபனி காலத்தில் மக்களை பாதுகாக்கும்.. இவை நிரந்தர வீடுகளுக்கு மாற்றாக இல்லாவிட்டாலும், அவசரகாலங்களில் தங்குமிடங்களாக செயல்படு கின்றன. 2020-ம் ஆண்டில் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது ஜெர்மனியின் பல பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது. உணவு, உடை, இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகளாகும். வீடு இல்லாதவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் ,குளிர்காலம் மற்றும் மழைக் காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மிக அதிகம். இதை கருத்தில் கொண்ட ஜெர்மனி அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை வழங்க சிறிய, சூரிய சக்தியில் இயங்கும்கூடு வடிவிலான தங்குமிடங்களை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

Nov 24, 2025

இயற்கையை காப்பாற்ற குழந்தைகளுக்குவிழிப்புணர்வு அளிக்க குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்.

தாத்தா வைத்த தென்னையுமே, தலையால் இளநீர் தருகிறது.  பாட்டி வைத்த கொய்யாவும் ,பழங்கள் நிறையக் கொடுக்கிறது.  அப்பா வைத்த மாஞ்செடியோ, அல்வா போலப் பழம் தருது.  அம்மா வைத்த முருங்கையுமே, அளவில்லாமல் காய்க்கிறது.  அண்ணன் வைத்த மாதுளையோ, கிண்ணம் போல பழுக்கிறது.  சின்னஞ் சிறுவன் நானும் ஒரு செடியை நட்டு வளர்ப்பேனே! 

Nov 22, 2025

சுதந்திர இந்தியா வரலாற்றில் இந்திய நாணயத்தில் பாரதமாதா படம் .

ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டுவிழாவைமுன்னிட்டு பிரதமர் மோடி நாணயம் வெளியிடப்பட்ட, இந்திய நாணயத்தில் பாரதமாதா படம் இடம் பெற்றது. ”இது ஒவ்வொரு பாரததேச குடிமகனுக்கும் பெருமை" என்றார் பிரதமர் மோடி

Nov 22, 2025

ஆசிய கோப்பை நட்சத்திரம் அபிஷேக் சர்மாவுக்கு HAVAL H9 SUV விருது வழங்கப்பட்டது.

.2025 ஆசிய கோப்பையில் தனது அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த அபிஷேக் சர்மா, போட்டியின் வீரருக்கான விருதை சரியாகப் பெற்றார். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக, அவருக்கு ஒரு பிரீமியம் மற்றும் சக்திவாய்ந்த ஹவல் H9 SUV பரிசாக வழங்கப்பட்டது. ஹவல்H9 அதன் கரடுமுரடான நல்ல தோற்றத்திற்கும், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவைக்கும் பெயர் பெற்றது, இது ஒரு ஆடம்பர ஆஃப்ரோடிங்SUV ஆக நிலைநிறுத்தப்படுகிறது.4,950 மிமீ நீளம் கொண்ட இந்த பெரியSUV, ஒரு சிறந்த ஆஃப்ரோடு ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுகடினமான நிலப்பரப்பில் பயணித்தாலும் சரி அல்லது நகர்ப்புற சாலைகளில் பயணித்தாலும் சரி, அற்புதமான செயல்திறனை உறுதி செய்யும் வகையில், ஆஃப்ரோடு திறன் மற்றும் ஆடம்பர வசதியின் சரியான கலவையாகH9 வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த கணிசமானSUV4950 மிமீ நீளமும்1976 மிமீ அகலமும் கொண்டது.ஹவல்H9 வாகனம் ஓட்டுவதை எளிதாக்கவும் பாதுகாப்பாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்ட சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது:ஆறு ஏர்பேக்குகள்.வாகனத்தைச் சுற்றி மறைந்திருக்கும் ஆபத்துகளைக் கண்டறிவதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.போக்குவரத்து நிலைமைகளின் அடிப்படையில் வாகனத்தின் வேகத்தை தானாகவே சரிசெய்து, நீண்ட பயணங்களைக் குறைவான கடினமானதாக மாற்றுகிறது.நிறுத்தும் மற்றும் செல்லும் போக்குவரத்தின் போது கூட மன அழுத்தமில்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது.360,,டிகிரி வியூ கேமரா: பார்க்கிங் மற்றும் சுற்றுப்புறங்களின் பொதுவான கண்காணிப்பை எளிதாக்குகிறது.HAVAL சவுதி அரேபியா வலைத்தளத்தின்படி, ஹவல் H9 SUVயின் தற்போதைய விலை 142,199.8 சவுதி ரியால்களாகும், இது இந்திய ரூபாயில் தோராயமாக ₹33,60,658 ஆகும்.நிறுவனத்தின் தோற்றம்ஹவல் என்பது உலகளாவிய கிராஸ்ஓவர் மற்றும்SUV சந்தையில் ஒரு முக்கிய வீரரான சீன ஆட்டோமொபைல் நிறுவனமான கிரேட் வால் மோட்டார் (GWM)-க்கு சொந்தமான ஒரு ஆட்டோமொடிவ் பிராண்ட் ஆகும்.2 ஹவல் GWM-இன் தயாரிப்பு வரிசையிலிருந்து மார்ச் 2013 இல் ஒரு தனி பிராண்டாக மாறியது.

Nov 22, 2025

சைக்கிள் ஓட்டுதலின் போது மனித உடலில் ,தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

நடைப்பயிற்சி மற்றும் மெது ஓட்ட பயிற்சிகளை விட சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு 4 மடங்கு அதிக ஆற்றலையும், ஓடுவதை விட 8 மடங்கு அதிக பலன்களையும் தருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மனிதர்கள் அதிக தூரம் பயணிக்க உதவுவது சைக்கிள் மட்டுமே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..உடலின் தசைகளுக்கு தேவையற்ற அழுத்தம் தராமல், உடலின் ஒரு குறிப்பிட்ட தசை சக்தியை இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உடலும் நன்கு இயங்க சைக்கிள் உதவுகிறது என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அந்த ஆய்வில், நாம் நடக்கும் போது அல்லது ஓடும் போது, அடிப்படையில் உடல் முன்னோக்கி நகரும் போது, தரையில் விழுந்து விடாதபடி உடலை கட்டுப்படுத்தும் செயல்பாடு நடைபெறுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஈர்ப்பு விசைக்கு எதிராக கால் மூட்டுகளை தூக்கி கவனமாக வைக்கும் செயல்முறையின் போது உடலில் இருந்து அதிகமான சக்தி இழப்பு ஏற்படுகிறது.ஆனால், சைக்கிள் என்ற மிதிவண்டியில்,கால்கள் மட்டுமே ஆற்றலை வெளிப்படுத்தி அதனை அழுத்த விசையாக மாற்றுகின்றன. நடைப்பயிற்சியில் ஒட்டுமொத்த உடலும் அழுத்தத்தை உணர்கிறது. இதற்கு பதிலாக, சைக்கிள் பெடல்களை மிதிக்கும் போது கால்களில் இருந்து மட்டும் தரப்படும் அழுத்தம்,சைக்கி ளின் சுழற்சி ஆற்றலாக மாறி விடுகிறது. இதன் மூலம், மனித உடலில் தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.சைக்கிள் ஓட்டுதலின் போது, குறைந்த ஆற்றல் செலவழிப்பு மூலம் உடலில் அதிக ஆற்றல் சேமிக்கப்ப டுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

Nov 21, 2025

அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவ பறவையினம் கறுப்பு மரங்கொத்தி.

 உடல் கறுப்பு நிறமாக இருக்கும் மரங்கொத்தி வடஅமெரிக்கா மற்றும் அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவமானது. ஆண் பறவை தலை மஞ்சள் வண்ணப் பட்டையுடன் ஜொலிக்கும். மரங்களில் வாழும் புழு, பூச்சிகளை உணவாகக்கொள்ளும். கறுப்பு மரங்கொத்தி, எரிந்த நிலையில் இருக்கும் காட்டுப்பகுதியில் அதிகமாக பறந்து திரியும். தீயில் கருகும் மரங்களில்இருந்து தப்ப முயலும், பூச்சிகளை பிடித்து உண்ணும். மற்ற மரங்களில் கூர்ந்த அலகால் பட்டையை உரித்து, நீண்ட நாக்கால் பூச்சிகளை வெளியே இழுத்து உண்ணும். இந்த பறவை மரத்தில் துளையிடும் ஒலி, வெகு தொலைவு வரை கேட்கும்.இதன் இனப்பெருக்கம் மே முதல்ஜூலை வரை நடக்கிறது. ஆண், பெண் பறவைகள் இணைந்து மரக்கிளையில் கூடு கட்ட குழி தோண்டும். பெண் பறவை, இரண்டு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். இரு பாலினமும்  மாறி மாறி அடைகாக்கும். முட்டைகள் பொரிந்து, நான்கு வாரங்களில்குஞ்சுகள் பறக்க துவங்கும்.இயற்கையை சமநிலையில் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பறவை. புழு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், காடு ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இந்த பறவையின எண்ணிக்கை குறைந்துள்ளதால், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் வைத்துள்ளது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். இதன் தனித்துவ வாழ்க்கை முறையும், எரியும் காடுகளுடனான தொடர்பும், இயற்கை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

Nov 21, 2025

ஸ்மிர்தி மந்தனா, இசையமைப்பாளர்பலாஷ் முச்சால்  திருமணம் .பிரதமர் மோடி  இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம்அனுப்பியுள்ளார்.

 மராட்டியத்தை சேர்ந்த 29 வயதான நட்சத்திர வீராங்கனை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ,ஸ்மிர்தி மந்தனா,சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து, 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார். மந்தனா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை, விரைவில் தொடங்குகிறார்.அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா ,வருகிற 23-ந்தேதி அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்குபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் 

Nov 19, 2025

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 256 மீ.க்கு வளையாமல் நேராக செல்லமான வளையாத ரோடு .

 சவுதியில் உலகில் நேராக செல்லும் நீளமான ரோடு நெடுஞ்சாலை 10' ) மொத்த தூரம் 1480 கி.மீ. இது அல் டார்ப் இடத்தில் இருந்து சவுதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லை வரை செல்கிறது. இது அந்நாட்டின் ஜாஜன், அசிர், ரியாத், கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களை கடந்து செல்கிறது. இதில் ஹராத் - அல் பாதா வரை 256 மீ.க்கு வளையாமல் நேராக செல்கிறது. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டாவது140 கி.மீ.,  நீளமானநேர் ரோடு உள்ளது. 

Nov 19, 2025

இறகுகள்,பறவைகளின் உடலில் முக்கிய அங்கம்.

இறகுகள்,பறவைகளின் உடலில் தோன்றும் புரதப்பொருட்களால் உருவாகுபவை .நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவை தான் இறக்கைகள்.ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இறகுகளைக் கொண்ட பறவைகள் இருக்கின்றன.இறகின் நடுவில் உறுதியான தண்டு போன்ற அமைப்பு இருக்கும். அந்தத் தண்டின் இரண்டு பக்கங்களிலும் சிறிய நுண் எலும்புகள் காணப்படும்.நுண் எலும்புகளுக்கு இடையில் சிறிய ஓட்டை உடைய அமைப்புகள் உள்ளன. இவை பறவையை பல வகைகளில் பாதுகாக்கின்றன.நடுப்பகுதியில் இரண்டு பக்கமும் சமமாக இருப்பவை வால் இறகுகள் என்று அழைக்கப்படுகின்றன.பறவைகளை வெப்பத்திலிருந்து காப்பாற்ற, பறவையின் உடலைச் சுற்றி கீழ் இறகு என்ற அமைப்பு உள்ளது.ஆந்தை போன்ற பறவைகளுக்கு இரையின் ஒலியை ,சத்தமாக கேட்பதற்கு இறகுகள் உதவுகின்றன.பென்குயின் போன்ற பறவைகளுக்கு பனிச்சறுக்கு ,செய்வதற்கு இறகுகள் உதவுகின்றன.நீரில் மூழ்கி வேட்டையாடும் பறவைகளுக்கு, இறகுகள் தேவைப்படுகின்றன.வளர்ந்த பறவைகள் தங்கள் இறகுகளை கோடைக் காலத்தில் உதிர்த்து, புதிய இறகுகளை வளர்க்க ஆரம்பிக்கும்.குளிர்காலம் வரும் போது பறவைகளை பாதுகாக்க இறகுகள் அவசியம் என்பதால், குளிர்காலத்துக்குள் புதிய இறகு உருவாகிவிடும்.

1 2 ... 74 75 76 77 78 79 80 ... 130 131

AD's



More News