25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 06, 2026

இந்தியாவின் மெகா நீர் திட்டம்.

இந்தியாவின்113 கி.மீ நீளமுள்ள மிகப்பெரிய கால்வாய், சிந்து நதி நீரைத் திருப்பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் பாசனம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துகிறது இந்தியாவின் நீர் எதிர்காலத்தை மாற்றுகிறது.

Feb 06, 2026

உலகில் தலைநகரே இல்லாத ஒரே நாடு நவூரு தீவு .

தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான நவூரு (Nauru) உலகில் அதிகாரப்பூர்வமாக தலைநகரே இல்லாத ஒரே நாடாகும். வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள நவூரு, பரப்பளவில் உலகின் 3 வது சிறிய நாடாக உள்ளது.மேலும், சுமார் 10,000 மக்கள்தொகையுடன், மக்கள்தொகை அடிப்படையில் 2வது சிறியநாடாகவும் உள்ளது. நவூருவின் பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகங்கள், அமைச்சகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை யாரென் மாவட்டத்தில் இருந்து செயல்படுகிறது.

Feb 06, 2026

NGC 7456 எனும் கேலக்ஸி.

பூமியிலிருந்து 5.1 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் NGC 7456 எனும் கேலக்ஸியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஹப்பிள் தொலை நோக்கி எடுத்த புகைப் படத்தின் மூலம், அங்கே நட்சத்திரங்கள் உருவாகி வருவது தெரிய வந்துள்ளது.

Feb 06, 2026

முள்ளம்பன்றி மீன்.

முள்ளம்பன்றி மீன்கள் டையோடோன் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய மீன்கள் ஆகும். இந்தக் குடும்பத்தில் 18 இனங்கள் உள்ளன. இதுஒருவினோதமானகடல்மீன்ஆகும்.இவை வாதுகுழல்மீன்,பலூன்மீன்மற்றும்குளோப்மீன்என்றுஅழைக்கப்படுகின்றன.தன்னை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தண்ணீர் மற்றும் காற்றை விழுங்கி தன் உடலை பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டது. உடலில் கூர்மையான முட்களையும் கொண்டிருக்கும்.இதன் முட்கள் படுக்கை நிலையில் இருக்கும். ஆனால் பெரிதாக்கிக் கொள்ளும் போது அந்த முட்கள் நிமிர்ந்து நிற்கும். இது பார்ப்ப தற்கு முள்ளம்பன்றி போன்று காணப்படும். பெரும்பாலான மீன்கள் இதனை உண்ப தில்லை. மீறி உண்டால் அதைவிழுங்கிய மீனின் தொண்டையில் சிக்கி, அந்த மீனை உயிரிழக்கச் செய்யும் அபாயம்கொண்டது.

Feb 05, 2026

17 வயதில் 5 பேருக்கு உடலுறுப்பு தானம் .

கேரளாவில் கார் விபத்தில்  மூளைச்சாவு அடைந்த 17 வயது பெண்ணின் கடைசி விருப்பமாக என் உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என்றாள் . அவளின் ஆசைப்போல் இதயம் ஒருவரின் அப்பாவிற்கும் நுரையீரல் இளம் பெண்ணுக்கும் என 5 பேருக்கு தானம் செய்யப்பட்டு அவளின் உடல் வெளியே வரும் போது மருத்துவர்களே தலைவணங்கினர். இந்த பெண்ணின் தியாகதிற்கு பாராட்டுவோம்.

Feb 05, 2026

திருப்பதி மலைக்குச் செல்லும் பாதையை அமைத்த சிறந்த பொறியாளர் 5 சர் எம். விஸ்வேஸ்வரய்யா.

1900களில், திருப்பதி மலைக்குச் செல்ல சாலை இல்லை. பக்தர்கள்!! கி.மீ. நடந்து செல்ல வேண்டியிருந்தது! பின்னர், மைசூர் மாநிலத்தின் தலைமைப் பொறியாளர் சர் எம். விஸ்வேஸ்வரய்யா, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வசதியாக 9 மாதங்களில் 19 கி.மீ. சாலையைக் கட்டினார்! பாரத ரத்னா விஸ்வேஸ்வரய்யாவின் இந்த அற்புதமான பணியை கொள்ளுங்கள்.

Feb 04, 2026

அசாம் காட்டுமுயல் என்று அழைக்கப்படும் ஹிஸ்பிட் முயல்.

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதி புல்வெளிகளில் வாழும் அரிய வகை உயிரினம் ஹிஸ்பிட் முயல். இது, அசாம் காட்டுமுயல் என்றும் அழைக்கப்படுகிறது. தனித்துவமானதோற்றத்துடன் காணப்படும். மெதுவாக ஓடும்; ஆனால் எளிதாக மறைந்து கொள்ளும். கரடுமுரடான ரோமங்கள், இயற்கையாக மறைந்து கொள்ள உதவும்.உடல் மஞ்சள், பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். நீண்ட காதுகள், குறுகிய வால், பெரிய பற்கள், இதன் அடையாளம். இது, 50 செ.மீ., வரை வளரும். வளர்ந்த முயலின் எடை2.5 கிலோ வரை இருக்கும். உயரமான புல்வெளி, சதுப்பு நிலம், ஆற்றங்கரைகளில் வாழும்.அசாம்,மேற்குவங்கம்,உத்தரப்பிர பிரதேசம்,அருணாச்சலபிரதேசம்,மணிப்பூர்மாநிலங்களில்காணப்படுகிறது.ஒரு காலத்தில் நேபாளம், வங்கதேசம், பூடான் வரை பரவியிருந்தது. இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது. உலக அளவில் மிக அரிதான முயல் இனங்களில் ஒன்றாக வகைபடுத்தப்பட்டு உள்ளது.இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும்.புல், இலை, தளைகளை உணவாக உட்கொள்ளும். தனித்து புல்வெளிகளில் மறைந்து வாழும் பண்புள்ளது.ஆண்டுக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். வேட்டை, வாழிட இழப்பு, விவசாய நில விரிவாக்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளகியுள்ளது.இந்த விலங்கினத்தை பாதுகாக்க சிறப்பு பூங்காக்களில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Feb 04, 2026

சாக்லெட் தயாரிப்பில் பயன்படும் கோகோ தாவரம்.

சாக்லெட் தயாரிப்பில் பயன்படுகிறது கோகோ தாவரம். தென் அமெரிக்கா அமேசான் ஆற்றுப்படுகையை தாயகமாக உடையது. இதன் தாவரவியல் பெயர் தியோபிரமா கோகோ. ஸ்டெர்குலியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கி.மு.,2000 முதலே கோகோ தாவரம் வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் வழியாக தெரியவருகிறது.இந்த தாவரத்தை சொர்க்கத்தில் இருந்து கடவுள் கொண்டு வந்ததாக மயன் நாகரிக காலத்தில் மக்கள் நம்பினர். கடவுளின் உணவு எனவும் அழைக்கப்பட்டது. கோகோவில் கிரையல்லோ, பாரஸ்டிரோ உட்பட மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றில் கிரையல்லோ சிவப்பு நிற காய்களை உடையது. பராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களை கொண்டது. இந்த வகை இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது.மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாகபயன்படுகிறது கோகோ விதை. உலகளவில் சாக்லெட் உணவு பொருட்கள் மற்றும் சுவை மிக்க பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கோகோவில் தயாரிக்கப்படும் வெண்ணெய் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக விளங்குகிறது.

Feb 03, 2026

 மருத்துவ குணங்களை கொண்ட நாவல் மரம் 

அரிய பல பல மருத்துவ மருத்துவ குணங்களை கொண்ட நாவல் மரம் சாலை ஓரங்களில், குளக்கரை, ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. தென்னிந்திய காடுகளிலும் இதனை காணலாம். நாவல் மரத்திற்கு நாக மரம், சாதலம், ஆருகதம், நேரேடு, நேரேடம் என்று பல பெயர்கள் உண்டு.ஆங்கிலத்தில்'ஜம்பலம்' என்றும் அழைக்கப்படுகிறது. நாவல் மரம் இந்தியாவில் வறண்ட நிலங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வளர்கிறது. இலங்கை, மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது. இலங்கையில் புத்த கோவில்களை சுற்றி நாவல் மரங்களை காணலாம். நாவல் பழங்கள் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கிடைக்கின்றன. துவர்ப்பு கலந்த இனிப்பாகவும், ருசியாகவும் இருக்கும். காய் பச்சையாகவும் பழம் கருநீல நிறத்திலும் இருக்கும். நாவல் பழம் மூளைக்கு பலம் தரும் பழம் என்கிறார்கள், இயற்கை டாக்டர்கள். இது கல்லீரல் நோயை குணமாக்கும். சிறுநீரகங்களை நன்கு இயங்க செய்து சிறுநீர் வெளியேறுவதை அதிகமாக்கும். பழத்தை உண்ண குடல் நன்கு இயங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும். பழத்தை கசாயமாக பிழிந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கம், நாள்பட்ட கழிச்சல் குணமாகும். பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். பழம் உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியைத்தரும். ரத்தத்தை சுத்தம் செய்யும். பழத்தை அதிக அளவில் உண்டால் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டைக்கட்டுதல் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்படும் வாய்ப்பு குறைவு. நாவல்பழம் கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நாவல் விதை பொடி நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவுகிறது என்பதால் இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். 

Feb 03, 2026

அடர்த்தி குறைந்த இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியில் இருந்து 25 ஆண்டுகள் தொலைவில் இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.TOI 1453 என்கின்ற நட்சத்த ரத்தை இவை சுற்றி வருகின்றன. இதில்TOI-1453b என்கின்ற கோள் பூமியை விடச்சற்று பெரியது, பாறைகளால் ஆனது. தன்னுடைய நட்சத்திரத்தை வெறும்4.3 நாட்களில் சுற்றி வருகிறது.TOI1453c என்கின்ற மற்றொரு கோள் பூமியை விட2.2 மடங்கு பெரியது. மிகக் குறைந்த அடர்த்திஉடையது.இந்த அளவில்இருக்கும் எந்தக் கோளும் இவ்வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்காது. அந்த வகையில், இது விஞ் ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதன் குறைவான அடர்த்திற்குக் காரணம்,இதனுடைய வளிமண்ட லம் ஹைட்ரஜன் வாயுவால் நிறைந்திருப்பது தான் என்பது விஞ்ஞானிகளில் ஒரு சாரார் கருத்து. இந்தக் கோள் முழுக்க முழுக்கத் தண்ணீரால் நிறைந்து இருக் கிறது. அதனால் தான் இவ் வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்கிறது என்பது மற்றொரு சாரார் கருத்து.இந்தக் கோள் குறித்து ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

1 2 ... 63 64 65 66 67 68 69 ... 130 131

AD's



More News