25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 14, 2026

உலகின் டாப் 7 பணக்கார தலைவர்கள்,சொத்து மதிப்பு .

உலகின் பணக்கார தலைவர்களில் முதலிடத்தில் இருப்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இவர் உலக அளவில் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான தலைவராக கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், 19 வீடுகளும்,700 கார்கள்,58 விமானம், ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடலில் மாளிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புருனே. இந்நாட்டின் சுல்தானாக ஹசனல் போல்கியா இருந்து வருகிறது. இவர் ஆடம்பரமான சொத்துக்கள், சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 50 பில்லியான் டாலர் ஆகும். இவரிடம் 7,000 கார்கள், 747 ஜெட் வைத்துள்ளார். மிகப்பெரிய அரண்மனையில் வசித்து வருகிறார். இவர் உலகின் பணக்கார தலைவர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.உலகின் பணக்கார தலைவர்களில் மூன்றாம் இடத்தில் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் உள்ளார். இவரின் சொத்து 30 பில்லியன் டாலர் ஆகும். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கிரீடம் ஒன்றையும் வைத்துள்ளார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நான்காவது பணக்காரராக அறியப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 30 பில்லியன் டாலர் ஆகும்.ஐந்தாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இவர் உலகின் பிரபலமான தலைவராகவும் கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 6.1 பில்லியன் டாலர் ஆகும்.ஆறாவது இடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு1.5 பில்லியன் டாலராக உள்ளது. இவர் பல்வேறு இடங்களில் முதலீடுகளை செய்துள்ளார். மேலும், இவருக்கு தனியாக மாளிகை, சொகுசு கார்கள், ஜெட் போன்றவற்றையும் வைத்துள்ளராம்.ஏழாவது இடத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

Mar 14, 2026

இந்திய ராணுவத்தில் இந்தியாவின் முதல் பெண் சுபேதார் பிரீத்தி ரஜக் .

 புகழ்பெற்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனையான பிரீத்தி ரஜக், இந்தியராணுவத்தில் சுபேதார் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி என்றவரலாற்றைப் படைத்துள்ளார். அவரது சாதனை, 2022 ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது உட்பட அவரது தடகளத் திறமைக்கு ஒருசான்றாகும், மேலும் இந்திய ஆயுதப் படைகளில் பெண்களுக்கு ஒரு பெரியமுன்னேற்றத்தைக் குறிக்கிறது.அனைத்து சாதனைகளையும் முறியடித்து, இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவிக்குபதவி உயர்வு பெற்ற வரலாற்றில் முதல் பெண்மணி என்ற பெருமையை ப்ரீத்தி ரஜக்பெற்றார். மத்தியப் பிரதேசத்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து ராணுவத்தின் தலைமைப்பதவிகளுக்கு அவரது குறிப்பிடத்தக்க பயணம், உயர் பதவிகளைக் கனவு காணும்ராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைவது மட்டுமல்லாமல், இந்திய பாதுகாப்புப் படைகளில் பெண்களின் வளர்ந்து வரும்பங்கையும் சுட்டிக்காட்டுகிறது.விருது பெற்ற ட்ராப் ஷூட்டர், ரஜக்கின் தேர்வு அவரது அர்ப்பணிப்புக்கு ஒருசான்றாகும், மேலும் நாரி சக்தியின் தளராத மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.ப்ரீத்தி ரஜக் மத்தியப் பிரதேசத்தின் இடார்சியில் நவம்பர் 6, 2002 அன்றுபிறந்தார்.உலர் துப்புரவாளராக இருந்த அவரது தந்தை, அவரது விளையாட்டுத்திறமையைக் கண்டறிந்து 2015 இல் மத்தியப் பிரதேச துப்பாக்கிச் சூடுஅகாடமியில் சேர்க்கப்பட்டார்.அவர் விரைவில் துப்பாக்கிச் சூட்டில் ஈர்க்கப்பட்டார், உள்ளூர் பயிற்சியாளர்களின்வழிகாட்டுதலின் கீழ் மாநில மற்றும் சப்-ஜூனியர் தேசிய போட்டிகளில்பதக்கங்களை வென்றார். சர்வதேச துப்பாக்கிச் சூடுபோட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் பிரீத்தியின் வாழ்க்கைஉயர்ந்தது.பிரீத்தி ரஜக் டிசம்பர் 2022 இல் இந்திய ராணுவத்தின் ராணுவ காவல் படையில்சேர்ந்தார், இது சிறிது காலத்திற்கு முன்பு ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களை வரவேற்ற சேவைகளில் ஒன்றாகும்.டிராப் ஷூட்டிங்கில் அவர் பெற்ற வெற்றியின் விளைவாக அவர் ஹவில்தார் ஆனார், தனது விளையாட்டில் அதை அடைந்த முதல் தகுதி வாய்ந்த விளையாட்டுப் பெண்மணி என்ற பெருமையைப்பெற்றார்.இராணுவ மார்க்ஸ்மேன்ஷிப் பிரிவில் (AMU) உள்ள அதிநவீன பயிற்சி வசதிகளைஇராணுவம் அவளுக்கு அறிமுகப்படுத்தியது, மேலும் கடுமையான சூழல் அவளைஒரு சிப்பாய் மற்றும் ஒரு தடகள வீரராகவும் மெருகூட்டியது.ஜனவரி 27, 2024 அன்று, பிரீத்தி ராஜக்கிற்கு சுபேதாராக பதவி உயர்வுவழங்கப்பட்டது, மேலும் இந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண்மணி என்றபெருமையையும் அவர் பெற்றார்.இந்திய விளையாட்டுகளிலும் சேவையிலும் அவர் செய்த சேவைக்காக,முன்மாதிரியான பணிக்காக பலர் பெறாத ஒரு சலுகையாக, அவருக்கு ஒருமுறைக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டது.2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் ராஜேஸ்வரி குமாரி மற்றும் மனிஷா கீர் ஆகியோருடன் இணைந்து பெண்கள் டிராப் அணி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்வதில் பிரீத்திமுக்கிய பங்கு வகித்ததிலிருந்து, தரவரிசையில் அவரது உயர்வு பலரை ஊக்கப்படுத்தியுள்ளது.அவர் பல உலகக் கோப்பைகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, உலகளாவிய துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் இந்தியாவின் நற்பெயரை வலுப்படுத்தியுள்ளார்.இந்திய ராணுவத்தில் மிகவும் விரும்பப்படும் ஜூனியர் கமிஷன்டு அதிகாரி பதவிகளில் சுபேதார் ஒன்றாகும்.இது ஜூனியர் வீரர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இடையே இணைப்பாக பணியாற்றுதல் போன்ற குறிப்பிடத்தக்க பொறுப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது.அவரது சாதனை இராணுவத்தில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளைத் திறக்கிறது.இடார்சியிலிருந்து இந்திய ராணுவத்தில் முதல் பெண் சுபேதாராக பிரீத்தி ராஜக் பொறுப் பேற்றது வெறும் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மற்றும்உலகம் முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகும்.

Mar 14, 2026

இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது.

உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ,வீட்டு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்பொது 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பின் அடுத்த டெலிவரிக்கிடையில் 21 நாட்கள் இருக்க வேண்டும். இதற்கான மென்பொருள் ஏஜென்சிகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களுக்கு பிறகே முன்பதிவு செய்ய அனுமதிக்கும் நடைமுறை தற்போது பரிசீலனையில் உள்ளது.

Mar 13, 2026

அகரம் பவுண்டேஷன் ஒரு மனிதனுக்குஇடம், உணவு, உடையுடன்கல்விகண்டிப்பா தேவை.

ஒரு மனிதனுக்கு கல்வி கிடைச்சிருச்சுனா,மத்தத அவங்களே தேடிகிடுவாங்கன்னு நம்பினோம். அதனால இந்த அகரம் பவுண்டேஷன்ஆரம்பிச்சோம். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு கண்டிப்பா தேவைன்னு சொல்லுவாங்க அதுல நாங்க கல்வியவும் சேர்க்கணும்ன்னு நினைச்சோம் .ஆரம்பிச்ச புதுசுல ஒரு குறும்படம் எடுக்க முடிவு பண்ணோம் அதுலவிஜய், மாதவன் , ஜோதிகா இவங்க எல்லாரையும் சேர்த்து ஜீரோடு ஹீரோ அப்படின்னு சொல்லிட்டு ஒரு படம் உருவாக்கி அதை எல்லா காலேஜ்பள்ளிகளுக்கும் அனுப்பனும் அது மூலமாக படிப்பைவறுமையினால கை விட்டவங்கள கண்டுபிடிச்சு உதவினோம்.

Mar 13, 2026

பீட்ரூட் சாறு குடிப்பதால்….

பீட்ரூட் சாறு குடிப்பதால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தூண்டப்பட்டுரத்த அழுத்தம் குறையும் என்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எக்ஸி டர்பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

Mar 13, 2026

மின்னல் ஏன் எப்போதும் பனை மரம் மீதே விழுகிறது தெரியுமா? .

பனை மரத்தின் தண்டுகள் தண்ணீரால் நிரம்பியுள்ளன, அவை இயற்கையான கடத்திகளாகின்றன. மின்னல் தாக்கும்போது, மரம் தாக்கத்தின் பெரும்பகுதியை உறிஞ்சி, அருகிலுள்ள மக்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

Mar 12, 2026

ஈரான் உச்சத் தலைவர் கொமேனியின் பூர்வீகம் இந்தியா.

ஈரான் உச்சத் தலைவர் கொமேனியின் குடும்பம் இந்தியப் பூர்வீகம் கொண்டது. அவரது தாத்தா சையது அகமது முசாவி, உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி அருகே உள்ள கிண்டூரில் பிறந்தவர். தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் கொமேனி ,ஈராக்வழியாக ஈரானில் குடியேறினார்.1970களில் இஸ்லாமியப் புரட்சியை வழிநடத்திய கொமேனி, பின்னர் நாட்டின் உயர்ந்த தலைவரானார்.

Mar 11, 2026

 'பிராடுலா அகுமினாடா' என்ற புதிய சிலந்தி இனம் .

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாகர் தீவின் சுந்தரவனக் காட்டில் ஒரு புதிய சிலந்தி இனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'பிராடுலா அகுமினாடா' என்று பெயரிட்டுள்ளனர்.

Mar 10, 2026

அதிக குளிர் இருக்கும் இடங்களில் பேசும்போது உருவாகும் நீர்த்துளி.

அதிக குளிர் இருக்கும் இடங்களில் பேசும் போது, வாயில் இருந்து புகை வருவது போல இருக்கும். இதற்கு காரணம் காற்றில் உள்ள நீராவி தான். குளிர் பகுதிகளில் நாம் பேசினால் வாயிலிருந்து கொஞ்சம் ஈரப்பதத்துடன் காற்று வெளியே வரும். அப்போது அதில் உள்ள நீராவி கடும் குளிரில், குளிர்ந்து திரவமாக மாறி நுண் திவலைகளாக (நீர்த்துளி ) உருவாகும். அதுதான் புகை போல நமக்கு க்கு தெரிகிறது. அப்புகை என்பது மிக நுண்ணிய நீர்த்துளிகளின் தொகுப்பு. இதன் அடிப்படையில் தான், ஐஸ்கட்டி உள்ள கண்ணாடி டம்ளருக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுகிறது.

Mar 10, 2026

'டெலமீர்ஸ்' எனும் பாதுகாப்பு கவசம்.

'டெலமீர்ஸ்' எனும் பாதுகாப்பு கவசம் நம் உடல் செல்களில் உள்ள குரோமோசோம் களில்,  இருக்கும். வயதாகும் போது இவை சிதைவதால் பல நோய்கள் உருவாகின் றன. டெலமீர்ஸை காக்கும் ஆற்றல், 'வைட்டமின் டி' சத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

1 2 ... 57 58 59 60 61 62 63 ... 130 131

AD's



More News