25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 26, 2026

தமிழ்நாட்டின் நிர்வாக பிரிவுகள்.

மாவட்டங்கள் - 38 மக்களவைத் தொகுதிகள் - 39 சட்டமன்றத் தொகுதிகள்- 234 மாநகராட்சிகள்- 25 நகராட்சிகள்- 137 வருவாய் கோட்டங்கள்- 94 தாலுகாக்கள் 316 ஊராட்சி ஒன்றியங்கள்- 388 டவுன் பஞ்சாயத்துகள்- 490 கிராம பஞ்சாயத்துகள் - 12525.

Feb 25, 2026

புன்னகைக்கும் 'குவாக்கா'

குவாக்கா என்பது  ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட, மாக்ரோபோடிடே ஒன்ற, கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த, பாலுாட்டி விலங்கு. இது,'உலகின் மகிழ்ச்சியான விலங்கு என்று அழைக்கப்படுகிறது. !'ஏனெனில்  , அதன்முகத்தில், இயல்பாக ஒரு புன்னகை போன்ற தோற்றம் இருக்கிறது. குவாக்காக்கள், ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ராட்னெஸ்ட் தீவு மற்றும் பால்ட் தீவு போன்ற, சில சிறிய தீவுகளில் காணப்படுகின்றன. இவை, 40 செ.மீ., நீளமும், 3 கிலோ எடையும் கொண்டவை. இவற்றின் உடல், மென்மையான பழுப்பு நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இ இவை புல், இலைகள், மரப்பட்டைகள் மற்றும் சிறு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் தாவர உண்ணி. இது, கருவுற்று 27 நாட்களில், ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டி, ஆறு மாதங்கள் வரை தாயின் பையில் வளரும். குவாக்காக்களின் மகிழ்ச்சியான தோற்றம் மற்றும் நட்பு குணம், அவற்றை உலகளவில் அன்புக்குரியவையாக மாற்றியுள்ளன. இவை, மனிதர்களிடம் பயமின்றி நட்பாக இருக்கும் தன்மை கொண்டவை. இதனால், ராட்னெஸ்ட் தீவில், குவாக்காக்களுடன் சுற்றுலாப் பயணியர், 'செல்பி' எடுத்துக் கொள்வது பிரபலம். இருப்பினும், அவற்றுக்கு உணவளிப்பது அல்லது தொந்தரவு செய்வது, அங்கு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழிட இழப்புமற்றும் பிற வேட்டையாடி விலங்குகளால், அழிந்து வரும் இனமாக குவாக்காக்கள்பட்டியலிடப்பட்டுள்ளன.

Feb 24, 2026

ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர் தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப் பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில், ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர் தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப் பட்டுள்ளது. இது 43,000 ஆண்டுகள் பழமையானது. உலக வரலாற்றிலேயே மிகப் பழமையான, முழுமையாகக் கிடைத்த நியாண்டர்தாலின் கைரேகை இதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Feb 24, 2026

பாதிக்கப்படும் பாசிகளின் வளர்ச்சி.

பாசிகளின் வளர்ச்சியில் மாற்றம், நீரின் வெப்ப  மாற்றம் முதலிய காரணங்களால் பெருங்கடல்கள் இருண்டு வருகின்றன. அதாவது உலகப் பெருங்கடல் பரப்பின் 20 சதவீத பரப்பிற்குள், ஒளி ஊடுருவுவது குறைந்துள்ளது. இதனால் சூரிய, சந்திர ஒளியை நம்பி வாழும் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப் படுவர் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Feb 23, 2026

நம்பமுடியாத பொறியியல் சாதனைகளை  உலகின் மிகப்பெரிய 10 அணைகள் .NO-8டுகுருய் அணை (பிரேசில்)

டுகுருய் அணை(பிரேசில்)8,370 மெகாவாட்டோகாண்டின்ஸ் நதியின் மீது கட்டப்பட்ட டுகுருய் அணை, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டங்களில் ஒன்றாகும். 1984 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கான்கிரீட் ஈர்ப்பு அணை, வடக்குப் பகுதிக்கு 8,370 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது.பிரேசிலின் அமேசான் பகுதியில் கட்டப்பட்ட 78 மீட்டர் உயரமுள்ள ஈர்ப்பு அணை, 45 பில்லியன் கன மீட்டர் நீர்த்தேக்கத்தைக் கொண்டுள்ளது, இது பிரேசிலின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலாகாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது, அதே நேரத்தில் நதி வழிசெலுத்தலில் மேம்பாடுகளை ஆதரிக்கிறது.இதன் கட்டுமானத்துடன், மின்சார அணுகல் விரிவடைந்ததால் புதிய தொழில்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் தோன்றின, இது வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளைக் கொண்டு வந்தது.

Feb 23, 2026

இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் .

உலகிலேயே மிக அதிகமான பெண் விமானிகளைக் கொண்ட நாடு, இந்தியா கடந்த, 2023ல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி, உலகளவில் உள்ள விமானிகளில் பெண்களின்பங்கு, 5-5-7 சதவீதம் மட்டுமே. ஆனால், இந்தியாவில் இது, 15 சதவீதமாகஉள்ளது. இந்திய விமான நிறுவனங்களான, 'இண்டிகோ,ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா' போன்றவற்றில், 1,500க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் பணியாற்றுகின்றனர். இந்த சாதனைக்கு வித்திட்டவர், இந்தியாவின் முதல் பெண் விமானியான, சரளா தாக்ரல். அவரது முன்னோடி முயற்சிகள், இன்று ஆயிரக்கணக்கான பெண்களை, விமான போக்குவரத்து துறையில் சிறந்து விளங்க வைத்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தில், 1914ம் ஆண்டு பிறந்த சரளா, 1936ல், தன் 21 வயதில், லாகூர்விமானப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, தனி விமானம் ஓட்டி, 'ஏ' உரிமம் பெற்றார். அவரது கணவர், பி.டி.ஷர்மாவும் விமானி தான். சரளா, ஒரு குழந்தையின்தாயாக இருந்த போதும், அவருக்கு பி.டி.ஷர்மா மிகப்பெரிய ஊக்கமாக இருந்தார். சரளா, 1937ல் வணிக விமான உரிமம் பெற்று, இந்தியாவின் முதல் பெண் வணிக விமானியானார்.ஆணாதிக்கத்தை உடைக்கும் வகையில் சேலை அணிந்து, விமானம் இயக்கினார். சரளாவின் தைரியமும்,உறுதியும்,அப்போதைய ஆணாதிக்க சமூகத்தில், பெண்களுக்கு புதிய பாதைகளைத் திறந்தன. இன்று, இந்தியபெண் விமானிகள், உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளனர். கேப்டன் ஜோயா அகர்வால் போன்றவர்கள், போயிங் 777' ரகத்தை சேர்ந்த பெரிய விமானங்களை இயக்கி, சாதனை படைத்துள்ளனர். பாலின இந்தியாவின் இந்த பெருமை, சமத்துவத்திற்கு முன்மாதிரியாகவும், பெண்களின் திறனை உலகுக்கு உணர்த்தும் ஒளிவிளக்காகவும் திகழ்கிறது.

Feb 21, 2026

பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியவை / சொல்லக் கூடாதவை.

| பிள்ளைகளிடம் சொல்லக் கூடாதவை படிக்கலன்னா உருப்படாம போயிடுவ.உழைக்கலன்னா பிச்சைதான் எடுக்கணும்.பணம் இல்லாட்டி ஒரு நாள் உன்னை யாரும் மதிக்க மாட்டாங்க. நீ எல்லாம் எச்சில் இலை எடுக்க, தட்டு கழுவ தான் லாயக்கு.பெயில் ஆகிட்டா, மாடு மேய்க்க அனுப்பப் போறேன்..காசு, பணம் இல்லன்னா யாரும் மதிக்க மாட்டாங்க.நாங்க செத்ததுக்கப்புறம் ,நீ பிச்சைதான் எடுக்கப் போற.வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும்.பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சுதான் போகப்போற, பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியவை படிச்சா வாழ்க்கையில் நல்லா முன்னுக்கு வரலாம்.உழைத்தால் நிறைய சம்பாதிக்க முடியும்.பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம்.படிச்சு முன்னுக்கு வந்து நாலு பேருக்கு வேலை தரலாம்.நீ இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவ, எல்லா தேர்விலும் தேர்ச்சி பெறுவ,உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எல்லா உறவுகனையும் ஒரே மாதிரி மதிப்பா நடக்கணும்.அப்பா, அம்மா - நான் சம்பாதிச்சுட்டேன்' னு நீ சொல்லணும்.படித்து ஊர் மெச்சும் அளவுக்கு வாழனும்..உழைப்பு, பணத்தின் மதிப்பை  புரிய வைக்கும். உன்னோட திறமைக்கு நீ ரொப்பு சீக்கிரமாகவே  முன்னுக்கு வந்துடுவ.

Feb 21, 2026

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 14567 என்ற எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் பல்வேறு உதவிகளை  மத்திய அரசும் மாநில அரசும்  இணைந்து  வழங்குகின்றன. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரைபிள்ளைகள் கவனிக்க வில்லை என்பது முதல், வங்கியில் பென்சன் பணம் வரவில்லை என்பது வரை எல்லா உதவிகளையும் கேட்கலாம்.  உங்களிடம் விவரங்கள் வாங்கிய பிறகு, அந்தந்த துறைகளை அவர்களே தொடர்பு கொண்டு எல்லாப் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவி செய்வார்கள். நகரங்களில் வழி தெரியாமல் இருந்தால் கூடத் தயங்காமல் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். ஒரு நண்பனைப் போல உதவிகளையும் ஆலோசனைகளும் வழங்குவார்கள். எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய எண்: 14567. உங்களுக்குத் தெரிந்த அனைத்து பெரியவர்களுக்கும் அனுப்புங்கள். எல்லோருக்கும் இந்தச் சேவைகள் சென்றடைய உதவுங்கள். மூத்த குடிமக்களுக்கு உதவும் எண்: 14567.மேலும் தகவல் பெற அழையுங்கள் 9597376088

Feb 20, 2026

அரிதான 'பிங்க் வைரம்'

அரிதான'பிங்க்'நிறவைரம்ஆப்ரிக்கநாடானபோட்ஸ்வானாவில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் நீளம் ஒரு இன்ச். இதில் பாதி 'பிங்க்' நிறமாகவும், மீதி நிறமற்றவையாகவும் உள்ளது. எடை 7.5 கிராம். வைர கற்கள், 300 கோடி ஆண்டுக்கு முன் உருவானவை. இது பூமியில் 150 - 200 கி.மீ., ஆழத்தில் வெப்பமான, அழுத்தமான நிலையில் இருந்து எடுக்கப்படுகிறது.வைரம் கண்டுபிடிப்பது முதன்முறை இல்லை. இருப்பினும் இந்தளவு எடையில் கண்டறியப்படவில்லை.. 1905ல் தென் ஆப்ரிக்காவில் உலகின் பெரிய வைரம் (621.2 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டது.

Feb 19, 2026

நம்பமுடியாத பொறியியல் சாதனைகளை  உலகின் மிகப்பெரிய 10 அணைகள் .NO-7 .வுடோங் அணை (சீனா).

 வுடோங் அணை(சீனா)-10,200 மெகாவாட்ஜின்ஷா நதியில்2021 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட வுடோங் அணை, உலகின் மிக உயரமான மற்றும் மிகவும் மேம்பட்ட நீர்மின்சார வளைவு அணைகளில் ஒன்றாகும், இது270 மீட்டர் உயரமும்240 மீட்டர் இரட்டை வளைவு வளைவையும் கொண்டுள்ளது.850 மெகாவாட் திறன் கொண்ட12 டர்பைன்களுடன் பொருத்தப்பட்ட இந்த அணை, ஆண்டுதோறும் சுமார்38.81 பில்லியன் கிலோவாட்மணிநேரங்களை உற்பத்தி செய்கிறது, இது யாங்சே நதிப் படுகைக்கு கணிசமான சுத்தமான ஆற்றலை வழங்குகிறது.வுடோங் அணையின் நீர்த்தேக்கம் 7.41 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், இதில் 2.44 பில்லியன் கன மீட்டர் வெள்ளக் கட்டுப்பாட்டு இருப்பு உள்ளது. இந்த அமைப்பு பிராந்தியம் முழுவதும் பருவகால நீர் ஒழுங்குமுறையை வலுப்படுத்துகிறது.வுடோங்டே அணையின் கட்டுமானம் மேம்பட்ட ஆற்றல் நம்பகத்தன்மையைக் கொண்டு வந்தது, வெள்ள அபாயத்தைக் குறைத்தது மற்றும் தென்மேற்கு சீனா முழுவதும் நீண்டகால நீர் மேலாண்மையை ஆதரித்தது.

1 2 ... 60 61 62 63 64 65 66 ... 130 131

AD's



More News